பிளாஸ்டிக் தடை .
பிளாஸ்டிக்கை ஏன் தடை செய்ய வேண்டும்.
காலையில் எழுந்து, பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ் முதல், பவுடர், பூசும் கிரீம், குடிக்கும் தேநீரை வடிகட்டும் வடிகட்டி, சாப்பிடும் தட்டு, குடிக்கும் தண்ணீர் பாட்டில், கடைகளில் டீ சாப்பிடும் குவளை, பழச்சாறு, ஐஸ்கிரீம் என, பிளாஸ்டிக்கில் தொடங்கி, பிளாஸ்டிக்கில் ஒரு நாளை முடிக்கிறோம்.
மொத்தத்தில், நம் வாழ்வுடன், 100 சதவீதம் பிளாஸ்டிக் இணைந்துள்ளது. இதிலிருந்து விடுபடுவது நம் கடமை.
* பல எத்திலின்களின் கூட்டு சேர்மங்களே, பாலி எத்திலின் எனப்படுகிறது.
ஆக்சிஜன், ஹைட்ரஜன் பயன்படுத்தி பல படிமங்களின் மூலம் பல்வேறு பொருட்களால்உருவாக்கப்படும் பிளாஸ்டிக்கில், இயற்கைக்கு ஊறு விளைவிக்கும், 90 சதவீத நச்சுப் பொருட்கள் உள்ளன.
* பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால், குழந்தைபேறின்மை, நரம்பு தளர்ச்சி, புற்றுநோய், ரத்தம், சிறுநீரகம் உள்ளிட்டவற்றில் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
உயிரணுவில் மாற்றங்கள், ஆண்மை இழப்பு, குடல் புண், என பல கேடுகளை ஏற்படுத்துகின்றன.
பிளாஸ்டிக் உறைகளால் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட, உணவுப் பொருட்கள் உடலுக்கு ஊறு விளைவிக்கும்.
* வீடுகளில் இருந்து எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், மண்ணின், உயிர் வேதியியல் தன்மையை பாதிக்கிறது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், குளிர்பான பாட்டில் எக்காலத்திலும் அழியாது.
சாக்கடை மற்றும் கடல், நீர்நிலைகளில் அடைத்து, நோய் பரவ காரணமாகிறது.
மழை நீர் மண்ணுக்குள் ஊடுருவி நிலத்துக்குள் செல்வதற்கும் இடையூறாக உள்ளது.
* அவசரத்துக்காகபயன்படுத்திய பிளாஸ்டிக் இலை, டம்ளர்கள், தற்போது அத்யாவசியமாக மாற்றப்பட்டு விட்டன.
பிளாஸ்டிக்கால் உருவாகும் பொருட்கள் அனைத்தும், வேதி முறையில்தயாரிக்கப்பட்டவை என்பதே உண்மை.
* சூடு, குளிர்ந்த பொருட்களை, பிளாஸ்டிக் பொருட்களில் நீண்ட நாட்கள் பயன்படுத்தும் போது, வேதிவினை புரிந்து, நம் உடலில் தேவையற்ற கொடிய வேதிப் பொருட்களை சேர்த்து, பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது.
* நகரத்தில் சேரும் கழிவுகளில், 60 சதவீதம், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள். மண்ணோடு மண்ணாக மக்காமல், நிலத்தின் தன்மையை நஞ்சாக்குகின்றன.
இதனால், இயற்கையாக மண் வளத்தை காக்கும், பல பூச்சி இனங்கள் அழிக்கப்படுகின்றன.
* நம் மண்ணில் விழும் கழிவு பொருட்களில், ராட்சத மரம், அதிகபட்சம், 15 ஆண்டுகளில் மட்கி விடும். ஆனால், பிளாஸ்டிக் பொருட்கள், பல ஆயிரம் ஆண்டுகளாகும்.
மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணைய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
மக்களும் தன்னியல்பாக பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்தால் பிளாஸ்டிக்கை ஒழிக்கலாம், வருங்காலம் நலமாக மாசின்றி இயற்கை சூழலைக் காக்கலாம்.
=====================================================
இன்று,
ஜனவரி-01.
குடும்ப தினம்
சீன குடியரசு அமைக்கப்பட்டது(1912)
ஐரோப்பிய அமைப்பு அமைக்கப்பட்டது(1958)
உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது(1995)
யூரோ நாணயம் அறிமுகம் செய்யப்பட்டது(1999)

இந்திய வங்கிகள், கடன் மோசடிகளால், கடந்த 2017-18ஆண்டில் மட்டும், சுமார் 41 ஆயிரத்து 167 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பைச் சந்தித்து இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2016-17இல் ரூ. 23 ஆயிரத்து 933 கோடியாக இருந்த இழப்பு, 2017-18இல் 72 சதவிகிதம் அதிகரித்து, 41 ஆயிரத்து 167 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடன்மோசடிகள் 2013-14 இல் ரூ. 10 ஆயிரத்து 170கோடியாகவே இருந்த நிலையில், மோடி ஆட்சிக்கு வந்தபின், அது 4 மடங்கு அளவிற்குஅதிகரித்துள்ளது.
வங்கி மோசடிகள் தொடர்பாக, 2017-18இல் 5 ஆயிரத்து 917 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சைபர் மோசடிகள் தொடர்பாக 2 ஆயிரத்து 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2018-ஆம் ஆண்டின் மார்ச் வரையிலான காலத்தில்மட்டும், வங்கிகளின் வராக் கடன் மதிப்பு ரூ. 10 லட்சத்து 39 ஆயிரத்து 700 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவாரூர் தேர்தல் அறிவிப்பையும் கஜா நிவாரணத்தையும் ஒரே நாளில் அறிவித்தது தற்செயலானது என்றே நம்பவோம்.