இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

செவ்வாய், 29 ஜனவரி, 2019

சும்மாவா போராட்டம் ?

ஊடகப் பொய்கள்?

ஜாக்டோ அமைப்பின் கீழ் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளும் இதர இயக்கங்களும் பலன் தராத நிலையில்தான் போராட்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
தேர்தலை கணக்கிட்டு குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் வழங்க முடிகிற அரசுக்கு ,அரசு ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த ஓய்வூதிய பங்களிப்பு 60000 கோடிகள் திருப்பிக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.அப்பணம் எங்கே இருக்கிறது என்று கூட சொல்ல முடியாதா?
சத்துணவு மையங்கள்,ஆரம்பப்பள்ளிகளை 3000 கணக்கில் முட்டுவது ஏன்?


உழைக்கும் மக்கள் வேறு வழியின்றி போராடும் பொழுது அதனை சிறுமைப்படுத்துவதும் சமூகத்தின் இதர பகுதியினருக்கு போராடுபவர்கள் மிகப்பெரிய எதிரிகள் போல சித்தரிப்பதும் சில விஷமிகளுக்கு வாடிக்கை. இப்பொழுதும் அது நடக்கிறது.

குறிப்பாக சமூக ஊடகங்களை சிலர் வலுவாக இதற்கு தவறாக பயன்படுத்துகின்றனர்.

அரசாங்க பணியின் முக்கி அம்சம் ஓய்வூதியமே!
அரசாங்க பணியின் மிக முக்கிய அம்சம் அதன் பழைய ஓய்வூதிய திட்டம்தான்!
அரைக்காசு உத்தியோகம்னாலும் அரசாங்க உத்தியோகம்தான்னு சொல்லக் காரணமே.பணி ஓய்வுக்குப்பின்னர் நாம் அயராது உழைத்த அரசு நம்மை வாழ்விக்க ஓய்வூதியம் மூலம் உதவும் என்ற காரணம்தானே.
லஞ்சம் வாங்குபவர்கள் இருக்கிறார்கள் .ஆனால் 90% கையூட்டு யாருக்காக வாங்கப்படுகிறது.?

கன்டெய்னர்களில் அப்பணத்தை வைத்து மறைவாக சுத்துவதற்கு பணம் இங்கிருந்துதானே போகிறது.
ஒத்துழைக்க மறுக்கிறவர்களுக்கு கிடைக்கும் பரிசு.

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியே சுகத்தில் படுக்க வேண்டிய நிலை.
அவருக்கு சத்திரத்தில் அலுவலகம் ஒதுக்கி ,உட்கார நாற்காலி போடவில்லை.அறையை கூட கி.நி.அலுவலர் வந்து திறந்தால்தான் உள்ளே போக முடியும் நிலை உண்டானதை பார்த்திருப்பீர்களா?

மேலும் அதுபோனற காசு அடிக்கும் பணியில் அமர்வது கூட குறிப்பிட்ட சிலர்தான்.மற்றவர்கள் தங்கள் வேலையைப்பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.அதுவும் சிலத்துறைகள்தான் பணம்வரும் .
 உழைப்பாளிகளுக்கு மூன்று முக்கிய பணி ஓய்வு பலன்கள் இருக்க வேண்டும் என்பது தொழிற்சங்க இயக்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். பி.எஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி, கிராஜூவிட்டி எனப்படும் பணிக்கொடை மற்றும் ஓய்கூதியம் என்பதே இந்த மூன்று பலன்கள்.

 பொதுத்துறை ஊழியர்களுக்கு பணிக்கொடையும் நிர்வாகமும் சம அளவில் பங்களிக்கும் வருங்கால வைப்பு நிதியும் உள்ளது. ஆனால் ஓய்வூதியம் இல்லை.
 பல போராட்டங்களுக்கு பின்னர் தற்பொழுது கிடைத்துள்ள ஓய்வூதியம் மிகவும் சொற்பமே! மாறாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை உண்டு.

ஆனால் அவர்களின் பி.எஃப்.க்கு அரசாங்கம் சமஅளவு பங்களிப்பு செய்வது இல்லை.
அதற்கு பதிலாகவே இறுதி ஊதியத்தில் 50 விழுக்காடு ஓய்வூதியம் என்பது இருந்தது.


இந்த ஓய்வூதியத்தை அகற்றிவிட்டு ஊழியர்களிடம் பங்கை பிடித்தம் செய்யும் புதிய ஓய்வூதியத் திட்டம் வேண்டாம் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. மேலும் ஓய்வூதிய பெரும் தொகையை பங்கு சந்தை எனும் சூதாட்டத்தில் முதலீடு செய்வதையும் ஊழியர்கள் எதிர்க்கின்றனர்.

எனவே ஓய்வூதியம் எவ்வளவு என்பதே எவரும் கணக்கீடு செய்ய முடியாத சூழல் உள்ளது. பங்கு சந்தையில் சூதாட்டத்தில் நட்டம் ஏற்பட்டால் தாங்கள் அதனை ஈடு செய்ய மாட்டோம் எனவும் மத்திய மாநில அரசாங்கங்கள் கூறுகின்றன.

 எனவேதான் புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம் என ஊழியர்கள் வலுவாக குரல் எழுப்புகின்றனர்.
2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் அமெரிக்க உழைப்பாளிகளின் 3 டிரில்லியன் டாலர் ஓய்வூதியம் பங்கு சந்தையில் காணாமல் போனது என்பதை மறக்க முடியுமா?

உலகில் 174 நாடுகளில் புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கதை அளக்கிறார். ஐ.நா. சபையில் மொத்தமே 195 நாடுகள்தான் உள்ளன.
 மிக முன்னேறிய நாடுகளில் மக்களுக்கு பல மானியங்கள் தரப்படுகின்றன.
உதாரணத்திற்கு கனடாவில் வேலை இல்லாதவர்களுக்கு நிவாரணம் வாரத்திற்கு ரூ.30,000 அதாவது மாதத்திற்கு 1,20,000 ரூபாய் தரப்படுகிறது.
அதனை தமிழகத்தில் அல்லது இந்தியாவில் அமலாக்க முடியுமா? அமைச்சர் ஜெயக்குமார் தான் மைக்கில் எது சொன்னாலும் மக்கள் நம்பிவிடுவர் என எதிர்பார்க்கிறார் போலும்!
ஊடகப் பொய்கள்
எடப்பாடி அரசாங்கத்தின் தூண்டுதல் அடிப்படையில் சில ஊடகங்கள் பொய்களை பரப்புகின்றன. அப்படி பரப்பப்படும் அவதூறுகளில் ஒன்று தமிழகத்தின் வருவாயில் 71ரூ ஊழியர்களுக்கு ஊதியமாகவும் ஓய்வூதியமாக தருவதாக புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 இந்த புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தால் இதில் உள்ள சில பொய்கள் தெளிவாகும்.உதாரணமாக, ஓய்வூதியத்திற்கு 25,362 கோடி ரூபாய் அதாவது 15.37 ரூபாய் செலவிடப்படுவதாக கூறுகின்றனர்.


ஆனால் இதில் ஊழியர்களின் பணி ஓய்வு சமயத்தில் சட்டப்படி தரப்பட வேண்டிய பணிக்கொடை ரூ.4,000 கோடியும் அவர்களின் விடுமுறை ஒப்படைப்பு சம்பளம் ரூ. 1056 கோடியும் சேர்க்கப்பட்டுள்ளது.
 இந்த ரூ.5056 கோடி சட்டப்படி தரப்பட வேண்டிய தொகை ஆகும்.

 இதை ஓய்வூதிய தொகையில் சேர்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்?
இந்த விவரம் எவ்வளவு தவறானது என்பது இதிலிருந்து தெரியும். மேலும் கடந்த காலத்தில் அரசாங்கம் சம பங்கு அளிக்கும் பி.எஃப். திட்டத்திற்கு மாறாகவே இந்த ஓய்வூதியம் எனும் முக்கிய உண்மையை மறைத்துவிடுகின்றனர்.

அரசாங்க ஊழியர்களுக்கு ரூ.52,171 கோடி ஊதியம் (31.63ரூ) தரப்படுவதாக புள்ளிவிவரங்கள் தருகின்றனர்.
இதில் அகவிலைப்படி ரூ. 3180 கோடியும் அடங்கும்.
விலைவாசி உயர்வின் காரணமாகவே அகவிலைப்படி உயர்கிறது.
 விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்?
அரசாங்கமா?
 அரசாங்க ஊழியர்களா?
 பண்டிகை முன்பணம் ரூ. 437 கோடியும் இதில் அடக்கம்!

ஆனால் இந்த தொகையை அரசாங்கம் திருப்பி பிடித்தம் செய்து கொள்ளும் என்பதை மறைத்து விடுகின்றனர். வீட்டு வாடகைப்படி ரூ.1964 கோடியும் இதில் அடங்கும்.

அரசாங்கம் நகரங்களில் வீடு வசதி செய்து தர இயலவில்லை என்பதால்தான் இந்த செலவு உருவானது. அரசாங்க வீடுகளில் தங்கும் ஊழியர்களுக்கு இந்த சலுகை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னுமொரு 6600 கோடி ரூபாயை சம்பள மானியங்கள் எனும் தலைப்பில் சேர்த்துள்ளனர்.
இது சாதாரண ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை.அதிகாரம் படைத்தவர்களுக்குத்தாதான் .
அரசு  உயர் அதிகாரிகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம்.அமைச்சர்கள்,சட்டமன்றம் அமைக்கும்குழுக்களில் உள்ள கட்சியினர்,வறியத்தலைவர்கள் போன்றோர்களுக்கான  செலவுத்தொகை இது.

அரசு ஊழியர்கள் செலவினப்பட்டியலில்தான் மக்களுக்கு சேவை செய்வதற்கெனவே அவதரித்து மக்களிடம் வாக்குகளைப்பொறுக்கி வந்து மக்களையே கொடுமைக்குள்ளாக்கும் அமைச்சர்கள் ஊதியம்,செலவினங்கள் அனைத்தும் அடங்கும்.அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் தாங்கள் ஆற்றும் மக்கள் சேவைக்கு மாத மாமூலாக பெறும் 1,05,000ரூ சம்பளமும் அரசு ஊழியர் செலவினக்கணக்கில்தான் சேர்க்கப்படுகிறது.


ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் முன்னர் ஐந்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தால்தான் ஓய்வூதியம் .
ஆனால் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று வீட்டுக்கு போய்விட்டால்  கூட முழு ஓய்வூதியம் என்று ஆக்கிவிட்டார்.
அதாவது இன்றையகணக்குப்படி சட்டமன்ற உறுப்பினர் சம்பளம் ரூ 1,05,000/-ஓய்வூதியம் 65,000/-.

இப்போது சொல்லுங்கள் அரசு ஊழியர்கள் செலவினம் என்று அமைச்சர்கள் சொல்லும் கணக்கில் பாதியளவு யாருக்கு செல்கிறது என்று.?

இந்தியாவிலேயே ஆண்டுதோறும் வருமானவரி ஒழுங்கக செலுத்துபவர்கள்  மத்திய ,மாநில அரசுஊழியர்கள்தான்.அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் வருமான வரி பல ஆயிரம் கோடி ரூபாய்.

வருமானவரி ,அமுலாக்கப்பிரிவு வருகையை நோக்கி நாள்தோறும் பயந்திருப்பவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல.
ஆண்டுக்கு இருமுறை தலா 2000/ வரை தொழில் வரி என பிடித்தம் செய்யப்பட்டால்தான் ஊதியமே வழங்கப்படும்.

ஆசிரியர்களும்,அரசு ஊழியர்களும் அரசுக்கணக்கின்படி தொழில்தான் செய்கின்றனர்.சேவையல்ல.

மேலும் அவர்கள் வசூல் செய்யும் பல்வேறு வரிகள் பல ஆயிரம் கோடி!

அவர்களது உழைப்பு இல்லாமல் அரசாங்கத்தின் எந்த திட்டமும் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லை! இதனை தமிழக அரசாங்கம் உணர வேண்டும்!

அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மக்களின் கோபத்தை மடைமாற்ற பல அவதூறுகள் அரசாளும்,நடுநிலை நக்கி ஊடகங்களாலும் பரப்பப்படுகின்றன.
போராட்டங்கள் முதற்கட்டமாக அரசு மூடப்போவதாக அறிவித்துள்ள 3500 சத்துணவு மய்யங்கள்,ஆரம்பப்பள்ளிகளை மூடினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.என்பதனால்தான்.அதை சமாளிக்க பழனிசசாமி அரசு கூறுகிறது.
அந்த மாணவர்களை அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டு அவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் என்று.
எவ்வளவு பெரிய மோசடிஇது?கோடிகளில் தனியாருக்கு கட்டணத்தை செலுத்தும் அரசு பள்ளியை மூடாமல் இருக்கலாமே?
இன்று பலப்பள்ளிகளில் இருக்கும் கணினி,மாணவர்கள் அமரும் மேசை,நாற்காலிகள் வாங்கி வசதி செய்துள்ளத்தற்கு பணம் ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தில் பிரித்து வாங்கியவைதான்.சிலஇடங்களில் கிராம மக்கள் வாங்கிக்கொடுத்துள்ளனர்.தங்கள் வேலையை பாதுகாத்துக்கொள்ள மாணவர்களை வீடுகளில் போய் அழைத்துவர தங்கள் செலவில் வாகனங்களை அப்பள்ளிகளின் ஆசிரியர்கள்தான் ஏற்பட்டு செய்துள்ளனர்.
 அரசு பள்ளி களுக்கு தளவாட சாமன்கங்களுக்கு பணம் ஒதுக்கி 10 ஆண்டுகளுக்குமேல்ஆகிவிட்டது.
இந்த உண்மைகள் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது.பள்ளி விழாக்கள்,விடுதலைதினம்,குடியசுத்தினம் இவைகள் கொண்டாட பணம் செலவிடுவது யார்.ஆசிரியர்கள்தானே.
அரசு ?
மாவட்ட ஆட்சியர் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அரசு ஒதுக்கும் நிதி 2000ரூபாய்கள்தான்.அந்தப்பணம் மைதானத்தை சுத்தம் செய்யவே போதாதே.அப்பணத்தைக்கூட நிகழ்ச்சி முடிந்த பின்னர்தான் ஒதுக்குவார்கள்.பலமுறை ஒதுக்க மறந்து போவது உண்டு.
கொடியேற்று நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு அதற்கான செலவினம் தெரியவரும்.
 அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தங்கள் கைக்காசையும்,மாணவர்கள் உடை அலங்கரத்தை தங்கள் சொந்த செலவிலும்தான் செய்துவருகிறார்கள்.விடுதலைதினம்,குடியசுத்தினம் வந்தாலே அவர்களுக்கு பயம்தான்.
இவைகளை சொல்ல காரணம் .ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் போராட்டத்தை ஆதரித்து களம்  இறங்க வேண்டாம்,கொச்சை ப்படுத்தாமல் இருந்தாலே போதும்  என்பதற்காகத்தான்.
அதிமுகவைசேர்ந்த பூக்காரர் ஒருவர் "சும்மா இருந்து வருகிற உங்களுக்கு இன்னும் சம்பளம் அதிகம் வேண்டுமா?"
என்று போராடுபவர்களைப்பார்த்து திட்டியுள்ளார்.
அவர்கள் சும்மா இருந்து வந்து கொண்டிருந்தால் எடப்பாடி பழனிசாமியும்,ஜெய்குமாருமா உங்கள் வீட்டுக்கு ரேஷன்கார்டு கொண்டுவந்து தருகிறார்கள்,ரேஷன் பொருட்களை தருகிறார்கள்.
நீங்கள் வாங்கசிச்சென்ற இலவச தி.வி,மிக்சி,கிரைண்டர் அனைத்தும் ஆட்சியாளர்கள் அறிவித்தவுடன் உங்கள் வீட்டில் வந்து அமர்ந்து விடுமா?அதற்கு பணமொதுக்குவது ,நல்ல பொருட்களாக தேர்ச்வு செய்து வாங்குவது அதை ரேஷன் கடைகளுக்கு அனுப்புவது.(ரேஷன் கடைக்கு இந்தப்பொருட்களை எடுத்து செல்ல லாரிக்கு வாடகை கூட அரசு கொடுப்பதில்லை.அதை வருவாய் ஆய்வாளர்,கி.நீ.அ ரேசன்கடைக்காரர் கையில் இருந்து போட்டதுதான்.அதை பொருட்களை வாங்குபவர்களிடம் 50 ரூபாய் என கேட்டதற்கு பணம் கேட்கிறார்கள் என்று மறியல் வேறு)எல்லாம் யார்?
மக்களிடம் வாக்குகளை பெற கட்சிகள் எடுக்கும் புதிய திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவது யார்?
இலவச வேட்டி -சேலை ஒதுக்கியதில் அமைச்சர் ,கட்சியினர் செய்த முறைகேட்டால் ஒவ்வொரு இடத்துக்கும் அறிவித்தற்கு குறைவாகவே வேட்டி-சேலை கொடுத்து அதிகாமாக கட்டாயப்படுத்தி துணை வட்டாசியர்களிடம் கையெழுத்து வாங்கினர்.
ஆனால் கணக்கில் குறைந்ததாக பறக்கும்படை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதில் இடைநீக்கம்,தண்டனைக்கு ஆளான வட்டாட்சியர்கள் எத்தனை பேர்கள் தமிழகத்தில் உண்டு என்று தெரியுமா அந்த பூக்காரருக்கு.?
====================================================

ன்று,
ஜனவரி-29.
ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

கிப்ரல்டார் அரசியலமைப்பு தினம்
 ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது(1595)
அமெரிக்க மத்திய உளவுத்துறை நிறுவனம்(சி.ஐ.ஜி.,) அமைக்கப்பட்டது(1946)

இந்திய சுதந்திர போராட்ட வீரர் பி.எஸ்.பி.பொன்னுசாமி இறந்த தினம்(1998)

ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

வயது முதிர்வு காரணமாக சமீப காலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
 மேலும், உடல்நலக்குறைவாலும் அவர் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 88.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று(29.01.19) டெல்லியில் காலமானார்.
 ====================================================
 தானாடவில்லையம்மா .சதையாடுது.!.

வங்கி மோசடியில் ஈடுபட்ட, ஐசிஐசிஐ - வீடியோகான் நிறு வனங்களை காப்பாற்ற மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி துடிப்பது, கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கூட்டுக்களவாணி முதலாளி களின் கொள்ளைக்கு துணை போவதுதான் மோடி அரசாங்கம் என்பது, ஜெட்லி நடவடிக்கை மூலம் மீண்டும் உறுதியாகி இருப்பதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

2012-ஆம் ஆண்டில், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல்அதிகாரியாக சாந்தா கொச்சார் இருந்தார். அப்போது, வீடியோ கான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கியிலிருந்து ரூ. 3,250 கோடி கடன் அளிக்கப்பட்டது. இவ்வாறு பெற்ற கடனில் பெரும்பகுதியை, சாந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சார் மற்றும் அவரு டைய உறவினர்களுக்குச் சொந்தமான நூபவர் குழு மத்திற்கே (Nupower group) கைமாற்றினார் வீடியோ கான் நிர்வாக இயக்குநர் வேணு கோபால் தூத்.

அதாவது சாந்தா கொச்சார், வீடியோகான் நிறுவனம் மூலமாக தனது கணவரின் நிறுவனத்திற்கு ரூ. 3250 கோடியை அள்ளித் தந்தார்; இதற்கு பலர் உடந்தை என்பதுதான் குற்றச்சாட்டு ஆகும். இந்த முறைகேடு தொடர்பாக விசாரணையில் இறங்கிய சிபிஐ, சாந்தா கொச்சார், கணவர் தீபக், வீடியோகான் நிர்வாக இயக்குநர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது கடந்த ஜனவரி 22-ஆம் தேதி வழக்கு பதிவு செய்தது.

வீடியோகான் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த முயன்றபோது, அதனை சிபிஐ விசாரணை அதி காரியான சுதன்சுதார் மிஸ்ராவே வெளியில் கசியவிட்டார். இதனை கண்டுபிடித்த சிபிஐ, சுதன்சுதார் மிஸ்ராவை மாற்றிவிட்டு, புதிய விசாரணை அதிகாரியாக மொகித் குப்தாவை நியமித்து, அதன்பின்னர் ஜனவரி 24-ஆம் தேதி சோதனை நடத்தியது.


அடுத்ததாக ஐசிஐசிஐ வங்கி தலைவராக உள்ள சந்தீப் பக்ஷி, பிரிக்ஸ் நாடுகளால் அமைக்கப்பட்டுள்ள வங்கியான ‘புதிய மேம்பாட்டு வங்கி’யின் தலைவர் கே.வி. காமத், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி தலைமை செயல் அதிகாரி ஜரின் தாருவாலா உள்ளிட்ட வங்கியாளர்களிடம் விசாரணை நடத்துவதும் அவசியம் என்று அறிவித்துள்ளது.இதுதான் அருண் ஜெட்லியை கொதித்தெழச் செய்துள்ளது.

மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தற்போது அமெரிக்கா வில் ஒருவிதமான மென்மைத் திசுபுற்றுநோய்க்காக சிசிக்சை பெற்றுவருகிறார். அவரிடமிருந்த நிதித்துறையை, ரயில்வே அமைச்சராகவுள்ள பியூஷ் கோயல் கூடுதலாகக் கவனித்து வருகிறார். கடந்த ஒரு மாத காலமாகவே அரசின் செயல்பாடு களில் பங்கேற்க முடியாத நிலை யில் ஜெட்லி இருந்து வருகிறார்.அப்படிப்பட்டவர்தான், ஆபத்தான சிகிச்சைக்கு இடையிலும், திடீரென்று குதித்தெழுந்து,ஐசிஐசிஐ - வீடியோகான் வங்கிமோசடி தொடர்பான வழக்கில் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) நடவடிக்கை யைக் கண்டித்துள்ளார்.
தனியார் வங்கி அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திருப்பதை, “புலனாய்வு அதிதீவிரவாதம்” (investigative adverturism) என்று அருண் ஜெட்லி கடுமையாக விமர்சித்துள்ளார்.

“ஐசிஐசிஐ வங்கி வழக்கில் குறி வைக்கப்படுபவர்களின் பட்டியலை படித்து பார்த்தவுடன், என்மனதில் ஒரு சிந்தனை ஓடியது. இலக்கின் மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக, இல்லாத ஊருக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது.
ஒட்டுமொத்த வங்கி துறையினரையும், ஆதாரத் துடனோ, ஆதாரம் இன்றியோ வழக்கில் சேர்த்தால், அதுஉண்மையில் துன்புறுத்துவ தாகவே அமையும். எனவே, மகாபாரதத்தில் அர்ஜூனனின் அறிவுரையை பின்பற்றுங்கள். பறவையின் கண் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள்” என்று புலம்பித் தீர்த்துள்ளார்.

‘கார்ப்பரேட்டுகளின் தலைவர்களை விசாரித்திட வேண்டும்”என்று மட்டும்தான் சிபிஐ கூறியிருக்கிறது.
 மற்றபடி அவர் களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எதையும் கூறவில்லை.

ஆனாலும் இதுவே அருண் ஜெட்லியை நிலைகுலையச் செய்து, துடிக்க வைத்திருக்கிறது.
அரசமைப்புச் சட்ட ஒழுங்கு முறைகளுக்குள் புகுந்து, இதுபோன்ற அத்துமீறல்கள், தலையீடுகளை பாஜக அரசு ஏற்கெனவே செய்து வருகிறது.
 அதற்கு தற்போதைய அருண்ஜெட்லியின் மிரட்டலும் மற்றொரு உதாரணமாகி இருக்கிறது. அத்துடன், கார்ப்பரேட் கூட்டுக்கள வாணிகளின் கூட்டாளிதான் மத்திய பாஜக அரசும், அதன் அமைச்சர்களும் என்பது மீண்டும் உறுதியாகி இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.


“ஒரு வழக்கை சிபிஐவிசாரணை செய்துகொண்டிருக்கையில் அவ்வழக்கு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் கருத்துக் கூறியிருப்பது முறை யல்ல” என்று உச்சநீதிமன்ற மூத்தவழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கண்டித்துள்ளார்.

மற்றொரு மூத்த வழக்குரைஞ ரான சஞ்சய் ஹெக்டேயும், “ஒரு சுயேச்சையான புலனாய்வு முகமை தன் புலனாய்வை எப்படிநடத்த வேண்டும் என்று சொல்வ தற்கு எந்த நீதிமன்றத்திற்கும், எந்த நிர்வாகத்திற்கும் உரிமை கிடையாது” என்று கூறியுள்ளார்.
 

 
 தினமலர்-