இல்லாத வேலைக்கு ஒதுக்கீடு?
சமீபத்தில்
மத்திய அரசு பொருளாதார ரீதியாக பின்தங்கிய அனைவருக்கும் அரசு
வேலைவாய்ப்பில் 10 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு என்ற சட்டத்திருத்தத்தை
அவசர அவசரமாக கொண்டுவந்தது.
இச்சட்டம் நடைமுறையில் முற்பட்ட பிரிவினருக்கான
இடஒதுக்கீடாக உள்ளது என அரசியல் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும்
கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
சமூக
நீதியை சமாதி கட்டுவதற்கான சதிவலை, இடஒதுக்கீட்டை தீர்த்துக் கட்டுவதற்கான
முன்னோட்டம், தனியார் பிரிவிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான
ஆயத்தம் என்று பல கருத்துகள் இதன் பின்னணி குறித்து யூகங்கள்
கட்டமைக்கப்படுகின்றன.
சமூக நீதி கோட்பாடுகளை தாண்டி இப்படி அவசர
சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட முதன்மை காரணமாக கருதப்படுவது நெருங்கி
வரும் மக்களவைத் தேர்தல் தான்.
தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு பிரிவினரின்
நன்மதிப்பை கவரும் பொருட்டே இந்த சட்டத்திருத்தமானது கொண்டுவரப்பட்டது
எனவும் குற்றச்சாட்டு எழாமல் இல்லை.
இவையெல்லாம்
ஒருபுறம் இருக்க இந்த அவசர சட்டமானது நடைமுறையில் எந்த அளவுக்கு
ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே நம்முன் நிற்கும்
கேள்விக்குறியாக உள்ளது. இதை புரிந்து கொள்ள கடந்தாண்டு நிதிநிலை
அறிக்கைக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையின்
தகவல்களை உற்று நோக்க வேண்டும்.
இந்தியாவின்
அப்போதைய பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியத்தால் தயாரிக்கப்பட்டு
நிதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் இந்தியா
சந்திக்கவுள்ள முக்கிய சவால்களாக அடிக்கோடிட்டு காட்டப்பட்டவை கல்லி,
வேலைவாய்ப்பு, சுகாதாரம். இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று பிணைந்து
இந்தியாவின் வளர்ச்சிக்கும் வித்திட்டது என்று சொல்லலாம். உலகில் எந்த
நாடுக்கும் கிடைக்காத வாய்ப்பானது இந்தியாவுக்கு டெமோகிராஃபிக் டிவிடண்ட்
என்ற சூழல் மூலம் கிட்டியுள்ளது.
வேலைக்கு செல்லும் வயதுடைய அதிக அளவிலான
இளைஞர்களை கொண்ட இந்தியா டிமாகிராஃபிக் டிவிடண்ட் என்ற இந்த வாய்ப்பால்
வளர்ச்சிக்கான அபார சூழல் உள்ளதாக பொருளாதார நோக்கர்கள் கணித்துள்ளனர்.
இந்த
சவாலான எதிர்காலத்திற்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை என்பதை தான்
கடந்தாண்டின் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. நாட்டின்
கல்வித்தரமானது பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை அனைத்து தலங்களிலும்
மிகவும் பின்தங்கியுள்ளது.
இதன் நேரடி பாதிப்பாக படித்து முடித்த இளைஞர்கள்
வேலைக்கு தகுதியற்றவர்களாக இருக்கின்றனர். சுகாதாரத்திலும்
பின்தங்கியுள்ளதால் நாட்டின் வருங்கால தலைமுறையினரின் மனிதவளம்
வீணடிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கையை அந்த அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணமதிப்பு
நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றால் தொழில் துறை முடங்கிப்போய்
பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், சாதாரண
அலுவலகப் பணியாளர் வேலைக்கெல்லாம் பட்டதாரி இளைஞர்கள் லட்சக்கணக்கில்
விண்ணப்பிக்கும் அவலநிலை உருவாகியுள்ளது. இதில் அதிர்ச்சி தரும் நிலைமை
என்னவென்றால், கொஞ்சம் கொஞ்சமாக அரசுத் துறையில் உள்ளப் பணியிடங்கள்
குறைக்கப்பட்டு தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது என்ற கள யதார்த்தம் தான்
நமக்கு புலப்படுகிறது.
கடந்த
மூன்று ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள
பணியாளர்கள் 16 லட்சத்து 90 ஆயிரத்து 741 இல் இருந்து 15 லட்சத்து 23
ஆயிரத்து 586 ஆக குறைக்கப்பட்டுள்ளனர்.
இது மேலும் வங்கி, ரயில்வே போன்ற
துறைகளில் தொடரவுள்ள நிலையில் தான் அரசு இந்த இந்த 10 சதவீத இடஒதுக்கீடு
அறிவிப்பை அமல்படுத்தியுள்ளது.
ஆக்கப்பூர்வமான நிரந்தர வேலைகளை அரசால்
உருவாக்க முடியாத சூழலில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது மோடியின் அடுத்த
ஜும்லா என்ற விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
கிணறே வெட்டாமல் அதற்கு வடிவேல் ரசீது வாங்கி கிணற்றைக்காணோம் என்பதுபோல் போல,
வேலைகளை முதலில் உருவாக்காமல் கோட்டாவை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய
முடியும்.? .பொருளாதாரப் பு
இந்திய விடுதலைக்குப்பின்னர் காங்கிரஸ் மற்றும் பல்வேறு ஆட்சிக்காலங்களில் 2014-ஆம் ஆண்டு வரை மொத்தமாக 54 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் கடன் சுமை, மோடி பிரதமராகப் பொறுப்பேற்றப்பின்னர் கடந்த 4 ஆண்டு காலத்தில் மட்டும் 50% அதிகரித்து 82 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.
கடந்த 2014 ஜூனில், இந்தியாவின் மொத்தக் கடன் தொகை ரூ. 54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாக இருந்தது.
இது மோடி பதவியேற்ற பிறகு, சுமார் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
2018 செப்டம்பர் மாதம் வரையிலான கணக்கீட்டின் அடிப்படையில், இந்தியாவின் கடன் தொகை ரூ. 82 லட்சத்து 3 ஆயிரத்து 253 கோடியாக உயர்ந்துள்ளது.இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் நிலை குறித்து, கடந்த 2010-11 முதல் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது அரசுக் கடன் பத்திரத்தின் 8-ஆவது பதிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதில்தான் இந்த கடன் விவரங்கள் தெரிய வந்துள்ளன.
தனித்தனியான ஆய்வை எடுத்துக் கொண்டால், மோடியின் நான்காண்டு ஆட்சிக் காலத்தில், சந்தைக் கடன்கள் மட்டும் 47.5 சதவிகிதம் உயர்ந்து, 52 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த கடன் அதிகரிப்பு, நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நிதித்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் நடப்பு நிதிப்பற்றாக்குறை நவம்பர் வரையிலான 8 மாதங்களில் மட்டும் ரூ. 7 லட்சத்து 17 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது என்றும், இந்த பற்றாக்குறையானது, ஆண்டு வருவாயைக் காட்டிலும் கூடுதல் (ரூ. 6.24 லட்சம் கோடி) என்றும் ஆய்வறிக்கை கூறுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சட்டவல்லுனரை நிதியமைச்சராக வைத்ததும்,ரிசர்வ் வாங்கி ஆளுநர்,நிதித்துறை வல்லுநர்களை கலந்து கொள்ளாமல் பிற்போக்கு வலதுசாரி பொருளாதார நடவடிக்கைகளை மோடி தன்னிச்சையா மேற்கொண்டதும் இந்த கடன் சுமைக்கு காரணங்களாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக கருப்புப்பணத்தை ஒழிக்கிறேன் என்று மோடி கொண்டுவந்த பணமதிப்பிழப்புதான் ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்தையே படுகுழிக்குள் தள்ளியுள்ளது.
இதை உலகவங்கியே குறிப்பிட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாடல்ல மனிதர்கள்.
-இந்தியாவில் ஒதுக்கப்பட்டவர்கள் இறந்தால், அவர்களைப் புதைப்பதற்கோ எரிப்பதற்கோ, இன்னும் பல ஆயிரம் கிராமங்களில், சுடுகாடு இல்லை.
பிணத்தை கொண்டு செல்வதற்கு பாதைகூட தரப்படுவது இல்லை.
சாதியைக் காரணம் காட்டி, யாரும் உதவ முன்வராததால், இறந்த தனது அம்மாவின் உடலை, தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவர் தனியாளாகவே சைக்கிளில் கொண்டு சென்று காட் டுக்குள் அடக்கம் செய்தது, ஒடிசாவில் சில நாட்களுக்கு முன்புதான் அரங்கேறியது. அதை நம் தளத்தில் படத்துடன் வெளியிட்டிருந்தோம்.
பிணமான பின்பும் தீண்டாமைக் கொடுமையை அனுபவிப்பவர்களாக தலித் மக் கள் இருக்கின்றனர்.
ஆனால், மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், இறந்த பசுக்களை தகனம் செய்ய பிரத்யேகமான கூடம் கட்டப்பட்டு வருகிறது.
நாட்டிலேயே முதன்முறையாக இந்த தகனக்கூடம் அமைந்து கொண்டிருப்பதாக போபால் மாநகராட்சி நிர்வாகம் பெருமை பீற்றியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், கால்நடைகளை தற்காலிகமாக அடைத்து வைப்பதற்கான கோசாலைகளை, கிராமங்கள், நெடுஞ்சாலைகள், பஞ்சாயத்து மற்றும்மாநகராட்சி பகுதிகளில் அமைக்க வேண்டும்;
தெருவில் திரியும் கால்நடைகளை பிடிக்கும்போது, அவற்றை அதிகாரிகள் இரக்கத்துடன் நடத்த வேண்டும் என் றெல்லாம், அம்மாநில கால் நடை பராமரிப்புத்துறை அமைச்சர் லகான் சிங், மாடுகள் மீது அன்பைக் கொட்டியுள்ளார்.
நமக்கு பால்தரும் மாடுகள் ,கால்நடைகளை நல்லவிதமா கவனித்துக்கொள்வது அவசியம்தான்.
ஆனால் அவற்றை கடவுள் அளவுக்கு கொண்டு சென்று மனிதர்களை இழிநிலைக்கு தள்ளுவதும் பாஜகவின் இலக்காக இருப்பது கொடுமை.
மோடி ஆட்சிக்கு வந்தது மாடுகள் போட்ட வாக்குகளால் அல்ல என்பதை தேர்தல் நெருங்கிவரும் நேரத்தலாவது புரிந்து கொள்ள வேண்டும்.
=====================================================
இன்று,
ஜனவரி-20.
பேர்ள் துறைமுகம் கடற்படைத்தளமாக மாற்றம் (1887)
முதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்டம் மசாசூசெட்சில் இடம்பெற்றது(1892)
வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு நீள திரைப்படம் திரையிடப்பட்டது(1929)
“ சோழி “
மறைந்த நடிகர் சோ ராமசாமி "துக்ளக்" பத்திரிக்கையை தொடங்கி நடத்தி வந்தார்.
அவரது அரசியல் நையாண்டிக்காகவே அந்தப் பத்திரிக்கை ஒருகாலத்தில் பரபரப்பாக விற்பனை ஆனது.
2016 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் துக்ளக் ஆசிரியரான சோ ராமசாமி மரணமடைந்தார்.
இதையடுத்து பாஜகவைசசேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக்
பத்திரிக்கைக்கு
ஆசிரியரானார்.இவர் சோ இருக்கையிலேயே துக்ளக் இதழில் ஆசிரியர் குழுவிலும்,நிர்வாகத்திலும் இருந்தார்.
சோ மறைவுக்குப்பின்னர் பொறுப்புடன் துக்ளக்கை குருமூர்த்தி ஆசிரியர் பொறுப்பேற்று நடத்துகிறார் என்று சோ மனைவி,மகன் நினைக்கையில் ஆடிட்டர் குருமூர்த்தியோ துக்ளக்கை தன வசப்படுத்துவதில் மும்முரமாக இறங்கிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சோ குடும்பத்தினர் குருமூர்த்தியிடம் தங்கள் பங்கை வலியுறுத்த பாஜக செல்வாக்கான அவரோ கண்டுகொள்ளவில்லை.
இதனால் சோவுக்கு வேண்டப்பட்ட பாஜக தலைவர்கள் மூலம் கட்டப்பஞ்சாயத்து நடத்தப்பட்டது.
இந்நிலையில் குருமூர்த்தியும் நடிகர் எஸ்,வி,சேகரும் இணைந்து “ சோழி “ என்ற வார இதழைத் தொடங்குகின்றனர்.
இதில் "சோ" என்பது துக்ளக் CHO என்ற எழுத்தை மையமாக வைத்து இந்த இதழ் தொடங்கப்படுகிறது என்று கூறியுள்ளனர் .'ழி' யாரோ?
“ சோழி “ பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து வார இதழாக வெளிவர உள்ளது.
இந்த இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராக எஸ்.வி.சேகர் பெயர் இருக்கும் என்று தெரிகிறது.