ஊழலை ஒழிப்பது ?
தவெகவில் கட்சிப் பொறுப்பு முதல் எம்.எல்.ஏ சீட்டு வரையிலும் லட்சத்தில் தொடங்கி கோடி வரை பேரம் பேசுகின்றனர்.
தவெகவில் ஆடியோ சர்ச்சை வெடித்த நிலையில் நம்மிடம் பேசிய தவெக நிர்வாகிகள் மேலும் பெரிய வெடிகுண்டுகளை வீசுகின்றனர்.
விஜய் கட்சியை பொறுத்தவரை எளிய உறுப்பினர்கள் பதவிக்கு வர விரும்பும் நிலையில் தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் தங்களுக்கு கீழ் உள்ள மாவட்ட நிர்வாக பதவிக்கு லட்சத்தில் தொடங்கி கோடி வரை பணம் வசூல் செய்வதை அறிந்து அதிர்ச்சியிலும் வேதனையிலும் உள்ளார்கள்.
சென்னையில் பகுதி செயலாளர்கள் பதவிக்கு ரூ.10 லட்சமும், வட்ட செயலாளர் பதவிக்கு ரூ.5 லட்சமும் என கடந்த 2,3 நாட்களாக பண வசூலை தொடங்கியுள்ளார்கள், சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பாலமுருகன், தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் ஈசிஆர் சரவணன், மத்திய சென்னை மாவட்ட பொறுப்பாளர் பூக்கடை குமார், தியாகராய நகர் அப்பு, வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் திருவொற்றியூர் நவீன் ஆகியோர்.
இவ்வாறு வசூலில் ஈடுபடுவதை அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தினர், தாங்கள் ’விஜய் மக்கள் இயக்கம்’ காலத்தில் இருந்தே உழைத்து வருகிறோம். ஆனால் திடீரென்று இப்படி மாவட்ட நிர்வாக பொறுப்பிற்கு 5 முதல் 10 லட்சம் வரை வசூல் செய்கிறார்களே? என்பதை அறிந்து என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கண்ணீர் வடிக்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை நம்பியே நாங்கள் அரசியலுக்கு வந்து செலவு செய்தோம். ஆனால் பணம் வசூலித்து பதவியை அளிப்பார்கள் என அறிந்திருந்தால் தவெகவிற்கு நாங்கள் வந்திருக்க மாட்டோம் என கதறுகிறார்கள்.
விஜய் சொல்லியே மாவட்ட நிர்வாக பதவிக்கு பணம் வாங்குவதாக மாவட்ட தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தவெக நிர்வாகிகளிடம் தெரிவித்து வருகின்றனர்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக வெற்றிக் கழக தலைமைக்கு மாவட்ட தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தொடங்கி கிளைச் செயலாளர்கள் வரை ஒவ்வொரு நிர்வாகியும் கட்சியின் வளர்ச்சி நிதிக்கு கட்சியின் வங்கிக் கணக்கிற்கு டிடி எடுத்து பணம் அனுப்ப வேண்டும் என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.