இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

செவ்வாய், 8 ஜனவரி, 2019

குழப்புகிறதா?குழம்பியுள்ளதா??


மக்களை குழப்புகிறது தேர்தல் ஆணையம்.!


திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதான் .
ஆனால் இப்போது 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவேண்டிய நிலையில் திருவாரூரை மட்டும்,அதுவம் கஜா பேரிடரில் அத்தொகுதி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து மீளும் நிலையில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கக் காரணம் என்ன?
ஏற்கனவே ஆட்சியாளர்களின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது என்ற பேச்சுக்கள் மக்கள் நடுவில் உள்ளது.
 அதற்கேற்றார்ப்போல் தேர்தல் ஆணையத்தின் முன்னுக்குப்பின் முரணான அறிவிப்புகளும் செயல்பாடும் அதனுடைய கொஞ்சமிருக்கம் நம்பகத்தன்மையையும்  கேள்விக்குள்ளாக்குள்ளாக்கி  உள்ளது.

தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாகவுள்ளன.
 இந்தத் 20தொகுதிகளுக்குமே  தேர்தல் நடத்துவதை மாநில அதிமுக அரசு விரும்பவில்லை.

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படயிருந்த நிலையில், மாநிலத்தில் கனமழைக்கான ‘ரெட்அலர்ட்’ அறிவிக்கப்பட்டிருப்பதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுத, அதைக் ஏற்றுக்கொண்டதேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளிவைத்தது.

இதனிடையே அதிமுக உறுப்பினர்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதியும் அறிவித்த நிலையில் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

இதில் 19 தொகுதிகளை விட்டுவிட்டு திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கஜா பேரிடரில் அத்தொகுதி மக்கள் இன்னல்களை அனுபவிக்கும் போது .
தேர்தல் நடத்த தீர்ப்பரங்குன்றம் தவிர 18 தொகுதிகள் தயாராக உள்ளநிலையில்  மற்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படாததற்கான காரணம் எதையும் தேர்தல் ஆணையம் விளக்கவில்லை.

 இப்போது தேர்தலை தள்ளிவைத்ததற்கான அறிவிப்பில் மூன்றாம் தேதிதேர்தல் ஆணையத்திற்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதி தேர்தலை இப்போது நடத்தும் சூழல் இல்லை என்று கூறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பொதுவாக தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பு மாநில அரசு ,மாநிலத்திற்கான தேர்தல் ஆணையர் ஆகியோர் அறிக்கையை பெற்று அதன்பின்னர்தான் தேர்தலை அறிவிப்பது நடைமுறை.

இந்த முறை அவ்வாறு ஏன் செய்யப்படவில்லை?
 ஆளும் கட்சியான அதிமுகவும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்தது.
தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என பாஜக தொடர்ந்து கூறி வந்தது.

இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்தப்பின்னரும் அதிமுகவும்,பாஜகவும் மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.மாறாக தேர்தல் நடக்காது என்றே கூறிவந்தன.
அதுதான் நடந்துள்ளது.

நீதிமன்றம் ஆணையிட்டபின்னர் மாநில  தேர்தல் ஆணையரிடம் திருவாரூரில் தேர்தல் நடத்தலாமா,வேண்டாமா என்று அறிக்கை கேட்கிறதாம்.
இவையெல்லாம் திட்டமிட்ட முறையில் நடத்தப்படும் நாடகமோ என்ற எண்ணம்தான் அனைவர் மனதிலும்.

ஆள்வோரின் ,கைப்பாவை ஆணையத்தின் நாடகம் நாட் முழுக்க சிரிப்பாகிப்  போனது.

 ஏப்ரல் வரை தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டாம் என தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியிருப்பதாகவும் ஆணையம் கூறியுள்ளது. அதுவும் நாங்க மாதங்களுக்கு முன்னர்.
அதன் அடிப்படையில் தேர்தல் ஓத்திவைப்பாம் .அப்போது தேர்தல் அறிவித்தது எதன் அடிப்படையில்.?

இதன் நோக்கம் என்ன?
 கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் நிவாரண உதவிகள் பாதிக்கப்படும் என்பதால்தான் தமிழக எதிர்கட்சிகளும்  திருவாரூரில் இப்போது தேர்தல் நடத்த வேண்டாம் என்று கூறின.

ஏப்ரல் வரை இடைத் தேர்தலேவேண்டாம் என்று தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியது முதலமைச்சருக்கு  தெரியுமா?

அல்லது தலைமைச் செயலாளர் தன் அதிகார எண்ணத்தால் , அல்லது மத்திய பாஜக ஆட்சி கூறுவதன் அடிப்படையில் இவ்வாறு எழுதினாரா ?

திருவாரூர் தேர்தலை தள்ளி வைத்திருப்பது தற்போதைய சழலில் சரியானதே..

 ஆனால் மாநில தலைமைச் செயலாளர், மாநிலத்து தேர்தல் ஆணையர்,இந்திய தேர்தல் ஆணையம் போன்றவற்றின் நடவடிக்கைகள் பலத்த ஐயத்தை அனைவர் மனதிலும் உண்டாக்கியுள்ளது.

இத்திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பின் மறுபக்கத்தில் மத்திய,மாநில ஆட்சியாளர்களின் சூழ்ச்சியே உள்ளதாக தெரிகிறது.

எந்த ஒரு தொகுதியானாலும் அங்கு தேர்தல் நடத்துமுன்னர் அத்தொகுதியின் சூழல் ,சட்டம்-ஒழுங்கு நிலவரம்,முக்கிய விழாக்கள்,ஒட்டு மொத்த விளக்கமும் அரசிடமும்,அம்மாநில தேர்தல் அதிகாரியிடமும் அறிக்கையாக வாங்கி அதன் அடிப்படையில்தான் தேர்தலே நடத்துவார்கள்.அதுதான் விதி,நடைமுறை.

ஆனால் அந்த அடிப்படைக் கூடத் தெரியாதவர்களா தற்போதைய தேர்தல் ஆணையர்கள்?

தமிழக மக்களை அழம்பார்க்கவும்,அவர்களைத் திசைத்திருப்பவுமே இந்த நாடகம் என்றே தீர்மானிக்க முடிகிறது.
ஒருவேளை கஜா புயல் நிவாரணம் மத்திய அரசு போதுமானதாக தராத நிலையில் தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு ,கருப்பு கிளம்பிவிடாமல் இருக்க தேர்தல் நடத்த்துமளவு திருவாரூர் தேறியுள்ளது என்பதைக் காட்டவாக இருக்குமோ?

====================================================

ன்று,
ஜனவரி-08.

ஆல்பிரட் வெயில், புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார்(1838)
அலாஸ்காவில் ராணுவ ஆட்சி வந்தது(1900)
 மொனாக்கோ விடுதலை பெற்றது(1927)
பிடெல் காஸ்ட்ரோவின் கியூப  புரட்சி வெற்றி கம்யூனிஸ்ட்ஆட்சி மலர்ந்தது (1959)

====================================================
நாடுதழுவிய வேலை நிறுத்தத்துக்கான காரணம் ?
 "கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் கார்ப்பரேட்டுகள் பெற்ற சுமார் 3.15 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஓர் அரசு கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்புக்கு ஓராண்டுக்கு செலவிடும் பட்ஜெட் ஒதுக்கீட்டை விட இது அதிகம்" என்று பேங்க் எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (பெஃபி) அமைப்பின் அகில இந்திய இணைச் செயலாளரும், தமிழ்நாடு பொதுச் செயலாளருமான சி.பி.கிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்திய அளவிலான தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் தமிழ்நாட்டின் வங்கி ஊழியர்கள் பங்கேற்பு பற்றியும், இந்த வேலை நிறுத்தத்துக்கான காரணம் பற்றியும் பேசினார்.

இந்த வேலை நிறுத்தத்துக்கான காரணங்களை விவரித்த அவர், புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்து 23 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் எந்த அளவுக்கு விற்கப்பட்டனவோ அதைப் போல 137 சதவீதம் கடந்த நாலரை ஆண்டு பாஜக ஆட்சியில் மட்டும் விற்கப்பட்டுள்ளன.

 எல்லாவற்றுக்கும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கொண்டுவந்த பாஜக அரசு, பெட்ரோல், டீசலுக்கு மட்டும் ஜி.எஸ்.டி கொண்டுவர மறுப்பது ஏன்?
 ஜி.எஸ்.டி.யில் அதிகபட்ச வரிவிதிப்பே 28 சதவீதம்தான். அந்த விகிதத்தில் பெட்ரோல் - டீசலுக்கு வரி விதித்திருந்தால்கூட பெட்ரோல் விலை லிட்டர் 38 ஆகவும், டீசல் விலை லிட்டர் 28 ஆகவும் இருந்திருக்கும்.

ஏனென்றால் மோதி ஆட்சிக்கு வந்தபோது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 102 டாலர்.

தற்போது 71 டாலர்தான்.
ஆனால், 70 முதல் 75 சதவீத வரி விதித்து, சர்வதேச சந்தையில் விலை குறைந்தபோதும், இங்கே விலை ஏற்றி விற்கிறார்கள்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்கள் வாழ்க்கை மிகப்பெரும் அளவில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
 ஒரு கணக்கீட்டின்படி 82 சதவீத ஆண்களும், 92 சதவீத பெண்களும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் குறைவாக ஊதியம் பெறுகின்றனர்.

இதையெல்லாம் எதிர்த்துத்தான் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமிய வங்கிகள், ரிசர்வ் வங்கிக் கிளை, நபார்டு வங்கி உள்ளிட்ட அனைத்துவகை வங்கிகளின் ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அவர் கூறினார்.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் அவர்களுடன் இணைக்கப்பெற்ற 72 துறைவாரி சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன என்பதால் அரசு அலுவலகங்கள் பெருமளவில் செயல்படாது .

அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எம். அன்பரசு
"அரசின் மிரட்டல்களுக்குப் பயப்படாமல் தங்கள் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்று 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்துவார்கள் என்று தெரிவித்தார்.

 விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய இந்த அரசு ஊழியர், பொதுத்துறை நிறுவன ஊழியர் வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில், பா.ஜ.க. தொழிற்சங்கமான பி.எம்.எஸ். தவிர அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துகொள்ள இருக்கின்றன.
 தமிழ்நாட்டில் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 9 லட்சம் மாநில அரசு ஊழியர்களும், 3 லட்சம் ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர் என்று மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் துரைப்பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுப்படபோவதாக கூறி உள்ளனர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
அசல் பொய்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டது பாஜக -மோடி அரசு.

எச்ஏஎல் நிறுவனத்திற்கு மோடி அரசு 1 பைசா கூட தரவில்லை.
நாட்டின் பொதுத்துறை அமைப்பான, இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்  நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான தளவாட உற்பத்தி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
ஆனால், அமைச்சர் கூறியதில் உண்மை இல்லை என்றும், ஒரு பைசாவுக்கான ஒப்பந்தம் கூட எச்ஏஎல் நிறுவனத்திற்கு வரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில், அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் சேர்க்கப்படாதது குறித்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
பிரதமர் மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ ஆதாயம் அடைவதற்காகவே, திட்டமிட்டு இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸை புறக்கணித்து விட்டார்கள் என்பதும் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் ரபேல் விவகாரம் முக்கிய விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அமைச்சர்களுடன் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 ரபேல் ஒப்பந்தத்தில் எச்ஏஎல் புறந்தள்ளப்பட்டது ஏன்?
என்பதையே முக்கியக் கேள்வியாக எழுப்பி வருகிறார்.
 இந்நிலையில் ராகுல் காந்திக்கு பதிலளிப்பதாக நினைத்துக் கொண்டு, ‘இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை, புறக்கணிக்கவில்லை; ரூ. 1 லட்சம் கோடி அளவிற்கான ஒப்பந்தப் பணிகளை நாங்கள் வழங்கியிருக்கிறோம்” என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறினார்.

ரூ. 50 ஆயிரம் கோடி மதிப்பிலான 83 தேஜாஸ் விமானங்கள்,
 ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்பிலான 15 காம்பாட் ஹெலிகாப்டர்கள்,
 ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான 200 ஹெலிகாப்டர்கள்,
ரூ. 3 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான 19 போக்குவரத்து விமானங்கள்,
ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான பயணிகள் ஹெலிகாப்டர்கள்,
ரூ. 8 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான விமான இயந்திரங்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன என்று புள்ளி விவரங்களையும் அள்ளி விட்டார்.

ஆனால், அவற்றில் உண்மையில்லை என்று, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியபடி, எந்தவொரு கொள்முதல் ஒப்பந்தமும் தங்களுக்கு வரவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதற்குக் கூட எச்ஏஎல் நிறுவனத்திடம் பணம் இல்லை என்று கூறியிருக்கும் அந்த ஊழியர், “எச்ஏஎல் நிறுவனத்திற்கு, இந்திய விமானப்படை தரவேண்டிய ரூ. 15 ஆயிரத்து 700 கோடி நிலுவையில் உள்ளது;
அதைக் கூட பலமுறை கேட்டும் மோடி அரசு தரவில்லை, நாங்கள் தற்போது ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கும் நிலையில்தான் உள்ளோம் ” என்று வேதனையுடன்  குறிப்பிட்டுள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------