விளக்க வேண்டும்!

 அறிவுக்கு பொருந்தாத, வெறுப்பையும், சாதிய வெறியினையும் தூண்டி விடும் வன்மம் வடியும் விஷமத்தனக் கருத்துக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். இதற்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என அக்கட்சியில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

சகஜானந்த அடிகளாரின் 135வது பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வரலாற்று அறிவு சூனியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.



கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு புத்தாயிரம் தொடங்கிய போது, ​​அறிஞர்களின் தலைசிறந்த பேரறிவாளர் காரல் மார்க்ஸ் என்பதை உலகம் ஒப்புக்கொண்ட வரலாற்று உண்மையை அறியாதவர் ஆளுநர் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.

சமூக இயக்கத்தின் தோற்றம் தொடங்கி, பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தை பகுத்தாய்ந்து, சமூக இயக்கவியல் விதிகளின் அறிவியல் அடிப்படைகளை நிறுவி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் காரல் மார்க்ஸ்.

சமூக புல்லுருவியாக உருவான புரோகிதக் கும்பல், ஆதிக்க சக்திகளை வசப்படுத்தி, தங்களை நிலைநிறுத்திக் கொள்ள, மனுவின் வர்ணாசிரம கருத்தியலில் சாதிய அடுக்குமுறையில் சமூகத்தை கட்டமைத்து, சனாதன தர்ம சாஸ்திரங்கள் மூலம் மனிதர்களை பிளவுபடுத்தி உள்ளது. இந்த சமூக நீதியை எதிர்த்து போராடிய மக்கள் ஒரு பகுதியினரின் சகோதரத்துவக் கொள்கையால் ஈர்க்கப்பட்டது, “தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம்” என்று உழைக்கும் மக்களை ஒதுக்கி வைத்த தீண்டாமைக்கு இலக்காகி வந்த மக்கள் அறிவுத்தேடலுக்கும், வைத்திய உதவிக்கும் கிருத்துவ சமயம் சார்ந்தவர்கள் என்பது வரலாறு கூறும் தகவல்.

ஆன்மீக அறநெறி சார்ந்த சமூகப் பெரியவர்கள் பலர் சாதிய அடுக்குமுறை சமூகத்தை சீர்திருத்த போராடி இருப்பதை கம்யூனிஸ்டுகள் எப்போதும் உயர்த்திப் பிடித்துள்ளனர்.

பெரியார் ஈவெரா, சிந்தனை சிற்பி சிங்கார வேலர், பேராசான் ஜீவானந்தம், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்றோர் சுயமரியாதை சமதர்ம இயக்கம் மூலம் நடத்திய பகுத்தறிவுப் பரப்புரை சனாதன சாஸ்திர முறைகளின் சமூக அநீதி முகமூடியை கிழித்து எறிந்துள்ளது.

ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் கீழ் தஞ்சை பகுதியில் கீழ் வெண்மணி கிராமத்தில் ஊதிய உயர்வு கேட்டு போராடிய விவசாயத் தொழிலாளர்கள் 44 பேர், சாதி வெறியின் நீசத்தனத்தால் தீ வைத்து கொல்லப்பட்டனர்.

சாதியின் பெயரால் அழித்தொழிக்கப்பட்ட அந்த மக்களின் போராட்ட உணர்வை, வேட்கையை, உறுதியை வெளிப்படுத்தும் வகையில் உழைக்கும் மக்களின் உற்ற தோழர்களால் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.

கற்பூரத்தின் வாசனை அறியாத விலங்கின் உணர்வு கொண்டு மனித வடிவில் வாழ்வோர் வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முடியாது. இந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் காரல் மார்க்ஸ், வெண்மணி தியாகிகள் நினைவு சின்னம், வைக்கம் போராட்டம் குறித்த அறிவுக்கு பொருந்தாத, வெறுப்பையும், சாதிய வெறியினையும் தூண்டி விடும் வன்மம் வடியும் விஷமத்தனக் கருத்துக்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு வன்மையாகக் கண்டிக்கிறது.'என்று கூறியுள்ளார் .

ஆளுநர் விளக்க வேண்டும்!

குடியரசு தினத்தன்று குழப்பம் ஏற்படுத்தும் வகையில் குதர்க்க அறிக்கை வெளியிடப்படும் ஆளுநர் ரவி, தன்னைப் பற்றி ஊடகங்கள் எழுதி வரும் செய்திக்கு இதுவரை விளக்கம் அளித்தாரா இல்லை. அச்செய்தியில் அவரது கண்ணுக்கு இன்னும் தெரியவில்லையா?

19.1.2025 தேதியிட்ட 'ஜூனியர் விகடன்' இதழில், 'கவர்னரின் திருவிளையாடல்' என்ற தலைப்பில் (பக்கம் 3) வெளியாகும் செய்திக்கு ஆளுநர் ரவி முதலில் விளக்கம் அளிக்க வேண்டும். அந்த செய்தி இதுதான்...

“எடப்பாடிக்கு நெருக்கமானவரின் கல்லூரியில் உற்சாகமாக விழா கொண்டாடியிருக்கிறாரே ஆளுநர்... கவனித்தீரா?” “அங்கிருந்துதானே வருகிறேன்... திருச்சி மாவட்டத்தில் இருக்கும் முசிறி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’ என்ற கல்வி நிறுவனம், எடப்பாடியின் வலதுகரமான சேலம் புறநகர் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் இளங்கோவனுடையது.


 இவர்மீதும் இவருடைய மகன் பிரவீன்மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு, கூட்டுறவு வங்கி முறைகேடு என ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில்தான் வரி ஏய்ப்பு புகார் காரணமாக அந்தக் கல்லூரியில் ரெய்டு நடத்தி, முக்கிய ஆவணங்கள் அடங்கிய இரண்டு அறைகளை சீல் வைத்திருக்கிறது ஐ.டி. இவ்வளவு சிக்கலான சூழலில்தான், அந்தக் கல்லூரியில் பொங்கல் விழாவைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி" "ஆளுநர் பங்கேற்கிறார் என்று நிகழ்ச்சி நடக்கும் கல்லூரி நிர்வாகம் குறித்து பலகட்ட விசாரணைகள் நடந்திருக்குமா?"

“அதில்தான் சர்ச்சைகள் வெடிக்கின்றன. 'ஒரு விழாவில் ஆளுநர் கலந்து கொள்கிறார், நிகழ்ச்சியை நடத்துபவர்கள் குறித்து அலசி ஆராயப்படும். அப்படியிருக்கும்போது, ​​ஐ.டி.ரேடாரிலுள்ள முக்கியப் புள்ளியான சேலம் இளங்கோவன் கல்லூரிக்கு எப்படிப் போனார்?' என்ற கேள்வி எழுந்துள்ளது.

விசாரணை வளையத்தில் இருக்கும் பழனிசாமி பினாமியின் கல்லூரிக்கு ஆளுநர் சென்றது ஏன் ?- முரசொலி கேள்வி !

இந்தக் கேள்விக்கு இரண்டு விதமான பதில்களைச் சொல்கிறார்கள். அதாவது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்துகிறது டெல்லி. அந்த வகையில், 'இளங்கோவனைப் பகடையாகப் பயன்படுத்தி, அவரது ரூட்டிலும் முயற்சி நடக்கிறது' என்கிறார்கள் ஒரு தரப்பினர்

. அதேநேரம், இளங்கோவனின் சர்ச்சைக்குரிய பின்னணி, ஆளுநருக்குத் தெரிந்திருந்தால், நிகழ்ச்சியில் பங்கேற்கச் சம்மதித்திருக்க மாட்டார்' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அதாவது இளங்கோவன் குறித்த தகவல்களை மறைத்து 'இயற்கை விவசாயிகளோடு பொங்கல் நிகழ்ச்சி என்ற ஆளுநரையும், அவருடைய இல்லத் தரப்பையும் பவன் புள்ளிகள் அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். இது ஆளுநரின் திருவிளையாடலா அல்லது அவரை வைத்து விளையாடிவிட்டார்களா... என்று பட்டிமன்றம் நடக்கிறது பவன் வட்டாரத்தில்."

“எது எப்படியோ... ஆளுநரின் விசிட்டால் இளங்கோவன் தலைக்குக் கொஞ்ச நாளைக்கு ஆபத்து இருக்காது” – என்கிறது 'ஜூனியர் விகடன்'. ஆளுநர் பெருந்தகை இதற்கு விளக்கம் அளித்திருக்க வேண்டாமா?

ஜனவரி 22-24 தேதியிட்ட 'நக்கீரன்' இதழில் 'கவர்னருடன் அ.தி.மு.க. பேரம்' என்ற தலைப்பில் (பக்கம் 15-16) செய்திக்கட்டுரை தீட்டப்பட்டுள்ளது. அந்தச் செய்தி இதுதான்...

“ஜனவரி 11ஆம் தேதி முசிறியிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இயற்கை விவசாயம் சார்ந்த விஷயங்கள் குறித்துப் பேசுவதற்காக ஆளுநர் சென்றுள்ளார். அதை முடித்து- விட்டு மற்றொரு என்.ஜி.ஓ. நிகழ்ச்சிக்கும் சென்றுள்ளார்.

முசிறியிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் உரிமையாளர், எடப்பாடியை நெருங்கிய நண்பரான அ.தி.மு.க. இளங்கோவன். இவர் ஏற்கனவே கூட்டுறவு சங்க சேர்மனாகவும் இருந்துள்ளார். அப்போதுதான் மோடி ஆட்சியில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், செல்லாத ரூபாய் நோட்டுக்களை சேலம் கூட்டுறவு சங்கத்தில் மாற்றிக்கொடுத்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கினார். 

202-22 வரை எடப்பாடி பதவி வகித்து வந்த கட்சிப் பதவி இளங்கோவனுக்கு கொடுக்கப்பட்டது. அந்தளவிற்கு எடப்பாடிக்கு விசுவாசியாகவும், பினாமியாகவும் செயல்படுபவர்தான் இந்த இளங்கோவன். சென்ற வாரம்கூட இளங்கோவனின் சம்பந்தி மற்றும் அவர் தொடர்பான இடங்களில் ஈ.டி. சோதனை நடந்துள்ளது. இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு பிறகு தான் முசிறிக்கு ஆளுநர் சென்றுள்ளார்.

ஒரு மாநிலத்தின் ஆளுநர், ஈ.டி. விசாரணைக்குள்ளான ஒருவரின் கல்லூரிக்கு அடுத்த நாளே சிறப்பு அழைப்பாளராகப் போகிறார் என்பது எந்தளவிற்கு அ.தி.மு.க.வுக்கும் ஆளுநருக்கும் மறைமுகக் கூட்டணி என்பதை வெட்டவெளிச்சமாகக் காட்டுகிறது.

விசாரணை வளையத்தில் இருக்கும் பழனிசாமி பினாமியின் கல்லூரிக்கு ஆளுநர் சென்றது ஏன் ?- முரசொலி கேள்வி !

மேலும் இந்த விவகாரத்தால் ஆளுநர் பதவிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு, அவருடைய நேர்மையிலும் சந்தேகம் எழுகிறது. 

இந்தக் கல்லூரி விழாவில் ஆளுநர் கலந்துகொண்ட விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதேவேளை நிர்மலா சீதாராமனும் இதுகுறித்து விசாரித்துள்ளாராம்.

எடப்பாடியின் பினாமியாக இருந்துவரும் இளங்கோவனின் கல்லூரி நிகழ்ச்சிக்குச் சென்றது சாதாரண பொங்கல் விழாவாக இல்லாமல், அவர்கள்மீது நடத்தப்படும் ஈ.டி. விசாரணை- ணையை நிறுத்துவதற்கு ஆளுநர் மூலம் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் என்ற தகவல் கசிந்துள்ளது...”– என்று எழுதியுள்ளது 'நக்கீரன்' இதழ்.

அமலாக்கத்துறை விசாரணை வருமானத்தில் சிக்கி இருப்பவரின் அழைப்பை ஏற்று ஆளுநர் சென்றதன் பின்னணி என்ன? 

மர்மம் என்ன?

பொய்களையும் புனைவுகளையும் தினந்தோறும் அறிக்கையாக, பேச்சு களாக உதிர்த்துவரும் ஆளுநர், தன் மீது தமிழ்நாட்டு ஊடகங்கள் எழுதும் செய்திகளுக்குப் பொதுவெளியில் முதலில் விளக்கம் அளித்திருக்க வேண்டாமா?



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?