சிக்க(லி)ல் பன்னீர்செல்வம் ?


முதலமைச்சராக சசிகலா பதவி ஏற்பதற்கான முயற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென ஓ.பி.எஸ் ஜெயலலிதா சமாதியில் இருந்து கடந்த ஆண்டு தர்மயுத்தத்தை தொடங்கினார். 
சசிகலா குடும்பத்திடம் இருந்து அ.தி.மு.கவை மீட்கப்போவதாக அறிவித்து தனது ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு அவ்வப்போது போராட்டம், பொதுக்கூட்டம் என்றெல்லாம் ஓ.பி.எஸ் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
   
இந்த சமயத்தில் ஈ.பி.எஸ் – தினகரன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தினகரனை அ.தி.மு.கவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக ஈ.பி.எஸ் அணியும் அறிவித்தது. 

இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணிகளை இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன. 
ஆனால் அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு, கட்சிப் பதவிகளை பிரித்துக் கொள்வதில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது. 


திரைமறைவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஆனால் முதலமைச்சர் பதவியை முதலில் ஓ.பி.எஸ் கேட்டதாகவும் அதற்கு ஈ.பி.எஸ் மறுத்துவிட்டதாகவும் அப்போது தகவல் வெளியானது. 

இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் பதவியாவது வேண்டும் என்று ஓ.பி.எஸ் தரப்பு பேச்சுவார்த்தையை முன்னெடுத்த நிலையில் அதற்கும் எடப்பாடி தரப்பு உடன்படாத சூழல் நிலவியது. 
இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு ஜுலை மாதம் தினகரன் – ஓ.பி.எஸ் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
   
அதாவது ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணிகள் இணைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்தது. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக அதாவது ஜுலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்று ஓ.பி.எஸ் தரப்புக்கு நெருக்கமானவர்கள் கசியவிட்டுள்ளனர். 


அதாவது எடப்பாடி அணியுடனான பேச்சுவார்த்தையின் போது ஓ.பி.எஸ் தரப்புக்கு மிகுந்த பின்னடைவு ஏற்பட்டதாகவும், அந்த பின்னடைவை சரி செய்ய தினகரனுடனான சந்திப்பை ஓ.பி.எஸ் பயன்படுத்திக் கொண்டதாகவும் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


அதாவது கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி முக்கிய பதவிகள் எதுவும் தர முடியாது என்று ஈ.பி.எஸ் தரப்பு மறுத்துள்ளது. அந்த சமயத்தில் தினகரனுக்கு ஆதரவாக கணிசமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் அணிவகுத்தனர். 
மேலும் ஓ.பி.எஸ் தரப்பிலும் கணிசமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் இருந்தனர். ஓ.பி.எஸ் – தினகரன் இணைந்தால் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்ந்துவிடக்கூடிய சூழல் இருந்தது.
   
இந்த சூழலை பயன்படுத்தி எடப்பாடி தரப்பை பணிய வைக்கவே தினகரனை ஓ.பி.எஸ் சந்தித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். 


மேலும் தினகரனை சந்தித்துவிட்டு வந்த அதே ஜுலை 12ந் தேதி தான் அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிசாமி அணியுடனான இணைப்புக்கு அமைக்கப்பட்ட குழுவை ஓ.பி.எஸ் கலைத்தார். 

அதாவது தினகரனை ஓ.பி.எஸ் சந்தித்த தகவல் நிச்சயம் ஈ.பி.எஸ் தரப்புக்கு சென்று விடும். இருவரும் சேர்ந்துவிட்டால் நமக்கு ஆபத்து என்பதால் துணை முதலமைச்சர் என்கிற கோரிக்கையை ஏற்று எடப்பாடி தரப்பு இறங்கி வந்தததாகவும் ஓ.பி.எஸ் தரப்பு தெரிவிக்கிறது. 

   
அதாவது எடப்பாடி பழனிசாமி தரப்பை நெருக்கடிக்கு ஆளாக்கி காரியம் சாதித்துக் கொள்ளவே அண்ணன் ஓ.பி.எஸ்சை சந்தித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.


ஏற்கனவே கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி செல்வாக்கோடு இருந்த போதும் தர்மயுத்தம் நடத்தியதால் தொண்டர்கள் மத்தியில் ஓ.பி.எஸ்க்கு ஓரளவு செல்வாக்கு உண்டு. 
இதே போல் தினகரனும் தனியாக கட்சி தொடங்கி இளைஞர்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு இருப்பது போல் உருவகப்படுத்தி வருகிறார். 

இந்த நிலையில் இருவரும் கடந்த ஆண்டு சந்தித்த தகவல் வெளியாகியுள்ளதால் இருவரது உண்மை முகம் அதிமுகவில் இதுவரை பன்னீரை ஆதரித்து வரும் அணிக்கு தெரியவரும்,அதனால் பன்னீர் செல்வாக்கு கட்சியில் சிதறும்   என்பதால்  எடப்பாடி பழனிசாமிக்கு  மகிழ்ச்சிதான்.
ஆனால் பன்னீருக்குத்தான் அடுத்தடுத்து சிக்கல்.
காரணம் "ஒன்றரை வருடமாக என்னிடம் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்த ஓபிஎஸ் அதே நண்பர் மூலம் கடந்த செப்டம்பர் மாத இறுதியில், மீண்டும் என்னைச் சந்திக்க வேண்டும் எனவும், ஈபிஎஸ்ஸை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு என்னை அப்பதவியில் அமர்த்த வேண்டும் எனவும் விரும்புவதாகக் கூறியுள்ளார். 
எங்களைக் குறை கூறி வேறொரு இடத்திற்குச் சென்று விட்ட பிறகு மீண்டும் எங்களைப் பார்ப்பதாகக் கேட்பது அசிங்கம். 
அதனால், நான் அவரைப் பார்க்க மறுத்தேன்.
என்னைப் பார்த்தேன் என இப்போது ஓபிஎஸ் ஒப்புக்கொண்டார் அல்லவா? 
அதேபோல் கடந்த வாரம் என்னை அவர் மீண்டும் சந்திக்க நேரம் கேட்டதையும் நான் ஒப்புக்கொள்ள வைக்கிறேன். 
அதற்கான சூட்சுமம் எனக்குத் தெரியும். 
மூன்று மாதம் வரை அவராக ஒப்புக்கொள்கிறாரா என பார்ப்போம். இல்லையெனில், நானே அவரை ஒப்புக் கொள்ள வைத்துவிடுவேன்.
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்ததா ஓபிஎஸ்ஸின் ராஜ விசுவாசம்? குறுக்கு வழியில் முயற்சி செய்வதுதானே அது. மயிலாப்பூரில் உள்ள யாரோ ஒருவர் சொன்ன அறிவுரையால் தானே இவற்றையெல்லாம் செய்கிறார்.
முன்னதாக, கடந்தாண்டு தினகரனை சந்தித்ததாக ஒப்புக் கொண்ட ஓ.பி.எஸ், ஆட்சி கவிழாமல் இருப்பதற்காக அவரை சந்தித்தேன் என்று கூறிசமாளித்தார் . 
இப்போது, ‘கடந்த வாரம் என்னை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டதையும் அவரையே ஒப்புக் கொள்ள வைப்பேன்’ என தினகரன் கூறியுள்ளது பன்னீருக்கு அடுத்த சிக்கல்.
=======================================================================================
ன்று,
அக்டோபர்-07.
  • ஜேம்ஸ் குக், நியூசிலாந்தை கண்டுபிடித்தார்(1769)
  • ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாளுக்கான காப்புரிமம் பெறப்பட்டது(1806)
  • ஜெர்மன், ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது(1949)
  • இஸ்ரேலிய அரசு, டேவிட் பென் கூரியன் என்பவரால் அமைக்கப்பட்டது(1951)
=======================================================================================

துணை வேந்தர்கள் நியமனத்தில் மட்டுமா ஊழல்?

"தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கிக் கொண்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள்" என்று அதிமுக ஆட்சியில் துணை வேந்தர்கள் நியமனத்தில் நடைபெறும் ஊழலை தமிழக ஆளுநர் “உயர் கல்வி கருத்தரங்கம்” ஒன்றில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். 


அதிலும் குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை சந்தித்து விட்டுத் திரும்பிய மறுதினமே இப்படியொரு ஊழல் புகாரை மாநிலத்தின் ஆளுநரே சுமத்தியிருக்கிறார் என்றால் - முதல்வரிடமே இந்த ஊழல் பற்றி நேருக்கு நேர் சுட்டிக்காட்டினாரா என்ற கேள்வியும் எழுகிறது.

அதேநேரத்தில் துணைவேந்தர் நியமனம், டெண்டர் ஊழல் உள்ளிட்ட அதிமுக அரசின் மீது திராவிட முன்னேற்றக் கழகம் சுமத்தி வரும் ஊழல்கள் அனைத்தும் உண்மை என்பது இப்போது அரசியல் சட்ட பதவி வகிக்கும் ஆளுநரின் குற்றச்சாட்டிலிருந்து நிரூபணமாகியிருக்கிறது.

ஆனால் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய சகல அதிகாரங்களையும் - அல்லது ஊழல்கள் குறித்து உரிய “மாதாந்திர அறிக்கை” அனுப்ப வேண்டிய அதிகாரத்தையும் பெற்றிருக்கும் ஆளுநர், இப்படி பொதுமேடைகளில் பேசுவதற்குப் பதில், கடந்த ஒரு வருட காலத்தில் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்நேரம் இந்த ஊழல் அதிமுக அரசு வீட்டுக்குப் போயிருக்கும் - தமிழக மக்களுக்கும் நிம்மதி கிடைத்திருக்கும். 

அதிமுக அரசு ஊழலின் மொத்த உருவமாக இருக்கிறது. ஆட்சியில் நடைபெறும் அனைத்து அப்பாயின்மென்டுகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. 

துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் தொடர்பாகவும் கூட திமுகவே மனு அளித்திருக்கிறது.

இவை ஒருபுறமிருக்க, “குட்கா” ஊழல் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் - தமிழக டிஜிபி உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ ரெய்டே நடந்து விட்டது. 



அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 


துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் மீது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கை லஞ்ச ஊழல் தடுப்புத் துறை விசாரித்து வருகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது 3,120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறை ஊழல் தொடர்பாக ஆளுநரிடம் நானே சென்று நேரடியாக அளித்துள்ளேன். 

ஆனால் அதிமுக அரசின் மீதான இந்த ஊழல் புகார்கள் மீது ஆளுநர் அவர்கள் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?

ஊழலின் சாக்கடையில் இந்த அரசு நீந்தட்டும் என்று அனுமதித்து விட்டு அமைதி காப்பது ஏன்? அரசியல் சட்டத்துக்கு விரோதமாக அதிமுக ஆட்சி பதவியில் தொடருவதற்கும் அனுமதித்து - இப்போது பொதுமேடைகளில் ஊழல் பற்றி பேசுவது ஏன்?

சிபிஐ ரெய்டுகளும், வருமான வரித்துறை ரெய்டுகளும் நடைபெற்றது அனைத்து பத்திரிக்கைகளிலும் தலைப்புச் செய்தியாக வந்தும், பிரதான எதிர்கட்சியின் சார்பில் ஆளுநருக்கே புகார் அளித்தும் அதிமுக அரசின் ஊழலை தடுக்க ஆளுநர் அவர்களால் இதுவரை முடியாமல் போனது ஏன்? - அதிமுக என்ற ஊழல் அரசின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநர் அவர்களுக்கு தடை போடும் சக்தி எது? - இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அணி வகுத்து நிற்கின்றன.

அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளுநர் இப்படி ஊழல் பற்றி வெளிமேடைகளில் பேசுவது தமிழக மக்களுக்கு எவ்வித பலனையும் கொடுக்காது. 

அதற்கு பதிலாக, ஊழல் அதிமுக அரசின் மீதும், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் ஊழல் மீதும் நடவடிக்கை எடுப்பது மட்டுமே இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

ஆனால் தமிழக ஆளுநர் பதவியில் ஒருவருடத்தை பூர்த்தி செய்துள்ள ஆளுநர் பன்வாரிலால், ஊழல் புகார்களின் மீது நடவடிக்கையும் எடுக்கத் தவறி அதிமுக அரசின் ஊழல்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஆளுநர், “துணை வேந்தர்கள் நியமன ஊழல்” பற்றி மட்டும் குறிப்பாக தேர்ந்தெடுத்து பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது.

ஆகவே அதிமுக அரசின் ஊழல்களை தடுக்க வேண்டும் என்பது ஆளுநரின் உண்மையான அக்கறையாக இருக்குமென்றால், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடக்கிறது என்ற ஆதாரபூர்வமாக பேசியிருக்கும் நிலையில், அதற்கு காரணமான உயர் கல்வித்துறை அமைச்சர், முதல்வர் உள்ளிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அது தவிர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைச்சர்கள் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகார்கள் அனைத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து, அரசியல் சட்டத்துக்கு விரோதமாக ஆட்சி நடத்திக் கொண்டு ஊழலில் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியில் குறிப்பிட்ட ஊழல் புகார்களுக்கு உள்ளான அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".
                                                                                                         - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்                            




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?