இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 18 ஜனவரி, 2019

இது மோடியின் ஊழலற்ற அரசு.

 மீண்டும் அலைக்கற்றை ஊழல்.
மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மோடி அரசு ஊழல்செய்துள்ளதாக காங்கிரஸ் திடீர்குற்றச்சாட்டை முன்வைத்துள் ளது.

ஏற்கெனவே ரபேல் விமானஊழலில் மோடி அரசு சிக்கியுள்ள நிலையில், புதிதாகஅலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலிலும் மாட்டிக்கொண்டுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறுகிய தொலைவுக்குமொபைல் சேவைகளை வழங்குவதற்காக அவர்களுக்கு மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஒதுக்கீட்டில்தான் தற்போது ஊழல் நடந்துள்ளதாகவும், இதனால், மத்திய அரசின் கருவூலத்துக்கு ரூ. 69 ஆயிரத்து 381கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ்குற்றச்சாட்டை முன்வைத்துள் ளது.

தொலைத்தொடர்புத் துறை குறித்த தலைமை கணக்காயரின் (சிஏஜி) அறிக்கை ஜனவரி 8-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள விவரங்களைச் சுட்டிக்காட்டி மோடி அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதற்கு ஏல முறையை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியுள்ளது.

ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளி ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் குறிப்பிட்ட மோடிக்கு நட்பான நிறுவனங்களுக்கு பாஜக அரசு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

எந்த நிறுவனத்துக்கு மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்களையும், இழப்பீட்டுத் தொகையையும் தலைமை கணக்காயர் குறிப்பிடவில்லை.
 எனினும், ரூ. 69 ஆயிரத்து 381 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான பவன் கேரா தெரிவித்துள்ளார்.
பவன்கேரா

 இந்த இழப்பீடு மதிப்பீடுகள் உத்தேசமானவையா அல்லது உண்மையானவையா?
 என்று முன்னாள் தலைமை கணக்காயர் வினோத் ராய் தெரிவிக்க வேண்டும் என்றும் பவன் கேரா கேள்வியெழுப்பியுள்ளார்.

“குழுவின் பரிந்துரைகளை மீறும் விதமாக, 2ஜி உரிமம் வழங்கப்படுவதற்குக் கடைப் பிடிக்கப்பட்ட முறையைப் போலவே மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் வழங்கப் பட்டுள்ளது” என்று சிஏஜி-யும்தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நலனுக்காக, அரசுக்கு வந்துசேர வேண்டிய பணத்தை மோடி அரசு தவிர்த்து விட்டதாகவும் பவன்கேரா கூறியுள்ளார்.

“பிரதமர் மோடி அண்மையில் தனது ஆட்சிக்கு எதிராக எந்தஊழல் குற்றச்சாட்டுகளும் கிடையாது என்று கூறினார்.
ஆனால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பாஜக ஆட்சியில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

2012-ஆம் ஆண்டில் 2ஜி விவகாரத்தால் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சந்தை நிலவரத்துக்கு ஏற்பஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
 இதை மீறும் வகையில் மோடிஅரசாங்கம் முதலில் வருபவருக்கு ஒதுக்கீடு என்ற அடிப்படையிலேயே மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்துள் ளது.

 இதனால் அரசுக்கு கிட்டத்தட்ட ரூ.70,000 கோடிகள்  இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று பவன் கேரா தெரிவித்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மோடியிடம் தவறை ஒப்புக் கொள்ள சொல்லுங்கள்!
2014 மக்களவைத் தேர்தலின்போது, பாஜக தனிப்பெரும்பான் மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்தியதே இதற்குக் காரணம் என்று பாஜக-வினர் கூறி வந்தனர்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சி மீதுமக்களுக்கு இருந்த அதிருப்திதான் பாஜக வெற்றிக்குக் காரணம் என்றகூற்றை அவர்கள் ஏற்பதாக இல்லை.
ஆனால், அடுத்தடுத்து நடைபெற்ற மக்களவை இடைத்தேர் தல்களும், கடைசியாக நடை பெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலும் மோடி அலை கரைகடந்து விட்டதை தற்போது உறுதி செய்திருக்கின்றன.

இதன்மூலம், 2019 மக்களவைத்தேர்தலுக்கு மோடி பயன்படமாட்டார் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பும் முடிவுக்கு வந்திருக்கிறது. அதனாலேயே மோடிக்குப் பதில், நிதின் கட்காரியை முன்னிறுத்த முடிவுசெய்து, அதற்கான களத்தை தயார் செய்து வருகிறது.
ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வெளிப் படையாகவே இதனை பேசத் துவங்கி விட்டனர்.

இந்நிலையில், ‘ஹப்போஸ்ட்’ செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவரும், 2014-இன் போதே,கட்காரியைத்தான் பிரதமராக்க விரும்பினோம் என்று கூறியிருக்கிறார்.
அதாவது, தனிப்பெரும் பான்மை கிடைத்தால் மோடி பிரதமர்; மைனாரிட்டி ஆட்சி என்றால்நிதின் கட்காரி என்று முடிவுகட்டி வைத்திருந்தோம் என்று தெரிவித் துள்ளார்.
நிதின் கட்காரி
 இப்போது மோடி பிம்பம் உடைந்துள்ள சூழலில் வாய்ப்பு கட்காரிக்குத்தான் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 நிதின் கட்காரியா, மோடியா?
 என்றால் கட்காரியைத்தான் ஆர்எஸ்எஸ் முன்னிறுத்தும் என்று கூறியுள்ள, அந்த ஆர்எஸ்எஸ் தலைவர், முன்பு, மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில், பிரமோத் மகாஜன் எதிர்ப்பையும் மீறி, கட்காரி சேர்க்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

5 மாநிலத் தேர்தல் தோல்விக்கு,மோடி - அமித்ஷாவே பொறுப் பேற்க வேண்டும் என்று கட்காரி தொடர்ச்சியாக கலகத்தில் ஈடுபட்டு வருவது கூட ஆர்எஸ்எஸ் கட்டளைப்படிதான் என்று குறிப் பிட்டுள்ளார்.

“உங்களை எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிடுவோம்; எங்களுக்கு புதிய முகமூடி தேவைப்படுகிறது” என்று, நேரடியாகவே மோடி- அமித்ஷாவிடம் ஆர்எஸ்எஸ் தெரிவித்து விட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆர்எஸ்எஸ் உயர்மட்டக்குழு கூட்டத்தையொட்டி, அமித்ஷாவை சென்னைக்கு வரவழைத்து, இதனை தெரிவித்ததாக கூறப் பட்டது.
இதையே ஹப்போஸ்ட் பேட்டியிலும் ஆர்எஸ்எஸ் தலைவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இதனிடையே, அதிகாரத்தை அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்றுமுடிவு செய்துள்ள மோடியும் அமித்ஷாவும், நிதின் கட்காரியிடமே அடைக்கலம் புகுவது என்ற கட்டத்திற்கு தற்போது வந்திருப்பதாக ‘ஹப் போஸ்ட்’ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு, நிதின் கட்காரியிடம் தூதுவர்களை அனுப்பி மோடி - அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கட்காரி பிடிகொடுக்கவில்லை என்றும்‘ஹப்போஸ்ட்’ தெரிவித்துள் ளது.
சமாதானப் பேச்சுவார்த்தையின்போது, நரேந்திர மோடி தனதுதவறுகளை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கட்காரிநிபந்தனை விதித்ததாகவும் ஹப் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

====================================================

ன்று,
ஜனவரி-18.
தாய்லாந்து ராணுவ தினம்
லீமா நகரம் அமைக்கப்பட்டது(1535)
ஹாக்கி போட்டிகள் விதிகள் இங்கிலாந்தில் முடிவாக்கப்பட்டன(1886)
எக்ஸ்ரே இயந்திரம் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது(1896)

====================================================
ஒடிசா  சோகம் 

ஜானகி சிங்கானியா, 45 வயது தாய்.
வீட்டிற்கு குடிநீர் எடுக்க போனபோது விழுந்து மரணித்தார்.

கீழ் சாதி என சொல்லி
கர்பாபஹால் கிராமமே ஒதுங்கிக்கொள்ள,
பத்தாண்டுகளுக்கு முன்னரே தந்தையும் இழந்த
17 வயது மகன் சரோஜ்
சுமார் 5 கிமீ. தனது சைக்கிளில் தாயின் உடலை சுமந்து சென்று காட்டின் அருகில் புதைத்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ராஜஸ்தான் கோபம் அல்லது காமம்.?
ராஜஸ்தான் மாநிலத்தின் அனுமான்கார்க் மாவட்டத்தின் ஷானிபாரி கிராமத்தைச் சேர்ந்த மனோகர் லாலும், விகாஸ் சவுத்ரியும், தங்கள் ஒன்றியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தகவல்கள் தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தனர்.

அவர்களது கேள்விக்கு பதிலாக மாவட்டஆடசியார் அலுவலகத்தில் இருந்து ஒரு பதிவுத் தபால் உறை அனுப்பி வைக்கப்பட்டது.
அதை ஆவலுடன் பிரித்துப்பார்த்த மனோகர் லாலும், விகாஸ் சவுத்ரியும் பதிளைப்பார்த்து அதிர்ந்து போய்விட்டனர்.
அதில்  பதிலாக ஆணுறை மட்டுமே அதுவும் உபயோகிக்கப்பட்ட ஆணுறை மட்டும் இருந்தது.
இந்தப் பதிலால் நொந்துபோன  அவர்கள் இருவரும் மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்த புகாரை அடுத்து, அனுமான்கார்க் மாவட்ட ஆட்சியர் பத்ரா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீங்களும் தகவல் உரிமை சட்டத்தில் கேள்விகேட்பதற்கு முன் இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் மூக்கறுபட்ட பாஜக

கடந்தாண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தகட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பாஜககுறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் முயற்சியைதோற்கடிக்கவும் மதச்சார்பற்ற அரசை ஏற்படுத்தவும் காங்கிரஸ், மீண்டும் ஆட்சி அமைக்காமல் துணிச்சலான முடிவை எடுத்தது.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த எச்.டி.குமாரசாமி தலைமையில் கூட்டணி அரசு அமைக்க ஆதரவு அளித்தது.
இதனால் அதிர்ந்து போன பாஜக, தனதுஎடுபிடியான ஆளுநர் உதவியுடன் குறுக்குவழியில் ஆட்சியமைத்தது.

அதிகாரபோதையில் முதலமைச்சராக பதவிஏற்றுக்கொண்ட எடியூரப்பாவால் போதிய ஆதரவை பெறமுடியவில்லை.
எதிர்முகாமில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்க முடியவில்லை.
இதனால் பெரும்பான்மையை திரட்டமுடியாமல் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே அவையில் இருந்து ஓட்டம் பிடித்தார்.

இதனால் ஆளுநர் வேறு வழியின்றி மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணியைஆட்சிஅமைக்க அழைப்பு விடுக்கவேண்டியதாயிற்று.
முதலமைச்சராக எச்.டி.குமாரசாமி பதவியேற்றார்.
 துணைமுதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜி.பரமேஸ்வரா பதவியேற்றார். இருப்பினும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கிடையே ஏற்படும் சிறு, சிறுபிரச்சனைகளை தனக்கு சாதகமாக்க பாஜக பலமுறை முயற்சித்தது.
 ஆனால் பலிக்கவில்லை.

 கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்தஇரு சுயேச்சைகளை விலைபேசி தன்பக்கம்இழுத்தது.
பின்னர் 12 காங்கிரஸ் சட்டமன்றஉறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும்அவர்களுடைய ஆதரவோடு விரைவில் கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கட்டிலில் அமரும்என்றும் எடியூரப்பா தனது கட்சி சட்டமன்றஉறுப்பினர்களை குஷிபடுத்திவந்தார்.

உண்மை நிலை என்னவென்றால் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதும் ஆட்சியை பிடிக்கமுடியவில்லையே என்று அக் கட்சிக்குள்தான் அதிருப்தி அதிகரித்துள்ளது.
இதனால்தான் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்கட்சி தாவாமல் இருக்க ஹரியானா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டனர்.

காங்கிரஸ் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி வரை விலை பேசப்பட்டது.
இதனை அவர்களே முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
 பாஜகவின் ஆசை வார்த்தைகளுக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் விலைபோகாத காரணத்தால் மதச்சார்பற்ற அரசை கவிழ்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதனால் கர்நாடகாவில் பாஜக மீண்டும் மூக்கறுபட்டு அதன் அதிகாரப்பசி அம்பலமாகியுள்ளது.
இருப்பினும் அதன்சதிவேலைகள் நிற்கப்போவதில்லை.

எனவே கர்நாடக வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியும்அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்.

கருத்து வேறுபாடுகளை களைந்து மதச்சார்பற்ற அரசு நீடிக்க உறுதியாக இருக்கவேண்டும்.
பாஜகவின் தந்திரத்துக்கு இரையாகாமல் இருக்கும் பொறுப்பு இருகட்சிகளுக்கும் இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------