கின்னஸ்:மகளிர்க் கடல்’

சாதாரண மக்களுக்கு கூடுதல் சுமைதான்.
ஒவ் வொரு வீட்டிலும் புதிய பிரச்சனையாக முளைக்க இருப்பது கேபிள்டிவி கட்டணம்.
விரும்பும் சேனல்களுக்குக் கட்டணம், பார்க்கும் சேனலுக்குக் கட்டணம்,100 இலவசச் சேனல்களுக்கு ரூ.153.50 என்று தினமும் டிவியில் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அடிப்படைக் கட்டணம் ரூ.153.50 (ஜிஎஸ்டி18 ரூ சேர்த்து) இத்துடன் கூடுதலாக கட்டணச் சேனல்களுக்கு என்று தேவைக்கேற்ப செலுத்தவேண்டும். எங்கள் சேனலுக்கு 25, எங்கள் சேனலுக்கு19 என்று ஒவ்வொரு சேனலும் ஏற்கனவே இருந்த பேக்கேஜ் முறையில் சில சேனல்களை குறைத்து மாற்றி இப்போதும் பேக்கேஜ் முறையில்தான் விற்கப் போகிறார்கள்.
 அவர்கள் சொல்லும் பேக்கேஜில் நமக்கு தேவையில்லாத சேனல் இருந்தால் என்னசெய்வது என்பதற்கு விடையில்லை.
இது விரும்பும் கட்டணச் சேனல்களுடன், விரும்பாத சில சேனல்களையும் நம் மீது திணிக்கும் சேனல் நிறுவனங்களுக்கும், MSO எனப்படும் ஒருங்கிணைந்த கேபிள் டிவி சேவை வழங்கும் பெரு நிறுவனங்களுக்குமே கூடுதல் வருமானத்தைத் தரும்.

தற்போதைய கட்டண விகிதம் என்பது மேல்தட்டு மக்களுக்கானதே.
சாதாரண மக்களுக்கு கூடுதல் சுமைதான்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ரூ. 100 முதல் ரூ.200 வரை பல்வேறு கட்டணங்கள் இடத்திற்கு ஏற்பதற்போது வசூலிக்கப்பட்டு வருகின்றன.
அனலாக் முறையில் தற்போது கிடைத்துவரும் சில சேனல்களும்இனி நிறுத்தப்பட்டு முழுவதும் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்கள் மூலமாகவே வழங்கப்படவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதிலும் பல சிக்கல்கள் உள்ளன.

ஒரே ஊரில் பல நிறுவனங்கள் சேவைகளை வழங்குகின்றன.
 ஒருவரின் செட்டாப்பாக்ஸ் மற்றொருவருக்கு பொருந்தாது. வேறு நிறுவனத்திற்கு மாறுவதென்றால் செட்டாப்பாக்ஸையும் சேர்த்து மாற்றவேண்டும்.
 இதற்கெல்லாம் ஒருங்கிணைத்த தீர்வை அரசு ஏற்படுத்தவேண்டும்.
இப்போது கட்டாயமாகப்பார்க்கும் மதம் தொடர்பான சேனல்களின் தாக்குதல் தலைவலியில் இருந்து தப்பலாம் என்பதுதான் ஒரே நன்மை.

மொபைல்போன்கள் போல செட்டாப்பாக்ஸ்களும் பொது சந்தையில் பயனரே வாங்கிக் கொள்ளும்படியான தீர்வைத் தரவேண்டும்.
மேலும், புதிய தொலைக்காட்சிப் பெட்டிகளில் செட்டாப் பாக்ஸ் வசதியையும் சேர்த்தேவழங்குவது மற்றொரு தீர்வாக இருக்கும்.
 கேபிள் நிறுவனங்களை மாற்றும்போது சிம் கார்டு மாற்றுவது போல எளிதாக மாற்றிக் கொள்ள வழிவகை செய்யவேண்டும்.
டிடிஎச் (DTH) முறையிலும் இதே போன்ற வசதியை ஏற்படுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இல்லாவிட்டால் இது சேனல் உரிமையாளர்களுக்கு பணம் கொட்டுவதற்கு உதவியாக ,மக்களுக்கு மேலும் பொருளாதார இழப்பை ,சுமையை உண்டாக்கும் டிராயின் திட்டமிட்ட செயலாகத்தான் இருக்கும்.

கேபிள் இணைப்பு தருபவர்கள் போராட்டம் இப்போது போல் மனம்போல் மக்களிடம் பணம் வாங்க முடியாது.
நேரடியாக பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் மக்கள் பணம் செலுத்தினால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற பொதுநலத்தை மனதில் கொண்டுதான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாதான் உலகிலேயே முதலிடம்.

1954 - இந்திய அரசின் பாரத ரத்னா, பத்மவிபூஷன் விருதுகள் அறிமுகப் படுத்தப்பட்டன.
 கலை, இலக்கியம், அறிவியல், பொதுத் தொண்டு ஆகியவற்றில் மிகச் சிறந்த செயலாற்றியவர்களுக்கு, இனம், பாலினம்,பணி, பதவி ஆகிய வேறுபாடுகளின்றி, இந்திய அரசால் வழங்கப் படும் மிக உயர்ந்த விருதாகத் தொடங்கப்பட்ட பாரத ரத்னா, 2011இல் அனைத்துத் துறைகளுக்கும் விரிவாக்கப்பட்டது.

 இவ்விருது முதன்முறையாக டாக்டர் ராதாகிருஷ்ணன், சர்.சி.வி.ராமன், ராஜாஜி ஆகியோருக்கு 1954இல் வழங்கப்பட்டது.
இதுவரை இவ்விருது வழங்கப்பட்டுள்ள 45 பேரில், மறைந்தவர்கள் 12 பேரும் அடங்குவர்.


1978-79, 1993-97 காலத்தில் விருதுகள் யாருக்கும் வழங்கப்படவில்லை.
 இவ்விருது பெற்ற மிக  முதியவர் மகாராஷ்ட்ர சமூக சீர்திருத்தவாதி தொண்டே கேஷவ் கார்வே(100 வயது).

இந்தியக் குடியுரிமை பெற்ற அன்னை தெரசாவுக்கும், இந்தியர்கள் அல்லாத நெல்சன் மண்டேலா, கான் அப்துல் கஃபார் கான் ஆகியோருக்கும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
 
1992இல் சுபாஷ் சந்திர போஸுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டபோது, அவரது இறப்பைஇந்திய அரசு ஏற்கவில்லை என்ற நிலையில், இறந்தபின் விருதுஎன்று அறிவிக்கப்பட்டது சர்ச்சைக்கும் வழக்குகளுக்கும் ஆளானதால், விருதின் வரலாற்றிலேயே அப்போது மட்டும் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின் அதிக விவாதங்களைத்தோற்றுவித்தது மக்களுக்கு எந்தவிதமான தியாகங்கள்,சேவைகள் செய்யாத தொழில் முறை கிரிக்கட் விளையாட்டுக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு இவ்விருது வழங்கப்பட்ட பொத்தான்.அத்துடன் இவ்விருதின் மீதான மரியாதையும் வியப்பும் மக்களிடையே குறைந்து போனது.

விளையாட்டுவீரர்களுக்கு உயரிய விருதுகள் இருக்கையில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு உண்டான மிக உயரிய விருதை எந்தவிதமாகவும் மக்களுக்கு உதவாத சச்சினுக்கு கொடுத்து பாரத ரத்னம் விருதின் தரத்தை கலைமாமணி விருது அளவுக்கு இறங்கிவிட்டது.

1954இல் மூன்று நிலைகளாக அறிமுகப்படுத்தப்பட்ட பத்ம விபூஷன், 1955இல் முதல் நிலை பத்ம விபூஷன், இரண்டாம் நிலை பத்மபூஷன், மூன்றாம் நிலை பத்மஸ்ரீ என்று மாற்றியமைக்கப்பட்டது.

இதுவரை 303 பேருக்கு பத்ம விபூஷன், 1240 பேருக்கு பத்மபூஷன், 2915 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

37 வரை ராணுவம் அல்லாத (பொதுமக்களுக்கான) விருதுகளும், ராணுவப் பணிகளுக்கான 43 வகைவிருதுகளும் இந்திய அரசாலும், இன்னும் பல விருதுகள் மாநில அரசுகளாலும், இவை தவிர ஒவ்வொரு துறையிலும் பல்வேறு அமைப்புகளால் ஏராளமான விருதுகளும் வழங்கப்படும் இந்தியாதான் உலகிலேயே மிக அதிகமான விருதுகள் வழங்கும் நாடாகும்!
====================================================
ன்று,
ஜனவரி-02.

கல்கத்தா நகரம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது(1757)

ரஷ்யாவும் புரூசியாவும் போலந்தை பங்கிட்டன(1793)

ரயில் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்  அறிமுகம் (1893)

 முதலாவது செயற்கை கோளான லூனா 1, விண்ணுக்கு ஏவப்பட்டது(1959)
====================================================
 மகளிர்க் கடலான ‘வனிதா மதில்’
கேரளத்தை பின்னோக்கி இழுக்க முயலும் மதவாத, சாதிய சக்திகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு "பெண்கள்  அரண்"  (மலை யாளத்தில் ‘வனிதா மதில்) அமைத்துபுத்தாண்டின் முதல் நாளில் வரலாறு படைத்துள்ளனர்.

மகாத்மா அய்யன்காளிசிலைக்கு முதல்வர் பிரனாயி விஜயன் மாலை 
கேரளாவை ஊடுருவிச் செல்லும் கன்னியாகுமரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாயன்று அணி திரண்ட பெண்கள் கேரளத்தின் மறுமலர்ச்சிப் பாரம்பரியத்தை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

 ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி ஒற்றை வரிசையிலும் பல வரிசையிலுமாக பெண்கள் தோளோடு தோள் சேர்த்து பெண்சுவரை பெரும்மதிலாக மாற்றினர்.


செவ்வாய் மாலை 3.45 மணிக்கு குறிப்பிட்ட இடங்களில் பெண்கள் அணி அணியாக வந்து ஒருவர் தொட்டு ஒருவராக இடைவெளி இல்லாமல் நிரம்பி நின்றனர்.

சரியாக 4 மணிக்கு கைகளை முன்னோக்கி நீட்டி பெண்களின் சமவாய்ப்பு, மறுமலர்ச்சிப் பாரம் பரியத்தை பாதுகாப்பது குறித்த உறுதிமொழியை அனைவரும் உரக்க ஒலித்தனர்.

4.15 வரை சுவரும் உறுதிமொழி ஏற்பும் நடந்தது. திருவனந்தபுரம் வெள்ளி யம்பலத்தில் உள்ள மகாத்மா அய்யன்காளி சிலைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மாலை அணிவித்து பெண்கள் மதிலுக்கு துவக்கம் குறித்தார்.

 அதைத்தொடர்ந்து சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத், தேசிய மாதர் சம்மேளன தலைவர் ஆனிராஜா மற்றும் மகளிர் அமைப்பினர் அய்யன்காளி சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

காசர்கோடில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா பெண் சுவரின் முதல் நபராகவும், திருவனந்தபுரத்தில் பிருந்தாகாரத் கடைசி நபராகவும் தோள் சேர்த்தனர்.

 கொச்சி யில் சுவாமி அக்னிவேஷ் பார்வையாள ராக பங்கேற்று வாழ்த்து தெரி வித்தார்.

 திருவனந்தபுரத்தில் பெண்கூவர் நிறைவு பெற்றதும் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிருந்தா காரத், ஆனிராஜா உள்ளிட்ட மகளிர் அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்.

 இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், சிபிஎம் முதுபெரும் தலைவர் வி.எஸ்.அச்சு தானந்தன், மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெண்களின் வலிமையை உலகுக்கு உணர்த்திய உன்னத நிகழ்வாக ‘மகளிர் மதில்’ அமைந்தது.

 இந்த பிரம்மாண்ட மதிலின் பகுதி யாக பல்வேறு இடங்களில் இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம், கிறிஸ்தவ பெண்களும்  இடம்பெற்றி ருந்தனர்.

திரை கலைஞர் ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களும், எழுத்தாளர்களும் இணைந்து நின்றனர்.

பெண்சுவரை வாழ்த்தும் விதமாக அனைத்து இடங்களிலும் ஆண்கள் பெருஞ்சுவர் போல் சாலையின் மறுபக்கத்தில் நின்றனர்.


வனிதா மதிலில்  கலந்த கொண்டவர்கள் எண்ணிக்கை கேரளா முழுமைக்கும் இணைந்து ஐம்பது  லட்சம் இருக்கும் என தெரிகிறது.

இந்த பெண்கள் எழுச்சியைக்கண்டு குமுறிய பாஜகவினர் செட்டுக்குண்டு என்ற இடத்தில் குழுமியிருந்த பெண்கள் கூட்டத்தில் கையெறி குண்டுகளையம்,கற்களையம் எறிந்து கலைக்க முயற்சித்தனர் .அவர்களை மார்க்சிஸ்ட் கட்சியினரையும்,பொதுமக்களும் சேர்ந்து விரட்ட கலவரம் உருவானது.காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாஜக,ஆர்.எஸ்.எஸ் காரர்கள் அடித்த விரட்டப்பட்டனர்.அதன் பின் அமைதியாக பெண்கள் கரங்கோர்த்து நின்றனர்.

உலக சாதனைப் புத்தகம் கின்னஸ் சில இருந்து பார்வையிட வந்திருந்தனர்.அவர்கள் திருவனந்த புறம் முதல் காசர்கோடு வரை பெண்கள் கூட்டத்தை கணித்து சென்றனர்.கின்னஸ் விதிகள் படி இருந்தால் கின்னஸ் சாதனையாக இந்த வனிதா மதில் அறிவிக்கப்படும்.

 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
அந்நிய முதலீடுகளை அனுப்பி வைத்து ‘சாதனை’?
அதிகமான அந்நிய முதலீடுகளை இந்தியா கொண்டுவந்து, பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்பது பிரதமர் மோடியின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
ஆனால், அவரின் வேறுபல வாக்குறுதிகளைப் போல, இதுவும் பொய்யாய் போயிருக்கிறது.

அந்நிய முதலீடுகளைத் திரட்டும் முயற்சி என்று, 90 நாடுகளைச் சுற்றிவந்தபிரதமர் மோடி, ஏற்கெனவே வந்த 90 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய முதலீடுகளையும் பத்திரமாக வெளிநாட்டிற்கே அனுப்பி வைத்து ‘சாதனை’ படைத்துள்ளார்.
ஏற்றுமதியைக் காட்டிலும், இறக்குமதியை அதிகமாகக் கொண்ட இந்தியா, நீண்டகாலமாகவே நடப்புக் கணக்கு பற்றாக்குறை பிரச்சனையில் உள்ளது.
அந்நிய முதலீடுகள் மூலமே இந்த பிரச்சனையை ஓரளவு சமாளித்து வந்தது.

2014-ஆம் ஆண்டு மோடி அரசு பதவிக்குவந்தபோது, இந்தியாவின் வெளிநாட்டு முதலீடு ரூ. 2 லட்சத்து 56 ஆயிரத்து 213 கோடிஎன்ற அளவில் இருந்தது.


ஆனால், 2014-இல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின், அதற்கும் ஆபத்து ஏற்பட்டது.
 2016-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம், 2017-இல் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி போன்றவற்றால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் பணத்தை எடுத்துக் கொண்டுஇடத்தைக் காலி செய்யத் துவங்கினர்.
2018-ஆம் ஆண்டில் அது சற்று அதிகரித்து, போட்ட பணத்தையெல்லாம் வாரிச்சுருட்டிக் கொண்டு ஓடும் அளவிற்கு முதலீட்டாளர்களைத் தள்ளியது.
2018-இன் ஜூன் வரையிலான 3 மாதத்திற்குள் மட்டும் 61 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான அந்நிய முதலீடுகள் வெளியேறின.
ஜூலை மாதத்தில் 5 ஆயிரத்து 200 கோடிரூபாயும், ஆகஸ்ட் மாதத்தில் 2 ஆயிரத்து 300 கோடி ரூபாயும், செப்டம்பர் மாதத்தில்ரூ. 10 ஆயிரத்து 825 கோடியும் வெளியேறின.
இதற்கெல்லாம் உச்சமாக அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ. 32 ஆயிரம் கோடி அளவிற்கு அந்நிய முதலீடு வெளியேறி, பொருளாதாரத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இவ்வாறு கடந்த ஓராண்டில், பங்குச் சந்தையில் இருந்து ரூ. 33 ஆயிரம் கோடி,கடன் சந்தையிலிருந்து ரூ. 60 ஆயிரம் கோடிஎன ஒட்டுமொத்தமாக சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான அந்நிய முதலீடுகள் வெளியேறியுள்ளன.
 2008-ஆம் ஆண்டு உலக பொருளாதார மந்த நிலையின்போதுதான், இந்தியாவிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிகஅளவில் வெளியேறின.
சுமார் 41 ஆயிரத்து216 கோடி ரூபாய் மதிப்புக்கு முதலீடுகள் அப்போது கையை விட்டுச் சென்றன.

ஆனால், 2018ம் ஆண்டு, பொருளாதார நிலை சீராக இருந்தும், அதை விட இரண்டுமடங்கு வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறி இருக்கின்றன.
மோடியின் ஆட்சிக்காலம் இறுதிக் கட்டத்தில் இருப்பதால், முதலீடுகள் வெளியேற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையே இப்போதும் இருக்கிறது.

2016, 17-இல் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவை காரணமென்றால், 2018-இல் ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசுக்கும் இடையிலான மோதலே, முதலீடுகளின் வெளியேற்றத்திற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கி போன்ற தன்னாட்சி அமைப்புகள் மீது மத்திய அரசு தொடர்ந்துமேற்கொண்டு வரும் தாக்குதல்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதால், அவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள் என்றுபொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி வரும் வரை, வெளிநாட்டு முதலீடுகள் பம்மியநிலையிதான் இருக்கும். அதிகரிக்க வாய்ப்பு இல்லை; குறையவே வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள்கூறியுள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?