எம்.ஜி.ஆர்-கருணாகரன் போட்ட ஒப்பந்தம்,,?


முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக, கேரள அரசுகள் தாக்கல் செய்திருந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணையின் நீர்த் தேக்கத்தை 120 அடிக்கு குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்தது. 136 அடிவரை நீர் அளவை வைத்துக்கொள்ள தமிழகத்துக்கு அனுமதி அளித்தது.


 கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் அந்த மாநிலத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பிரதமர் தலையிட அவர்கள் வலியுறுத்தினர்.
அவர்களிடம் இரு மாநிலத்தில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பிரதமரின் இந்த வேண்டுகோள்படி"முல்லைப் பெரியாறு தொடர்பாக கேரளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைவரும் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும்'' என்ற கேரளா மாநில முதல்வர் உம்மன் சாண்டி  செய்தியாளர்களிடம் கூறியது:
இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் எங்களிடம் உறுதியளித்தார். "இந்தப் பிரச்னை தொடர்பாக கேரளத்தில் நடைபெறும் அனைத்துப் போராட்டங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று பிரதமர் வலியுறுத்தினார். இதை ஏற்றுக்கொண்டு கேரளத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் போராட்டங்களை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் செய்து வரும் பிற கட்சியினரும், அமைப்புகளும் போராட்டங்களை நிறுத்துவது அவர்களைச் சார்ந்தது. எனினும் போராட்டத்தைக் கைவிடுமாறு அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளதால் அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்துள்ளோம்.


மத்தியப் படை பாதுகாப்பு: முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப் படை பாதுகாப்பு அளிப்பது தேவையற்றது. அணைக்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது. கேரள மாநில போலீஸாரின் பாதுகாப்பே அணைக்குப் போதுமானது என்றார்.
இடுக்கி மாவட்டத்தைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று கூறுவது ”மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தீவிர ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த விவகாரத்தில் மறு பரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை என்றும் அவர் கூறினார்.
"புதிய அணைக்கான இடத்துக்கு தமிழகம் ஒப்புதல் அளித்தது' புதிய அணை கட்டுவதற்கான இடத்துக்கு ஒப்புதல் தெரிவித்து இரு மாநிலங்களும் 1979-ம் ஆண்டுமுதல்வர்கள் எம்.ஜி.ஆர்,-கருணாகரன் ஒப்பந்தம் செய்துள்ளனர்’ என்று பிரதமரிடம் புதன்கிழமை அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவில் மேலும் கூறியிருப்பது: கடந்த சில தினங்களாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் அளவு 136 அடிக்கு மேல் உள்ளது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் பயத்தை உண்டாக்கியுள்ளது.
நீண்டகாலப் பிரச்னைக்குப் புதிய அணை கட்டுவதே தீர்வாக அமையும். புதிய அணைக்கான முழு விவர ஆய்வு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில அரசும் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய அணை கட்டினாலும் தமிழகத்துக்குத் தண்ணீர் அளிக்கப்படும்.
கேரள மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பிரதமர் தலையிட்டு புதிய அணை கட்டுவதற்காக தமிழக அரசிடம் பேசி, சாதகமான முடிவு எடுக்க வேண்டும். தமிழக அரசு திறந்த மனப்பான்மையுடன் கேரள அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். அணைப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றலாம் ” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


”1979-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் கேரள முதல்வராக இருந்த கருணாகரனும் புதிய அணை கட்டுவதற்கான இடத்துக்கு ஒப்புதல் தெரிவித்ததாக “ அச்சுதானந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.




 முதலில்பிரதமரிடம் கேரள அனைத்துக் கட்சிகள் அளித்த மனுவில் அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
புதிய கோரிக்கை மனுவின் திருத்தப்பட்ட இணைப்பு என்று பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தலாம் என்ற கோரிக்கை இடம் பெறவில்லை.


இதைப்பற்றி கேரள முதல்வர் உம்மன் சாண்டி "அணை பாதுகாப்புச் சட்டத்தின் நகலை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது. அதை கேரள அரசு முழுமையாகப் படிக்கவில்லை. ஆகையால் இந்தக் கோரிக்கையை நீக்கி பிரதமரிடம் மனு அளித்தோம்' என்றார்.
  இப்போது 1979 -ல், எம்.ஜி.ஆர்,போட்ட ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு கேரளா அரசு காய்களை நகர்த்துகிறது.இதற்கு தமிழக அரசு என்ன பதிலை வைத்திருக்கிறது.எம்.ஜி.ஆர்.இப்படி ஒப்பந்தம் போட்டது நம் தமிழகத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிர்ந்ததா/?
கடைசியில்  எம்.ஜி.ஆர்.ஒப்பந்தம் நம் தமிழகத்திற்கு பலகீனத்தை தந்துவிட்டதே?
______________________________________________________________________________________________________

காங்;தேர்தலுக்காக நாடகமாடுகிறது.

ஜெயலலிதா போராட்டத்தை தடுக்கவே திட்டமிடுகிறார்.
 முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மனித சங்கிலியை தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின்  துவக்கி வைத்தார். தேனி  கலெக்டர் அலுவலகம் அருகில் துவங்கி, பழனிசெட்டிபட்டி வரை மனித சங்கிலி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான தி.மு.கவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மனித சங்கிலியை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் கூறியது: முல்லை பெரியாறு அணை பிரச்னை ஆரம்பித்தது முதல் தி.மு.க தலைவர் கருணாநிதி அனைத்து கட்சியை கூட்டி சிறப்பு தீர்மானத்தை போட வேண்டும் என முதல்வரை வலியுறுத்தினார். ஆனால், முதல்வர் ஜெயலலிதா தட்டிக்கழித்து வந்தார். 



தி.மு.க தலைமை செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி 12ம்தேதி உண்ணாநோன்பு போராட்டமும், 15 ம்தேதி மனித சங்கிலி போராட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  மனித சங்கிலி போராட்டம் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஜெயலலிதா திடீரென 15ம் தேதி தமிழக சட்டமன்றக் கூட்டம் கூடி முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். 

15ம் தேதியை தேர்வு செய்ய என்ன காரணம்? தேனி மாவட்டத்தில் கம்பம்.ராமகிருஷ்ணன், திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியசாமி, சக்கரபாணி, சிவகங்கை மாவட்டத்தில் பெரியகருப்பன், ராமநாதபுரம் மாவட்டத்தில் சுப.தங்கவேலன், விருதுநகர் மாவட்டத்தில் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண் டால், சிறப்பு சட்டமன்ற கூட்டத்திற்கு வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஜெயலலிதா, மக்களின் உயிர் பிரச்னையான முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் அரசியல் செய்ய பார்த்தார். ஆனால், கருணாநிதி இந்த பிரச்னையை அரசியலாக்க விரும்பவில்லை. மனித சங்கிலி போராட்டம் ஒரு நாள் முன்னதாக, 14ம் தேதியே நடக்கும் என அறிவித்து விட்டார்.
 
1500 ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலன் கட்டிய கல்லணை இன்னமும் பலமிக்கதாக உள்ளது. பென்னிகுக் அணை பலமாக இருந்தாலும், அங்குள்ள கேரள மக்களிடத்தில் அங்குள்ள ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்கட்சியும் அணை பலவீனமடைந்து விட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்கு என்ன காரணம், கேரளாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர்,  பிரவம் எனும் சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் இறந்தார். இதனால் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தம் 70 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். 



கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணிக்கு 68 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் பிரவம் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ இறந்து அந்த இடத்திற்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. 
இதில் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்று விட்டால் கம்யூனிஸ்ட் 69 எம்.எல். ஏக்களையும், காங்கிரஸ்  கூட்டணி 69 இடங்களை யும் பெற்று சமநிலையை அடைந்து விடும். இதனால் ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டு விடும். எனவே, இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக பெரியாறு பிரச்னையை திசைதிருப்பி பொய் பிரசாரம் செய்கின்றனர், என்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?