சீனாவில் புது வைரஸ்?

 சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்று பரவல் என்ற செய்தி வந்தவுடனேயே உலக சுகாதார நிறுவனம் தொடங்கி உலக நாடுகள் வரை அனைத்தும் பரபரப்பாகி தொற்று தொடர்பான தகவல்களைத் தேடத் தொடங்கியுள்ளன. காரணம் கொரோனா.

கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் பதிவான கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கோடிக் கணக்கில் உயிரிழப்புகள், சர்வதேச அளவில் பொருளாதார பின்னடைவு எனப் பல்வேறு பாதிப்புகளால் உலகம் பல மாதங்கள் ஸ்தம்பித்தது.


 உருமாறி உருமாறி கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் உண்மையில் எல்லோரும் மறக்க நினைக்கும் ஒரு கொடுங் கனவு தான்.

அதனாலேயே சீனாவில் ஹியூமன் மெடாநிமோ வைரஸ் (Human Metapneumovirus) என்ற புதிய வகை வைரஸ் பரவுகிறது என்றவுடனேயே அது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலக நாடுகளும் எச்சரிக்கையுடன் அதை அணுகத் தொடங்கியுள்ளன.


எச்எம்பி வைரஸ் என்றால் என்ன? 


இதை மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் சாதாரண சளித் தொல்லையை ஏற்படுத்தும் ஃப்ளூ வைரஸ் போன்றது எனலாம். சுவாசப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றுமொரு வைரஸ் இது. இந்த வகை வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்குப் பரவும். வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருட்கள், புழங்கிய இடங்களில் இருந்து இன்னொருவருக்குப் பரவும்.

தொற்று ஏற்பட்ட நபருடன் கை குலுக்கிவிட்டு கையை கண்கள், மூக்கு, வாயில் வைத்தல், அவர் தும்மும் போதோ இருமும் போதோ அருகில் இருத்தல் போன்றவற்றாலும் தொற்று பரவும். கரோனா பரவலுக்கும் இதே காரணம் தான் சொல்லப்பட்டது என நீங்கள் யோசிக்கலாம்.


 எல்லா ஃபோமைட் போர்ன் (fomite borne) அதாவது வைரஸ் பாதித்தவர் தொட்டதால் உயிரற்ற பொருட்களின் மீது வைரஸ் ஒட்டி அதன்மூலம் மனிதர்களுக்கு வைரஸ் பரவுதல் ஒரே பாணியில் தான் நடைபெறும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

மேலும், ஃப்ளூ வைரஸ்கள் மிகவும் புத்திசாலிகள் என்கின்றனர். அதாவது அதன் மரபணு மிக வேகமாக தன்னை உருமாற்றிக் கொள்ளக் கூடியது. அதனால் வழக்கமான ஃப்ளூ வைரஸ் மனிதர்களிடம் சற்று கவனிக்கத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸாக உருமாறும் போது அதற்குப் பெயரும், கூடவே அதனைச் சுற்றிய பரபரப்பு அதிகரிக்கிறது .

 ஃப்ளூ வைரஸின் மரபணுவில் இருக்கும் தன்னைத்தானே உருமாறிக் கொள்ளும் வேகத்துக்கு நம்மால் ஈடு கொடுத்து பெயர் வைக்க முடியாது. 


அவ்வளவு வேகமாக, விதவிதமாக அது உருமாறிக் கொள்ளும். எல்லாவற்றிற்கும் பெயர் வைத்தால் புயலுக்கு பெயர் வைப்பதுபோல் வைத்துவிட்டு வருமா? வராதா என்ற கணிப்புகளை வெளியிடும் சூழல் உருவாகும். 


கரோனாவை போன்றே இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூச்சுத் திணறல் ஏற்படுகிறதா என்ற தகவல் ஏதும் இல்லை. புதிய வைரஸால் சிறார் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது .


 இதுபோன்ற வைரஸ்கள் சிறார், முதியவர் என்றில்லை யாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறதோ அவர்களை எளிதாக, அதிகமாக தாக்கும் 


 சீன மருத்துவமனைகளில் காய்ச்சல், தொண்டை வலி பாதிப்புகளுக்காக மக்கள் கூட்டங்கூட்டமாக காத்திருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் அவசர நிலை அமல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.


இதற்கிடையில், புதிய வைரஸ் குறித்த விவரங்களை அளிக்குமாறு சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், கரோனா போன்ற புதிய வைரஸ் பரவுவதாக எழுந்த சந்தேகங்களை மறுத்துள்ளது.


முன்னதாக, சீன அரசின் நோய்க் கட்டுப்பாட்டு முகமை இது தொடர்பாக அளித்த விளக்கத்தில், “நிமோனியா போன்ற பாதிப்பு ஏற்படுவதாக எழுந்துள்ள புகார்களை கண்காணித்து வருகிறோம். குளிர் காலம் என்பதால் சுவாசப் பாதை தொற்றோடு பலரும் மருத்துவமனைகளை நாடுகின்றனர். டிசம்பர் 16 முதல் 22 வரை இத்தகைய தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.” எனத் தெரிவித்திருந்தது. ஆனால் எச்எம்பி வைரஸ் பற்றி எதுவும் குறிப்பிட்டுத் தெரிவிக்கவில்லை.


தற்போது புதிய வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு தகவல்களைக் கேட்டுள்ள நிலையில், சீனா விளக்கமளித்துள்ளது. 


சீனாவில் குளிர் காலத்தில் எப்போதும் சுவாசப் பாதை தொற்று நோய்கள் அதிகரிப்பது இயல்பே. சீன அரசு குடிமக்கள், சுற்றுலா பயணிகளின் உடல் நலனின் எப்போதுமே அக்கறை கொண்டுள்ளது. 

சீனாவில் தொற்று நோய் பரவல் ஏதும் இல்லை. 


சீனாவுக்கு சுற்றுலா பயணிகள் தாராளமாக வரலாம். மருத்துவமனைகளில் கூட்டம் இருக்கலாம். ஆனால் இந்த வைரஸ் வீரியமற்றது. பரவலும் மிகமிகக் குறைவு.


சீனாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சீன தேசிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் படித்தாலே தேவையற்ற அச்சங்கள் தீரும். 


கொரோனா முதல் புது கிருமிகள் சீனாவை மய்யமாகக் கொண்டே பரவுபிறதே ஏன்?

இதில் மேற்கத்திய நாடுகள்,குறிப்பாக அமெரிக்காவின் கைபின்னே மறைந்திருக்குமோ என்ன ஐயம் வருவதை தடுக்க இயலவில்லை.காரணம் உயிரி ஆயுதம் சோதனையை தன் நாட்டிலே செய்ய இயலாதே!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?