வெள்ளி, 3 ஏப்ரல், 2015

உடன்குடி மின்திட்டமும்


பெல் நிறுவனமும்!


உடன்குடி மின்திட்டம் ஒரு விவாதத்திற்குரிய பொருளாக மாறியுள்ளது.
 2009ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் மத்திய அரசு நிறுவனமான பாரத மிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்) மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத் திட்டத்தின்கீழ் உடன்குடி பவர் கார்ப்ப ரேசன் லிமிடெட் எனும் கூட்டு நிறுவனம் உரு வாக்கப்பட்டது.
 ரூ 8,000 கோடி மதிப்பீட்டில் 800 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் தொடங்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆட்சி மாற்றத் திற்குப் பிறகு 2012ஆம் ஆண்டு இத்திட்டம் ரத்துசெய்யப்பட்டது. தமிழக மின் வாரியம் மட்டும் தனித்தே அந்தத் திட்டத்தைத் தொடங்கப் போவதாகவும், 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் அமைக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு மறு டெண்டர்விடப்பட்டது.
இட்டெண்டரின் இறுதியில் பி.எச்.இ.எல் மற்றும் ஒரு சீன நிறுவனம் போட்டியில் இருந்தன.
ஒரு கட்டத்தில் பி.எச்.இ.எல் ஆர்டரை பெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனி டையே சீன நிறுவனம் நீதி மன்றம் சென்றது.
இறுதியில் இத்திட்டம் ஜெயா அரசால் நொண்டிக் காரணங்கள் கூறி இரண்டாவது முறையாக கைவிடப்பட்டுள்ளது.

 ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரம்

இதுகுறித்து சில ஊடகங்கள் தமிழ் நாடு அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிட பி.எச்.இ.எல் பற்றி உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடுகின்றன.

 உதாரணத்திற்கு 01.04.2015 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ஜோ. ஸ்டாலின் என்பவர் எழுதிய ‘உடன்குடி திட்டம் அவிழ்க் கப்படாத மர்ம முடிச்சுகள்” எனும் கட்டுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது .

:“நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பது உடன்குடி அனல்மின் திட்டம்.
 இது குறைந்த எரி பொருளில் அதிக மின்சாரத்தை தயாரிக்கும் ‘சூப்பர் கிரிட்டிக்கல் வகையைச் சேர்ந்தது இதற்கானதொழில்நுட்பம் இந்தியாவில் எந்த நிறுவனத் திடமும் கிடையாது.
மத்திய அரசின் நவரத்தினங் களில் ஒன்றான பாரத மிகு மின் நிலையம் என்றழைக்கப்படும் பெல் நிறுவனத்திடமும் கிடையாது என்கிறார்கள்”இது முற்றிலும் தவறான தகவல் ஆகும்.
 ‘சூப்பர் கிரிட்டிக்கல் தொழில்நுட்பத்தை பி.எச்.இ.எல் சில ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைத்துவிட்டது. 
இந்த தொழில்நுட்பம் மூலம் மின் சாதனங்களை பி.எச்.இ.எல் கீழ்கண்ட அனல் மின் நிலையங்களுக்கு தந்துள்ளது :திட்டத்தின் பெயர் மெ.வா. மாநிலம்பார் 2ஒ660 பீகார்லலித்பூர் 3ஒ660 உ.பிபெல்லாரி 2ஒ700 கர்நாடகாகிருஷ்ணபட்டணம் 2ஒ800 ஆந்திராஇதுவரை மத்திய அரசு நிறுவனமான என்டிபிசிக்கு மட்டும் 16020 மெ.வா. அள விற்கு சூப்பர் கிரிட்டிக்கல் கருவிகளை பி.எச். இ.எல் அளித்துள்ளது. இதில் 660 மெ.வா. மட்டுமல்ல 800 மெ.வா. மின் சாதனங்களும் அடங்கும்.இவற்றில் லலித்பூர் 3ஒ660 மெ.வா. திட்டத்தை கடந்த ஜனவரி மாதமும் 2ஒ 800 மெ.வா. கிருஷ்ணபட்டணம் மார்ச் மாதமும் வெற்றிகரமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. 
உண்மை இவ்வாறிருக்க, சூப்பர் கிரிட்டிக்கல் தொழில்நுட்பமே பி.எச்.இ.எல்வசம் இல்லை எனக்கூறுவது சோற்றில் முழு பூசணியை அல்ல; யானையை மறைக்க முயலும் முயற்சி ஆகும்.
ஜெயலலிதா அரசின் முறைகேடுகளுக்கு ஊடகங்கள் துணை போவதை இந்த செய்திகள் வெளிச்சம் போட்டுக்  காட்டுகின்றன.
சமீபத்தில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2ஒ 660 மெ.வா. ‘சூப்பர் கிரிட்டிக்கல் மின் திட்டத்திற்கான ஆர்டரை பி.எச்.இ.எல் பெற்றுள்ளது.
இந்த ஆர்டர் பி.எச்.இ.எல்க்கு கிடைக்காமல் இருக்க போட்டியில் தோல்வியுற்ற சீன நிறுவனம் நீதிமன்றம் வரை சென்றதும் இறுதியில் விலைகுறைவான டெண்டர் அளித்த பி.எச்.இ.எல்க்கு ஆர்டர் வழங்கிட நீதிமன்றம் தீர்ப்பளித்ததும் அனைவரும் அறிந்த ஒன்று!
அப்படி இருக்கையில் ஜூ.வி.இப்படி பொய்யான தகவல்களைத்தருவது ஏன் ?
 பி.எச்.இ.எல் சந்திக்கும் சமமற்ற போட்டிசீனா மட்டுமல்லாது கொரியா போன்ற நிறுவனங்களின் போட்டிகளை பெல் நிறுவனம் சந்திக்க வேண்டியுள்ளது.
போட்டி அசமத்துவமாக உள்ளது என்பதுதான் பிரச்சனை. சீன / கொரிய அரசாங்கங்கள் தமது நாட்டு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை அளிக்கின்றனர்.
குறைந்த வட்டியில் கடன் அளிக்கின்றனர். எனவே கருவிகளை அளித்து அதனை வாங்கிட கடனையும் சீன/ கொரிய நிறுவனங்கள் தருகின்றன. ஆனால் மோடி தலைமையிலான இந்திய அரசோ பி.எச்.இ.எல்க்கு தடைகளை ஏற்படுத்துவதில்தான் முனைப்பு காட்டுகிறது.
பெல் நிறுவனம் 20,000 மெ.வா. அளவிற்கு உற்பத்தி திறனை விரிவாக்கம் செய்துள்ளது. தேசத்தின் தேவையோ ஆண்டுக்கு 20,000 மெ. வா. ஆகும்!
எனவே பெல் நிறுவனம் மட்டுமே தனியாக தேசத்தின் மின் உற்பத்தி சாதன தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
ஆனால் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அரசங்கங்கள் கீழ்கண்ட தனியாருக்கும் ஆலைகள் அமைத்திட அனுமதி வழங்கின.நிறுவனம் அந்நிய கூட்டு உற்பத்திதிறன்/ ஆலை உள்ள நிறுவனம் மெ.வா இடம்எல் அண்ட் டி மிட்சுபிஷி/ஜப்பான் 6000 சூரத்/குஜராத்பாரத் ஃபோர்ஜ் அல்ஸ்டாம்/பிரான்சு 5000 சனந்த்/குஜராத்தூசான் கொரியா நேரடி உற்பத்தி 3000 சென்னைஜிண்டால் டோஷிபா/ஜப்பான் 3000 சென்னைதெர்மாக்ஸ் பேப்காக்ஸ்/வில்காக்ஸ்/ அமெரிக்கா 3000 புனே/மராட்டியம்கேமன் அன்சால்டோ/ இத்தாலி 2000 தமிழ்நாடுபி.ஜி.ஆர். `ஹிட்டாச்சி/ஜப்பான் 3000 சென்னை மொத்தம் 25,000மெ.வா.தனியார் நிறுவனங்கள் மேலும் 25,000 மெ.வா. உற்பத்திதிறனை கொண்டுள்ளன. ஆக மொத்தம் 45,000 மெ.வா. உற்பத்தி ஆண்டொன்றுக்கு சாத்தியம்.
ஆனால் தேசத்தின் தேவையோ ஆண்டுக்கு 20,000 மெ. வா. மட்டுமே! உள்நாட்டு உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறன் 25,000 மெ.வா. அளவிற்கு பயன்படாமல் போகும் ஆபத்து உள்ள பொழுது சீன, கொரிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு தருவது எப்படி நியாயமாக இருக்க முடியும்?
மோடி அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் காரணமாக பி.எச்.இ.எல் நிறுவனம் ஒரு சமமற்ற போட்டியை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் பி.எச்.இ.எல் குறித்து தவறான தகவல்களை சில ஊடகங்கள் பரப்புவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
உடன்குடி திட்டம் எப்பொழுது இறுதி செய்யப்பட்டாலும் அதற்கான ஆர்டர்களை பி.எச்.இ.எல்க்கு தருவது என்பதே பொருத்தமான முடிவாக இருக்க முடியும்.
அத்தகைய நியாயமான முடிவை இனியாவது ஜெயா அரசு எடுக்க வேண்டும்.
 
2023 ஆவது[ஒரு வேளை நீஙகளே ஆட்சியில் இருந்தால்] மின்வெட்டு நீங்குமா?

==========================================================================
==========================================================================
இன்று,
ஏப்ரல்-03.

*வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாடிமிர் லெனின் ரஷ்யா திரும்பினார்(1917)
  • உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயார்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது(1973)
  • மராட்டிய பேரரசர் சிவாஜி இறந்த தினம் (1680)
  • ஃபுரூரியின் முதல் பார்லிமென்ட் உருவாக்கப்பட்டது(1077)
  • "ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ள அரியலூரில், பள்ளி குழந்தைகளுக்கு, லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது.,
  • [இதுவரை மொத்தமாக அரி யலுருக்கு அல்வா மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது]
==========================================================================