நிற்பதுவே,பறப்பதுவே..!
‘கவுரவர்கள் 100 பேருமே
சோதனைக்குழாய் குழந்தைகள்’
ஆர்.எஸ்.எஸ்.பின்னணி கொண்டவர்களை இந்தியா முழுக்க மோடி-அமித்ஷா க்கள் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களாக அமர்த்திய போதே கல்வித்தரம் எந்த அளவுக்கு கலிகாலத்தில் இருந்து திரேதாயுகத்துக்குப்போகும் என்பது பலரின் எதிர்ப்புக்கு காரணமாக ருந்ததோ,அது தற்போது செயலாக்கி வருகிறது.
மகாபாரத காலத்திலேயே டெஸ்ட் டியூப் தொழில்நுட்பம் இருந்தது என்றும், கவுரவர்கள் 100 பேரும் அந்த சோதனைக் குழாய் கருத்தரிப்பில் பிறந்தவர்கள்தான் என்றும் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி. நாகேஸ்வர் ராவ் கூறி ஒட்டுமொத்த உலக அறிவியலார்கள்,கல்வியாளர்களை மட்டுமல்ல மக்களையும் தெறிக்க விட்டுள்ளார்..
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெறும் 106-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில்தான் இந்த ஆராய்ச்சிகளை அள்ளி வீசியுள்ளார்.
“சார்லஸ் டார்வின் நிறுவிய பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை, மகா விஷ்ணுவின் தசாவதாரங்கள் முன்னதாகவே நிரூபித்து விட்டன.
விஷ்ணு பயன்படுத்திய சுதர்சன சக்கரம், இலக்கைத் துரத்தி அழித்துவிட்டு மீண்டும் அவரிடமே வந்து சேரும். அந்த வகையில் இன்றைய ஏவுகணைகள் நிலை நிறுத்தத் தொழில்நுட்பத்திற்கு சுதர்சன சக்கரம்தான் முன்னோடி” என்றும் கதைகளை அவிழ்த்து விட்டுள்ளார்.
மேலும், “இராவணனிடம் ஒரேயொரு புஷ்பக விமானம் மட்டும் இருக்கவில்லை; வெவ்வேறு அளவு மற்றும் திறன் கொண்ட 24 வகையான விமானங்கள் ராவணன் வசம் இருந்தன; அவற்றை இயக்குவதற்காக இலங்கையில் ஏராளமான விமான நிலையங்கள் இருந்தன” என்றும் ஆச்சரியமூட்டியுள்ளார்.
“கவுரவர்களின் தாயான காந்தாரி, எப்படி 100 குழந்தைகளைப் பெற்றிருக்க முடியும்? என்று எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
யாரும் நம்புவது இல்லை.
மனிதனால் இது சாத்தியமா?
என்றுதான் கேட்கிறார்கள்.
ஆனால், இது சாத்தியம்தான் என்பதை, இன்றைய சோதனைக் குழாய் தொழில்நுட்பம் நிரூபித்திருக்கிறது.
மகாபாரதத்தில், கருவுற்ற 100 முட்டைகள், 100
மண்பாண்டங்களில் போடப்படுகின்றன என்றால், அந்த மண்பாண்டங்கள் சோதனைக்
குழாய்கள் அல்லாமல் வேறு என்ன?
ஸ்டெம்செல் ஆராய்ச்சியும், 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த மண்ணில் நடந்திருக்கிறது.
இன்று நாம் ஸ்டெம்செல் ஆய்வு குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், அந்தக் காலத்திலேயே ஸ்டெம் செல் மற்றும் டெஸ்ட் டியூப் தொழில்நுட்பத்தில் பிறந்தவர்கள்தான் கவுரவர்கள்.
1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் இது நிரூபிக்கப்பட்டு உள்ளது” என்றும் நாகேஸ்வர் ராவ் தனது சங்கி புராண கதைகளை வரிசையாக அடுக்கியுள்ளார்.
24 வகை விமானங்களைக்கொண்ட ராவணன் இலங்கைக்கு பாலம்கட்டிக்கொண்டிருக்கும்போதே ராமன் படையினரை அழித்திருக்கலாமே .
தசாவதாரத்தில் பன்றியும் ஓர் அவதாரமாக விஷ்ணு எடுத்துள்ளார்.
பசுவைக்கும்பிடும் சங்கிகள் பன்றியைக் கண்டகொள்வதில்லையே.வனங்குவதில்லையே ஏன்?
காந்தாரி சோதனைக்குழாய் குழந்தைகளைப்பெற்றாள் என்றால்.
குந்தி சூரியன் முதலான கிரகங்கள் மூலம் குழந்தைகள் பெற்றாலே அது எல்லாம் என்னவகையான தொழில் நுட்பங்கள்?
தெரிந்தால் இன்று குழந்தை இல்லாதவர்கள் அரசமரத்தை சுற்றுவதம்,போலி சாமியார்களிடம் ஏமாந்த போவதும் இல்லாமல்போய்விடும்.
தயவு செய்து அதை புராண ஆய்வின் மூலம் கண்டுபிடித்து நாகேஸ்வர் ராவ் கூறினால் நல்லது.
புராண தொழில் நுட்பம் மூலம் விமானம் தயாரித்திருந்தால் இப்படி "ரபேல் 'விமான விவகாரத்தில் முழிக்க வேண்டியது வந்திருக்காதே.
தை மாதம்தான் தமிழ்ப்புத்தாண்டின் துவக்கம் என்பதற்கு ஆதாரமாக கிடைத்துள்ள கல்வெட்டு இது.
ஆண்டின் முதல்மாதமாக தை குறிப்பிட்டப்பட்டள்ளது இக்கல்வெட்டில்.
2006ல் கலைஞர்ஆட்சியில் தமிழக அரசு தை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டாக
அறிவித்தது.
இந்த அறிவிப்பிற்கு பலத்த வரவேற்பும்,பார்ப்பன ஆதரவாளர்களின் எதிர்ப்பும் இருந்தது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த அறிவிப்பை நீக்கி மீண்டும் சித்திரை மாதத்தின் முதல் தேதியே தமிழ் புத்தாண்டு பிறப்பாக அறிவிக்கப்பட்டது.
தற்போது கிடைத்த 300 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கல்வெட்டு தை மாதம்தான் தமிழ் மாதத்தின் தொடக்க மாதமாக இருந்ததை நிரூபித்துள்ளது.
300 ஆண்டுகளுக்கு முன்பு தை மாதத்தை தமிழ் வருடத்தின் முதல் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக இந்த பழங்கால கல்வெட்டு உள்ளது.
இக்கல்வெட்டு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் கிடைத்துள்ளது.இதற்கு காலச்சக்கரம் என பெயர். இத்தகவலை கீழக்கரை வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு தெரிவித்துள்ளார் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
பறந்தது பிரதமர் மோடி மட்டுமல்ல.
இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளும்தான் .
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய அமைச்சர் வி.கே.சிங் அளித்த பதில் இது.
ஜூன் 2014 லிருந்து நான்கரை ஆண்டுகளில் 92 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். நாடுகளின் எண்ணிக்கை என்று கணக்கு பார்த்தால் 55 ஆகும்.
என்னஅர்த்தம்?
ஒரே நாட்டிற்கு பலமுறை பறந்திருக்கிறார்.
அமைச்சரே அந்த தகவலையும் தந்துள்ளார்.
அமெரிக்காவுக்கு ஐந்து முறை,ஜெர்மனிக்கு நான்கு முறை, பிரான்சுக்கும் ஜப்பானுக்கும் மூன்று முறைகள், இன்னும்பல நாடுகளுக்கு இரண்டு முறைகள் என்று அவரது பயணம் அமைந்திருக்கிறது.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்த 10 ஆண்டுகளில் அவர் செய்த அயல்நாடு பயணங்களை நான்கரை ஆண்டுகளில் நரேந்திர மோடி விஞ்சிவிட்டார்.
வெளிநாடுவாழ் இந்தியர்களை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இந்தியா முதன் முறையாக“வெளி நாடு வாழ் பிரதமரை” பார்க்கிறது என ஒருமுறை சீத்தாராம் யெச்சூரி கூறியதுபொருத்தமானதாகும்.
அமைச்சர் இந்த தகவலோடு மட்டும்நிற்கவில்லை.
பிரதமரின் வெளிநாடு பயணங்களால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக ஈர்க்கப்பட்டுள்ளன என்ற கருத்தையும் சேர்த்துப் பதிவு செய்துள்ளார்.
எல்லோரும் அந்நிய முதலீடுகள் என்றால் உள்ளே வருவதை (FDI) மட்டுமே நினைக்கிறார்கள்.
ஆனால் இந்திய மண்ணை விட்டு வெளியேறுகிற முதலீடுகளைப் (FDI-OUTGO) பற்றி நினைப்பதில்லை.
அமைச்சரும் அதுகுறித்து பேசுவதில்லை.
இதோ “லைவ் மின்ட்” இணைய இதழை(ஜூன் 8, 2018) செய்தியைப் பாருங்கள்.
“இந்தியாவிலிருந்து வெளியேறுகிற அயல் முதலீடுகள் 2017ல் இரட்டிப்பாகியுள்ளது.
அதாவது இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பில் 87010 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன.
இப்படி 200 சதவீதம் வெளியேறிய முதலீடுகள் அதிகரித்துள்ள போது அந்நிய முதலீடுவருகை 9 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
இது உலக முதலீட்டு அறிக்கை - 2018 தந்துள்ள தகவல் ஆகும். இது ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஆகும்.
”இதற்கு அடுத்த அறிக்கை 2019ல் வரும் போதுதான் 2018 குறித்த முழுமையான சித்திரம் கிடைக்கும். இருக்கிற முதலீடுகளையே இந்தியாவில் தக்க வைக்க முடியாதவர்களின் வாய்ச் சொல் வீரமாகவே “மேக் இன் இந்தியா” இருக்கிறது.
இன்னும் கூட இதை ஆழமாக ஆராய்ச்சி செய்யலாம்.
40 பில்லியன் டாலர்2017ல் இந்தியாவுக்குள் வந்திருப்பதாக சொல்கிறார்கள்.
இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 2,80,000 கோடிகள்.
இப்படி வந்திருப்பதெல்லாம் இங்கே வந்துதொழில் துவங்குகிற, வேலை வாய்ப்புகளை உருவாக்குகிற பசும் வயல் முதலீடுகள் (GREEN FIELD INVEST MENTS)
அல்ல என்பதே உண்மை.இது குறித்தும்அமைச்சர் பேசவில்லை.
2017ல் உள்ளே வந்துள்ள அந்நிய முதலீடுகளில் எஸ்ஸார் நிறுவனம், ப்ளிப் கார்ட், பேடி.எம் நிறுவனத்தை வெளிநாட்டு நிறுவனங்கள் கைப்பற்றியிருப்பதும் இதற்குள் அடங்கும்.
ரஷ்யாவை சேர்ந்தரோஸ்னேப்டிகாஸ் நிறுனத்திற்கு சொந்தமான சிங்கப்பூர் பெட்ரோல் காம்ப்ளக்ஸ் பிரைவேட் லிமிட்டெட் இங்குள்ள எஸ்ஸார்ஆயில் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை 13 பில்லியன் டாலர்களுக்கு (இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பில் 91000 கோடிகள்) வாங்கிக் கைப்பற்றியுள்ளது.
அதுபோல அமெரிக்காவின் இபே (ந bடில), மைக்ரோ சாப்ட், சீனாவின் டென்சென்ட் நிறுவனம் ஆகியன சேர்ந்து1.4 பில்லியன் டாலருக்கு (இந்திய ரூபாய்மதிப்பில் ரூ.9800 கோடிகள்) ப்ளிப் கார்ட்டில் முதலீடு செய்துள்ளன.
ஜப்பானின் சாப்ட் பேங்க் கார்ப்பரேசன், பேடிஎம்ஐ நடத்துகிற ஒன் 97 கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின்20 சதவீதம் பங்குகளை ரூ.9800 கோடிகளுக்கு வாங்கியுள்ளது.
இம்முதலீடுகள் எல்லாம் பசும் வயல் முதலீடுகள் அல்ல. மேலே குறிப்பிட்ட முதலீடுகள் வருவதால் எஸ்ஸார் ஆயிலிலோ, ப்ளிப் கார்ட்டிலிலோ, பேடிஎம் லிலோவேலை வாய்ப்பை அதிகரிக்காது.
இருக்கிற நிறுவனத்தைக் கைப்பற்றுவதே நடைபெறுகிறது.
இப்படிப்பட்ட ஏகபோகங்கள் உருவாவது மற்ற நிறுவனங்களை அழித்து வேலைவாய்ப்புகளை பறிப்பதற்குவேண்டுமானால் வழி வகுக்கலாம்.
2018ல் வால்மார்ட் நிறுவனம், ப்ளிப் கார்ட்டை கையகப்படுத்திவிட்டது.
அதுகுறித்து அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு என்ன சொல்கிறது பாருங்கள்?
“இது சமதளமற்ற விளையாட்டாக மாறும்.
சில்லரை நிறுவனங்களைப் பாதிக்கும்.
ஊக முதலீட்டாளர்களுக்கு வேண்டுமானால் பயனளிக்கலாம். தேசத்திற்கு அல்ல. "
இது இடதுசாரிகளின் குரலோ, தொழிற்சங்கங்களின் குரலோஅல்ல, இந்திய சிறு தொழிலதிபர்களின் வர்த்தகர்களின் குரல்.
இவர்கள் தான்கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய துறைகளாகும்.
எனவே அந்நிய முதலீடுகள் பசும் வயல்முதலீடுகளாக வராவிட்டால் புதிய முதலீடுகளை உருவாக்காது என்பது மட்டுமின்றி இருக்கிற வேலைவாய்ப்புகளையும் பறித்து விடும் என்பதே உண்மை.
மேலும் இந்திய முதலீடுகள் வெளிநாடுகளுக்குப் பறப்பதைப் பார்த்தோம்.
அதுஇரண்டு மடங்காக 2017ல் உயர்ந்துள்ளதையும் கண்டோம்.
இதன்பொருள் என்ன?
இங்கு உருவாக வேண்டிய வேலைகளும் வெளிநாடுகளுக்கு பறக்கிறது என்று அர்த்தம்.
பிரதமர் மோடி க்கு !
உங்கள் விமானம் 93 முறை உலகம்சுற்றி வந்திருக்கலாம்.
ஆனால் வேலைவாய்ப்புகள் இந்தியாவுக்கு வரவில்லை.
இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளும் உங்களோடு சேர்ந்து வெளிநாடுகளுக்கே பறந்து விட்டன.
நன்றி:தீக்கதிர் பொருளியல் அரங்கம்- க.சுவாமிநாதன்.
====================================================
இன்று,
ஜனவரி--06.
ஈராக் ராணுவம் உருவாக்கப்பட்டது(1921)
மெக்சிகோ, அமெரிக்காவின் 47வது மாநிலமானது(1912)
மின் தந்தியை வெற்றிகரமாக சாமுவேல் மோர்ஸ் செயல்படுத்தினார் (1838)
கலாஷேத்திரா, சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது(1936)
====================================================
தினமலருக்கு ஏன் இந்த திரிப்பு வேலை?
உச்சநீதிமன்ற
தீர்ப்பின்படி சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரண்டு பெண்கள் வழிபாடு செய்து
திரும்பியுள்ளது தினமலர் ஏட்டிற்கு ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமாவாசை நேரம் என்பதால் முழு சந்திரமுகியாகவே மாறிவிட்டது அந்த ஏடு.
அதிலும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று திரும்பியவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்கள் என்பதால் தினமலர் ரத்தம் கக்கி மயக்கம் போடும் அளவுக்குவெறிக் கூச்சல் போட்டு வருகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சமூக நீதி,சமநீதி, சமத்துவ வழிபாட்டு உரிமை உறுதிப்படுத்தப்பட்டதை பெரும்பாலான தமிழ் பத்திரிகைகளும், ஊடகங்களும் ரசிக்கவில்லை.
தி இந்து தமிழ் ஏடுபாஜகவின் கேரள மாநில தொலைக்காட்சி விழிப்போடு இல்லாததால்தான் பெண் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று திரும்பியதாக தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டது.
தலையங்கமே எழுதி பழக்கமில்லாத தினத்தந்தி ஏடு பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுபொதுவாக பம்மாத்து செய்தது.
தந்திதொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டேவின் வளர்ப்பான ஹரி, தோழர் பாலபாரதியுடனான நேர்காணலின் போது, சபரிமலை ஐயப்பனை வழிபட செல்பவர்கள்அங்குள்ள வாபர் சாமியையும் வழிபடுகிறார்கள்.
இது மத நல்லிணக்கத்தின் வெளிப்பாடு என்று கூறிய போது, வாபர்மசூதியிலும் பெண்களை அனுமதிப்பீர்களா என்று குறுக்கு கேள்வி கேட்டார்.
ஐயப்பனை வழிபட அனுமதி என்பது அனைத்திற்கும் சேர்த்துதான் என்று அவர்தெளிவாக பதில் சொன்ன நிலையில், வாபர் மசூதியிலும் பெண்களை அழைத்துச் செல்வீர்களா என்று கேட்டார்.
இது பிரச்சனையை திசை திருப்பும் செயல் என்று பாலபாரதி சாடினார்.
இதில் மூக்குடைபட்டது ஹரிதான். ஆனால் ஐயப்பன் கோவில் வழிபாட்டால் மிகவும்ஆத்திரமடைந்துள்ள பாஜக தலைவர் எச்.ராஜா, ‘சபாஷ் ஹரி’ என்று பாராட்டுப்பத்திரம் வாசித்தார்.
தமிழ் பத்திரிகைகளிலேயே தினம் விஷம் கக்கக் கூடிய ஏடான தினமலர் தன்னுடைய பத்திரிகையை காவிக் கலரில் அச்சடிக்காதது ஒன்றுதான் குறை.மற்றபடி பாஜகவின் பாதர விந்தங்களை பணிந்து பாடி, மோடியின் திருநாமத்தை அன்றாடம் அலுக்காமல் உச்சரிக்கும் ஏடு அது.
தன்னுடைய முகப்பில் வைத்திருக்கும் தாமரை தமிழகத்தில் நாளுக்கு நாள் கருகிக் கொண்டே போகிறதே என்கிறஆத்திரத்தில் துடிக்கிற ஏடு அது.
ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைந்து திரும்பியதை ‘பினராயி பிடிவாதம் வென்றது - இந்து ஐதீகம் தகர்ந்தது’என்று எட்டு கால தலைப்பு செய்தியாக்கியது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த கொடும் செய்தியை ‘தகர்ந்தனமசூதியின் டூம்கள்-ராம பக்தர்கள் ஆவேசம்’ என்று தலைப்பிட்ட ஏடான தினமலரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
பெண்களையும், உழைக்கும் மக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் நாள்தோறும் இழிபடுத்தும் ஏடு அது.
உண்மையின் உரைகல் என்று கொஞ்சகாலம் தன்னை போட்டுக் கொண்டது அந்த ஏடு.
உண்மையை தரையில் போட்டுதேய்க்கும் தனக்கு இந்த சொற்பிரயோகம் பொருந்தாது என்று கருதியதால் இப்போது எதுவும் இல்லாமல் மொட்டையாகவே வருகிறது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்த அந்த ஏடு, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டதை, போராடியவர்களுக்கு மூக்கறுப்பு என்று தலைப்பிட்டு தனது கழுத்தறுப்பு வேலையை கச்சிதமாக செய்தது.
பினராயி விஜயன் அரசு அனைத்துசாதியினரையும் அர்ச்சகராக்கிய போதும், ஆகமம், ஐதீகம் என்று சரடுவிட்டு பார்த்தது. அது எடுபடவில்லை.
இப்போது ஐயப்பன் கோவில் வழிபாட்டில்உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைக்கு வந்தும் தமிழகம் அமைதியாக இருக்கிறதே என்று ஆத்திரமடைந்தஅந்த ஏடு, வாலிலே தீயை வைத்துக் கொண்டு வைக்கோல் போர் தேடுகிறது.
ஒவ்வொரு தாலுகா பதிப்பிலும், ‘இந்துக்களை புண்படுத்திய மார்க்சிஸ்ட் அணிக்கு ஓட்டு இல்லை’ என்றுசிலரை, குறிப்பாக பெண்களை பேட்டி எடுத்து போட்டிருக்கிறது.
இவர்களுக்குபக்தர்கள் என்று பெயர் சூட்டியிருக்கிறது அந்த ஏடு.
இவர்களில் பெரும்பாலானோர் பாஜக பரிவாரத்தை சேர்ந்தவர்கள்.அல்லது தினமலரை தொடர்ந்து படித்து அதனால் பாதிக்கப்பட்டவர்கள். அனைத்துப் பதிப்புகளிலும் ஒரேமாதிரி தலைப்புதான் போடப்பட்டிருக்கிறது. ஐயப்பன் கோவில் விஷயத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புசரியா?
தவறா? என்று கேட்டிருக்கலாம்.
வழக்குப் போட்ட பாஜக அதற்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தும் அதை எதிர்த்து தானே வன்முறைசெய்வது ஏன் என்று கேட்டிருக்கலாம்.
ஒரு நாட்டின் பிரதமரே உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக பேசுவது சரியா?
என்று கேட்டிருக்கலாம்.
நீதிமன்றத் தீர்ப்பு அமலானதால் கோவில் நடையை அடைத்து கோமியம் தெளித்துபிராமணர்களுக்கு போஜனம் அளித்துபரிகாரம் செய்தது சரியா? என்று கேட்டிருக்கலாம்.
ஆனால் அதையெல்லாம் விட்டு விட்டு மார்க்சிஸ்ட் கட்சி இருக்கும்அணிக்கு வாக்கு இல்லை என்று தன்னுடைய அரிப்பை, பேட்டி என்ற பெயரில் வெளியிடுவது ஏன்?
சபரிமலைப்பிரசனையை வைத்த வாக்குகளுக்காக பேயாட்டம் போடும் பாஜக அங்கு நடந்த உள்ள்டசித்தேர்தலில் சபரிமலை தொகுதியிலேயே 7 வாக்குகளை மட்டுமே பெற்று மதவெறி தூண்டலில் மண்ணைக் கவ்வியதை போட்டிருக்கலாம்.
இது ஆன்மீகபிரச்சனையா?
இல்லை அரசியல் பிரச்சனையா?
பெண்கள் சென்று வழிபட்டதில் ஐயப்பப் பக்தர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதனால்தான் கேரளத்திலும் தமிழகத்திலும் பாஜக கலவரம் செய்ய முயன்ற போது, பக்தர்களே அவர்களை விரட்டியடித்துள்ளனர்.
நடுநிலை நாளேடு என்று தன்னை தானே மெச்சிக்கொள்ளும் தினமலர், குறைந்தபட்சம் மாற்றுக் கருத்துள்ள ஒருவரையாவது பேட்டி எடுத்திருக்க வேண்டும் அல்லவா?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு படுகொலையில் 13 பேர்கள் கொலையானதை இந்த தினமலர் சென்னை,மதுரை,கோவை பதிப்புகள் தூத்துக்குடியில் சமூக விரோதிகள்,நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று செய்தியை வெளியிட்டதை தமிழக மக்கள் மறக்கவில்லை .
ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒரே மாதிரியாகவா சொல்வார்கள்?
எதற்கு நடுநிலை பத்திரிகை என்கிற பெயரில் இந்த திரிப்பு, திணிப்பு வேலை. பேசாமல் பாஜக-சங்கிகள் காட்சிப்பத்திரிகையாக அறிவித்திடலாமே.
பேசாமல் பாஜக அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்து அன்றாடம் வாசலில் தாமரைப் பூ கோலம் போட்டு ரசிக்கலாமே!
தமிழ்நாட்டில் போராட்டம் என்கிற பெயரில் அந்த ஏடு வெளியிட்டிருக்கும் படங்கள் பரிதாபமாக இருக்கின்றன.
நான்கு பேர் சேர்ந்து நடந்து போவதைக் கூட ஆவேசம், எதிர்ப்பு, கொதிப்பு என்றுதலைப்பிட்டு மகிழ்கிறது தினமலர்.
பெண் சமத்துவத்தை வலியுறுத்தி கேரளத்தில் ஐம்பது லட்சம் பெண்கள் சுவராக எழுந்து நின்ற போது, தன்னுடைய கண்களை சுவரெழுப்பி மூடி கொண்ட ஏடு, தற்போது இல்லாத ஒன்றை பொல்லாத வகையில், திரிக்க முயல்வது வெறித்தனத்தின் உச்சம்.
இப்படியே சென்று கொண்டிருந்தால் தமிழகத்தில் எப்படி தாமரை மலராதோ, அப்படியே தாமரை படம் போட்ட தினமலரும் மலராது.
- மதுரைசொக்கன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------