மாத்திரைகளின் மறுபக்கம்



ஸ்பைருலினாமாத்திரைகளை  சாப்பிடுவதால் செல்களில் ஏற்படும் சேதாரம் தடுக்கப்படுகிறது.
 திசுக்களில் ஏற்படும் பிரச்னைகளையும் சரி செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியும்  அதிகமாகும். 
உடலுக்குத் தேவையான 22 அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3, ஒமேகா 6  ஆகியவையும் உள்ளன.  தாதுச்சத்துகளில் மாங்கனீஸும் இரும்புச்சத்தும் உள்ளன. மாங்கனீஸ் சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட். உடலில்  ஏற்பட்ட புண்கள்  ஆறுவதற்கு உதவும். 
ரத்தசோகை வராமல் தடுக்க இரும்புச்சத்து அவசியம்.  
இந்த ஸ்பைருலினா மாத்திரைகள் கடல் பாசியில் இருந்து தயாரிக்கப்படுபவை. இதில் 79 சதவிகிதம் புரதச்சத்து இருக்கிறது. 


உடலை சோர்வடையாமல் எனர்ஜியுடன்  வைப்பதில் இந்த வைட்டமின்களுக்கு முக்கிய பங்குண்டு.இதை மாத்திரை வடிவில்தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. 
கடல் பாசியை  உணவில் போதுமான அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் சத்துகளைப் பெறலாம். 
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஜிகர்தண்டா  குளிர்பானத்தில் போதுமான அளவு கடல் பாசி சேர்க்கப்படுகிறது. 
ஃபலூடா ஐஸ்க்ரீமிலும் கடல் பாசி சேர்க்கப்படுகிறது. 
இயற்கையான பழச்சாறுகள்  சிலவற்றில் சுவைக்காக கடல் பாசி சேர்க்கின்றனர். 
ஸ்பைருலினா மாத்திரைகளை மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைப் படி சாப்பிடுவது நல்லது. 
சுயமாக இம்மாத்திரைகளை  வாங்கி சாப்பிட்டால் உடலில் நச்சு அளவு அதிகமாகிவிடும். 
அதனால் தேவையானவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.  வழாக்கம் போல்  பல  போலி  மாத்திரைகளும் ஸ்பைருலினா பெயரில் வருகி்றது . அதனால், தரமான நிறுவனங்களின் ஸ்பைருலினா தயாரிப்புதானா என உறுதிப்படுத்திக்கொண்டே சாப்பிட வேண்டும். 
=======================================================================
இன்று,

ஏப்ரல்-24.
ஜி.யு.போப்.


  • காம்பியா குடியரசு தினம்(1970)
  • தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கரான ஜி.யு.போப் பிறந்த தினம்(1820)
  • இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம் அமைக்கப்பட்டது(1993)

  • அமெரிக்காவின் முதல் செய்தித்தாளான தி போஸ்டன் நாளிதழ் வெளியிடப்பட்டது(1704)


=======================================================================
ஆன்டிபயாக்  அவசியமா  நமக்கு?

 கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மருத்துவ சாதனை என்று போற்றப்படுவது, ஆன்டி பயாடிக்குகளைக் கண்டு பிடித்ததுதான். உலகின் முதல் ஆன்டிபயாடிக் மருந்தான பென்சிலின் மருத்துவத் துறையில் பெரும் புரட்சியைச் செய்தது.

ஆன்டிபயாடிக்.  இப்போது மிக  பிரபலம். சளி, இருமல் என்றால் உடனே ‘ஒரு ஆன்டிபயாடிக் போட்டுக்கோ’ என்று சாதார ணமா னவர்கள் கூட  சாதாரணமாக சொல்வார்கள்.
ஆன்டிபயாடிக் என்பது இரட்டை முனை கத்தி போன்றது. இதன் அளவு குறைந்தாலும் ஆபத்து; கூடினாலும் ஆபத்து. இதில் இரண்டாவது கருத்துக்குச் சரியான உதாரணம் இது. இந்தியாவில் சாதாரண சளிக்கு வழக்கமாக பயன்படுத்தக்கூடிய அமாக்ஸிசிலின் மருந்து அதீதமாக பயன்படுத்தப்பட்ட காரணத்தால், அது பலன் தரும் திறனை இழந்துவிட்டது.

உலக அளவில் 1930க்கு முன்பு சிறிய வெட்டுக்காயம், சாதாரண சளிகூட பலரது மரணத்துக்குக் காரணமாக அமைந்தன. பிளேக், காலரா போன்ற கொள்ளை நோய்கள் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் அசுர வேகத்தில் பரவி, பல்லாயிரம் உயிர்களைப் பலி வாங்கிய வரலாறு உண்டு. ஆன்டிபயாடிக்கின் வரவு மனித குலத்தை மிகப் பெரிய அழிவிலி ருந்து காப்பாற்றி இருக்கிறது.

அதே நேரத்தில் எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் எது மனிதனின் அற்புதக் கண்டு பிடிப்பாகக் கருதப்பட்டதோ, அதே ஆன்டிபயாடிக் இப்போது முனை மழுங்கிய வாளாக தன் சக்தியை இழந்துகொண்டி ருக்கிறது. ‘கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா கிருமிகள் இப்போது ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டு பலத்த ஆதிக்கம் செலுத்துகின்றன.

இதனால் சாதாரண நோய் களுக்குக் கொடுக்கப்படுகின்ற ஆன்டிபயாட்டிக்குகள்கூட தங்கள் செயல்திறனை இழந்து நிற்கின்றன. அற்புதங்கள் புரியும் ஆன்டிபயாட்டிக்குகளையே அழிக்கும் அளவுக்கு ‘கிருமிகளின் எதிர்ப்பு சக்தி’ (Antibiotic Resistance) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதற்கு பதிலாக இப்போது அதைவிட வீரியம் நிறைந்த ஆன்டிபயாடிக்குகளையே அலோபதி மருத்துவம் பயன் படுத்துகிறது. இவற்றின் விலையோ அதிகம். பக்கவிளைவு களும் கூடுதல்.
சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி போன்றவற்றைக் கூட 18 சதவீத மருத்துவர்கள் வீரியம் மிகுந்த ஆன்டிபயாடிக் மாத்திரை, ஊசி மருந்து மூலம் குணப்படுத்த முற்படுகிறார்கள். நோயாளிகளும் உடனடியாக குணமாக வேண்டும் என்கிற நோக்கத்தில் இம் மாதிரியான சிகிச்சையை விரும்புகிறார்கள்.

நகரங்களில் தனியார் மருத்துவ வசதிகள் பெருகியிருப்பதும், கிராமங்களில் போலி மருத்துவர்கள் ஆதிக்கம் செலுத்துவதும், மக்கள் சுய மருத்துவம் செய்துகொள்வதும் இந்தியாவில் அதிகமான ஆன்டி பயாடிக் பயன்பாட்டிற்குக் காரணமாக அமைகின்றன.

இதனால் ‘‘50 சதவீதம் ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்களும் சரி, நோயாளி களும் சரி, அளவுக்கு மீறியோ, தேவையற்ற சூழலிலோ பயன் படுத்துகிறார்கள்’’ என்கிறது இந்திய பொது சுகாதாரத்துறை. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் விற்பனையைக் கூட்டு வதற்காக போட்டி போட்டுக் கொண்டு  இதை ஊக்குவிக்கின்றன.

இதன் விளைவால் ‘‘இந்தியாவில் 53 சதவீதம் பேர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ஆன்டிபயாடிக்கு களைப் பயன் படுத்துபவர்களாக இருக்கி றார்கள்’’ என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இந்த நிலைமை நீடித்தால், எந்த ஒரு மருந்துக்கும் கட்டுப்படாத நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது சாதாரண சளி, இருமல்கூட உயிரிழப்பில் முடியக்கூடும் என்று எச்சரிக்கிறது இந்த நிறுவனம். நோய் என்று வந்துவிட்டால் அதற்கான காரணத்தைத் தெரிந்து சிகிச்சை பெற வேண்டும். முக்கியமாக ஆன்டிபயாடிக் மருந்து தேவையா என்று தெரிந்த பிறகே அதைச் சாப்பிட வேண்டும். தேவை யில்லாமல் இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அது எச்சரித்துள்ளது.
சரி, ஒருவருக்கு ஆன்டிபயாடிக் மருந்து தேவையா, இல்லையா என்று எப்படித் தெரிந்து கொள்வது? இதுவரை இதைக் கண்டுபிடிக்க ‘கல்ச்சர் மற்றும் சென்சிட்டிவிட்டி’ என்று ஒரு பரிசோதனை உதவியது. நோயாளியின் ரத்தம், சிறுநீர் போன்ற வற்றில் உள்ள கிருமிகளை வளர்த்து, அவை எந்த மருந்துக்குக் கட்டுப் படுகிறது என்று கண்டு பிடிக்கும் பரிசோதனை இது. ஆனால் இதன் முடிவு தெரிய ஒரு வாரம் வரை ஆகலாம்.

அதுவரை நோயாளிக்கு ஏதாவது ஒரு ஆன்டிபயாடிக் மருந்தைக் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், இப்போது நிலைமை மாறியுள்ளது.இஸ்ரேலில் உள்ள மீமெட் நிறுவனம் நோயாளிக்கு ஆன்டிபயாடிக் தேவையா, இல்லையா என்பதை இரண்டு மணி நேரத்துக்குள் தெரிவிக்கும் பரிசோதனை ஒன்றை இப்போது கண்டுபிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் இரான் ஈடன் (Eran Eden) இதன் தொழில்நுட்பம் பற்றிச் சொல்கிறார்.

‘‘இதுவரை நடைமுறையில் இருக்கும் பரிசோதனைகள் எல்லாமே நோயாளியிடம் காணப்படும் நோய்க் கிருமியைக் கண்டறிந்து அது பாக்டீரியாவா, வைரஸா என்று தெரிவிக்கும். ஆனால் எங்கள் பரிசோதனை, நோய் எதிர்ப்பு சக்தியை ஆராய்ந்து அதன் வழியாக நோய்க்கிருமி எது என தெரிவிக்கும்.

வழக்கத்தில் ஒரு பாக்டீரியாவோ, வைரஸ் கிருமியோ உடலுக்குள் புகுந்ததும் நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தின் புரதக்கூறுகளைத் தூண்டு கின்றன. இவற்றில் பாக்டீரியா வால் தூண்டப்படும் மூன்றுவித புரதங்களையும் வைரஸால் தூண்டப்படுகிற மூன்று வேறுபட்ட புரதங்களையும் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

எளிய ரத்தப்பரிசோதனையில் இந்தப் புரதங்களைக் கண்டறியும் வழிமுறைதான் நாங்கள் கண்டுபிடித்துள்ள பரிசோத னைக்கு அடிப்படை. ‘இம்யூனோ எக்ஸ்பர்ட் இம்யூன் சிக்னேச்சர்’ (Immuno Xpert immune Signature)  என்பது இதன் பெயர். நோயாளியைப் பாதித்துள்ளது பாக்டீரியாவா, வைரஸா என்று இது துரிதமாகவும் மிகத் துல்லியமாகவும் கண்டுபிடித்துச் சொல்லி விடும். இந்தக் கண்டு பிடிப்பின் பயனாக நோயாளி களுக்கு இனி தேவையில்லாமல் ஆன்டிபயாடிக் மருந்தைத் தருவது தடுக்கப்படும்’’ என்கிறார் ஈடன்.
=======================================================================

ஜெய் ஜவான்!

 ஜெய் கிசான்   சவம் !!

தில்லியில் நடைபெற்ற ஆம்ஆத்மி கட்சியின் போராட்டத்தின்போது, ராஜஸ்தான் மாநில விவசாயி கஜேந்திரசிங் என்பவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், கடந்த 3 மாதங்களில் மட்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 601 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது, துரதிருஷ்டவசமாக, ஊடகங்களில் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
தில்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சனை எழுப்பியபோது, விவசாயி தற்கொலை வேதனை அளிப்பதாகவும், மனிதஉயிர் விலை மதிப்பற்றது என்றும்பிரதமர் மோடி நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.
அந்த விவசாயி எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை விட்டு,விட்டு ஆம் ஆத்மி கட்சியினால்தான் இந்த கொலை செய்யப்பட்டது போல்  பாஜக தோற்றத்தை உருவாக்கிவருகிறது.இதில் காங்கிரசும் சேர்ந்து கொண்டது அவர்கள் அரசியல் பிழைப்புக்காக.
ஆனால் மோடி இந்த தற்கொலைகளுக்கு தனது அரசின் விவசாய 
நிலபறிப்பு  சட்டம்தான் மூலக் காரணம் என்பதை மறைத்து விட்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
ஆனால், அவரது கட்சியான பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்றே மாதங்களில் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பதை அவர் வசதியாக மறந்துவிட்டார்.
கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 1981 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 
ஆனால் இந்த ஆண்டு முதல் 3 மாதங்களில் மட்டும் 600 பேர் தற்கொலை செய்திருப்பது மிகவும் அதிகமான எண்ணிக்கை என்று விவசாயிகள் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

இந்த தற்கொலைகளில் அதிக எண்ணிக்கை - அதாவது 319 பேர் - பாஜக மாநில அரசின் முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் சார்ந்துள்ள விதர்ப்பாவின் பருத்தி விவசாயப் பகுதியில் நடந்துள்ளது. 

215 தற்கொலைகள் மரத்துவாடா பகுதியில் நடந்துள்ளன.

இவர்களுக்கு எந்தவிதத்திலும் நிவாரணம் எதையும் பாஜக அரசு அறிவிக்கவில்லை.

மாறாக,வழக்கம்போலவே, தற்கொலை செய்து கொண்டவர்கள் அனைவரும் சொந்தப் பிரச்சனைக்காகத்தான் இறந்து போனார்கள் என்று திசைதிருப்புவதிலேயே அரசு குறியாக உள்ளது.

============================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?