கோமியம் ஒரு கோல்மால்

சிலி நாட்டின் சின்சோரோ கடற்கரையில்  ஆயிரக்கணக்கான இறந்த மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன.

மஹாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் - பரந்தா ரயில் நிலையம் அருகே நடந்த ரயில் விபத்தில் 20 பேர் உயிரிழப்புபுஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் ரயிலில் இருந்து குதித்தனர்துரதிர்ஷ்டவசமாக, மற்றொரு தண்டவாளத்தில் சென்ற கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி 20 பயணிகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்.

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்தப்பட இருந்த 12 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு துணைபுரிந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்

உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி பழைய கடற்கரையில் இருந்து படகு மூலம் போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக தகவலை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனையில் 12 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர். பழைய துறைமுக பகுதியில் இருந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரின் உதவியுடன் போதைப்பொருள் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்த முயன்ற சுதாகர், ஜேசுராஜ், கிங்சிலி, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







கோமியம் ஒரு கோல்மால்

பசுவின் சிறுநீரைக் கோமியம் என்பது சனாதன மரபு. அது சர்வநோய்க்குமான நிவாரணி என்பதை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பிரமுகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பா.ஜ.க.வின் முதலமைச்சர்களே பசுமாட்டின் பின்புறம் நின்று, குழாயில் தண்ணீர் குடிப்பதுபோல கோமியத்தைக் குடிக்கும் காட்சிகள் இணையத்தில் கிடைக்கின்றன.

தற்போது சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி, சிறுநீர் நல்ல மருந்து என்றும், தங்கள் பண்டிகைகளில் கோமியம் உள்ளிட்ட பஞ்ச கவ்யத்தை சாப்பிடுகிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ஐ.ஐ.டி. கரக்பூர் இயக்குநரும் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

ஐ.ஐ.டி. என்பது அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நிறுவனமாகும். இந்தியாவில் அறிவியல் ஆய்வுகளை மேம்படுத்தும் இளைய தலைமுறை உருவாக வேண்டும் என முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு சென்னை உள்ளிட்ட இடங்களில் ஐ.ஐ.டி. நிறுவனங்களைத் தொடங்கினார்.

 அத்தகைய அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குநர்களே கோமியத்தின் மகாமித்யம் குறித்து தெரிவிக்கும்போது, மக்களிடம் அது குறித்த ஆர்வம் ஏற்படும். இதுதான் மூன்று முறை ஆட்சி செய்யும் பா.ஜ.க.வின் அரசியல் தந்திரம். 

இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கியதன் விளைவாகத்தான் காமகோடி போன்றவர்கள் உயர்பொறுப்புகளில் இருந்தபடி கோமியம் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்கள்.

பசுவின் பால், தயிர், நெய், சாணம், சிறுநீர் ஆகிய ஐந்தும் சேர்ந்த கலவைக்கு பஞ்சகவ்யம் என்று பெயர். இது புனிதமானதாகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும் தொடர்ந்து வலியுறுத்தப்படுவதுடன் சில பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

நவீன அறிவியல் சார்ந்த மருத்துவம் பஞ்ச கவ்யம் மற்றும் கோமியத்தின் மருத்துவ பலன்கள் குறித்து சந்தேகக் கேள்விகளை எழுப்புகிறது. இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் போன்றவை கோமியத்தை சர்வநோய்க்கான நிவாரணமாகக் கருத முடியாது என்கிறது.

பஞ்சகவ்யம்-கோமியம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் வேறுபாடு உண்டு. வடஇந்தியாவில் பலர் கோமியத்தைக் குடித்து, சாணத்தை உடம்பில் பூசிக்கொள்வார்கள். 

தமிழ்நாட்டில் கோமியம் குடிக்கின்ற பழக்கம் கிடையாது. பசுவின் பாலைத்தான் குடிப்பார்கள். 

கேரளாவில் அதிகளவில் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள்.

பசுமாட்டின் சாணத்தை உடலில் பூசிக்கொள்பவர்களும் கிடையாது. வீட்டின் மண் தரையை மெழுகுவதற்கு தமிழ்நாட்டுப் பெண்கள் பசுமாட்டின் சாணத்தைப் பயன்படுத்துவார்கள். 

இயற்கையையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து தேவைக்கேற்ப பயன்படுத்துகிறது தமிழ்நாடு.

மண்தரை வீடுகள் அதிகம் இருந்த காலத்தில், அதில் பூச்சிகள் வராமல் இருப்பதற்கு கிருமிநாசினியாகப் பயன்படுத்தினார்கள் தமிழ்நாட்டு. கால மாற்றத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தில் வீடு கட்டும் முறைகள் மாறியதாலும், புதிய கிருமிநாசினிகள் கண்டுபிடிக்கப்பட்டதாலும், தரையை பசுமாட்டின் சாணத்தைக் கொண்டு மெழுகும் பழக்கமும் குறைந்துவிட்டது.

 அதற்குப் பதிலாக அதே நிறத்தில் ஒரு பெயிண்ட்டை சிமெண்ட் தரை போடப்பட்ட வீட்டு வாசலில் பூசுவதை மேற்கு மாவட்டங்களில் காணலாம். கிரானைட் தரைகளில் அதுவும் கிடையாது. இதுதான் தமிழ்நாடு.

யாகங்கள், பூசைகள் செய்யும்போது மந்திரம் சொல்கிறவர் மா இலையில் கோமியத்தைத் தெளிப்பது வழக்கமாக உள்ளது. மா இலை ஆக்சிஜனை அதிகளவில் வெளியிடும் என்றும், கோமியம் கிருமி நாசினியாகவும் சர்வ நோய் நிவாரணியாகவும் இருக்கிறது என்றும் யாகத்தை நடத்துபவர்களும் அதன் மீது நம்பிக்கைக் கொண்டவர்களும் தெரிவிக்கிறார்கள்.

வீட்டைச் சுற்றி மரங்களுடன் வாழ்ந்த காலத்தில் மாமரத்தின் ஆக்சிஜன், யாகம் போன்ற புகைமூட்ட நேரத்தில் தேவையானதாக இருந்திருக்கும். இன்றைய நகரமய வாழ்க்கை, அபார்ட்மெண்ட் வாழ்க்கை ஆகியவற்றில் காற்றோட்டத்திற்கான வசதிகள் வேறுவிதமாகிவிட்டன.

 பெயருக்கு நான்கு மா இலைகளில் தோரணம் கட்டுவது ஆக்சிஜனைத் தரும் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.

ஒவ்வொரு காலத்திலும் மனித சமுதாயத்தின் நடைமுறைகள் மாறுகின்றன. தேவைக்கேற்ற கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. அத்தகையக் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த வேண்டிய கல்வியை வழங்க வேண்டிய ஐ.ஐ.டி. நிறுவனத்தின் இயக்குநர் கோமியத்தின் பெருமை பேசுவதும், அதைத் தங்கள் வீட்டுப் பண்டிகைகளின் சிறப்பாகக் குறிப்பிடுவதும், அதற்கு மருத்துவம் படித்த டாக்டர் தமிழிசை போன்ற தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர்கள் வக்காலத்து வாங்குவதும், இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்துகின்ற அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானதாகும்.

மெத்த அறிவு படைத்தவர் போல நினைத்துக்கொண்டு தமிழிசை, “தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள்.கோமியம் குடிக்க மாட்டார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

 இதுபோல கோமியத்தை புனிதமாகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும் கருதுபவர்கள் ஏன் மாட்டுக்கறியைத் தவிர்ப்பதுடன், அதை சாப்பிடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்” என்றும் பதில் கேள்வி கேட்க முடியும்.

அறிவியல் மனப்பான்மையுடன் சிந்திக்கும் எவரும், கோமியம் எந்தவகையில் நல்லது, என்னென்ன மருத்துவ குணம் கொண்டது, எல்லா பசுமாடுகளின் சிறுநீரும் சர்வநோய்க்கான நிவாரணமா என்பதை ஆராய்வதே சரியாக இருக்க முடியும். 

சமூக மருத்துவ டாக்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோமியம் குறித்த ஐ.ஐ.டீ. இயக்குநர் காமகோடியின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது. பல மோசமாக விளைவுகளை உருவாக்கக்கூடியது. 

பஞ்சகவ்யம்-கோமியம் மூலம் பல்வேறு நுண்ணுயிரித் தொற்றுகள் ஏற்படலாம். எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படலாம்” என்று எச்சரித்திருப்பது கவனத்திற்குரியது.

தமிழ்நாட்டு மக்களின் மனநிலைக்கும் நடைமுறைக்கும் எதிராகவே செயல்படும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் கருத்துகள் ஊடகங்கள் வாயிலாக அதிகளவில் முன்னிலைப்படுத்தப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை இந்தக் கோமியம் விவகாரம் குறித்து, மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியக் கடமையாகும்.

கிண்டலா?வாழ்த்தா??

மணிப்பூர் மாநில உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அந்த மாநில மக்களுக்கு நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப் பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தின் பக்கம் கூட எட்டிப் பார்க்காதவர் இவர். அந்த மாநில மக்கள் ஆற்றிய பங்களிப்பு குறித்து பெருமைப்படுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மணிப்பூர் மாநில மக்களின் கடந்த கால பங்களிப்பு மகத்தானது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. 


ஆனால் அந்த மாநிலத்தில் நிலவி வரும் வன் முறையை தடுத்து நிறுத்த இரட்டை என்ஜின் அர சான பாஜக தலைமையிலான ஒன்றிய அரசும், மாநில அரசும் எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து பிரதமர் ஒரு வார்த்தையாவது சொல்ல முடியுமா? 

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாழ்த்துச் செய்தியில் அங்கு அமைதி நிலவ பிரார்த்தனை செய்கிறேன் என்பதோடு முடித்துக் கொண்டிருக்கிறார். உள்துறை அமைச்சர் என்கிற முறையில் மணிப்பூர் மாநிலத்திற்கு நேரடி பொறுப்பு இவர்தான்.

ஆனால் அந்த மாநில மக்க ளின் வாழ்வில் அமைதி திரும்புவதற்கு எந்த வொரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் இவர் தன்னால் முடிந்தது பிரார்த்தனை செய்வது மட்டும்தான் என்று கூறி நழுவுகிறார்.

1824இல் கிழக்கிந்திய கம்பெனி வகுத்த திட் டத்தை ஏற்றுக் கொண்டு மணிப்பூரில் ஆட்சி  செய்த மன்னர்கள் ஆண்டுதோறும் கிழக்கிந்திய கம்பெனிக்கு கப்பம் செலுத்தி வந்தனர். 1949ஆம் ஆண்டு இந்தியாவுடன் மணிப்பூர் இணைக்கப் பட்டது. 

1956 வரை இந்தியாவின் ஒன்றிய பகுதியாக இருந்த மணிப்பூர் 1972இல் தனி மாநில தகுதி பெற் றது. அந்த மாநில மக்களால் பேசப்படும் மணிப்பூரி மொழி அரசியல் சட்டத்தின் 8ஆவது அட்ட வணையில் இடம் பெற்றுள்ளது. மணிப்பூர் மக்க ளின் நடனமும் தனித்துவம் வாய்ந்தது. 

இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் மற்றும் பிரிட்டிஷ் படைகளின் களமாக மணிப்பூர் மாற்றப்பட்டது. தற்போது ஒன்றிய பாஜக ஆட்சிக் காலத்தில் அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சி கார ணமாக மீண்டும் மணிப்பூர் வன்முறைக் களமாக மாற்றப்பட்டுள்ளது. 

இதே நாளில்தான் திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களும் உதயமாகின. இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி யிலும், மக்கள் ஒற்றுமையிலும் உயர்ந்தோங்கி நின்ற திரிபுரா மாநிலம் தற்போது பாஜக ஆட்சி யில் அனைத்து வகையிலும் பின்தங்கியுள்ளது.

மணிப்பூரில் இரு பிரிவு மக்களிடையே கலவ ரத்தைத் தூண்டி குளிர் காய முயன்ற பாஜக - ஆர் எஸ்எஸ் பரிவாரம் தற்போது அந்த நெருப்பை அணைக்க முடியாமல் திணறுகிறது.

 இதனால் வாழ்விழந்து நிற்பது மணிப்பூர் மக்களே ஆகும். அங்கு ஒற்றுமையும், அமைதியும் திரும்ப வேண்டும் என்பதே இந்திய மக்கள் அனைவரது விருப்பமும் ஆகும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?