இந்தியாவை அழிக்கும் சுனாமி மோடி.
இன்று விவசாயம் !
நாளை மீன் பிடித்தொழில்!!
இந்தியாவை அழிக்கும்
தனியார்-அந்நிய மய சுனாமி மோடி.
இந்தியாவில் இந்தியர்களாக உள்ள குடிமக்களின் நிலை மிக மோசமாகிக்கொண்டு வருகிறது.
அதுவும் மோடி பிரதமராக பாஜக அரசு வந்தது முதல் இந்திய குடிமக்களின் வாழ்வாதாரங்களே அழிப்பதுதான் அந்த அரசின் முழு நேர பணியாக,கொள்கையாக உள்ளது.
நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் விவசாய நிலங்களை மோடியின் புதிய நில பறிப்பு சட்டம் மூலம் பறித்து பெருந்தொழில் அதிபர்களுக்கும்,ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் தாரை வார்த்து விவசாயத்தை அழிப்பது போதாது என தற்போது நிலத்தை விட்டு கடலில் மீன் பிடித்து கடலைச்சார்ந்து வாழவை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பக்கம் மீனா குமாரி என்ற அசிந்தனையாளர் பரிந்துரைகளை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது மிக கொடுமையான குடிமக்கள் மீதான தாக்குதலாக உணரப்படுகிறது.
நிலத்தில் விவசாயம் செய்து பிழைப்பதற்கு வேட்டு வைத்த கையோடு கடலில் பிழைக்கும் மக்களுக்கும் ஆப்பு வைக்க மோடி அரசு தயாராகி விட்டது.
இப்போது மோடிக்கும் அவரின் பாஜகவுக்கும் மிக முக்கியமான கேள்வி?
இது போன்ற மக்கள் வாழ்வையே சிதைக்கும் சட்டங்கள் கொண்டுவருவதுதான் உங்கள் கொள்கை என்பதை ஏன் தேர்தலின் போதே சொல்லவில்லை.?
இது போன்ற முதலாளித்துவ,அன்னிய நாடுகள் அடிவருடி சட்டங்கள் போடுவதன் மூலம் இந்தியா என்னவகையில் முன்னேறி விடும் என்று நினைக்கிறீர்கள்?
இந்திய மக்கள் நலனுக்கெதிராக விவசாய நிலங்களை பிடுங்கி தனியாருக்கு தொழிற்சாலைகள் அமைக்க கொடுப்பதன் மூலம் இந்தியா விவசாய நாடு என்ற அடிப்படியே தர்க்கப்படும் என்பது தெரியாத அளவு சுதேசியா மோடி நீங்கள்?
அப்படி ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைகளும் நோக்கியா,பாக்ஸ் கான் போன்று மூடப்பட்டால் அதை சார்ந்த மக்களின் வாழ்வும் போய் விடும்,விவசாயமும் கைக்கழுவப்பட்டதாக ஆகிடுமே.
அதன் பின் இந்தியா இன்னொரு சூடான்,சோமாலியா வரிசையில் தான் இடம் பிடிக்கும்.
பிரதமாரனாது முதல் வெளி நாடுகளில் சுற்றுப்பாயணம் சென்று இந்தியாவை விற்பனை செய்யும் நீங்கள் வெளினாடுகளிலேயே உல்லாசப்பயணம் சென்று கொண்டே இருங்கள்,காமிராக்களில் முகத்தைக்காட்டிக்கொண்டேஇருங்கள். இந்தியா வரவே வேண்டாம்.
ஆனால் வெளி நாடுகளில் இந்தியாவை விற்பனை செய்யும் முதலாளித்துவ விற்பனை பிரதி நிதி பணியை மட்டும் விட்டு விடுங்கள்.
சரி.அக்கா மீனா குமாரி கடல் விற்பனை பரிந்துரைகளில் என்ன ,என்ன உள்ளது.பார்க்கலாம்.
1. கார்பரேட் நிறுவனங்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்குதல்.
2. மீன் ஏற்றுமதி முழுவதும் தனியார் நிறுவனங்கள்மூலம் நடைபெற வகைசெய்தல்.
3, தனியார் நிறுவனங்களுக்கு[கவனிக்கவும்.அன்னிய ,தனியார் நிறுவனங்களுக்கு மட்டும்] மானியவிலையில் மீன் பிடி உபகரணங்கள் வழங்குதல்.
4. வெளிநாட்டு நிறுவனங்களை மீன்பிடிக்க இந்திய கடற்பகுதியில் அனுமதித்தல்.
5. கார்பரேட் நிறுவனங்களின் கண்காணிப்பில் இந்திய மீனவர்களுக்குப் பயிற்சியளித்தல்.[அதாவது அவர்களுக்கு கொத்தடிமைகளாக்குதல்]
6.நவீன உபகரணங்கள் கொண்டு மீன்பிடிக்க அனுமதி பெற்ற குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு மாத்திரமே கடலில் மீன் பிடிக்கும் உரிமையை வழங்குதல் [இப்போது மீன் பிடிப்பவர்கள் எல்லோரும் விவசாயிகள் தூக்கில் தொங்கி வருவது போல் தொங்க வைத்தல்]
இது போன்ற பல்வேறு பாதகமான முடிவுகளை மீனா குமாரி தந்த அறிக்கையில் உள்ளன.
முக்கியமாக சில அயல்நாட்டு நிறுவனங்கள் இந்திய கடல் பகுதியில் மீன்பிடிக்க கடந்த ஆட்சியில் கோரிக்கை விடுத் திருந்தன. அந்த கோரிக்கையை பரிசீலனையில் வைத்திருக்கும், மோடிஅரசு உடனடியாக மீனா குமாரி திட்டங்களை அமுலுக்குக் கொண்டுவருவதில் மிகுந்த அக்கறை காட்டுகிறது.
இதனால் இந்திய மீனவர்கள் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
இதுவரை சுதந்திரமாக மீன்பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்கள் பெருமுதலாளிகள் மற்றும் கார்பரேட் நிறுவனங் களுக்கு மீனவர்கள் கொத்தடிமைகளாக செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும்.
இதில் தமிழ்நாட்டு மீனவர்களின் நிலைதான் மிகக் கவலைக்குரியது.
தங்களது பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமையை கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட தன்மூலம் இழந்து பரிதவிக்கும் நிலை;
ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்கள் இலங்கைச் சிங்களக் கடற்படையினரால் கடுமையாகத் தாக்கப்படும் நிலை
- சிறை பிடிக்கப்படும் அவலம் - படகுகளைப் பறிகொடுக்கும் பரிதாபம் என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.மோடி அரசிலும் இதே நிலைதான் உள்ளது.
இந்தக் கூத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களோடும், வெளி நாட்டு நிறுவனங்களோடும் போட்டிப் போட்டுக்கொண்டு மீன்பிடித் தொழிலை நடத்த முடியுமா?
பன்னாட்டு நிறுவனங்கள் எந்தெந்த துறைகளில்தான் தலையிடுவது - நுழைவது என்பது வரைமுறையில்லாமல் போய்விட்டது.
இன்னும் ஒன்றை மட்டும்தான் மத்திய அரசு செய்யவில்லை.
இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கும், நிர்வாகம் செய்வதற்கும் அந்நிய நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதுதான் பாக்கி.ஆனால் அந்த அன்னிய நாடுகளின் கட்டளையை ராமரின் செருப்பை வைத்து ஆட்சி செய்த பரதனை விட ஒரு படி மேலாக இந்திய மக்கள் எவ்வளவு எதிர்த்தாலும் நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறது இந்த மோடி ஆட்சி.
அதாவது தமிழ் நாட்டில் உள்ள ஒ.பன்னீர் செல்வம் தான் மேலே மோடி.இங்கே ஜெயலலிதா.அங்கு ஒபாமா அவ்ளோதான்.
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இன்னும் நான்கு ஆண்டுகள் தொடருமேயானால் ராணுவம்,காவல்துறை,அமைச்சர்கள் கூட கார்ப்பரேட்களின் குத்தகை அல்லது ஒப்பந்தம் எனும் நிலையும் ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலையில், அங்குக்கூட சொந்த நாட்டு விவகாரம் என்ற உணர்வு இல்லாமல் கடந்தகால காங்கிரசு ஆட்சியை வெட்கம் குறைகூறிப் பேசும் இந்தியப் பிரதமர் மோடி, உள்நாட்டில் நிலவும் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தவேண்டாமா?அந்த மக்களின் விருப்பங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா?
மீன்வளத்தைப் பெருக்கிட நீலப் புரட்சியை அறிவித்துள்ள மோடி அரசு, மேக் இன் இந்தியா என்ற தனது கொள்கையை கூட தூக்கிக் குப்பைக் கூடையில் வீசி எறிந்துவிட்டு, மீன்பிடித் தொழிலில்கூட அந்நிய நாட்டு நிறுவனங்களை இறக்கிவிடும் கொள்ளையை என்ன கணக்கில் சேர்க்க?
270 பன்னாட்டு ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களுக்கு உரி மங்கள் வழங்கப்பட உள்ளன.
5 கோடி மீனவக் குடும்பங்கள் கடலுக்குள் நுழைய முடியாமல், தரையில் வாழ்வாதாரம் இழந்து கண்ணீரில் தத்தளிக்கும் கொடுமையை அனு மதிக்க கூடாது. டாக்டர் மீனாகுமாரி ஆலோசனைகளை செயல் படுத்தக் விடக் கூடாது .
வாக்களித்து பிரதமராக்கிய இந்திய மக்களை தெருவில் பிச்சை எடுக்க வைத்து விட்டு பத்து லட்ச ரூபாய் கோட்டு போட்டுக்கொண்டு கட்சிக்கு பணம் கொடுத்த கார்பரேட்கள்,அன்னிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிகப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கும் பாஜக,மோடி கூட்டணியை டெல்லியில் ஆம் ஆத்மி துடைத்து எறிந்தது போல் இந்தியா முழுக்க துடைத்து எறிய இந்திய மக்கள் தயாராக வேண்டும்.இல்லையென்றால் மக்களின் வாழ்க்கைதான் சுத்தமாக துடைத்து காணாமல் போய் விடும்.
==================================================================================================================================
மோடியின் நில பறிப்பு சட்டத்தை எதிர்த்து நடந்த விவசாயிகள் பேரணியில் திடீரென மரத்தில் தூக்க்கில் தொங்கி விவசாயி தற்கொலை. |
1969ல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்டா பார்பாராவில் பயங்கர எண்ணெய் விபத்து நடந்தது. அதன் பிறகு தான் வளிமண்டலம், நீர், மண் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கேலார்டு நெல்சன் என்பவர் இந்த புவி நாளை தேர்ந்தெடுத்தார்.கடந்த 1970ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 192 நாடுகளில் கொண்டாடப்படுவது இதன் சிறப்பு அம்சம். கடந்த ஆண்டு ‘பசுமை நகரங்கள்’ என்ற நோக்கத்தில் கடைப்பிடிக்கப்பட்ட புவி தினம், இந்த ஆண்டு ‘அற்புதமான தண்ணீர் உலகம்’ என்ற நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
இந்த பூமி சுமார் 80 சதவீதம் கடலால் சூழப்பட்டு உள்ளது. பூமிக்குள் இருக்கும் மொத்த தண்ணீரின் அளவு சுமார் 1.39 கோடி கியூபிக் கி.மீ. இதில், நல்ல தண்ணீர், நிலத்தடி நீர் மற்றும் ஏரிகள், குளங்கள் போன்றவற்றில் நிரம்பும் தண்ணீர் அளவு சுமார் 1.07 லட்சம் கியூபிக் கி.மீ. ஆனால், பூமியில் இருக்கும் தண்ணீரில் ஒவ்வொரு நாளும் சுமார் 1,200 கியூபிக் கி.மீ. அளவு ஆவியாகிறது. இதற்கு காரணம் பூமியின் மேற்பரப்பில் உள்ள பசுமை காடுகள் அழிக்கப்படுவதாலும் பூமி வெப்பமாவதாலும்தான். பசுமையை பாதுகாப்பதும் பூமி வெப்பயமாதலைத் தடுப்பதும்தான் நம் முன் உள்ள முக்கிய பணியாக ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.
உலக பூமி தினம் ================= இன்று, ஏப்ரல்-22.
|