இளநீர்



"அதிக விலை கொடுத்து பல்வேறு விதமான செயற்கை பானங்களை வாங்கி குடித்து தாகத்தை தீர்த்துக்கொள்கின்றனர்.
 ஆனால் அந்த குளிர் பானங்களால் வரும் பின்விளைவுகளை மக்கள் அறிவதில்லை. இயற்கை அளித்த இளநீரை குடித்தால் தாகத்தை தணிப்பதுடன் புத்துணர்ச்சியை பெற்று நோயின்றியும் வாழலாம்.
கேரளாவில் மென்பானங்கள் ,தண்ணீர் பாட்டில்கள் விற்பனையை விட  இளநீர் 
தான் அதிகம் விற்பனை அதிகம்.

லக அளவில் தென்னை சாகுபடியில் இந்தியா 3வது இடம் வகிக்கிறது. தேங்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.அதில் கேரளாவுக்கு முக்கிய பங்குள்ளது.
 4வது இடம் வகிக்கும் இலங்கை தென்னை சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளது.

 ஆண்டுதோறும் சுமார் 122 ஆயிரம் கோடி இளநீர் மற்றும் தேங்காய் உற்பத்தி செய்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 7 ஆயிரம் கோடி தென்னை மரங்கள் வளர்கின்றன.

 40 ஆயிரம் கோடி இளநீர் மற்றும் தேங்காய்கள் உற்பத்தியாகிறது. தேங்காய் 50 சதவீதம் வீட்டு உபயோகத்துக்கும், 35 சதவீதம் பூஜை, பரிசு தாம்பூலம் போன்றவற்றிற்கும் பயன்படுகிறது.

 15 சதவீதம் மட்டுமே இளநீராக பயன்படுத்தப்படுகிறது. 
 தேங்காயை விட இளநீர் பயன்பாடு குறைவு. ஆனால் அதன்
 பயன் அதிகம்.
 ஒரு நபர் தினமும் ஒரு இளநீர் குடித்தால் இளநீரின் தேவை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும்.

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. 
தென்னை மரங்களில் பாளை (பூ) விரிந்த 2 வாரங்களில் ஆண் பூக்கள் மலர்ந்து உதிர்ந்துவிடும். 3வது வாரம் முதல் பெண் பூக்கள் கருவுறுதல் நிகழ்ந்து பிஞ்சுகளாக வளர தொடங்கும்.
 சுமார் 150 நாட்களில் இருந்து 180 நாட்களுக்குள் இளநீர் கிடைக்கும்.

 மே, ஜூன் மாதம் மற்றும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நாட்களில் கோடைக்கு ஏற்ற இயற்கை பானமாக உள்ளது.
 கோடைக்காலங்களில் வெப்பநிலை மாறுபாட்டால் உடலில் பித்தநீர் அதிகரித்து பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும்.

 இளநீரில் உள்ள சத்துகள் அவற்றின் பயன்களை பார்க்கலாம்.
* காலையில் இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கொழுப்பின் அளவு மிகவும் குறைவு. 
அதுவும் ரத்தத்துடன் கரையும் கொலஸ்ட்ரால் கெடுதல் செய்யாத கொழுப்பு வகையாகும்.
 அதனால் இளநீர் குடிப்பவர்கள் எடை பாதுகாக்கப்படுகிறது.
* 100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான 29 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும், ரத்த விருத்திக்கு தேவையான 0.1 மில்லி கிராம் இரும்புச்சத்தும் உள்ளது. இவற்றை உடல் நன்கு கிரகித்துக் கொள்ள செம்பு 0.04 மில்லி கிராமும் உள்ளது.
* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குளோரின் உப்பு 183 மில்லி கிராமும், வயிற்றில் ஹைடிரோ குளோரிக் அமிலம் சுரக்கவும் தசைப்பகுதியில் அதிகமாக சுண்ணாம்புச்சத்து தங்கிவிடாமல் தடுக்கவும் சோடியம் உப்பு மிகவும் உதவும். இது இளநீரில் அதிக அளவு உள்ளது.
* மூளையும் நரம்பு மண்டலமும் கோளாறு இல்லாமல் இயங்கவும் உடலுக்கு முக்கியமாக உதவும் தாது உப்பான பாஸ்பரஸ் 37 மில்லி கிராமும் இளநீரில் உள்ளது.
* பற்கள் பாதுகாப்புக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் தேவையான சுண்ணாம்புச்சத்து 29 சதவீதம் இளநீரில் உள்ளது.
* அயன்சத்து குளோரைடு சத்துகளும் ரத்த விருத்திக்கு உதவுகிறது.
* கால்சியம், அயன், மாக்னீசியம், துத்தநாகம் போன்ற தாது சத்துக்கள் உள்ளது. இதனால் இளநீர் குடிப்பவர்களின் தோல் பளபளப்புடன் இளமையுடன் காணப்படும். 
இளநீரின் பயன்கள் .

*வெப்ப நாடுகளில் வாழ்பவர்களின் உடல்நிலை அதன் தன்மைக்கேற்ப அமையும். மாறுபட்டால் உடலில் பித்தநீர் அதிகரித்து, உடல் அதிக உஷ்ணமாகும். இதனால் உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படும். இவை நீங்க தினமும் இளநீர் குடித்து வந்தால் உடல் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சி பெறும்.
* வயிற்றில் வாயு தொல்லை அதிகரித்து வயிற்றின் உட்புறச் சுவர்களை தாக்கி புண்களை ஏற்படுத்தும். நீண்ட பட்டினி, அதிக உணவு, உடலுக்கு ஒவ்வாத உணவு இவற்றால் ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் தீர்க்கும் குணம் இளநீருக்கு உண்டு.
* இளநீர் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும். ரத்தச் சோகையைப் போக்கும்.
* ரத்தக் கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு. அதனால் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.
ணி கோடை காலங்களில் அம்மை நோயின் தாக்கம் அதிகம் இருக்கும். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் கொடுத்து வந்தால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும்.
* இளநீரை உடலில் பூசிக்கொண்டால் தட்டம்மை, சின்னம்மை, பெரியம்மை, ஆகியவைகளால் ஏற்படும் உடல் அரிப்பைத் தடுக்கலாம்.
*மூளைக்கு புத்துணர்வும், நரம்புகளுக்கு வலுவும் ஏற்படுத்துகிறது. நினைவாற்றல் தூண்டப்படுகிறது.
*மது பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும். அதனை சீர்படுத்தும் குணம் இளநீருக்கு உண்டு.
* ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இருதயம் சீராக செயல்படும். இதய வால்வுகளை பலப்படுத்தும். தினமும் இளநீர் குடித்து வந்தால் இதய நோய் ஏதும் அணுகாது.
* பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.
* டைபாய்டு, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர் அருந்தினால் உடல் விரைவாகத் தேறும்.
* குழந்தைகளுக்கு கொடுத்தால் இதிலுள்ள சத்துக்கள் எலும்புகளுக்கும், உறுப்புகளுக்கும் வலுகொடுக்கும். உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* சிறுநீரை நன்கு உற்பத்தி செய்து, சிறுநீரகம் சீராக இயங்க செய்கிறது. சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
*மஞ்சள் காமாலை நோயாளிகள், மஞ்சள் நிற சிறுநீரை மாற்ற இளநீர் தவறாமல் குடிக்க வேண்டும்.
* காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும்.
* குழந்தைகள் இதை அருந்தினால் ஒடுங்கிப் போகாமல் ஓரளவு சதைப்பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள். இளநீரில் உள்ள சர்க்கரையை உடல் உடனடியாக கிரகித்துக் கொள்கிறது.
*  ஆண், பெண் பருவ கால முகப்பருக்கள் வராமல் தடுக்க இரவு தூங்க போகும்முன் இளநீரை வடிக்கட்டி முகத்தில் நன்கு பூசி துடைக்காமல் தூங்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் நன்கு முகத்தை கழுவி துடைத்து விடவேண்டும். 2 அல்லது 3 வாரங்கள் தொடர் ந்து இதுபோன்று செய்தால் முகப்பருக்கள் வராது. முக சுருக்கம் நீக்கி பளபளப்பாக அழகாக தென்படும், சிறுசிறு தழும்புகளும் நீங்கி விடும். உடலில் பூசி கொண் டால் தோல் சுருக்கமின்றி அழகு தோற்றம்தரும். இளமை தோற்றம் அளிக்கும்.
================================================
இன்று ,
ஏப்ரல்-10.
டைட்டானிக் தண்ணீரின் மேலே.
பிரமாண்டத்தின் அளவு.

தண்ணீரின் உள்ளே.
  • .ஏப்ரல் 10, ஆண்டின் 100வது நாளாகும். லீப் ஆண்டில் 101வது நாளாக கணக்கிடப்படுகிறது.
  • காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரிட்டனில் வெளியிடப்பட்டன(1710)
  • அமெரிக்காவில் காப்புரிமம் பற்றிய விதிகள் எழுதப்பட்டன(1790)
  • டைட்டானிக் கப்பல் தனது முதல் மற்றும் கடைசி பயணத்தை துவக்கியது(1912)

  • இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் இறந்த தினம்(1995)




========================================================================
சத்யம், இது சத்யம்.
--------------------------------
ஆந்திராவில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராமலிங்கராஜு.தற்போது வயது  60.
இவர்  விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில், பட்டப் படிப்பை முடித்தார். 
பின், எம்.பி.ஏ., படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். ஹார்வர்டு வர்த்தக பள்ளி மற்றும் ஒகியோ பல்கலையில் உயர் கல்வியை முடித்த அவர், மீண்டும் இந்தியா திரும்பினார். 
முதலில், ஸ்ரீசத்யம் என்ற பெயரில், ஸ்பின்னிங் மற்றும் வீவிங் மில்களை நிறுவினார்.
 பின், ரியஸ் எஸ்டேட் வர்த்தகத்திற்கு மாறிய அவர், 'சத்யம் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்' என்ற பெயரில், கட்டுமான நிறுவனம் ஒன்றை நிறுவினார். 1987ல், சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தை துவக்கினார்.
 1992ல், சத்யம் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிட்டதன் மூலம், பொது நிறுவனமாக மாற்றினார். 
இந்தியாவிலேயே நான்காவது பெரிய நிறுவனமாகவும், சத்யம் நிறுவனம் மாறியது.
 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், கம்ப்யூட்டர் மென்பொருள் துறையில் உருவான சிக்கல்  உலக நாடுகளை அச்சுறுத்தியது.அதுதான்  'ஒய்2கே' என்ற பிரச்னை.இதனால் 2000 ஆண்டு ஆரம்பமானதும் கணினி,இணையம்,மென்பொருட்கள் இயக்கத்தில் பாதிப்பு உண்டாகும் என்ற அபாயம் இருந்தது.
அதற்கு  இவரது சத்யம்  நிறுவனம் தீர்வு கண்டதன் மூலம் உலக அளவில்   பிரபலம் அடைந்தது.
 இதன் பின், 2009ல், அவரது நிறுவனம், 7,000 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 ராமலிங்கராஜுவும் அதை ஒப்புக் கொண்டார். 
அந்த ஆண்டு, ஜனவரி, 7ம் தேதி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கும், பங்குச் சந்தைகளுக்கும், அவர் இ-மெயில் ஒன்றை அனுப்பினார். அதில், நிறுவனத்தின் பண கையிருப்பு, வங்கி கையிருப்பை அதிகரித்துக் காட்டியும், நிறுவனத்தின் கடன்களை குறைத்துக் காட்டியும், நிதி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். 
இதையடுத்து, ராமலிங்கராஜு மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு, 14 ஆண்டுகளுக்கு பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட தடை விதித்த, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி', முறையற்ற வகையில் பெற்ற ஆதாயமான, 1,849 கோடி ரூபாயை, அதற்கான வட்டியுடன் சேர்ந்த, 3,000 கோடி ரூபாயாக செலுத்த வேண்டும் என, உத்தரவிட்டது. 
தற்போது சிறப்பு நீதிமன்றம் ராமலிங்கராஜு, சகோதரர் ராமராஜு ஆகியோருக்கு தலா 5.50 கோடி ரூபாயும் மற்றவர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும் அபராதம்  .ராமலிங்கராஜு மற்றும் அவரின் கூட்டாளிகள் 10 பேருக்கு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து .தண்டனை வழங்கி உள்ளது. 
ஆனால் இதைவிட அதிகம் முறைகேடுகளில் ஈடுபட்ட ,ஈடுபட்டு வருகிற அம்பானி,அதானி போன்றோர் மீது 2ஜி,நிலக்கரி சுரங்கம்,கோதாவரி படுகை ,வராக்கடன் மோசடி போன்றவற்றில் இதுவரை  நடவடிக்கையும் இல்லையே ஏன் ?
==================================================
தமிழர்களின் ரத்தத்தால் சிவந்தது.இந்த செம்மரங்கள்.தன்னை வெட்டி
  [சாய்த்து]கொலை செய்தவர்களுக்கு கோடாரி காம்புகளைத்தந்த மரங்கள் அவர்கள்  துப்பாக்கிகளால்
சாய்ந்ததை பார்த்து இன்னமும்
சிவந்தது.

============================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?