இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 23 ஜனவரி, 2019

வளர்ச்சி யாருக்கு?1990களில் இந்தியாவில் அறிமுகமான நவீன தாராளமயக் கொள்கைகளால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும் ஏழைகள் மேலும்பரம ஏழைகளாவதும் அதிகரித்து வருகிறது.
 மோடி தலைமையில் 2014ல் பாஜக ஆட்சிஅமைந்ததிலிருந்து இந்திய பெரு முதலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் புதிதாக 18 பெரும் கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இதனால் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 119ஆக கூடியுள்ளது. அவர்களுடைய சொத்து மதிப்பு ரூ.28 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

ஆனால் இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் அதாவது 13.6 கோடிபேர் பரம ஏழைகளாக துன்பத்தில் உழன்று வருகின்றனர்.
 ஆனால் இந்திய பணக்காரர்களில் 10 சதவீதம் பேரிடம் மட்டும் இந்தியாவின் மொத்தசொத்தில் 77.4 சதவீதம் உள்ளது. அதிலும் குறிப்பாக வெறும் ஒரு சதவீதமாக உள்ள பெரும் கோடீஸ்வரர்களிடம் நாட்டின் மொத்த சொத்தில் பாதிக்கு மேல் அதாவது 51.53 சதவீதசொத்து குவிந்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் நடந்த இந்த சொத்து குவிப்பு 39 சதவீதம் என்பது அதன் தீவிரத்தை உணர்த்துகிறது. 10 சதவீத பரம ஏழைகளாகவுள்ள மக்கள் அடுத்த வேளை உணவுக்கும் குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கும் பணமின்றி கஷ்டப்படுகிறார்கள்.

ஏழைக்குழந்தைகள் ஒரு வயது நிறைவடையும் முன்பே இறந்துவிடுகிறார்கள். இத்தகைய வறுமை நிலை கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வருகிறது என்று உலகளாவிய தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆக்ஸ்பாம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
2014ஆம் ஆண்டு பிரதமர் பதவியேற்றவுடன் நான் மக்களின் பிரதம சேவகன் என்று நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் கூறினார்.
ஆனால் அவர் யாருக்கு சேவகனாக இருந்துள்ளார் என்று இந்த ஆய்வறிக்கை முடிவு அம்பலப்படுத்துகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குமுன்பு வளர்ச்சி நாயகன் (விகாஸ் புருஷ்) என்றுவிளம்பரப்படுத்தப்பட்ட மோடி யாருடைய வளர்ச்சிநாயகன் என்பது தற்போது அம்பலப்பட்டுள்ளது.

மருத்துவம், பொது சுகாதாரம், கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம் போன்றவற்றிற்கு மத்திய, மாநில அரசுகள் செய்துள்ள செலவு மற்றும் வருவாய் கணக்கு ரூ.2.08 லட்சம்கோடி.
 இது அம்பானியின் சொத்து மதிப்பை (ரூ.2.8 லட்சம் கோடி) காட்டிலும் குறைவாக உள்ளது என்றும் ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை மேலும் கூறியுள்ளது.

 இந்திய பணக்காரர்களின் அதிகரித்துள்ள சொத்து மதிப்புக்கு வெறும் 0.5 சதவீத வட்டிநிர்ணயம் செய்தாலே அரசின் செலவினத்துக்கான நிதியில் பாதி கிடைத்துவிடும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மோடி அரசோ சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களிடமிருந்தே நேர்முக மற்றும்மறைமுக வரிகள் மூலமே நிதியை திரட்டுவதற்குதிட்டமிட்டு மக்களை வாட்டி வதைக்கிறது.

இத்தகைய மோடி அரசின் கூட்டுக் களவாணிமுதலாளித்துவ கொள்கை நடைமுறைக்கு விடை கொடுத்தாலே இந்நிலையில் மாற்றம் காணமுடியும்.
====================================================
ன்று,
ஜனவரி-23.

ராமலிங்க அடிகளார் அருட்பெருஞ்சோதியான தினம் (1873)
 இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1897)
 இஸ்ரேல் சட்டசபை, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது(1950)
 தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது(1957)

 ரோம் பேரரசின் கீழ் லீக்டன்ஸ்டைன் நாடுவந்தது.
====================================================
  சுபாஷ் சந்திர போஸ்
சுதந்திர போராட்டத்தில் காந்தி வழியில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அவரை 'இந்திய தேசத்தின் அடையாளம்', 'இந்தியாவின் தேசத் தந்தை' என்று முதலில் குறிப்பிட்டவர் நேதாஜி என அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ்.

இவர் 1897 ஜன., 23ல் ஒடிசாவின் கட்டாக்கில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். 1920ல் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார். இந்திய சுதந்திரப் போராட்டம் மீதான ஈடுபாட்டால், உயரிய சிவில் சர்வீஸ் பணியை ஒரே ஆண்டில் ராஜினாமா செய்தார்.
காந்தியின் அகிம்சைப் போராட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், காங்கிரசில் இருந்து பிரிந்து போராடினார்.
நாட்டுக்காக 11 முறை சிறை சென்ற நேதாஜியின் வாழ்வில், 20 ஆண்டுகள் சிறையிலேயே கழிந்தன.

பிரிட்டஷாருக்குக் காந்தியைவிட அதிக நெருக்கடி கொடுத்தவர் நேதாஜி. அதனால் அவரைப் பல முறை நாடு கடத்தியது பிரிட்டஷ் அரசு.

ஜெர்மனி தப்பிச் சென்ற நேதாஜி, விடுதலைப் போராட்டத்தில் நாடு கடத்தப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள இந்தியர்களைக் கொண்டு இந்திய தேசிய ராணுவப் படையை உருவாக்கினார். இதில் 85 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். பெண்கள் படைபிரிவையும் ஏற்படுத்தினார் ஆசியாவில் முதல் பெண் ராணுவப் படையை உருவாக்கினார்.
தன் உயிரைப் பணயம் வைத்துச் சுதந்திரத்துக்காகப் போராடிய நேதாஜி, 1945 ஆக., 18ல் விமான விபத்தில் உயிரிழந்தார் என கூறப்படுகிறது.

நாட்டு மக்களிடையை தேசிய உணர்வை தட்டி எழுப்பியது 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கம். சுதந்திர போராட்டத்தின் போது இதை உச்சரிக்கும் போது மக்களின் சுதந்திர தாகம் அதிகரித்தது. தற்போதும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் அதே உத்வேகத்தை அளிக்கிறது. இதனை முதன்முதலில் உரக்க கூறியவர் நேதாஜி. 1941 நவ., 2ல், ஜெர்மனியில், இவரது 'சுதந்திர இந்தியா மையம்' துவக்க விழாவில் 'ஜெய்ஹிந்த்' (வெல்க இந்தியா) என்ற கோஷத்தை முழங்கினார். அப்போது முதல் அனைத்து இந்தியர்களிடமும் இது வாழ்த்தாக ஒலித்தது.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
கார்ப்பரேட்களுக்கு சாதகம்.
கட்டண திட்டத்தை மாற்றக்கோரி 

நாளை கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்

ஜனவரி 24ஆம் தேதி கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்படும் என கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கேபிள் டிவியில் அனலாக் முறை ஒழிக்கப்பட்டு டிஜிட்டல் ஒளிபரப்பு இந்தியா முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தனது 8ஆவது கட்டண (டேரிப்) ஆணையை புதிய கட்டணக் கொள்கையாக அறிவித்துள்ளது.
அதன்படி மக்கள் விரும்பும் சானல்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என்ற அடிப்படையில் கட்டண சானல்கள் தங்கள் கட்டண விகிதத்தை தனித்தனியாகவும் சானல்களை இணைத்து பொக்கே முறையிலும் அதிகபட்ச சில்லறை விலை என்ற முறையில் அறிவித்துள்ளன.
அதற்கான ஜிஎஸ்டி 18 விழுக்காடாகும்.

 இந்த முறை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளன.

இந்த கட்டண கொள்கையில் வரவேற்கத்தக்க சில விஷயங்கள் இருந்தாலும்கூட, இந்த திட்டத்தால் பழைய முறை முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு அது முழுமையாக கட்டண சானல் ஒளிபரப்பாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
 தற்போதைய நிலையில் கட்டண சானல் நிறுவனங்களும் எம்.எஸ்.ஓ. எனப்படும் கட்டுப்பாட்டறை நிறுவனங்களும் பேசி இசைந்து ஒரு கட்டணத்தை இறுதி செய்து வழங்கி வந்தனர்.

தமிழகத்தின் முன்னணி கட்டுப்பாட்டறை அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன், தமிழக கேபிள் டிவி கம்யூனிகேசன் லிட்., விகே டிஜிட்டல், சுமங்கலி கேபிள்விஷன், கேபிள் காஸ்ட், ஜாக், ஏஎம்என் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சுமார்50-க்கும் மேற்பட்ட கட்டண சானல்களை அதிகபட்சம் 200 ரூபாய்க்கு கேபிள் ஆப்ரேட்டர்கள் வழியாக வழங்கி வருகிறது.
 புதிய கட்டணக் கொள்கை அறிவித்த நிலையில் இதே சானல்களை மக்கள் தேர்வு செய்யமுயன்றால் 600 ரூபாய்க்கும் மேலாக கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
தமிழகத்தில் 1.5 கோடி கேபிள் இணைப்புகள் இருப்பதாக கருதும் நிலையில் ஸ்டார் குழும சானல்களை ஒளிபரப்பஅரசு கேபிள் டிவி நிறுவனம், டிசிசிஎஸ், சுமங்கலி, வி.கே.டிஜிட்டல் உள்ளிட்ட இதர நிறுவனங்கள் இணைந்து மொத்த மாக 2 கோடி ரூபாய் மாதம் வழங்கி வந்ததாகதெரிகிறது.

 அதே நிறுவனத்திற்கு தற்போதையவிதிமுறை காரணமாக சுமார் 95 கோடி ரூபாயை வழங்க வேண்டும்.

அதேபோல் சன்குழும சானல்களுக்கு தற்போது அரசு கேபிள்,டிசிசிஎல், வி.கே.டிஜிட்டல், சுமங்கலி மற்றும்இதர நிறுவனங்கள் இணைந்து சுமார் 9 கோடி வழங்கி வந்தது.
ஆனால் இந்த திட்டத்தின்படிதோராயமாக 70 கோடி ரூபாய் வழங்க வேண்டி வரும்.

மேலும் பிரதான சோனி இந்தியா, காஸ்ட் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டி வரும். தற்போது பொதுமக்கள் 300 ரூபாய்க்கு பார்க்கும் சானல்களை 600 ரூபாய் கொடுத்து பார்க்கும் நிலையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக டிராய் அறிவித்துள்ளதாக கூட்டமைப்பு கருதுகிறது.

மேலும் மாதம் தோறும் கட்டணம் செலுத்தும் பொதுமக்களின் சந்தா தொகைக்கு 18 விழுக்காடு ஜி.எஸ்.டி. என்பது வருந்தத்தக்கது. கேபிள் டிவி சேவையுடன் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இணைய சேவையை ரயில்வே மற்றும் பிஎஸ்என்எல் உடன் இணைந்து வழங்க உள்ளதால் அது அத்தியாவசிய சேவையாகிறது.
எனவே ஜி.எஸ்.டி. வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.

கடந்த 35 ஆண்டுகாலமாக இந்த தொழிலை குறிப்பிட்ட பகுதியில் செய்து வாழ்ந்து வரும் அடிமட்ட கேபிள் ஆப்பரேட்டர்களின் வாழ்வாதாரம் சீர்குலை யா வண்ணம் ஆப்ரேட்டர்கள் பகுதி வாரியாக அங்கீகரிக்கப்படும் வகையில் போட்டியின்றி தொழில் புரியும் வண்ணம் சட்ட பாதுகாப்பு செய்து தர வேண்டும்.
அவசரக் கோலத்தில் இதனை நிறைவேற்றாமல் அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி நிறைவேற்ற டிராய் முன்வர வேண்டும். என்பதே கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையாகும்.

அதுவரை மத்திய அரசு இந்த திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா ஆகிய தென் தமிழகம் தழுவிய அளவில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 24ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்பு நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

இதுவரை அரசு நிர்ணயித்த 70 ரூபாய்க்கு பதிலாக 150 முதல் 180 வரை கட்டணக்கொள்ளையடித்தவர்கள் கேபிள் இணைப்பு கொடுத்தவர்கள்.
அரசு இலவசமாக கொடுத்த செட்டப் பாக்ஸுக்கு 1200 வரை வலுக்கட்டாயமாக வாங்கி அரசின் கட்டுமான மாதம் 90 ரூபாய்க்கு பதிலாக 180 ரூபாயை மக்களிடம் கொள்ளையடித்து வந்தவர்கள் இனி டிராய் நிர்ணயித்த அதிகபட்ச கட்டணமான 153 (ஜிஸ் டி சேர்த்து)யை மக்களிடம் 180 பெற்றால் கூட பெற்றால் இதுவரை கிடைத்த லாபக் கொள்ளையில் துண்டு விழும்.அதற்குமேல் மக்களிடம் பெற முடியாது.கரணம் தனியார் டிஷ் டிவிகளான டாடா ஸ்கை ,சன் டைரக்ட்,வீடியோகான்,டிஷ் டிவி களில் மாதக்கட்டணம் 150இல் இருந்து 200க்குள்தான்.அதிலும் டாடாஸ்கை ஆண்டு கட்டணம் காட்டினாள் மாதம் 100தான் வருகிறது.இதில் 200 சானல்கள் வரை அவர்களும் கொடுக்கிறார்கள்.அதிகப்படி சேனல்களுக்கு பணம் செலுத்த வேண்டும்.அது மாதம் 10 இழி இருந்த 0 ரூபாய் வரையே நம் தேர்வு செய்யும் சானல்கள் அடிப்படையில் வரும்.
மொத்த கொள்ளைப்பணமும் கர்ப்பரேட்களுக்கே போய்விடும்.அதுதான் இவர்களின் போராட்டத்துக்கு முழுக்காரணம்.
இதற்குமேல் கேபிள் இணைப்பு கொடுப்பவர்கள் கட்டணக்கொள்ளையடிக்க முடியாது மக்கள் எதிர்ப்பு அதிகம் வரும்.அனைவரும் சான் டைரக்ட்,டாடா ஸ்கை ,டிஷ்டிவி என்று போய்விடுவார்கள் என்ற பயமே கரணம்.
===================================================
‘பேட்டி பச்சாவோ, பேட்டி பத்தாவோ’
  (Beti Bachao, Beti Padhao).

எதோ திட்டுவது போலிருந்தாலும் இதன் பொருள். “பெண் குழந்தைகளைக் காப்போம்;பெண் குழந்தைகளைப் படிக்க வைப் போம்” என்பதாகும்.

 இது மோடி, கடந்த 2015-ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்.
விளம்பரங்களில் ஒன்று


பாலினம் பார்த்துக் கருக்கலைப்பு செய்வதைத் தடுத்தல், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை அளித்தல் மற்றும் கல்வி வாய்ப்புகளை உருவாக்கித் தருதல்ஆகியவையே இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

அந்த வகையில், ஹரியானாவில், இந்ததிட்டத்தை மோடி துவங்கி வைத்தது முதல்,இப்போது வரை, ‘பெண் குழந்தைகளை பிரதமர் மோடி பாதுகாத்து விட்டார்’ என்று பாஜகவினரும் தம்பட்டம் அடித்து வந்தனர்.

இந்நிலையில்தான், “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்” திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், 56 சதவிகிதத்தை திட்டத்தின் விளம்பரத்திற்கே மோடிசெலவிட்டிருக்கிறார் என்பது தெரியவந் துள்ளது.“

 திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.648 கோடி.அதில் மக்கள் பணத்தை பாதுகாப்பத்ததாக பெருமை பேசும் மோடி படத்துடனான விளம்பரங்களுக்கு மட்டுமே செலவு ரூ.365 கோடிகள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------