ஆர்எஸ்எஸ் வெளியிட்ட ராணுவ ரகசியம்?

 10% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வராது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது, மோடி அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களைப் போல், ஒன்றும் புதுமையானதோ வித்தியாசமானதோ அல்ல.
பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, இதுபோன்ற இட ஒதுக்கீட்டு முறை கொண்டுவரப்பட்டது.
அப்போது, 1992-ல், இந்திரா சாஹ்னி தலைமையிலான 9 பேர் கொண்ட அமர்வு இதனை நிராகரித்தது. பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2008-ல் ஒருசில படிப்புகளுக்கான சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க, கேரள அரசாங்கம் முயன்றது. 2008-ல் ராஜஸ்தானில் இருந்த காங்கிரஸ் அரசாங்கமும், 2016-ல் குஜராத்தில் இருந்த பா.ஜ.க. அரசாங்கமும் இதனை முயன்று பார்த்தன.
மாயாவதி கூட, மத்திய அரசின் இத்தகை இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதோடு, வரவேற்றும் இருக்கிறார்.


இட ஒதுக்கீடு மூலமாக சமூக நீதியை நிலைநாட்ட முடியும் என்று என்றுமே பா.ஜ.க. நம்பியதில்லை. சொல்லப் போனால், 2015-ல், ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பாகவத், இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே மறுஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று பேசியவர்.

 அந்தப் பேச்சினால், பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று பயந்த பா.ஜ.க., மோகன் பாகவத்தின் கருத்தில் இருந்து விலகிநின்றது. 

இதேபோன்று, இட ஒதுக்கீடு வழங்கும்போது, பல்கலைக்கழகத்தில் உள்ள அத்தனை இடங்களையும் ஒட்டுமொத்தமாக கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஒவ்வொரு துறையையும் தனித்தனியே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழங்கிய வழிகாட்டுதலை இந்த அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.

இதன்மூலம், பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்குக் கிடைத்துவந்த இடங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துபோனது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வலுவான வாதங்களை முன்வைக்காததோடு, அது தவறாகப் பயன்படுகிறது என்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்ளவும் செய்தார். அதனால், அச்சட்டம் நீர்த்துப் போனது.

பெரும்பாலான இட ஒதுக்கீட்டுத் திட்டங்கள், பொதுத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல்களை ஒட்டியே அறிவிக்கப்பட்டிருப்பதை வரலாறு சொல்கிறது.

 இந்திய வாக்காளர்களை, அரசியல் தலைமைகள் எப்போதும் முட்டாள்களாகவே கருதுவதோடு, இத்தகைய திட்டங்கள் தேர்தல் வெற்றிகளைப் பெற்றுத் தந்ததில்லை என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்கள்.
ஷாபானு தீர்ப்பை தகர்த்தெறிந்து, பாபர் மசூதியின் கதவுகளைத் திறந்துவிட்ட பின்னரும், 1989-ல் ராஜிவ் காந்தி வெற்றி பெறவில்லை.

 சோஷலிச தலைவர் கர்பூரி தாக்கூரோ, வி.பி.சிங்கோ கூட, தங்களுடைய இட ஒதுக்கீடு நிலைப்பாடுகளுக்காக எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பெரும் மக்கள் ஆதரவைப் பெறவில்லை.


எப்படி இருந்தாலும், மோடி அரசாங்கத்தின் இட ஒதுக்கீட்டு அறிவிப்பு, சட்டத்தின் முன் நிற்பது சிரமமே. ஏனெனில், வரலாற்று ரீதியான பாகுபாட்டுக்கான ஆதாரம் இல்லாத நிலையில், இட ஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட முடியாது என்று அரசியலைமைப்புச் சட்டத்தை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

 வரலாற்று ரீதியான பாகுபாட்டுக்கும் அதனால் தொடரும் பாதிப்புகளுக்குமான தீர்வே இட ஒதுக்கீடு என்று இந்திரா சாஹ்னி தலைமையிலான 9 பேர்கொண்ட அமர்வு தெரிவித்தது. இட ஒதுக்கீடு என்பது பொருளாதார மேம்பாடு அல்லது ஏழ்மை ஒழிப்பை இலக்காகக் கொண்டதில்லை என்பதையும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமூகப் பின்னடைவினாலேயே பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டிருக்க வேண்டும்.
அரசு நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம் இல்லாததும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளினாலும் பின்னடைவு ஏற்பட்டிருக்க வேண்டும். சட்டப் பிரிவு 16 (1) குறிப்பிடும் பின்னடைவு இதுதான். அது மொத்த வகுப்பாருக்கும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே அன்றி, ஒருசில தனிப்பட்ட நபர்களுக்கு அல்ல. இப்படிப் பார்க்கும்போது, சட்டப் பிரிவு 16 (4) என்பது அரசியமைப்புச் சட்டத்தில் இருந்து தானாகவே நீக்கப்பட்டுவிடும். பொருளாதாரப் பின்னடைவு என்பது சமூகப் பின்னடைவினாலேயே ஏற்படுவது என்பதை சட்டப் பிரிவு 16 (4) குறிப்பிடுகிறது.
அரசாங்கத்தின் புதிய சட்டத் திருத்தத்தினால், இட ஒதுக்கீடு விஷயத்தில் உச்ச நீதிமன்றம் வகுத்த 50 சதவிகித உச்சவரம்பு பாதிக்கப்படும். இந்திரா சாஹ்னி தலைமையிலான அமர்வில் இடம்பெற்ற நீதிபதி தாம்மென், “இட ஒதுக்கீட்டினால் கிடைக்கக்கூடிய பலன்களை உயர்த்துவதோ, அதன் வரையறையை விரிவுபடுத்துவதோ, எதிர்மறையான பாகுப்பாட்டை அதிகப்படுத்துவதுடன், வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடும்” என்று தெரிவித்தார்.
10% பாப்பானுங்களுக்கு மட்டும்தான்னு  எப்பபுரிய போகுதோ

அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் நவம்பர் 30, 1948 அன்று உரையாற்றிய பி.ஆர். அம்பேத்கர், “சிறுபான்மை இடங்களுக்கு” இட ஒதுக்கீடு வழங்குவதில்தான் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் என்றும், அதுவும், “அரசு நிர்வாகத்தில் அதுநாள்வரை பிரதிநிதித்துவம் பெறாத பிற்படுத்தப்பட்டவர்களுக்கு” வழங்கப்படவேண்டும் என்றும் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

சட்டப் பிரிவு 46 குறிப்பிடும் நலிந்த பிரிவினர் என்பவர்கள் ஒரு பேரினம் என்றால், அதில் சட்டப்பிரிவு 16 (4) தெரிவிக்கும் பிற்படுத்தப்பட்டோர் என்பவர்கள் ஒரு சிற்றினம். அதனால், அனைத்து நலிந்த பிரிவினரும் அல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள் மட்டும்தான் இட ஒதுக்கீடு பெறத் தகுதிவாய்ந்தவர்கள். சாதியும் வகுப்பும் ஒன்றல்ல.
வகுப்பு என்பது சாதிக்கு முரணானதும் அல்ல, சாதி என்பது வகுப்பையும் உள்ளடக்கியதுதான். சட்டப் பிரிவு 15 இல், உட்பிரிவு 4 சேர்க்கப்பட்ட முதல் சட்டத் திருத்த சமயத்தில் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் பேசும்போது, “பிற்படுத்தப்பட்ட வகுப்பார் என்போர், சாதிகளின் தொகுப்புதானே அன்றி, வேறில்லை” என்று தெரிவித்தார். இங்கே வகுப்பு என்பது சமூக வகுப்பு. அதனால், பொருளாதாரத்தில் பின்னடைவு என்பது, சமூகப் பின்னடைவினால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் செய்யப்படும் சட்ட திருத்தம் என்பது, அடிப்படைக் கட்டமைப்புக் கொள்கையில் செய்யப்படும் மாற்றமாகவே அமையும். அடிப்படைக் கட்டமைப்பு என்பதற்கு எந்த வரையறையும் இல்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றம்தான், அரசமைப்புச் சட்டம் எதை அடிப்படைக் கட்டமைப்பு என்று சொல்கிறது என்பதை முடிவுசெய்கிறார்கள்.
அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது அடிப்படைக் கட்டமைப்புதானா என்பதில் முரண்பாடுகள் நிலவுவதால், அவர்கள் கொண்டுவந்திருக்கும் சட்ட திருத்தம், நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று மோடி அரசாங்கம் நம்புகிறது. 1975 இந்திரா காந்தி வழக்கில், நீதிபதி கே.கே. மாத்யூ, அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக சட்டப் பிரிவு 14ஐ ஏற்றுக்கொள்ளவில்லை.
மாதம் 67,000சம்பளம் பின்தங்கியவராம்.

 ஏனெனில், சமத்துவம் என்பது பன்முகத்தன்மை கொண்ட ஒரு கருத்து, அதற்கு ஒரு குறிப்பிட்ட வரையறையை வழங்கமுடியாது என்றார்.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கினால், அது சமத்துவம் எனும் குறிக்கோளை மேலும் விரிவுபடுத்தும் என்று மத்திய அரசு வாதிடலாம்.
மேலும் சமத்துவம் எனும் கோட்பாடு, அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதிதான் என்பதோடு, அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை தெரிவிப்பது போன்று அனைவருக்கும் சமதகுதி, சம வாய்ப்பு என்பதும் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதிதான். இதனால், இட ஒதுக்கீட்டில், பொருளாதார வரையறையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வாய்ப்புண்டு.
எப்படி இருந்தாலும், இந்திரா சாஹ்னி அமர்வு வழங்கிய தீர்ப்பை, 11 பேர் கொண்ட பெரிய அமர்வுதான் தற்போது மாற்றமுடியும். அந்த முடிவு அடுத்த ஆறு மாதங்களில் கிடைக்க வாய்ப்பில்லை.

மோடி அரசாங்கத்தின் இந்தச் சட்டத் திருத்தம், சட்ட ரீதியாக ஏற்கத்தக்கதா என்பது இறுதியாக முடிவு ஆகும்வரை, இதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கவே வாய்ப்பு அதிகம்.

 இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது, பிற்படுத்தப்பட்ட நிலையை நிர்ணயம் செய்ய 11 வரையறைகளை முன்வைத்தார் இந்திரா சாஹ்னி. தற்போது, சமூகரீதியாகப் பின் தங்காமல், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடுச் சட்டம், அந்த 11 வரையறைகளை பூர்த்தி செய்கிறதா என்று பார்க்கவேண்டும்.
                                                                                           பைசான் முஸ்தபா, 
                                                                                                                 துணை வேந்தர்
                                                                                                                                 சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்வி நிறுவன (நல்சார்) 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரசு ஊழியர் வேலைநிறுத்தம்.
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தும், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பழைய ஊதியத்தை அமல்படுத்த வேண்டும், தொடக்கக் கல்வியை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளோடு இணைப்பதை தமிழக அரசு கைவிடவேண்டும். தமிழகத்தில் தொடக்கக் கல்வி சீரழிந்து வருகிறது.
எனவே, தொடக்கக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவை துறையிலிருந்து மாற்றம் செய்யப்பட வேண்டும்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

ஆனால், தமிழக அரசு எந்தவித அறிக்கையையும் தராமல் காலதாமதம் செய்கிறது.

எனவே, ஜனவரி 22ம் தேதி (இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மருத்துவ விடுப்பை தவிர வேறு எக்காரணம் கொண்டும் விடுமுறை வழங்கக்கூடாது என்று உயர் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று காலை 10.15க்குள்ளாக ஊழியர்களின் வருகைபதிவை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தமிழக அதிமுக அரசின்  கெடுபிடிக்குப்பயந்து சில  சங்கங்கள்   பங்கேற்க மாட்டோம் என்று பின்வாங்கியுள்ளன. இருப்பினும் அச்சங்கங்களில் சொற்பமான ஊழியர்களே இருப்பதால் பலமில்லாதவை.அரசுக்கு எப்பவுமே ஜால்றா போட்டு தங்கள் வேலைகளை நடத்திக்கொள்பவை.அதனால் அவையை கண்டுகொள்ளாமல் மற்ற உறுப்பினர்கள் சங்கம் போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

=====================================================

ன்று,
ஜனவரி-22.

கொலம்பியா கிராமபோன், வாஷிங்டனில் அமைக்கப்பட்டது(1889)
 உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் சேவைக்கு விடப்பட்டது(1952)
சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது(1957)
 ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது(1984)
  ஆர்க்குட் துவங்கப்பட்டது(2004)
=====================================================
 ஆர்எஸ்எஸ் கையில் ரபேல் ராணுவ ரகசியம்?
 பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து, ரூ. 59 ஆயிரம் ரபேல்போர் விமானங்களை கொள்முதல் செய்ததில், மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன.

ஆனால், ரபேல் ஒப்பந்தம் ராணுவரகசியம் என்பதால், அதுபற்றி வெளியில் விவாதிக்க முடியாது என்று மோடி அரசு கூறி வருகிறது. நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவிடம் கூட விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது என்று பிடிவாதம் காட்டி வருகிறது.

எனினும், ரபேல் ஊழல் குறித்து, ‘தி இந்து’ நாளிதழில், அதன் ஆசிரியர் என். ராம் விலாவாரியாக எழுதிய கட் டுரை, இப்பிரச்சனையில் மீண்டும் ஆழமான விவாதத்தை கிளப்பியது.

தேர்தல்நெருங்கும் நேரத்தில், பாஜக தலைவர்களை பதற்றத்திற்கு உள்ளாக்கியது.


இதையடுத்து, நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தி இந்து’ கட்டுரையை கடுமையாக மறுத்து உரையாற்றினார்.


என். ராம்கட்டுரைக்கு பதில் என்ற பெயரில் 2 பக்கஆவணம் ஒன்றும் செய்தியாளர்களிடம் வழங்கப்பட்டது.


பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ ஆவணமாக இல்லாமல், பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் பெயரில் அது வெளியிடப்பட்டு இருந்தது.


அமைச்சரிடம் இதுபற்றி கேட்டபோது, அமைச்சகத்தின் விளக்கம் பிஐபி இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டு இருக்கிறது என்று அவர் பதிலளித்தார்.


அதன்படி பிஐபி இணையதளத்தில் பார்த்தபோது, ரபேல் விவகாரம் தொடர்பான பாதுகாப்புத்துறையின் விளக்கமானது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.


 இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
ரபேலின் விலையை வெளியே சொன்னால் கூட தேசியபாதுகாப்புக்கு ஆபத்து என்று வாய்கிழிய பேசினார்கள் பாஜக பாதுகாப்பு அமைச்சர்,மற்றும் ஜால்ரா ஊடகங்கள்.

நாடாளுமன்றத்திற்கே தெரிவிக்கப்படாத பாதுகாப்பு ரகசியங்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைகளுக்கு எப்படி சென்றது.?
இதுதான் மோடி அரசின் தேசியபாதுகாப்பின் முன் எழுப்பப்பட்டுள்ள  கேள்வி. 

------------------------------------------------------------------
 
மோடி ஆசைப்பட்ட புதிய இந்தியா?
 
இந்தியாவின் 50 சதவிகித சொத்துக்கள், விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய வகையில், வெறும் ஒன்பது பேரிடம் குவிந்திருப்பதாக, ‘ஆக்ஸ்பாம்’ அமைப்பு அறிக்கை அளித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ள உலகப்பொருளாதார மாநாட்டையொட்டி, இந்த அறிக்கையை, சர்வதேச நலஅமைப்பான ‘ஆக்ஸ்பாம்’ வெளியிட்டுள்ளது. 
அறிக்கையில்கூறப் பட்டிருப்பதாவது:
“இந்தியாவில் 119 கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 18 புதிய கோடீஸ்வரர்களை இந்தியா உருவாக்கியுள்ளது. 
இவர்களின் சொத்து மதிப்பு ரூ.28 லட்சம் கோடியாகும்.அத்துடன், 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் இந்தியா 70புதிய கோடீஸ்வரர்களை புதிதாக உருவாக்கப் போகிறது.
இந்தியாவில் உள்ள 10 சதவிகித கோடீஸ்வரர்கள் நாட்டின் 77.4 சதவிகித சொத்துகளை வைத்துள்ளனர். 

அதிலும் குறிப்பாக ஒருசதவிகித கோடீஸ்வரர்கள் மட்டும்நாட்டின் 51.53 சதவிகிதச் சொத்துகளை வைத்துள்ளனர்.அடிமட்டத்தில் உள்ள 60 சதவிகித மக்களிடம் வெறும் 4.8 சதவிகித சொத்துகள் மட்டுமே உள்ளன.

 நாட்டில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறது ஏழைகள் கையில் கூட 2000 ரூபாய் புழங்குகிறது என்று அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால் நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. 13 கோடியே 60 லட்சம் மக்கள்தொடர்ந்து வறுமையிலும், ஏழ்மை நிலையிலும் இருந்து வருகின்றனர்.

பல கோடி ஏழைகள் உணவுக்கே கஷ்டப்படும் நிலையில்கோடீஸ்வரர்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆரோக்கியமான கல்வி, தரமான சுகாதார வசதிகள் ஆகியவற்றைப் பணக்காரர் கள் மட்டுமே உயர் தரத்தில் பெற்று வருகின்றனர்.

பணக்கார வீடுகளின் குழந்தைகள் முதல் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு உள்ளாகவே, ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் மூன்று மடங்கு அளவிற்கு இறந்துபோகின்றன.

மத்திய, மாநில அரசுகளின் மருத்துவம், பொதுச் சுகாதாரம், குடிநீர் ஆகியவற்றின் வருவாய் மற்றும் செலவுகள் ரூ. 2 லட்சத்து 8 ஆயிரத்து 166 கோடியாகும்.
இது முகேஷ் அம்பானியின் சொத்தான ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் கோடியைக் காட்டிலும் குறைவுதான்.

இந்தியாவில் உள்ள கோடீஸ் வரர்களில் ஒரு சதவிகிதம் பேரின்சொத்துகள் மீது 0.5 சதவிகிதம் வரி விதித்தாலே நாட்டு மக்களின் சுகாதாரத் திட்டங்களுக்கு கூடுதலாக 50 சதவிகிதம் நிதி கிடைக்கும்.
”இவ்வாறு ஆக்ஸ்பாம் கூறியுள்ளது.

மேலும், “இந்தியாவில் உள்ள ஒரு சதவிகித கோடீஸ்வரர்களுக்கும், மீதமுள்ள இந்திய மக்களுக்கும் இடையிலான வெறுப்பூட்டும் வகையிலான இடைவெளி அதிகரித்தால், நாட்டின் சமூக, ஜனநாயகக் கட்டமைப்பு முழுமையாக சிதைந்து விடும்” என்றும் ஆக்ஸ்பாம் எச்சரித்துள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

சீமான் அரசியல் பரிணாம வளர்ச்சி.
 1982- 1985 DMK 
1986- 1988ADMK 
1988 - 1991CONG 
1992 - 1996 கம்யூ 
1996 - 2004 தி.க 
2005 - 2007 தேமுதிக 
2007 - 2009MDMK ஆதரவு 
2009 - 2011ADMK ஆதரவு
 2012 - நாம் தமிழர்(பெரியார் வழி) 
2014 -பெரியார் வடுக வந்தேறி 
2015 - வீரத்தமிழர் 
2016 முப்பாட்டன் முருகன் வழி
2018 மீண்டும் பெரியார் புகழ் பாடல்.
                                                                                                                                       நன்றி:பரிமளம்.A
--------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?