இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வியாழன், 3 ஜனவரி, 2019

கொழுப்பு தொடர்பான,

கொழுப்பு அதிகரிப்பது தான் இன்றைய பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் வருவதற்கு காரணம்.
குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது தான் முக்கிய காரணமாக உள்ளது.

 நம் உடல் செல்கள் உற்பத்தியாவதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அவசியம்.
மொத்த கொழுப்பும்  நல்லகொழுப்பு எல்.டி.எல். கெட்ட கொழுப்பு  எச்.டி.எல்., டிரைகிளிசரைட்ஸ் என பிரிக்கப்படுகிறது.
அதிகப்படியான உடல் எடையை குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது, உடற் பயிற்சி செய்வதால்  கொழுப்பு   அளவை கட்டுப்படுத்தலாம்.

உழைப்பிற்கு ஏற்ற உணவை சாப்பிடும் முறையை கடைப்பிடிக்க ஆரம்பித்தாலே போதுமானது.

பெரும்பாலான அலுவலகங்களில் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கின்றனர்.

எனினும் உணவு மட்டும் அதிக கலோரிகள் எடுத்து கொள்கிறோம்.
இதனால் கலோரிகள் கரையாமல் உடலில் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்க காரணமாகி விடுகிறது.

உணவு கட்டுப்பாடு மற்றும் அன்றாட வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி கொள்வதால் உடல் பருமனை கட்டுப்படுத்த முடியும்.

நாள் முழுவதும் சரியான அளவு தண்ணீர் பருகுவது உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது.

வேர்க்கடலை,வால்நட்,  பாதாம், முந்திரி  ஆகியவை நல்ல கொழுப்பையும் ,வேறு நல்ல சத்துக்களையும், - பண்புகளையும் பெற்றுள்ளன.
இவைகளில் குறிப்பாக வால் நட் மிகவும்  சிறப்பானது.

இது அசுத்த ரத்தத்தை சுத்திகரித்து சுத்த ரத்தத்தை மூளைக்கு கடத்தவும் ,கெட்டக்கொழுப்பைக் கரைக்கவும் வால் நட்டில் உள்ள சத்துக்கள் மிகவும் உதவி புரிகிறது.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இருதய நோய்கள் வராமல் காக்கிறது.

தினமும் 5 வால் நட்ஸ் சாப்பிட்டால் இருதயம், கொழுப்பு தொடர்பான  நோய்கள் வராமல் காக்கலாம்.
அதன் மூலம் மாரடைப்பை தவிர்க்கலாம்.
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 சளி, இருமலை குறைக்க சுடு தண்ணீ
சளி, இருமல், தொண்டை வலி என்று ஒவ்வொரு நிலையையும் கடக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
அதனை முடிந்த அளவு தடுப்பதற்கு சில எளியவழிகள்.

தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை.
 தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும், தொண்டை உறுத்தலை நீக்கும், சளியையும் குறைக்கும்.

இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது.
ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும்.
 உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும்.
 இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும்.
 சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும்.

 பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம்.
சளி, இருமலை இது விரைவில் நீக்கும்.

சிறிது ஆளி விதையை நீரில் கொதிக்கவைத்தால் பசை மாதிரி ஆகிவிடும்.
 இதனுடன் இயற்கை ஆன்டிபயாடிக்குகளான (Antibiotics) எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்துப் பருகிவர தொண்டை வீக்கம் குறையும்.

கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து.
கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும்.
ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும்.
15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.

சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும்.
பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன.
பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும்.

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது மஞ்சள் பால்.
என்னதான் இது போன்ற இயற்கை முறைகளை பயன்படுத்தி சளி, இருமலை குறைத்தாலும், அது நம்மை அண்டாமல் இருப்பதற்கு ஒரு வழி இருக்கிறது… என்ன தெரியுமா?

சுடு தண்ணீர்.. கேட்க சிரிப்பாகத் தான் இருக்கும்.
ஆனால், இந்த குளிர்காலம் முழுக்க சுடு தண்ணீரை மட்டும் குடித்துப் பாருங்கள், உங்களை சளி அண்டவே அண்டாது.
=====================================================
ன்று,
ஜனவரி-03.
 ஆங்கிலேயரை எதிர்த்த கட்டபொம்மன் பிறந்த தினம்(1740)


முதல் எலக்ட்ரானிக் கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பெனி அறிமுகப்படுத்தியது(1957)

மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது(1958)

 அலாஸ்கா, அமெரிக்காவின் 49வது மாநிலமானது(1959)

ஆப்பிள் கணினி நிறுவனம் அமைக்கப்பட்டது(1977)

===================================================