ஏன் கைது செய்யப்படவில்லை?

கோடநாடு கொலை தொடர்பாக ஆவண படம் வெளியிட்ட மாத்யூ சாமுவேலை கைது செய்ய தமிழக போலீஸ் தயங்குவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிட்டவர் பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல்.

இந்த ஆவணப்படத்தில் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருக்கும் சயன் மற்றும் மனோஜ் பேசியுள்ளனர்.

  கோடநாடு கொலை மற்றும் கொள்ளைகள் அரங்கேற்றப்பட்டதே எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் என்று கார் ஓட்டுனர் கனகராஜ் கூறியதாக சயன் மற்றும் மனோஜ் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஆவணப்படத்தில் பேசியதோடு மட்டும் அல்லாமல் மனோஜ் மற்றும் சயன் பேட்டியும் அளித்தனர்.

 இதனால் அவர்கள் மீது மட்டும் அல்லாமல் பத்திரிகையாளர் சயன் மீதும் மத்திய குற்றப்பிரிவில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து டெல்லி சென்ற தமிழக போலீஸ் மனோஜ் மற்றும் சயனை கைத செய்தது. ஆனால் மாத்யூ சாமுவேல் கைது செய்யப்படவில்லை.

 அதே சமயம் செய்தியாளர்களை சந்தித்த மாத்யூ சாமுவேல் முதலமைச்சருக்கு எதிராக கடுமையான புகார்களை கூறினார்.
 இந்த நிலையில் சென்னைக்கே வந்த மாத்யூ சாமுவேல் செய்தியாளர்களை சந்தித்து அடுத்தடுத்த அணு குண்டுகளை வீசினார்.

கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரியின் பேட்டியே தன்னிடம் உள்ளதாக கூறி மாத்யூ அதிர வைத்தார்.
 அந்த போலீஸ் அதிகாரி கேட்டுக் கொண்டதால் தற்போது அந்த பேட்டியை தான் வெளியிடவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேலுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.


 தன்னை பற்றி அவதூறாக பேசி வரும் மாத்யூ சாமுவேல் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று எடப்பாடி கேட்டுக் கொண்டுள்ளார்.

 இந்த விவகாரத்தில் சயன் மற்றும் மனோஜ் கைது செய்யப்பட்ட நிலையில் மாத்யூ சாமுவேல் மட்டும் கைது செய்யப்படவில்லை.

 சயன் மற்றும் மனோஜை தேடி டெல்லி சென்ற போலீசார் மாத்யூ சென்னை வந்த போதும் அவரை விசாரணைக்கு கூட அழைத்துச் செல்லவில்லை.

இதற்கெல்லாம் காரணம் கோடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரியின் பேட்டியே தன்னிடம் உள்ளது என்று மாத்யூ கூறியது தான் என்கிறார்கள்.

 இந்த விஷயத்தை ஏற்கனவே மோப்பம் பிடித்த அதிகாரிகள் மாத்யூவை கைது செய்தால் அந்த வீடியோவும் வெளியாகும் என்பதால் தான் அவர் விஷயத்தில் போலீசார் உஷாராக இருப்பதாக கூறுகிறார்கள்.
 எந்த முன்னேற்றமும் இல்லை.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ தமிழக அரசு சார்பில்முதல் முறையாக சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் கடந்த மூன்றாண்டுகளுக்கு 2015ல் முன்பு நடத்தப்பட்டது.
அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், சீனா, தைவான், தென்கொரியா, சிங்கப்பூர் என ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 23 நிறுவனங்கள் பங்குதாரர்களாக இணைந்தனர். அம்மாநாட்டின் இலக்கோ 1 லட்சம் கோடி. ‘கிடைத்ததோ’ இரண்டுலட்சத்து 42 ஆயிரத்து 160 கோடியாகும்.

1991 முதல் 2011 வரையிலான 20ஆண்டுகளில் கிடைக்காத முதலீடுஇந்த மாநாட்டின் மூலம் கிடைத்ததோடு, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டது.
இதன் மூலம் 4 லட்சத்து 70 ஆயிரத்து 65பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களும் ஒரே மாதிரியான தொழில் வளர்ச்சியைப் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில், இம்மாநாட்டின் மூலம் உற்பத்தித் துறையில் கிடைத்த ஒரு லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 50 விழுக்காடு தென் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அன்றைய முதலமைச்சர் அறிவித்தார்.

‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ தமிழக அரசு சார்பில்முதல் முறையாக சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் கடந்த மூன்றாண்டுகளுக்கு 2015ல் முன்பு நடத்தப்பட்டது.
அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், சீனா, தைவான், தென்கொரியா, சிங்கப்பூர் என ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 23 நிறுவனங்கள் பங்குதாரர்களாக இணைந்தனர்.
அம்மாநாட்டின் இலக்கோ 1 லட்சம் கோடி.
 ‘கிடைத்ததோ’ இரண்டுலட்சத்து 42 ஆயிரத்து 160 கோடியாகும்.

 1991 முதல் 2011 வரையிலான 20ஆண்டுகளில் கிடைக்காத முதலீடுஇந்த மாநாட்டின் மூலம் கிடைத்ததோடு, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டது.
இதன் மூலம் 4 லட்சத்து 70 ஆயிரத்து 65பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களும் ஒரே மாதிரியான தொழில் வளர்ச்சியைப் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில், இம்மாநாட்டின் மூலம் உற்பத்தித் துறையில் கிடைத்த ஒரு லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 50 விழுக்காடு தென் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அன்றைய முதலமைச்சர் அறிவித்தார்.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு, மூன்றாண்டுகள் கடந்த பிறகு, இந்த ஆண்டில் நடத்தப்பட்டது.
 இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியமுதலமைச்சர் எடப்பாடி, “2015 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது.
 அதில்98 திட்டங்கள் ஒப்பந்தம் போடப்பட்டன.
3 முதல் 7 வருடங்கள் தொழில்நிறுவனங்கள் வருகைக்காக கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டன.
 அதன் மூலம் ரூ. 2.5 லட்சம் கோடி முதலீடு கிடைத்தது” என்றார்.

முதல் மாநாட்டில் புரிந்துணர்வுஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்கள், உற்பத்தியை தொடங்குவதற்கான செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று இந்த மாநாட்டில் முதலமைச்சர் பேசியிருப்பதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகாலமாக மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை அவரே தன்னையறியாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்.
 ===================================================
ன்று,
ஜனவரி-25.
இந்திய தேசிய வாக்காளர் தினம்
மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1755)
நாடுகளின் அணி உருவாக்கப்பட்டது(1919)
இந்தியாவின் 18வது மாநிலமாக இமாச்சல பிரதேசம் ஏற்றுக் கொள்ளப்பட்டது(1971)
===================================================
 பிரம்மசாரியின் சாபம்.?
52 வயதாகியும் திருமணமாகாத ‘சாமியார்’ ராம்தேவ், இரண்டு குழந்தைகள் பெற்ற தம்பதிகள் மீது மீண்டும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

‘பதஞ்சலி’ நிறுவனம் மூலம் தரமற்ற பொருட்களை மோடி அரசு உதவியுடன் மக்களிடம் விற்று பல ஆயிரம் கோடி ரூபாய்களை கல்லாகட்டி வரும் சாமியார் ராம்தேவ், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ஹரித்துவாரில் பேசினார்.

அப்போது, திருமணம் செய்துகொண்டு குடும்பமாக மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள் மீது முதல்முறையாக தனது பொறாமையையும், வன்மத்தையும் காட்டினார்.
 “யாராவது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களின் வாக்குரிமையை பறித்து கொள்ள வேண்டும்” என்று மத்திய அரசுக்கு உத்தரவு போட்டார்.

அத்துடன், “நாட்டில் எங்களை (ராம்தேவ்) போன்று திருமணம் செய்து கொள்ளாமல் ‘பிரம்மச்சாரி’யாக இருப்பவர்களை கௌரவப்படுத்த வேண்டும்; சிறப்புச் சலுகைகளை அளிக்க வேண்டும்” என்றும் கெஞ்சினார்.

இந்நிலையில்தான், புதனன்று உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் பேசும்போது, ‘2 குழந்தைகள் பெற்றவர்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும்’ என்று மீண்டும் கொதித்துள்ளார்.

 “நாட்டில் மக்கள்தொகை அதிகரித்து வருவது தனக்கு கவலையளிக்கிறது” என முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?