சாட்டையடி எதற்கு?
யாருக்கும் தெரியாமல்.. தனி காரில்.. தொழிலதிபரை தூதுவிட்ட சீமான்! பிரஸ்மீட்டில் போட்டுடைத்த DIG வருண்குமார்.IPS,
கும்பகோணம் மாநகராட்சியின் மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன் என்பவர் இருந்து வருகிறார். இவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் தான் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நேற்று (30.12.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 54 தீர்மானங்கள் தொடர்பாகக் கோப்புகளை, மேயர் சரவணனிடம் திமுக கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி என்பவர் கேட்டுள்ளார். அதற்கு மேயர் சரவணன் மாமன்ற கூட்டம் முடிந்ததாகக் கூறி அவர் அங்கிருந்து எழுந்து அவரது அறைக்குச் செல்ல முயன்றார்.
அப்போது திமுக கவுன்சிலர், மேயர் தன்னை கொல்ல முயற்சி செய்வதாகக் கூச்சலிட்டார். அதே சமயம் மேயரும் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி தரையில் படுத்து, தன்னை காப்பாற்ற வேண்டும் என்று ஆணையரிடம் தொடர்ந்து அலறினார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் மேயரை சமாதானம் செய்து அவரது அறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது திமுக கவுன்சிலர்கள் கோப்புகளைக் கேட்டால் நெஞ்சு வலிப்பதாகவும் மேயர் நடிப்பதாகவும் கோப்புகளை எடுப்பதற்குப் பயப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
இதனால் கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த துணை மேயர் தமிழழகன், கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி, தானே மேயரின் ஓட்டுநர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேயர் சரவணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
"கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம் நான் கொண்டுவந்தது" - எடப்பாடி பழனிசாமி.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல், உலக மக்கள்தொகையில் ஒரு புதிய தலைமுறை இணையப் போகிறது. 2025 முதல் 2039 வரை பிறக்கும் குழந்தைகள் ஜெனரேஷன் பீட்டா (Generation Beta) என அழைக்கப்படுவர்.
2035-ல் உலக மக்கள்தொகையில் பீட்டா தலைமுறையினர் சுமார் 16% ஆக இருப்பார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் பலர் 22-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தையும் காணவிருக்கலாம்
வள்ளுவ மாலை.
பாடல்;கமலஹாசன்
இசை;ஏ.ஆர்.ரகுமான்
சாட்டையடி எதற்கு?
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி கடந்த 23 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஞானசேகரன் என்ற 38 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் புழலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இப்போது பல கேள்விகள் இவ்வழக்கு தொடர்பாக எழுகிறது.
save successமேலேயே குற்றம் சாட்டப் படுகிறது.
உண்மையில் நடந்தது என்ன?
அந்தமாணவி பல்கலைக் கழக வளாகத்தில் அர்ந் மரங்கள் இருக்கும் பகுதியில் தன் காதலனுடன் ஒதுங்கி இருக்கிறார்.
வளாகத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் இருந்தாலும் பல இயங்கவில்லை அதை பதிவாளர் சரி செய்யவில்லை.
ஆளுநர் மாளிகைக்கு எதிரே உள்ளப் பகுதி .ஆளுநர்தானே வேந்தர் பாதுகாப்பை மீறி யார்வரப் போகிறார்கள் என்ற எண்ணமாக இருக்கலாம்.
சூரப்பா என்ற துணை வேந்தர் அண்ணா பல்கலைக் கழக வேந்தராக இருந்து ஊழல் குற்றசாட்டில் பதவி விலகிய பின் இன்றுவரை துணைவேந்தரை வேந்தர் ஆர் என் ரவி அதாவது ஆளுநர் நியமிக்கவே இல்லை.
பதிவாளர்தான் பல்கலைக் கழகத்தை நிர்வகித்து வருகிறார்.
பாதுகாப்புக்கு தனியார் காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள்.அவர்கள்தான் பாதுகாப்பு.
காடு போன்ற பகுதிகள்தான் அண்ணா பல்கலையும்,ஆளுநர் மாளிகையும்.
இப்பகுதியில் ஆள்நடமாட்டமில்லாப் பகுதியில் அம் மாணவி தனது காதலனுடன் ஒதுங்கியிருக்கிறார்.
குற்றவாளி ஞானசேகரனும் பல நாட்கள் அவரை கண்காணித்தே வந்துள்ளார்.
அவர் வந்து காதலனை மிரட்டியவுடன் காதலன் ஓடியே போய்விட்டான்.சார் வரப்போகிறார் என்னவேண்டுமானாலும் தடக்கலாம் என அவன் மிரட்டலுக்குப் பயந்து மாணவி எக்கேடாவது போகட்டும் என ஓடிவிட்டான்.
இவைதான் நடந்துள்ளது.
அதற்குள் தி மு க அரசுக்கெதிராகப் பொங்கி எழுந்து விட்டன பாஜக, அதிமுக பிற எதிர் கட்சிகள்.
அதிலும் புதிய கட்சித் தலைவர் விஜய் யார் பாதுகாப்பில் அப்பல்கலைக் கழகம் இருக்கிறதோ அவ்வேந்தர் ஆர் என் ரவியிடமே மாணவிக்கு பாதுகாப்பில்லை என மனு கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏதாவது நடந்தால் மட்டுமே வேலை செய்யும் தேசீயமகளிர் ஆணையமும் குட்டையில் மீன் பிடிக்க ஆரம்பித்தது.
நீதிமன்றமும் அவசரகதியில் 25லட்சம் நிவாரணம் இதென்ன ஆட்சி என்று தனது கருத்துகளை வைத்து பேச ஆரம்பித்து விட்டது.
அனைவரும் பல்கலைக் கழகம் யார் பொறுப்பு,நிர்வாகம் யார் நடத்துகிறார்கள்,பாதுகாப்பு யார் கையில் உள்ளது என்பதை மறந்து விட்டார்கள்.
பதிவாளர் அனுமதி இன்றி தமிழ்நாடு காவல் துறை பல்கலைக் கழகத்தில் நுழைய அனுமதிகிடையாது என்பதை மறந்து விட்டார்கள்.கடைசியில் தமிழ்நாடு அரசை குற்றம் கூற எண்ணி தங்களைத் தாங்களே சாட்டையால் அடித்துக் கொண்டார்கள்.
யார் அந்த சார் என்று பதிவாளரைக் கேட்காமல் கேலிக் கூத்தாகி விட்டார்கள்.
ஆக அவலை இடிக்கப் பறப்பட்டவர்கள் வெறும் உரலை இடித்துக் கொண்டருக்கிறார்கள்.
இவர்கள் இருந்து கேள்வி கேட்க வேண்டிய இடங்கள் இப்போது உத்திரப்பிரநேசம் குஜராத் மணிப்பூர் அரசுகளிடம்தான் .