இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வியாழன், 17 ஜனவரி, 2019

ஓடவும் முடியாது ,ஒழியவும் முடியாது!,


ரூ.59 ஆயிரம் கோடி ரபேல் ஒப்பந்த ஊழலை .
கையும் களவுமாக சிக்கியது மோடி அரசு!!.

 
பேலில் விமானக் கொள்முதலில் ஊழல்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் மத்திய பாஜக அரசு கையும் களவுமாக சிக்கியிருக்கிறது.

பிரான்ஸ் நாட்டின் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்திடம் இருந்து ரூ. 59 ஆயிரம் கோடிமதிப்பில் 36 ‘ரபேல் ரக’ போர் விமானங்கள்வாங்குவதற்கு மத்திய பாஜக அரசு, கடந்த2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்தது.
ரபேல் விமானங்களை வாங்குவது காங்கிரஸ் அரசின் முடிவு என்றாலும், பாஜகஆட்சிக்கு வந்த பிறகு, அதில் ஏராளமான மாற்றங்களை செய்தது.

முந்தைய ஒப்பந்தத்தில், மொத்தம் 126 ரபேல் ரக விமானங்களை வாங்க முடிவுசெய்து- அதில் 18 விமானங்களைப் பறக்கும்நிலையில் பெற்றுக் கொள்வது, ஏனைய 108 விமானங்களை இந்தியாவில் பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட் (ழஹடு)நிறுவனம் மூலம்தயாரித்துக் கொள்வது என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், மோடி அரசோ மொத்தமே 36 விமானங்களை மட்டும் வாங்குவதென்றும், அவற்றையும் பறக்கும் நிலையிலேயே பெற்றுக் கொள்வதென்றும் ஒப்பந்தத்தை மாற்றியமைத்தது.
போர் விமானங்களைத் தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக இருந்த ‘இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட்’ நிறுவனத்தை கழற்றிவிட்டு, அந்த இடத்தில், திடீரென அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்தைத் திணித்தது.காங்கிரஸ் ஆட்சியில் 526 கோடி ரூபாய்விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த ரபேல் ரகவிமானத்திற்கு, 1670 கோடி ரூபாயை அள்ளிஇறைத்து மோடி அரசு தாராளம் காட்டியது.

 இவை அனைத்தும் எதிர்க்கட்சிகள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தின.526 கோடியாக இருந்த, ஒரு விமானத்தின்விலை, 1670 கோடி ரூபாயாக அதிகரித்தது எப்படி?

 அதேபோல எச்ஏஎல் நிறுவனம் இடம்பெற்றிருந்த இடத்தில் ரிலையன்ஸ் எப்படி வந்தது?

 75 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த எச்ஏஎல் நிறுவனத்தை நீக்கிவிட்டு, ஆரம்பித்து 12 நாட்களே ஆன ரிலையன்ஸை, ‘டஸ்ஸால்ட்’ தனது கூட்டு நிறுவனமாக சேர்க்க வேண்டிய தேவை என்ன?

போர் விமான தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில், 108 விமானங்களை இந்தியாவில்தான் தயாரிக்க வேண்டும் என்று முன்பு ஒப்பந்தம் போட்டிருந்த நிலையில், மொத்தமே 36 விமானங்களை மட்டும் வாங்குவது; அவற்றையும்பறக்கும் நிலையிலேயே வாங்கிக் கொள் வது என்று ஒப்பந்தத்தை மாற்றியது ஏன்?

இந்தியாவில் ஒரு விமானமும் தயாரிக்கப்படாது எனும்போது, ‘மேக் இன் இந்தியா திட்டம்’ எதற்காக?

அந்தத் திட்டத்தின் பெயரைச் சொல்லி, ‘ரிலையன்ஸ் டிபென்ஸை’ சேர்த்தது எதற்காக?

 என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தன.ஆனால், ஒன்றுக்கும் மோடி அரசு உருப்படியான பதில் அளிப்பதாக இல்லை.
 ரபேல்ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இடம்பெற்றது குறித்து தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று தப்பிக்கப் பார்த்தது.ஆனால், இந்திய அரசு கூறியதன் பேரிலேயே ரிலையன்ஸை ஒப்பந்தத்தில் இணைத்தோம் என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹாலண்டே உண்மையை போட்டு உடைத்தார்.
 ‘அனில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்’ என்ற இந்தியப் பிரதமரின் முன்நிபந்தனையின் பேரில்தான் ரபேல் ஒப்பந்தமே கையெழுத்தானது என்று ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் மூத்தஅதிகாரியான லோய்க் சிகாலன் என்பவரும் உறுதிப்படுத்தினார்.

 இதுதொடர்பாக பிரான்சின் ‘மீடியாபார்ட்’ என்ற புலனாய்வு செய்தி நிறுவனம் விரிவான செய்தியை வெளியிட்டது.இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அதனை மறுத்தார்.
ஆனால், ரிலையன்ஸ் குழுமம் கடந்த செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையில் ரூ. 6ஆயிரத்து 600 கோடி முதலீடு பெறப்பட்டது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டது.

அதன்பிறகும் மோடி அரசு தன்னை மாற்றிக்கொள்வதாக இல்லை.
 உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியபோது, ஒப்பந்தம் தொடர்பாக, மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் ஒப்புதல்பெற்று, அது நாடாளுமன்ற பொதுக்கணக் குக் குழுவிடமும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதுஎன்று அப்பட்டமாக பொய் சொன்னது.
 இந்நிலையில்தான், ரபேல் விவகாரத்தில் மத்திய பாஜக அரசும், பிரதமர் மோடியும் செய்திருக்கும் ஊழலுக்கு மற்றுமொரு ஆதாரம் வெளியாகியுள்ளது.

ரபேல் விமானத்தின் விலை என்ன என்றுகேட்டதற்கு இப்போதுவரை மோடி அரசு மழுப்பலாகவே பதிலளித்து வருகிறது.

எனினும், 36 ரபேல் ரக விமானங்களுக்கு தோராயமாக 8.7 பில்லியன் யூரோக்கள் மதிப்பீட்டில்ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறப்பட்டது.ஆனால், இதே ரபேல் விமானங்களை, அதே டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதற்கு, பிரான்ஸ் நாட்டு அரசு ஒப்பந்தம் போட்டு, இந்தியாவை ஏமாளியாக்கி உள்ளது.
அதாவது, இந்தியா 36 விமானங்களை 8.7 பில்லியன் யூரோக்கள் கொடுத்து வாங்குகிறது. ஆனால் பிரான்ஸ் 28 விமானங்களை வெறும் 2 பில்லியன் யூரோக்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.

டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் செய்துகொண்டுள்ள இந்த ஒப்பந்தம் குறித்து, பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ப்ளோரன்ஸ் பார்லி, ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இந்தியா பெறவிருப்பது, ‘கு3` என்ற பழைய தலைமுறையைச் சேர்ந்ததாகும்.
ஆனால், பிரான்ஸ் ஒப்பந்தம் போட்டிருப்பது ‘கு4` என்ற மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறையைச் சேர்ந்ததாகும்.அதாவது பழைய தலைமுறை விமானத்திற்குத்தான் இன்றைய மதிப்பில் சுமார் 64 ஆயிரம் கோடி ரூபாய்களை மோடி அரசுஅள்ளி இறைத்துள்ளது.

ஆனால், மேம்படுத்தப்பட்ட விமானத்திற்கே தலா ரூ.1,670 கோடி கொடுப்பதாக இவ்வளவு நாளாக நாட்டு மக்களை ஏமாற்றி வந்தது.
ஆனால், உண்மை வலியது என்ற வகையில், அடுக்கடுக்கான ஆதாரங்கள் வெளியாகி மோடி அரசை கையும் களவுமாக மாட்டிவிட்டுள்ளது.

இதனிடையே தாமதமாக சுதாரித்துக் கொண்ட பிரான்ஸ் நாட்டு அரசு, டஸ் ஸால்ட் நிறுவனத்துடன் தாங்கள் ஒப்பந்தம்எதுவும் செய்யவில்லை என்று அவசர அவசரமாக மறுத்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 ஜனவரி 17, (1978) - இந்தியாவில் அப்போதைய மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி கூட்டணி அரசு, நேற்றைய இரவு ( ஜனவரி 16-ல்) அவசரச் சட்டம் மூலம் ஆயிரம், ஐந்தாயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்களை விலக்கிக் கொள்ளும் முடிவை அறிவித்தது.

அவ்வாறு அறிவிக்கும் முன்னர் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது. ரிசர்வ் வங்கி மூலமே அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று கூறப்பட்டது.
அந்த நடவடிக்கையால்  குறிப்பிடும்படியான வெற்றி  எதுவும் எட்டப்படவில்லை.

என்றாலும் அப்போதைய கால கட்டத்தில் அந்த உயர் மதிப்பு நோட்டுக்கள் பணக்காரர்கள் மத்தியில் புழங்கியது,பெரும்பான்மையான பாமர மக்கள் பயன்பாட்டில் இல்லாதிருந்தவை என்பதால் பொது மக்கள் யாரும் எந்தவித அவஸ்தைக்கும் உள்ளாகவில்லை.
   5,000/-
 
10,000/-

====================================================

ன்று,
ஜனவரி-17.

மொனாகா தேசிய தினம்

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த தினம்(1917)

 ஐ.நா., சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது(1946)

வளைகுடாப் போர் துவங்கியது(1991)

தோழர் ஜோதிபாசு நினைவுநாள்.(2010)

====================================================


வங்கம் தந்த சிங்கம் தோழர் ஜோதிபாசு
                                                                                                                -மூ.அன்பரசன்
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிகப் பிரபலமான தலைவரும் வங்காளத்திலுள்ள லட்சோபலட்சக் கணக்கான மக்களின் இதயங்களில் தனக்கென்றுஒரு தனி இடத்தைப் பிடித்தவர் ஜோதிபாசு.

1942ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடை நீங்கியது. இந்த காலகட்டத்தில் சோவியத் யூனியன் நண்பர்கள் கழகம் என்ற ஒரு கழகம் உருவாக்கப்பட்டது. அதில் ஜோதிபாசு செயலாளரானார்.
1945ஆம் ஆண்டில் ஜோதிபாசு கட்சியின் மாநிலக்குழுவில் இணைக்கப்பட்டு அதன் அமைப்பாளர்களில் ஒருவராக ஆக்கப்பட்டார்.
 1946ஆம் ஆண்டில் மாகாண சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.
வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி 20 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.

ஜோதிபாசு ரயில்வே தொழிலாளர்களுக்கான தொகுதியில் போட்டியிட்டார். ரயில்வே ஊழியர் சங்கத்தலைவர் பேராசிரியர் ஹுமாயுன் கபீர் காங்கிரஸ் சார்பில் ஜோதிபாசுவை எதிர்த்துப் போட்டியிட்டார்.
கடுமையான போட்டியில் ஜோதிபாசு வெற்றி பெற்றார். இந்திய நாட்டின்வரலாற்றில் முதன் முறையாக கம்யூனிஸ்டுகள் 8 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

 20 தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி 1 லட்சத்து 31 ஆயிரத்து 191 வாக்குகளைப் பெற்றது.
இதுஒரு மகத்தான சாதனையாகும். ஏனென்றால் அச்சமயத்தில் அனைவருக்கும் வாக்குரிமை கிடையாது.
ஒரு வரம்புக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு.
சட்டமன்றத்தில் ஜோதிபாசு பல முக்கியமான உரைகளை நிகழ்த்தினார்.
அச்சமயத்தில் வங்காளம் கடுமையான உணவுப்பஞ்சத்தை சந்தித்துக் கொண்டிருந்தது. மக்கள் உணவுக்காக போராடிக் கொண்டிருந்தனர்.

அவருடைய பேச்சு இந்த பிரச்சனையை தெளிவாக எடுத்துக்கூறியது.
ஜோதிபாசுவின் இந்த உரையானது அடுத்த நாள் காலையில் அமிர்தபஜார் பத்ரிகா பல வங்காள மொழி பத்திரிகைகளில் பிரதான இடம் பெற்றது.
சட்டமன்ற கம்யூனிஸ்ட் குழுவானது அந்தமான் சிறைமற்றும் வேறு சில சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளைவிடுதலை செய்யும் பிரச்சனை, காவல்துறையின் அட்டூழியங்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள், உணவுப்பிரச்சனை மற்றும் மக்கள் ஒற்றுமை போன்ற பிரச்சனைகளை சட்டமன்ற விவாதங்களில் எழுப்பியது.

 இவை அனைத்திலும் ஜோதிபாசு பிரதானமான பேச்சாளராக இருந்தார்.மார்ச் மாதம் 26ஆம் தேதியன்று மேற்குவங்க அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சியையும் அதன் வெகுஜன அமைப்புகளையும் தடைசெய்தது.
அனைத்துஅலுவலகங்களும் சீலிடப்பட்டன.

ஜோதிபாசுவும் மற்றும் ஏராளமான தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதான் ஜோதிபாசுவின் முதல் சிறை அனுபவம்.
மூன்று மாதத்திற்கு பிறகு அவர்விடுதலையானார்.

 பல மாதங்களுக்கு பிறகு கட்சியின் மேற்கு வங்கமாநில மாநாடு நடைபெற்றது. அதில் முசாபர் அகமதுமாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜோதிபாசுமாநிலக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவ்வாண்டின் இறுதியில் துவங்க இருக்கும் நாட்டில் முதல் பொது தேர்தலுக்கான தயாரிப்புகளில் கட்சிஅக்டோபர் மாதம் முதல் இறங்கியது. அது காங்கிரஸ் எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தது.

வகுப்பு வாத எதிர்ப்பு சக்திகள் ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளை ஒரு குறைந்தபட்ச திட்டத்தின்கீழ் திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இத்தேர்தலில் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி 71 சட்டமன்ற தொகுதிகளிலும், 9 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஐக்கிய சோசலிஸ்ட் அமைப்பானது 72 சட்டமன்ற தொகுதிகளிலும், 8 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டது.
ஜோதிபாசு பாராநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.

 கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்தில் 28 இடங்களைப் பெற்றது. 5 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றது.சட்டமன்றத்தில் அது தனிப்பெரும் எதிர்க்கட்சியாக விளங்கியது. ஜோதிபாசு பாராநகர் தொகுதியில் 5400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவர் சட்டமன்ற கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி தலைவராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

1952 முதல் 1962 வரையிலான காலமானது ஏராளமான தொழிலாளிகள், விவசாயிகள், அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களின் போராட்ட வீச்சுக்களைக் கண்டது.
அனைத்து போராட்டங்களிலும், போராடும் மக்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்களை திரட்டுவதில் ஜோதிபாசு முக்கியப்பங்கு வகித்தார்.
1953ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3வது காங்கிரஸ் மதுரையில் நடைபெற்றது. அதில் ஜோதிபாசு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956ஆம் ஆண்டின் கட்சியின் 7வது மாநில மாநாட்டில் ஜோதிபாசு கட்சியின் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அந்த பொறுப்பில் 1961ஆம் ஆண்டு வரை இருந்தார்.

1957ஆம் ஆண்டில் 2வது பொது தேர்தல் நடைபெற்றது.
 ஜோதிபாசு பாராநகர் தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 46இடங்கள் கிடைத்தன.
கட்சி ஆதரித்த சுயேட்சைகள் 5 இடங்களில்வெற்றி பெற்றனர்.
 ஜோதிபாசு மீண்டும் சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டார்.

1962ஆம் ஆண்டு நடைபெற்ற 3வது பொதுத்தேர்தலில் ஜோதிபாசு அதே பாராநகர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
 இம்முறை கம்யூனிஸ்ட் கட்சிக்கு 50 இடங்கள் கிடைத்தன.
ஜோதிபாசு கட்சிக்குழுவின் தலைவராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1977ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அணி மேற்கு வங்கத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை தாங்கிய ஜனதா கட்சியுடன் ஒரு தேர்தல் உடன்பாடு கண்டது.

அதில் காங்கிரஸ் கட்சியின் அரைப்பாசிச ஆட்சியின் கீழ் வேதனைப்பட்டு கொண்டிருந்த மேற்குவங்க மக்கள்தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 17 இடங்களில் வெற்றிபெற்றது.
 ஜனதா கட்சி மொரார்ஜிதேசாய் தலைமையில் அரசாங்கத்தை மத்தியில் அமைத்தது.
அந்த அரசாங்கமானது மேற்கு வங்கம் உள்ளிட்ட 9 சட்டமன்றங்களை கலைத்தது.சட்டமன்றத்தை கலைத்தபிறகு மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 52 சதவீத இடங்களை அதாவது, 153 இடங்களை ஜனதா கட்சிக்கு தர சம்மதித்தது.ஆனாலும் அது சம்மதிக்கவில்லை.மாநில சட்டமன்றத்திற்கு ஜுன் 11 மற்றும் 14 தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்க மக்கள் இடதுசாரி கட்சிகளுக்கு அமோகமான ஆதரவு தந்தனர். அவர்கள் 230 இடங்களை அதாவது மூன்றில் இரண்டுபங்கு இடங்களை இடதுசாரி கட்சிகளுக்கு தந்தனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் 190 இடங்களைப் பெற்றது.
காங்கிரஸ் கட்சி முற்றிலும் துடைத்தெறியப்பட்டது.
 அதே போன்று ஜனதா கட்சியின் நம்பிக்கையும் தூள்தூளாகியது.

ஜுன் 18ஆம் தேதியன்று இடதுசாரி கட்சி தலைவர்கள் ஜோதிபாசுவை இடது முன்னணியின் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

இதை தொடர்ந்து ஜுன் 21ஆம் தேதியன்று அவர் மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார். அந்நாளில் தொடங்கி அடுத்த 23 ஆண்டுகளுக்கு அவர் தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார். இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் நீண்ட கால முதலமைச்சராக இருந்தவர் என்ற சாதனையை படைத்தார்.
இவரது தலைமையிலான ஆட்சியின் கீழ் விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.
மக்களின் ஜனநாயக உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டன.

 தொழிற்சங்க தகராறுகளில் காவல்துறையினர் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இப்படி பல மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றியது தோழர் ஜோதிபாசு தலைமையிலான இடது முன்னணி அரசு.
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை பல அடக்கு முறைகளை தாண்டி தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றது.
 தொடர்ந்து 33 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.

 வங்கத்தில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினரை அழித்தால் நாடு முழுவதும் கம்யூனிஸ்ட்டுகளை அழித்துவிடலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மதவாத கட்சிகள் நினைக்கின்றன.
அந்த திட்டம் நிறைவேறாது.
 தடைகளைஉடைத்து முன்னேறுவோம்.

மீண்டும் ஒரு புதிய வரலாற்றை படைப்போம்.

கட்டுரையாளர் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர்.

 "ஆப்புரேசன்  தாமரை"..
அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை வளைத்து கர்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் பாஜக-வின் ஆப்பரேசன் தாமரை என்ற திட்டம் இரண்டாவது முறையாக தோல்வியைத் தழுவி தாமரைக்கே ஆப்புரேசனாகிவிட்டது..

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, "ஆப்பரேசன் தாமரை" என்ற பெயரில் பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக ஆளும் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், ஆளும் கூட்டணிக்கு, சபாநாயகரை தவிர்த்து 116 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. பாஜகவிற்கு 104 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஆளும் கூட்டணியில் இருந்து 16 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டப்பேரவையின் பலத்தை 207 ஆகக் குறைப்பது என்றும், இதன் மூலம் 104 உறுப்பினர்கள் இருப்பதால் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பது என்றும் பாஜக திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.

இதற்கேற்ப எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கும் குதிரைபேரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக, இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டின.

ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த 2 சுயேச்சைகள் ஆதரவையும் விலக்கிக் கொண்டனர். மேலும் கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு நல்ல செய்தி காத்திருப்பதாகவும் எடியூரப்பா கூறியிருந்தார்.

இந்நிலையில், பதவி விலகுவதாக பாஜக தரப்பிடம் கூறியிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் பின்வாங்கி விட்டதாகவும், இதனால் ஆபரேசன் தாமரை திட்டத்தை எடியூரப்பா கைவிட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சித்தராமையா உதவியுடன் அதிருப்தி எம்எல்ஏக்களை குமாரசாமி சரிக்கட்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 7 மாதங்களில், கர்நாடகத்தில் ஆட்சியமைக்கும் பாஜகவின் முயற்சி 2ஆவது முறையாக தோல்வியடைந்திருப்பதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆபரேசன் தாமரை தோல்வியடைந்துவிட்டது என்றும், முறைகேடான வழிகளில் ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற பாஜகவின் முகத்தில் விழுந்த அறை எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

முகநூல் 
 மகா "கோமிய(த்துவ)ம்.
1.பாஜக தலைவர் அமித்ஷா பன்றிக்காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருக்கிறார்.
  2.நிதி அமைச்சர் அருண் ஜெட்லி புற்றுநோய் சிகிட்சைக்காக வெளிநாடு சென்றுவிட்டார்.
3.சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் மருத்துவமனையில் தான் இருக்கிறார்.
 4. சுஷ்மா சுவராஜ் நவீன மருத்துவமனையில் சிகிசசை பெறுகிறார்.
ஆர்.எஸ்.எஸ். தயாரிப்பான கோமியம்.

5. மனோகர் பாரிக்கர் அலோபதி மருத்துவமுறைசிகிட்சையில் இருக்கின்றனர்.
இப்போது எழும் கேள்வி.

இவர்கள் கூறும் சர்வரோகநிவாரிணி கோமியம் இவர்களுக்கு ஏன் உடலநலத்தை தரவில்லை.அல்லது இவர்கள் கோமியத்தை குடிக்கவில்லையா? 

கோமியம்
மாட்டு மூத்திரம் & சாணம் எல்லாம் நாட்டு மக்களுக்குத்தான் .

 கோமியம்  சர்வரோகநிவாரிணி எல்லாமே டூபாக்கூர் தான். 


இதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விளம்பரப்படுத்துவோர், தங்களுக்கு ஏதாவது ஒன்று என்றவுடன்  நவீன  மருத்துவத்தை நாடியே ஓடுகின்றனர்.
கோமியம்,மாட்டுச்சாணம் எல்லாம் என்னவாயிற்றாம்.
உஷாராயிருந்து உயிர் பிழைச்சுக்கோங்க!                                                          ஏ.சிவகுமார்.
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------