இந்தியாவுக்கு தேவையா?


டில்லியில் புதிய கட்டுமான திட்டப்படி, குடியிருப்பு பகுதியில், குறிப்பிட்ட தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் இந்தப்புதிய தடையை மீறி அதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வந்த தொழிற்சாலையை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் , டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம், 50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
தடை புதிதாக விதிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை ஆரம்பிக்கும் போது அந்த இடம் ஆட்கள் குடியிருப்பே இல்லாத இடம் அதனால் அனுமதிக்கப்பட்டுள்ளது.தொழிற்சாலைப் பகுதி என்று தெரிந்தும் சென்ற பாஜக ஆடசியில்தான் அங்கு குடியிருப்பு விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பல ஆண்டுகள் கழிந்த பின்னர் ஆம் ஆத்மீ ஆட்சி அமைக்கப்பட்டபின்னர்தான் துணை ஆளுநர் இப்படி தடையை விதித்தார்.இந்தத்தடையை கரணம் காட்டித்தான் பசுமைத் தீர்ப்பாயம் அரசுக்கு அபராதம் விதித்துள்ளது.

இதே பசுமைத்தீர்ப்பாயம் தூத்துக்குடியில் மக்களை புற்று நோய்,சுவாசக்கோளாறு,தோல் வியாதிகள் மூலம் கொன்று வரும் ஸ்டெர்லைட்டை மூட தமிழக அரசு ஆணைபிறப்பித்தப்பின்னரும் அலுவலகம் இயங்கலாம்,விரிவாக்கம் மட்டும் இயங்க வேண்டாம் என்று சொல்லுகிறது.

இந்த  பசுமைத்தீர்ப்பாயம் தீர்ப்பை  வைத்துக்கொண்டு ஸ்டெர்லைட் மீண்டும் இயங்க ஆரம்பிக்கிறது.

தெலுங்கானா,ஆந்திரா,பீகார் என்று பல மாநிலங்களில் மக்கள் எதிர்ப்பையும் மீறி,சுற்றுசூழல் கேட்டும் என்பது தெரிந்துமே அனில் அகர்வால்,அம்பானி,அதானி ஆகியோரின் அலுமினியம்,தாமிரம்,மீத்தேன் தொழிற்சாலைகளுக்கு பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது .

காட்டையும்,மலைகளையும்,ஏரி,குளங்கள் ,விவசாய நிலங்களை அழித்து உருவாக்ககும் மக்களுக்கு தேவையே இல்லாத மக்கள் அனைவரும் எதிர்க்கும் திட்டமான சேலம் எட்டுவழிச்சாலை ,மீத்தேன் திட்டங்களுக்கும் இதன் அனுமதிதான் காரணம்.பசுமையை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும்  இப்படி ஒரு பசுமைத்தீர்ப்பாயம் இந்தியாவுக்கு தேவையா?

இந்த தீர்ப்பாயம் இதுவரை பசுமையை காப்பாற்றி,சுற்றுசூழலை பாதுகாத்து ஒரு தீர்ப்பையாவது வழங்கியுள்ளதா?
சொல்லப்போனால் மக்கள் கோரிக்கையை ஏற்று வழங்கிய உச்ச நீதிமன்றத்தீர்ப்பை எல்லாம் இந்த பசுமைத்தீர்ப்பாயம் மேல்முறையீட்டு வழக்கில் செல்லாதாக்கிவிட்டு வன,கனிம வளத்தை அழித்தேவருகிறது.

ஆனால் மோடி அரசுக்கு எதிரானவர்களை மட்டும் உத்தமன் போல் பழிவாங்கி செயல்படுகிறது இந்தபசுமைத்தீர்ப்பாயம். 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பீஹார் தலைநகர் பாட்னாவின் முக்கிய பகுதிகளில், பிரதமர் நரேந்திர மோடி, காங்., தலைவர் ராகுல் ஆகியோரின் கார்ட்டூன்கள் இடம் பெற்றுள்ளசுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளன. 

அதில்  ரபேல் ரக விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், ஒரு ரபேல் விமானத்தின் விலை எவ்வளவு என, யாராவது சொல்ல முடியுமா?

நாட்டின் பல பகுதிகளில், 35 விமான நிலையங்களை திறந்து வைத்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். அவை, எங்கெங்கு அமைக்கப்பட்டுள்ளன; அவற்றின் பெயர் என்ன என்பதை யாரேனும் கூற முடியுமா? 

இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நபருக்கு, துர்கா பூஜையை முன்னிட்டு, பண்டிகை கால பரிசு தொகையாக, 5 கோடி ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

என்னதாம்பா சொல்லவரீங்க ? 
=========================================================================================
ன்று,
அக்டோபர்-17.
  • உலக வறுமை ஒழிப்பு தினம்

  • கவிஞர் கண்ணதாசன் இறந்த தினம்(1981)

  • போட்ஸ்வானா மற்றும் லிசோதோ ஆகியன ஐநாவில் இணைந்தன(1966)
=========================================================================================='
  • உலக வறுமை ஒழிப்பு தினம்
வறுமை தீயினும் கொடியது' எனும் சொற்றொடரில் வருவதை வெறும் வார்த்தைகளாய் கடந்து விடாமல் தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே அனுபவித்து இவ்வுலகின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் இன்றும் பல கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 
வறுமையின் உடன்பிறப்புகளான பஞ்சம், பசி, பட்டினி இவையெல்லாம் இம்மக்களின் உற்றத் தோழர்களாகும்.

'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்கிறார் பாரதி, ஆனால், இன்றளவும் வறுமையின் காரணமாக சர்வதேச அளவில் 82 கோடி மக்கள் தினந்தோறும் சரியான உணவு கிடைக்காமாலும் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 

அதே சமயம், ஆண்டுதோறும் சுமார் 130 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாவதாக மற்றொரு ஆய்வு தெரிவிப்பது கசப்பான உண்மையாகும்.
வறுமை தனது பார்வையை உணவின் மீது மட்டுமல்லாமல் வறியவர்களின் வாழ்க்கையின் அனைத்து கூறுகளிலும் பாரபட்சமின்றி காட்டுகிறது.

இதன் காரணமாகவே பல கோடிக்கணக்கான மக்கள் சரியான மருத்துவம், கல்வி, வாழ்விடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதன்காரணமாகவே, பல லட்சக்கணக்கான குழந்தைகள் கல்வி கற்பதை விட்டுவிட்டு கற்களை உடைக்க செல்கின்றனர். 


அன்றாடம், குப்பைத் தொட்டிகளில் தங்களது உணவைத் தேடும் மனிதர்கள், பாலங்களுக்கு  அடியிலும், பேருந்து நிறுத்தங்களிலும் தங்களது உறைவிடம் தேடும் மனிதர்கள், கந்தலோ, கிழிசலோ கிடைத்ததை உடுத்தி கொண்டிருக்கும் மனிதர்கள் இவர்கள் இன்று நம் பலரின் பார்வையில் அன்றாடம் படும் அங்கங்களாகிவிட்டனர். 
இப்படி உலகெங்கிலும் வறுமை கருணையின்றி கோரதாண்டவம் ஆடி வருவது அனைவரும் அறிந்த அப்பட்டமான உண்மையாகும்.

இன்று, உலகின் பல நாடுகள் தங்களது விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் விண்ணைத் தொட்டுவிட்டன. நிலவில் இருக்கும் தண்ணீரை படம்பிடிக்க பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவுச் செய்யும் அரசுகள், நிலவொளியில் வாழும் பல கோடிகணக்கானோரின் கண்ணீரைத் துடைக்க மறந்துவிட்டன என்பதே நிதர்சனமான உண்மையாகும்.


எது உண்மையான வறுமை ஒழிப்பு என்று பார்த்தால், 'பாலுக்கு அழாத குழந்தை, கல்விக்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத இளைஞன் ' என்ற பகத் சிங்கின் கூற்று நனவாகும் நாள், 
உலகின் கடைக்கோடி மனிதனும் துயர்நீங்கி பசியாறும் நாள், அந்நாளே உண்மையான வறுமை ஒழிப்பு நாளாக முடியும்.
எனவே, 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்பதை மன்னர்கள் முதல் மக்கள் வரை அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே உண்மையில் வறுமை ஒழிப்பு என்பது சாத்தியமாகும்.

அவ்வாறல்லாமல், கடைக்கோடி மக்களின் கதறல்களை உணராத கல் நெஞ்சம்  படைத்த மனிதர்கள் இருக்கும் வரையில் கேரளாவின் மதுவை போன்ற மனிதர்களின் நிலை இங்கு பலருக்கு தொடரத்தான் செய்யும்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?