இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 26 ஜனவரி, 2019

இப்போது வடக்கு வடக்கே அல்ல.?

10% வரையறைகளை ஏற்க முடியாது.
பொதுப்பிரிவினரில் பொருளா தார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கு வதற்காக மத்திய அரசு வரையறை செய்துள்ள விதிகள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவு உள்ளது.
 நாடாளுமன்றத்தில் பொருத்தமான முறையில் விவாதித்து நிறை வேற்றாமல் மேற்கொள்ளப்பட்டுள்ள தன்னிச்சையான நடவடிக்கை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இடஒதுக்கீட்டிற்குள் வராதபொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியப் பகுதி யினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் பொருட்டு மத்திய அரசு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூலமாக, வரையறை குறித்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட உத்தரவின்படி, மேற்படிஇடஒதுக்கீட்டு பலன்கள் இந்திய அரசின் குடிமைத்துறை பதவிகள் மற்றும் சேவைகளுக்கும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கும்பொருந்தும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

 குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சதுக்கு  கீழுமுள்ள குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் இடஒதுக்கீட்டு  பெற தகுதியானவர்கள் .  ஐந்து ஏக்கர் அல்லது அதற்கும் அதிகமான விவ சாய நிலம் வைத்திருப்பவர்கள், ஆயிரம் சதுரடி அல்லது அதற்கும் அதிகமான அளவில் வீட்டுமனை வைத்திருப்பவர்கள், நகராட்சி எல்கைக்குள் 100 சதுரமீட்டர் அல்லதுஅதற்கும் அதிகமான பரப்பு கொண்ட வீடு வைத்திருப்பவர்கள், நக ராட்சி அல்லாத பகுதிகளில் 200 சதுரயார்டு (1 சதுர யார்டு = 8.99சதுரடி) அல்லது அதற்கும் அதிகமான பரப்பு கொண்டவீடு வைத் திருப்பவர்கள் - ஆகியோருக்கு இடஒதுக்கீடு பெற தகுதி இல்லை என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

 பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியினர் என்ற அடிப்படை கோட்பாட்டையே போலி த்தனமானதாக மாற்றுவதாகும். 

மத்திய அரசு குறைந்தபட்சக் கூலிரூ.18 ஆயிரம் என்ற அளவினைக் கூட ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. 
ஆனால் இங்கே இடஒதுக்கீட்டு பலனை பெறுவதற்கு மாதம் வருமானம் கிட்டத்தட்ட ரூ.70 ஆயிரம் இருப்பவரையும் சேர்த்துக் கொள்ளலாம் என்கிறது.
 இந்த வரை யறையானது பொருளாதாரரீதியாக பின்தங்கிய பகுதியினருக்கு எந்த பலனும் சென்றடையாமல், அந்த பலன்கள் அனைத்தையும் ஏற்கெனவே வசதியாக இருப்ப வர்களே எடுத்துக் கொள்வதற்கே வழிவகுக்கும். 

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் பொருளாதார ரீதியாகவசதி படைத்தோர் என்று வகைப் படுத்துவதற்கு என்ன வரையறை பின்பற்றப்படுகிறதோ அதே வரையறையை இங்கு அரசு பயன்படுத்தியிருப்பது முற்றிலும் தவறானதாகும்.
 இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்பவர்கள் சமூகரீதியாக பின்தங்கியவர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்;
 எனவே அவர்களுக்கு உருவாக்கும் வரையறை என்பது பொது பிரிவினருக்கு பொருந்தாது.

இத்தகைய வரையறையை உருவாக்குவதில் மோடி பாஜக அரசாங்கத்தின் அப்பட்டமான ஜனநாயக விரோதமான ஆர்.எஸ்.எஸ்,பார்ப்பன அணுகுமுறை வெளியாகிவிட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஏ.டி.எம்,கட்டணம் தெரியுமா?
இன்று மக்களின் பாக்கெட்களில் தவிர்க முடியாத ஒரு பொருளாகவும் டெபிட்/ஏடிஎம் கார்டு மாறிவிட்டது. எனவே இந்தியாவின் டாப் வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி டெபிட்/ஏடிஎம் கார்டுகளில் இலவச பரிவர்த்தனைகளுக்கு அதிகமான பரிவர்த்தனை செய்யும் போது கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்று இங்குப் பார்ப்போம்.

 2018-2019 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 798.65 மில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரிவர்த்தனைகளின் மதிப்பு 2,690.60 பில்லியன் ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்திய  ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் டெபிட்/ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் போது பரிவர்த்தனைகள் இலவசம். இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தினால் முதல் 5 பரிவர்த்தனை மட்டுமே இலவசம்.

கூடுதலாகப் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும்.
நிதி பரிவர்த்தனைகள் என்றால் 17 ரூபாயும், நிதி அல்லா பரிவர்த்தனைகளுக்கு 6 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சர்வதேச பரிவர்த்தனைகள் என்றால் பேலன்ஸ் சரிபார்க்க மட்டும் 17 ரூபாய் கட்டணம், பணம் எடுத்தால் 169 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

எச்டிஎப்சி ஏடிஎம் மையங்களில் அதன் வாடிக்கையாளர்களுக்குப் பேலன்ஸ் சரிபார்ப்பது மற்றும் பணம் எடுப்பது இலவசம்.
இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் எச்டிஎப்சி ஏடிஎம்/டெபிட் கார்டு பயன்படுத்தி 5-க்கும் மேற்பட்ட பணம் பரிவர்த்தனை செய்தால் 10,000 ரூபாய் வரை 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சர்வதேச வாடிக்கையாளர்களுக்குப் பேலன்ஸ் சரிபார்க்க 15 ரூபாயும், பணப் பரிவர்த்தனைக்கு 110 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஒருவேலை பணப் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலும் 25 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணமாகச் செலுத்த வேண்டும் எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ, எச்டிஎப்சி போன்றே ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அந்த வங்கி ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை செய்ய இலவம், ஆனால் முதல் 5 பரிவர்த்தனைகள் மட்டும் இலவசம்.
அதன் பின்பு நிதி பரிவர்த்தனைகள் என்றால் 20 ரூபாயும், நிதியில்லா பரிவர்த்தனைகளுக்கு 8.50 ரூபாயையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
===================================================
ன்று,
ஜனவரி-26.
உலக சுங்கத்துறை தினம்
 உகாண்டா விடுதலை தினம்

இந்திய குடியரசு தினம்(1950)

இந்தி, இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது(1965)

இஸ்ரேலும், எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன(1980)

  இன்று 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியக் குடியரசுத்தலைவர் ராஜ்பாத்தில் தேசியக் கொடியை ஏற்றிவார். இந்திய ராணுவத்தின் பெருமை மிகு அணிவரிசையும் நடைபெறும். ராணுவத்தின்  முப்படை அணிவகுப்பும் நடைபெறும். நாட்டின் பன்மைத்துவத்தை வெளிக்காட்டும் விதமாக பல மாநிலங்களின் முக்கியமான கலையும் அரங்கேறும்.
 இந்தக் கொண்டாட்டமான நாளைப் பற்றி முக்கியத் தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26, காலை 10.18 மணியளவில் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
முதல் குடியரசு தினம் ஜனவரி 26-ம் நாள் 1950ல் கொண்டாடப்பட்டது.  இந்திய அரசியலைமைப்புதான் உலகிலேயே மிகப் பெரியது. இதில் 444 ஆர்ட்டிகிள்கள் உள்ளன.
முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேசிய அதிபர் சுக்கர்னோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
 1. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முன் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பிரிட்டீஷ் அரசின், இந்திய அரசாங்கச் சட்டம் 1935 என்பதே செயல்பட்டுக் கொண்டிருந்தது.
 2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கைப்பட எழுதப்பட்டது.
 3. முதல் இந்திய ராணுவ அணிவகுப்பு 1955 ராஜ்பாத்தில் நடைபெற்றது. 
 4. குடியரசு தின அணிவகுப்பில்  Abide With Me என்ற  ஒரு கிறித்துவப் பாடல் ஒன்று இடம் பெறும்.
 5. குடியரசுத் தினக் கொண்டாட்டம் மூன்று நாள் அதாவது ஜனவரி 29 வரைக் கொண்டாடப்படும்.
 6. மூன்றாம் நாள் நிறைவு நிகழ்ச்சிக்கு பாசறை திரும்பல் என்று பெயர்.
 7. இந்தியாவின் அரசியலமைப்பு மற்ற நாடுகளின் அரசியலமைப்பில் இருந்து மிகவும் மேம்பட்டது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்,ஆகியவை பிரெஞ்சு அரசியலமைப்பிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டன. 
 8. குடியரசுத் தினத்தில் தேசிய விருதுகளான பாரத் ரத்னா, கீர்த்தி சக்ரா, பத்மா விருதுகள் அறிவிக்கப்படும். 
 9. குடியரசு தினத்தில் இந்திய விமானப் படை உருவானது.
 10. ஒவ்வொரு வருடமும் குடியரசுத் தலைவர் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றுவார்.
 11. விடுதலைதினம்,குடியரசுத்தினம் ஆகிய இரண்டிலுமே முன்பு மாநில ஆளுநரே கொடியேற்றுவார் .அதை மாற்றி பிரதமர் விடுதலைத்தினத்தில் கொடியேற்றுவதைப்போல் அந்தந்த மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி பெற்றுத்தந்தார்.
===================================================


இப்போது வடக்கு வடக்கே அல்ல.
வட புலம் நகர்கிறது.
 பூமிப் பந்தின் வட துருவ காந்தப் புலம் தொடர்ந்து நகர்ந்து வருகிறது.
வட புலம் துல்லியமாக குறிக்கப்பட்ட, 1881லிருந்தே, அது ஆண்டுக்கு, 10 கி.மீ., இடம் பெயர்ந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, வட காந்தப் புலம் ஆண்டுக்கு, 3,0-40 கி.மீட்டர் வரை இடம் பெயர ஆரம்பித்திருக்கிறது.

இன்று, திறன் பேசிகளிலில் இருக்கும், ஜி.பி.எஸ்., வசதி முதல், கப்பல்கள், விமானங்களில் இருக்கும் திசைகாட்டிகள் வரை இதனால் பாதிக்கப்படுமே?
 ஆனால், 'உலக காந்த மாதிரி' உருவாக்கும் அமெரிக்காவின், என்.ஓ.ஏ.ஏ., எனப்படும், 'தேசிய கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம்' வட புல நகர்வை தொடர்ந்து, காந்த மாதிரியை புதுப்பித்து வருகிறது.

இந்த புதிய மாதிரிகளைத் தான், ஜி.பி.எஸ்., சேவைகள் வாங்கி பயன்படுத்துகின்றன.
அண்மையில் அதிபர் டிரம்பின் அரசு, முடக்க தீர்மானித்திருக்கும் பல அரசு துறைகளில், என்.ஓ.ஏ.ஏ.,வும் வருவதால், உலக காந்த மாதிரியை புதுப்பிப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த புல நகர்வு, வட துருவத்திற்கு அருகே இருப்பவர்களுக்கே லேசான பாதிப்பு.
தள்ளி இருப்பவர்கள், வழக்கம்போல வட புலம் நகர்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

இன்னொரு விஷயம், பூமியின் இரு காந்தப் புலங்களும், 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தலைகீழாக மாறியதாகவும், அப்படி ஒரு மாற்றம் வருவதற்கான அறிகுறியே நகர்வு வேகம் அதிகரித்து வருவது என்றும், விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஒரு நாளைக்கு 6 என்கவுண்ட்டர்கள்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த 16 மாதங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டு 78 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிரங்கள் வெளியாகியுள்ளன.

உத்தப்பிரதேச அரசே வெளி யிட்டுள்ள இந்த புள்ளிவிவரம், நீதித்துறையினரை மட்டுமன்றி, மனித உரிமை அமைப்புக்களையும், அரசியல் கட்சி யினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த உடனேயே என்கவுண்ட்டர் ஆயுதத்தைபாஜக கையில் எடுத்தது.

 ‘ஆபரேசன் கிளீன்’ என்ற பெயரிலான இந்த என்கவுண்ட்டர், முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள், தலித்துக்கள், அப்பாவி ஏழைகள் மற்றும் அரசியல் எதிரிகளை பழி வாங்குவதாக இருந்தது.

என்கவுண்ட்டர் செய்யும் மாவட்ட காவல்துறைக்கு ரூ. 1 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது. இதனால், முதல் 6 மாதங்களில் மட்டும் 430-க்கும் மேற்பட்ட என்கவுண்ட்டர்கள் நடந்தப்பட்டன.

 ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும் ஒரு என்கவுண்ட்டர் விகிதம் இந்த அராஜகம் அரங்கேற்றப்பட்டது.
ஓராண்டு முடிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டிருந்தன.

கொல்லப்பட்டவர்களில் பெரும் பாலான வர்கள் இஸ்லாமியர்களாக இருந்தனர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் மட்டும் 160 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்து சாமியார்கள் 3 பேரை கொலைசெய்து விட்டார்கள் என்று கூறி, முஸ்டாக்,நவ்ஷாத் என்ற இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கடந்த 2018 செப்டம்பரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 உண்மையில் சாமியார்கள் கொலைக்கும், இவர்களுக்கும் சம்பந்தமில்லை.
ஆனால், வீட்டிலிருந்த இந்த இரு இளைஞர்களை யும், வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிச் சென்று, முன்கூட்டியே பத்திரிகை யாளர்களையும் வரவைத்து, அவர்கள் முன்பாகவே முஸ்டாக்கும், நவ்ஷாத்தும் கொல்லப்பட்டனர்.

ரூ. 6 முதல் 8 லட்சம் வரை பணம் கொடுத்து, ஒப்பந்த அடிப்படையில் கொலைகாரர்களை நியமித்தும் என்கவுண்ட்டர் நடத்தப்பட்டது. ஆக்ரா மண்டலத்தில் உள்ள ஒரு காவல்நிலை யத்தின் மூன்று காவல் உதவி ஆய்வா ளர்கள், இவ்வாறு பணம் கொடுத்து, கொலைக்காரர்களை கூலிக்கு அமர்த்தியதை ‘இந்தியா டுடே’ ஏடு அம்பலப் படுத்தியது.
 
உத்தரப்பிரதேசத்தில் என்கவுண்ட்டர் கள் நடத்தியதும் காவல்துறை அதிகாரி களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படும் என்பதால், பதவி உயர்வுக்காகவும், காவல்துறையே கூலிப்படை அமர்த்தி படுகொலைகளை அமர்த்தியதும் நடந்தது.இந்நிலையில்தான், ஆதித்யநாத் அரசே என்கவுண்ட்டர் படுகொலைகளின் பட்டியலை சாதனை என்ற பெயரில் தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் “2017 மார்ச்சில் ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார்.
அப்போதி ருந்து, 2018 ஜூலை வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 3036 என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன;
 அதில், 78 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்;
 838 குற்றவாளிகள் காயமடைந்துள்ளனர்;
7 ஆயிரத்து 43 கிரிமினல்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்” என்று புள்ளிவிரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதே காலகட்டத்தில் “11 ஆயிரத்து 981 கிரிமினல்களின் பெயில் ரத்து செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்; கூடுதலாக நியமிக்கப்பட்ட அதிரடிப்படை 9 குற்றவாளிகளைச் சுட்டுக்கொன்று, 139 பேரைக் கைது செய்துள்ளது” என்றும் ஆதித்யநாத் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், சராசரியாக ஒரு நாளைக்கு 6 என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டு இருப்பதாகவும், 
ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பதாகவும் துணிந்து கூறியுள்ளது.