அரசு உதவி

"சுகாதாரம்,கல்விக்கு ஒதுக்கிய மொத்த தொகையை விட கார்பரேட்கள் தள்ளுபடி கடன் தொகை இரு மடங்கு அதிகம்."

மோடி அரசாங்கமானது, பெரும் கார்ப்பரேட்கள், வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல், நாட்டை விட்டே வெளியேறுவதற்கு, மோடிஅரசு  உதவி இருக்கிறது என்பது இப்போது நன்கு நிறுவப்பட்டுவிட்டது. 
நாட்டின் பொதுச் சொத்தை சூறையாடியவர்கள் இவ்வாறு நாட்டை விட்டுப் பறந்தோட, தேவையான வசதிகளைச் செய்து தந்தபின்னர், இப்போது அவர்கள் அவ்வாறு பறந்தோடியிருப்பதற்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று மோடி அரசு  கூறுகிறது.  

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவின்படி, 2014 ஏப்ரலுக்கும் 2018க்கும் இடையே, நாட்டிலுள்ள 21 பொதுத்துறை வங்கிகள், கார்ப்பரேட்கள் வாங்கிய கடன்களில் 3.165 லட்சம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர்.  
இவை இவர்களுக்கு வழங்கிய கடன்களில் 44,900 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்திருக்கின்றன. அதாவது, இவை வழங்கிய கடன் தொகையில் தள்ளுபடி செய்த தொகையில் ஏழில் ஒரு பங்கு மட்டுமே வசூல் செய்திருக்கின்றன.
இவ்வாறு தள்ளுபடி செய்திருக்கும் தொகையின் அளவு என்பது, அரசாங்கம் 2018-19 பட்ஜெட்டில் பொது சுகாதாரத்திற்கும், கல்விக்கும் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும் ஒதுக்கிய 1.38 லட்சம் கோடி ரூபாயைப் போல் இரு மடங்குக்கும் அதிகமாகும். 
இவ்வாறு பொறுக்கியெடுக்கப்பட்ட சில கார்ப்பரேட்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டைச் சூறையாடுவதற்கு ஆட்சியாளர்கள் வசதி செய்து தந்திருப்பதன் காரணமாக இன்றைய தினம் வங்கிகள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றன. 
இவ்வாறு சலுகை காட்டியிருப்பதில், சமீபத்திய உதாரணம், ஐஎல்&எப்எஸ் என்னும் (IL&FS- Infrastructure Leasing and Financial Services) நிறுவனத்தைக் கையகப்படுத்தி இருப்பதாகும். 

இவ்வாறு கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பி ஓடுவதற்கும், அவர்கள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கும் உதவிவரும் இந்த அரசாங்கம், விவசாயிகள் வாங்கிய கடன்களை மட்டும் தள்ளுபடி செய்ய மறுக்கிறது. 
போராடும் விவசாயிகளை காவல் துறையை ஏவி அடக்கி விரட்டுகிறது மோடி அரசு.இதன் காரணமாக விவசாய நெருக்கடி மேலும் ஆழமாகி இருக்கிறது.
ஆனால் மக்கள் வரிப்பணத்தை.வங்கிகள் மூலம் சேமிக்கப்பட்ட பணத்தை பணமுதலைகள்,கார்பரேட்கள் ஏமாற்றி வாங்கவும்,அதை எடுத்துக்கொண்டு ஓடவும் மோடி அரசு வசதிகளை வெளியே தெரியாமல் செய்துவருகிறது.
===========================================================================================
ன்று,
அக்டோபர்-25.
  • தகவல் அறியும் உரிமை சட்ட தினம்
  • பாசிஸ்ட்கள் ஹிட்லர் & முசோலினி இணைந்து ரோம்-பெர்லின் அச்சு  கூட்டமைப்பை ஏற்படுத்தினர்(1936)
  • கசக்கிஸ்தான் குடியரசு தினம்(1990)
  • இந்தியாவில் தடா சட்டத்திற்கு பதிலாக பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது(2001)
============================================================================================
 வட கிழக்கு பருவமழை ஆரம்பம்.

தென்மேற்கு பருவமழை கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. 
கடந்த 10 நாட்களுக்கு முன்பு  வங்கக்கடலில் புயல் உருவாகி ஒடிசாவைதாக்கியதால் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டது

இதனால்எதிர்பார்த்தப்படி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு தாமதம்ஏற்பட்டது, 

இந்நிலையில் காற்றின் திசையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வட கிழக்கு பருவ மழை ஏற்கனவே அறிவித்தபடி வரும் 26 ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தற்போது தென் மேற்கு பருவ காற்று திசை மாறி கிழக்கில் இருந்து வீசத் தொடங்கியுள்ளது என்றும் இதனால் நிச்சயமாக 26 ஆம் தேதி முதல் பருவ மழையை எதிர்பார்க்கலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் , இலங்கை மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில்மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது
இதன் காரணமாக இன்று  இரவு தமிழகம்,புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தேதிகளில்  மழைக்குவாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 26, 27  ஆகிய இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் கன மழை கொட்டித் தீர்க்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தை சமாளிக்க .....,
வெயில் காலத்தை கூட நாம் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், மழைக் காலத்தில் ஏகப்பட்ட சிக்கல்களை நாம் சந்திக்க நேரிடும். துவைத்த துணி கூட அவ்வளவு சீக்கிரத்தில் காயாது. பிளான் பண்ணி நமது வேலைகளை செய்யாவிட்டால், மழைக் காலத்தில் சந்தியில் தான் நிற்க நேரிடும்.
மழை மற்றும் குளிர் காலங்களில் தான் நோய்த் தொற்றுகள் அதிகம் பரவி பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தும். கொத்து கொத்தாக மக்களை காவு வாங்கும். இதில் வைரஸ் கிருமிகள் எளிதில் பரவக் கூடியது.
கோடை காலத்தில் வருவதை விட, ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் போன்றவை குளிர் காலத்தில் சட்டென்று தாக்கிவிடும். குளிர் காலங்களில் முடிந்தவரை வெதுவெதுப்பான சூழ்நிலையில் இருப்பது அவசியம்.

சுடு தண்ணீர் என்றாலே சிலர் முகத்தை சுழிப்பார்கள். ஆனால், மழைக் காலத்தில் சுடு தண்ணீர் எவ்வளவு பெரிய ஆபத்பாந்தவன் தெரியுமா? பல நோய்களை இது நம்மிடம் அண்டவிடாமல் செய்கிறது. 
அதையும் மீறி அண்டும் தொற்றுகள் மேலும் தீவிரமாகாமல் போகச் செய்கிறது. ஆக, நன்கு காய்ச்சிய நீர் மிக மிக முக்கியம்.
மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது. கண்டிப்பாக மழைக் காலத்தில் நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் ‘சி’ சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஆனால், ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.
துளசி செடியை வெயில் காலத்தில் அதிகமாக பார்க்க முடியாது. காய்ந்து போய் இருக்கும். ஆனால், மழை காலத்தில் மிகவும் செழிப்பாக வளரக் கூடிய செடி இது. இருமல், சளி, ஆஸ்துமாவிற்கு துளசியே சிறந்த மருந்து. சுவாச உறுப்புகளில் பிரச்னை உள்ளவர்களுக்கும் இது மிகவும் சிறந்தது. நம்முடைய முன்னோர் காலத்தில் எல்லாருடைய வீட்டிலும் துளசி மாடம் இருக்கும். தினமும் காலை அதனை சுற்றி கடவுளாக வழிபடுவது நம்முடைய வழக்கம். கடவுள் பக்தி என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதில் உள்ள மருத்துவ குணம்தான் முக்கியகாரணம்.
மழை காலத்தில் நம்மை சுற்றியுள்ள காற்றில், பல மாசுக்கள் தூசுகள் இருக்கும். அது நம்முடைய சுவாசத்தை பாதிக்கும். துளசி செடியில் இருந்து வெளியாகும் காற்று, நம்முடைய சுவாச உறுப்புகளை சுத்தமாக்கும். ஆஸ்துமா, டி.பி பிரச்னை உள்ளவர்கள் இந்த செடியில் இருந்து வெளியாகும் காற்றை சுவாசிப்பது நல்லது. துளசி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல் போன்ற பிரச்னை இருக்காது.
ஒரு சிலருக்கு, தலையில் தண்ணீர் கோர்த்துக் கொள்ளும். மேலும் மழை காலத்தில் தலை குளிக்கும் போது தலையில் உள்ள ஈரம் எளிதில் காயாது. இதன் காரணமாகவும் சளி பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆயுர்வேத கடைகளில் உள்ள ரசனாதி பொடியை கொஞ்சம் எடுத்து தலையில் தேய்த்துக் கொள்ளலாம். இது தலையில் உள்ள தேவையற்ற தண்ணீரை உறிந்துக் கொள்ளும். இதில் 26 மூலிகைகள் உள்ளன. சித்தரத்தை அதிகமாக சேர்க்கப்பட்டு இருக்கும் மருந்து என்பதால் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்னை ஏற்படாது. மழை காலத்தில் சீரகம், மிளகு, இஞ்சி, அண்ணாசிப் பூ போன்றவற்றை நாம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது.
============================================================================================
"18?
எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட தினகரன் ஆதரவு சமஉ க்கள்(எம்எல்ஏ-க்கள் )18 பேர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.  

இதையடுத்து அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 18 எம்எல்ஏ-க்களையும் சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதிநீக்கம் செய்தார்.


சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட  
சமஉ க்கள்18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து இந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. 
இந்த வழக்கை நீதிபதி சத்யநாரயணன் விசாரித்து வந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மோடி எடுபிடி அரசு கவிழ்வதை விரும்பமாட்டார்.எனவே தீர்ப்பு எடுபிடி அரசுக்கு பாதிப்பில்லாதபடிதான் இருக்கும்.
இந்த தரவு சமஉ க்கள் தற்போது கூவத்தூர் பாணியில் குற்றாலத்தில் குடி கொண்டுள்ளனர்.தாமிரபரணி யில்  இவர்களும் குளிப்பாட்டப் பட்டனர்.தற்போது 21 சமஉ க்கள் அந்த கும்பலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
===============================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?