பி டீம்

மக்களவை தேர்தல் தேதி குறித்த விவரங்களை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பாதுகாப்பு, முழுக்க முழுக்க நேர்மையாக நடத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த மக்களவை தேர்தல் 6 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தலுக்காக தேசிய மற்றும் மாநில கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் இத்தகைய தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர், நக்சல் பாதிக்கப்பட்ட சுமார் 10 மாநிலங்கள் உள்ளிட்ட இடங்களில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக இருக்கும்.
முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அதன்பின்னர் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த மக்களவை தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும், கணிப்பதற்கு மிக கடினமான தேர்தலாகவும் உள்ளது.
இந்த தேர்தலில் மாநில கட்சிகள் தங்கள் செல்வாக்கை காட்டமுயல்கிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
 இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமாஜ்வதி, பகுஜன் சமாஜ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியை ,தேசிய கட்சிகளை விட்டு
 தனியே குழப்பிக்கொண்டிருக்கின்றன.
இது மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் பாஜகவுக்கு ஆதரவாகவே இருக்கும் என்று தெரிகிறது.

காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகள் ,ஸ்டாலின் ,சந்திரபாபு நாயுடு அணிதிரண்டு வருவதை கண்டு பயந்த பாஜகவே தனது கூட்டணிகடசிகளை தனியே பிரிந்து வந்து காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமையாமல் தடுக்க மக்கள் நலக்கூட்டணி போன்று பி டீம் அமைக்க சதி செய்கிறது என்பதே பரவலான எண்ணமாக உள்ளது.
=====================================================
ன்று,
ஜனவரி-19.

நன்னம்பிக்கை முனையை பிரிட்டிஷ் அரசு கைப்பற்றியது(1806)

 கிழக்கிந்திய கம்பெனி, ஏமனின் ஏடென் நகரை கைப்பற்றியது(1839)

ஆங்கிலோ எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது(1899)


அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பம்  (1903)

=====================================================


வருகிறது. தூத்துக்குடி-சென்னை 8 வழிச் சாலை!
பாரத் மாலா திட்டத்தின் கீழ் 13,200 கோடி மதிப்பில் சென்னை-தூத்துக்குடி 8வழிச் சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

* சென்னையிலிருந்து விழுப்புரம் வரை 10 வழி சாலை திட்டமாகவும், விழுப்புரத்திலிருந்து தஞ்சாவூர் திருச்சி வரை 8 வழி சாலை திட்டமாகவும், தஞ்சாவூர், திருச்சியிலிருந்து தூத்துக்குடி வரை ஆறு வழி சாலை திட்டமாகவும் இதை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
 * இதன் மூலம் சென்னை-தூத்துக்குடி இடையிலான பயண தூரம் 100 கிலோமீட்டர் வரை குறையும் என கூறப்படுகிறது. 

* தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், புதிய பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, மத்திய சுற்றுச்சூழல் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

* 2022ஆம் ஆண்டுக்குள் பசுமை வழிச்சாலை திட்டங்களை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?