நீங்கள் ஒல்லிப் பிச்சானா?
நாம் எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருக்கிறோமே, எப்படி குண்டாவது எனபலர் புலம்பு கின்றனர்.
உணவு பழக்க வழக்கங்களால் மட்டுமே, உடல் எடையை அதிகரிக்க முடியும். கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை சாப்பிடுவதன் வாயிலாக, கட்டாயம் உடல் எடையை அதிகரிக்க முடியும்.
விரும்பிய உணவையெல்லாம் விரும்பிய நேரங்களில், விரும்பிய அளவுகளில் சாப்பிட்டு, சாப்பிட்டு இன்று பலர் உடல் எடையுடன் காணப்படுகின்றனர்.
ஆனால் சிலர் சாப்பிடப் பிடிக்காமல் சாப்பிட்டும்,விரும்பியதை சாப்பிட்டும் கூட சிலருக்கு உடம்பு வைப்பதில்லை.
ஒல்லியாகவே அலைகின்றனர்.
அவர்கள் உடலில் கொழுப்பை கூட்டி சற்று குண்டாக்க கீழ் கண்ட உணவு வகைகளை கடை பிடித்துப் பார்க்கலாம்.
வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட்டுடன் தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான, 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.
அனைவருக்குமே முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது.
முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைத்து, உடல் எடை அதிகரிக்கும். அனைவரும் வெண்ணெயை தினமும் சாப்பிட்டால் உடல் பருமனடையும் என்று நினைக்கின்றனர்.
ஆனால் உண்மையில் வெண்ணெயை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் தான்.
ஆனால் தினமும் சாப்பிட்டால், அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதாவது சாப்பிட்டால் போதுமானது.
உடல் ஆரோக்கியமாகவும், எடை அதிகரிக்கவும், சில பவுண்ட் உடலுக்கு தேவைப்படுகிறது.
ஆகவே, தினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும்.
தானியங்களில் நிறைய கலோரிகள் உள்ளன.
அதிலும் கோதுமையில் அதிகமாகவே உள்ளது.
ஆகவே பரோட்டா,ரொட்டி போன்றவற்றை வாங்கும் போது, கோதுமை மாவினால் தயாரிக்கப் பட்ட வாங்கி சாப்பிட்டால், ஆரோக்கியத்துடன் எடையும் கூடும். மைதாவை தவிர்க்கவும்.
காலையில் சாப்பிட கேழ்வரகு உணவு வகைகள் மிகவும் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு. ஓட்ஸை விட நம்மூர் கேழ்வரகு சத்து மிக்கது.நமது கால நிலைகளுக்கு ஏற்றது .இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இதனால் உடலில் சீரான ரத்த ஓட்டம் இருப்பதோடு, உடலும் பருமனடையும். பழங்களை விட தயிரில், 118 கலோரிகள் இருக்கின்றன.
ஆகவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்ல, குறைந்தது, 100 கலோரிகளும் உள்ளன.
ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.
கார்போஹைட்ரேட் மற்றும் காம்ப்ளக்ஸ் சுகர் அதிகம் உள்ள உருளைக்கிழங்கை, வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்.
இதன் மூலம் உடலில் சதை பிடிப்பு கிடைக்கும்.ஆனால் அதிகம் சதை போட்டு குண்டாகி பிறகு அதை குறைக்க முயற்சி செய்வதை தடுக்க இந்த உணவு வகைகளை உண்ணும் காலத்திலேயே உடற்பயிற்சியையும் மேற்கொண்டால் ஊளைச் சதை உருவாவது தடுக்கப்பட்டு உடல் வளமையும்,வலிமையையும் பெறலாம் .
அதிமுக ஜெயா ஆட்சியின் 44 மாதங்கள்
* 7805 கொலைகள்
* 79305 கொள்ளைகள்
* 4697 பாலியல் வன்குற்றங்கள்.
துப்பு துலங்கியது 1614
வழக்குகள் நடப்பது 712
வழக்குகள் தண்டனை கிடைத்தது ஒரே ஒரு வழக்கு
"சமூக விரோதிகளோடு போலீஸ் நெருக்கம்.அதானால்தான் சட்டம்&ஒழுங்கு சந்தி சிரிக்கிறது."
[காவல் துறையினர் அதிமுகவினருடன் தானே நெருக்கம்?]
நெல்லை உண்ணாவிரதத்தில் சிபிஎம் தலைவர்கள் குற்றச்சாட்டு.
இதைத்தான் நூறாண்டு பேசும் மூவாண்டு சாதனைகள் என்றார்களோ?
==========================================================================
மகாவீரர்
பிறந்த திருநாள்
வாழ்த்து!
சைன சமயக் கோட்பாடுகளில் சீர்திருத்தங்கள் பல செய்த செம்மல் வர்த்தமான மகாவீரர் பிறந்த திருநாள் ஏப்ரல் 2ஆம் நாளன்று நாடு முழுதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இன்றைய பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவுக்கு அருகில் ஓர் அரச குடும்பத்தில் கி.மு.599இல் பிறந்தவர் வர்த்தமானர்.
இவர் அரச வாழ்வை உதறியவர்;
தம் செல்வங்களை எல்லாம் மக்கள் பலருக்கும் தானமாக வழங்கியவர்;
துறவு வாழ்வை மேற்கொண்டு விருப்பு வெறுப்புகளை வென்றவர்;
அதனால் அவரை "மகாவீரர்" என வரலாறு புகழ்கிறது.
மகாவீரர், "ஒவ்வொருவருக்கும் நல்ல நம்பிக்கை, நல்ல அறிவாற்றல், நல்ல பண்புகள் தேவை" என்று போதித்தார்.
அவர், "உண்மைகளை மட்டுமே பேசவேண்டும்; முறையற்ற வழியில் எந்தப் பொருளையும் ஏற்கலாகாது;
அறநெறி நீங்கி இன்பம் நுகர்தல் கூடாது; பொருளாசையை முற்றிலும் நீக்குதல் வேண்டும்" என்று அறிவுரைகள் கூறினார்.மக்களிடம் கேள்விகளைக் கேட்டு, அவர்கள் தரும் விடைகளின் வாயிலாகவே தம்முடைய சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.
"ஒருவர் கூறினார் என்பதற்காகக் கடும் வெப்பத்தால் கனிந்து சிவந்த
இரும்புக் கம்பியைக் கையில் பிடிப்பீர்களா?
அது உங்களால் முடியாதல்லவா?
அப்படியானால் மற்றவரை நீங்கள் அதுபோல் செய்யச் சொல்வது முறையாகுமா?
துன்பம் என உங்களால் தவிர்க்கப்பட்டதை மற்றவரிடம் நீங்கள் வலியுறுத்துவது சரியாகுமா?"
- எனக் கேட்டு, அதன்மூலம் பிற உயிர்க்கு இன்னா செய்தல் ஆகாது எனும் அறத்தை வலியுறுத்தினார்.
அரச போகத்தையும் செல்வத்தையும் துறந்து அறநெறி போற்றிய அந்த மாமனிதர் மகாவீரர் பிறந்த திருநாளுக்கு, "அரசு விடுமுறை" வழங்கி தமிழகத்தில் வாழும் சைன சமய மக்கள் தங்கள் குடும்பத்தார், குழந்தைகள், நண்பர்களுடன் கூடிக் கொண்டாடி மகிழ்ந்திட உதவியது தி.மு.க. ஆட்சி.
ஆனால், 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் வாழும் சைன சமய மக்களை மதிக்காமல் அந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டது என்பதையும், 2006இல் அமைந்த தி.மு.க. அரசு, மகாவீரர் பிறந்த நாளுக்கு மீண்டும் அரசு விடுமுறை வழங்கி சைன சமய மக்களிடம் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செலுத்திவரும் அன்பினை வெளிப்படுத்தியது என்பதையும் இவ்வேளையில் சுட்டிக்காட்டி;
மகாவீரர் பிறந்த நாளாகிய இத்திருநாளில் தமிழகத்தில் உள்ள சைன சமய மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை உரிதாக்கி மகிழ்கிறேன்.
-கலைஞர் கருணாநிதி.
வர்த்தமானர்.
{மகா வீரர்}.
வர்த்தமானர் கி.மு. 599 இல் வடகிழக்கு இந்தியாவில் பிறந்தார். கௌதம புத்தர் பிறந்த பகுதியிலே பிறந்தார்.
ஆயினும் ஒரு தலைமுறைக்கு முன்னதாகப் பிறந்தார். இருவரின் வாழ்க்கை வரலாறும் வியத்தகு வகையில், ஒன்று போல் அமைந்துள்ளது. வர்த்தமானர் அரச குடும்பத்தை சேர்ந்தவர்; தந்தையின் இளைய மகன். கௌதமரைப் போலவே செல்வச் சூழ்நிலையில் வளர்ந்தார்.
அவர் தமது 30 ஆம் வயதில் சொத்து, குடும்பம் (அவருக்கு மனைவியும் மகளும் இருந்தனர்). செல்வச் சூழ்நிலை அனைத்தையும் துறந்து, ஆன்மிக வழியில் உண்மையையும் நிறைவையும் காணத் துணிந்தார்.
வர்த்தமானர் கடுந்தவம் செய்துவந்த சிறிய பார்ஸ்வனத் துறவியர் குழாத்தில் சேர்ந்தார். 12 ஆண்டுகளாக ஆழ்ந்த தியானத்திலும், சிந்தனையிலும் ஈடுபட்டார். அப்போது கடுந்தவம் செய்து வறுமையில் வாழ்ந்து வந்தார். அடிக்கடி நோன்பிருந்தார். தமக்கென்று சொத்து எதுவும் வைத்திருக்கவில்லை. நீர் பருகுவதற்கு கிண்ணமோ, பிச்சையெடுப்பதற்கு தட்டோ கூட வைத்திருக்கவில்லை. தொடக்கத்தில் ஒரேயொரு ஆடை வைத்திருந்தார்.
பிறகு அதையும் துறந்து முற்றிலும் ஆடையின்றியே நடந்து திரிந்தார். பூச்சிகள் தம் வெறும் உடல் மீது ஊர்ந்து திரியுமாறு விட்டுவிட்டார். அவை அவரைக் கடித்த போதிலும் அவற்றைத் தள்ளிவிட மாட்டார். சுற்றித் திரியும் துறவோர் மேல்நாடுகளைவிட மிகுதியாக காணப்படும் இந்தியாவில்கூட மகாவீரரின் தோற்றத்தையும் நடத்தையையும் கண்டு சிலர் அவரை பழித்து உதைத்தனர். ஆயினும் அவர் அவற்றைப் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டார்.
மகா வீரர் தமது 42 ஆம் வயதில் தாம் ஆன்மிக அறிவொளி பெற்றதாக உணர்ந்தார்.
தமது வாழ்க்கையின் எஞ்சிய 30 ஆண்டுகளைத் தாம் கண்டறிந்த ஆன்மிக உண்மைகளை
போதிப்பதிலே கழித்தார். கி.மு. 527 இல் அவர் இறந்தபோது அவருக்குப் பல
சீடர்கள் இருந்தனர்.
சில வகைகளில் மகா வீரருடைய கோட்பாடுகள் பௌத்த, இந்து சமயக் கோட்பாடுகளை ஒத்துள்ளன.
ஒரு மனிதனின் உடல் இறக்கும்போது அவனுடைய ஆன்மா இறப்பதில்லை எனவும், அது மறுபிறவி எடுக்கிறது (அப்பிறவி மனிதப் பிறவியாக இருக்கத் தேவையில்லை) எனவும் சமணர்கள் நம்புகின்றனர். இம்மறுபிறப்புக் கொள்கை சமணக் கோட்பாட்டின் அடிப்படைகளுள் ஒன்றாகும். ஒரு செயலின் நெறிமுறைகள் விளைவுகள் அடுத்த பிறவியைப் பாதிக்குமெனும் பிறவிப் பயன் கொள்கையைச் சமணர் நம்புகின்றனர். ஆன்மாவின் திரண்டுள்ள தீவினைப் பளுவைக் குறைத்து, அதனால் ஆன்மாவைத் தூய்மையாக்குவதே சமண சமயத்தின் முதன்மையான குறிக்கோள். புலனுகர்வு இன்பத்தை ஒறுத்தலின் மூலம் இதை ஓரளவு செய்ய முடியுமென்று மகா வீரர் கற்பித்தார். குறிப்பாக, சமணத்துறவிகள் கடுந்தவம் செய்யக் கடமைப்பட்டுள்ளனர். பட்டினி கிடந்து இறத்தல் புகழ்ச்சிக்குரியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக சமண சமயம் இன்னா செய்யாமைக் கொள்கையை வலியுறுத்துகிறது.
இன்னா செய்யாமை என்பது மனிதருக்கு மட்டுமல்லாமல் பிற உயிரினங்களுக்கு இன்னா செய்யாமையாகும் எனச் சமணர் வலியுறுத்துகின்றனர். இக்கொள்கையின் விளைவாகச் சமணர்கள் புலால் உண்பதில்லை. சமயப் பற்றுள்ள சமணர்கள் இக்கொள்கையை மிகக் கடுமையான வகையில் மேற்கொள்கின்றனர்.
அவர்கள் ஒரு ஈயைக்கூட கொள்வதில்லை; தற்செயலாக ஒரு பூச்சியை விழுங்கி அதைக் கொன்று விடுவோமா என அஞ்சி இருளில் உண்பதில்லை. செல்வமும் சமயப் பற்றுமுள்ள சமணர், தாம் தற்செயலாக ஒரு பூச்சியை அல்லது புழுவை மிதித்துக் கொன்றுவிடக் கூடாது என்பதற்காக தாம் நடந்து செல்லும் போது தமக்குமுன் தெருவைப் பெருக்குவதற்காக ஒருவரை வேலைக்கமர்த்திக் கொள்வார்.
இதிலிருந்து சமயப்பற்றுள்ள ஒரு சமணர் நிலத்தை உழக்கூடாதெனப் புலனாகின்றது. சமணர்கள் உண்மையில் பயிர்த்தொழிலில் ஈடுபடுவதில்லை. அதுபோலவே கையால் செய்யும் தொழில்கள் பலவற்றை சமண சமயம் விளக்குகிறது.
சமயக் கோட்பாடுகள் ஒரு சமுதாயம் முழுவதன் வாழ்க்கை முறைகளை எவ்வாறு மதிக்கக்கூடுமென்பதற்கு சமண சமயம் ஓர் அரிய எடுத்துக்காட்டு. சமணர்கள் பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள நாட்டில் வாழ்ந்தபோதிலும், அவர்களுள் பெரும்பாலோர் பல நூற்றாண்டுகளாக வாணிகம், நிதி ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வந்தனர்.
சமண சமய நோக்கின் காரணமாக அவர்கள் தொழிலூக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர். இதன் விளைவாக சமணர்கள் செல்வர்களாக இருக்கின்றனர். மிகப் பெரிய அளவில் இந்தியாவின் அறிவு, கலை சார்ந்த நடவடிக்கைகளில் பங்கு பெற்றுள்ளனர்.
தொடக்கத்தில் சமண சமயத்தவரிடையே சாதி முறை இருந்ததில்லை. ஆயினும் இடையறாத இந்து சமயத் தொடர்பின் காரணமாக, சமணர்களிடையேயும் சாதி முறை வளர்ந்தது. ஆயினும், அஃது இந்துக்களிடையேயும் இருந்தது போல் அவ்வளவு கடுமையாக இல்லை. மகா வீரர் கடவுளைப் பற்றியோ, கடவுளர்களைப் பற்றியோ ஒரு போதும் பேசியதேயில்லை.
ஆனால், இந்து வழிபாடு ஓரளவு தோன்றியுள்ளது. மகா வீரர் தம் கொள்கைகளை எழுதி வைக்கவில்லையாதலால், இந்துசமயக் கோட்பாடுகள் சில சமண சமயத்தில் கலந்து விட்டது தவிர்க்க முடியாதது எனலாம். அதுபோல சமண சமயமும் ஓரளவு இந்துச் சமயத்தைப் பாதித்துள்ளது. உயிர்களைப் பலி கொடுத்ததையும், புலால் உண்பதையும் சமணர்கள் எதிர்த்ததினால், இந்து சமய நடைமுறையில் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்பட்டன.
மேலும், சமண சமயத்தில் இன்னா செய்யாமைக் கொள்கை இன்றுவரை இந்திய நாட்டில் சிந்தனையைப் பெரிதும் பாதித்து வந்துள்ளது.
சமணர்களின் தொகை என்றுமே குறைவாகத்தான் உள்ளது.. இன்று இந்தியாவில் அவர்களின் மொத்த தொகை 26,00,000.
உலக மக்கள் தொகையில் இது மிகக் குறைவானதுதான்..
=========================================================================
இன்று,
ஏப்ரல் -01.

- சிங்கப்பூர், பிரிட்டன் குடியேற்ற நாடானது(1826)
- கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது(2004)
- மலாய் கூட்டமைப்பு உருவானது(1946)
- இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது(1957)
- இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது(1935)