ஏன் வந்தார்?
வந்தார் ... சென்றார்! |
நதிநீர் பிரச்சனை என்றாலும், எல்லைதொடர்பான பிரச்சனை என்றாலும் இரு மாநிலங்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு எழுந்தால், அதை சுமூகமாகத் தீர்த்துவைப்பதில் மத்திய அரசு முக் கியப் பங்காற்ற வேண்டுமென்று எதிர்பார்ப்பது இயல்பான ஒன்றே. ஆனால் முல்லை பெரியாறு அணைப் பிரச்சனை ஒரு தொழில்நுட்ப, சட்டப் பிரச்சனை என்பதைத் தாண்டி இரு மாநில மக் களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் அள வுக்குச்சென்றபோதும் மத்திய அரசு எந்தவித மான உருப்படியான தலையீடு எதையும் செய்ய வில்லை என்பதே உண்மை.
குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கேரள ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கூடுதலான தலையீட்டைச் செய்திருக்க முடியும். ஆனால் அயல்துறைக் கொள்கையில் கூட்டுச் சேராக் கொள்கையை கை கழுவிவிட்ட மன் மோகன் சிங் அரசு, மாநிலங்களுக்கு இடையி லான பிரச்சனையில் தலையிடாக் கொள் கையைப் பின்பற்றி வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங்கின் தமிழக வரு கையின் போது முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் நேரில் சந்தித்து மனுக் கொடுத்தனர். முல்லை பெரியாறு அணைப் பிரச்சனை மற்றும் கூடங்குளம் பிரச்சனை குறித்து அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் பிரச்சனைகள் குறித்து பிரதமர் தனது வருகையின் போது வாயே திறக்கவில்லை. குறைந்தபட்சம் முல்லை பெரி யாறு பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு காத்திருக்க வேண்டும் என்றோ, இரு மாநில மக்களின் ஒற்றுமை முக்கியம் என்றோ, கூடங் குளம் பிரச்சனையில் மக்களின் அச்சம் போக் கப்படும் என்றோ கூட பிரதமர் கூறவில்லை. பிரதமரின் தமிழக வருகையேதேவையற்றது. கணிதமேதை ராமானுஜம் 125வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றபோதும் இரண்டு தனியார் மருத்துவமனைகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கே பிரதமர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். தன்னுடைய வழக்கமான தனியார்மய பஜனையைப் பாட அவர் தவற வில்லை. பொது சுகாதாரம், பொது மருத்துவம் என்பதையும் தனியாருக்குத் தரத்துடிக்கும் ஆர்வமே அவரது உரையில் தென்பட்டது. பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப குறைந்த செலவில் உயர்ந்த மருத்துவ சேவை வழங்க தனியார் மருத்துவமனைகள் அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் பங்கேற்ற மருத்துவமனைகள் ஏழை, எளிய மக்களுக்கு இலவச சேவை வழங்குகிறதா என்பதை அவர் கேட்டறிந்திருக்கலாம். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ வசதி வழங்கவேண்டும் என்று தனியார் மருத்துவ மனைகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது அரசின் பிரதானப் பொறுப்பு. இதைபிரதமர் தனது வருகையில் கண்டு கோள்ளவில்லை. தமிழகம்-கேரளம்தொடர்புடைய பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள முக்கிய
பிரச்சனையில் தன் அரசின் பொறுப்பின்மையை வெளிப் படுத்திய பிரதமர், தனியார்[மருத்துவமனை]நிருவனங்களுக்கு தனது தனிப் பாசத்தைக் காட்டிவிட்டு, தலைநகர் தில்லிக்கு திரும்பியிருக்கிறார்.
அடுத்து ஏதாவது தனியார் நிறுவனங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் பிரதமர் தமிழகம் வருவார். மனுக் கொடுத்தால் மர்மப்புன்னகையோடு பெற்றுக் கொள்வார்.தில்லி சென்றதும் குப்பையில் போடுவார். அவர்செய்வது அவ்வளவுதான்.
ஆனால் மக்களின் வாழவை பாதிக்கும் இரு மாநில நதிநீர் பிரச்னைகளை பற்றி கண்டு கொள்ள மாட்டார்.அதை தீர்த்துவைக்கும் பொறுப்பு மத்தி அரசுக்கு உண்டு என்பது கூட தெரியாதவர் போல் காட்டிக்கொள்வார்.
தமிழகம் சென்னை வரை வந்த ஒரு பிரதமர் இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பிரச்னையை பற்றி ஒப்புக்கு கூட பேசவில்லை என்பது தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா?அல்லது இலங்கை,வங்கம் போன்ற அயல்நாடா என்ற சந்தேகத்தைதான் கிளப்புகிறது.நமக்கும் பிரதமர் மன்மோகன் சிங் தானா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
தொடர்ந்து தமிழகத்தையும் தமிழர்கள் உணர்வுகளையும் மன்மோகன்சிங்கின் காங்கிரசு அரசு குப்பைக்கு சமமாக எண்ணுகிறது.
ஈழத்தமிழர் பிரச்னை,முல்லைப்பெரியாறு அணை,பவானி-பாலாறு அணைகள்,காவிரி நதி நீர் பிரச்னை,கூடங்குளம் ,மத்திய அரசு நிதி ஒதிக்கீடு என்று அனைத்திலும் மாற்றாந்தாய் மனப்பான்மையே தெரிகிறது.சோனியா மன் மோகன் சிங் வகையறாக்களுக்கு ஒரு வார்த்தை கேரளத்தை விட தமிழகத்தில்தான் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகம்.
இன்னும் இரு ஆண்டுகளில் எங்களைத்தேடி வர வேண்டிய சூழ்நிலை ஏறபடும்.ஆனால் அதற்குள் இதை எல்லாம் மறந்துவிடும் புன்னகை மன்னர்கள்தான் தமிழர்கள் என்று நம்புகிறீர்களா?அது உண்மைதான்.
ஆனால் எப்போதும் அப்படியே இருப்போமா என்பது தெரியாது.
___________________________________________________________
சுத்தப்படுத்தப்படா தங்கம் இரும்பை விட கடினமானதாம்.
தங்கம் விற்கிற விலையில் இதை சோதிக்க முடியமா?
_____________________________________________________________
இங்கே வானத்திலேதானே கடவுள் இருக்கிறதா சொன்னாங்க.?
__________________________________________________________
|