அத்துமீறிய அரக்கன்!

 





வக்பு மசோதா கூட்டு  

சர்வதிகாரக் குழு 

தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஒன்றிய பாஜக அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தது. எதிர்க்கட்சியி னரின் கடும் எதிர்ப்பையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பியது. 

ஆனால் கூட்டுக் குழு கூட்டங்களையும் அதன் தலைவர் ஜெக தாம்பிகாபால் நாடாளுமன்றத்தைப் போலவே ஒரு தலைப்பட்சமாகவே நடத்தினார். அதன் உச்ச மாக 10 எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து வெளியேற்றவும் செய்தார்.

நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க முடியாத விஷயங்களை ஆழமாக விவாதித்து ஒருமித்த கருத்துக்களுடன் சட்டமாக்கவே கூட்டுக்குழு அமைக்கப்படும். ஆனால் பாஜக வோ ஏற்கெனவே கருத்து வேறுபாடுகளை மேலும் அதிகரிக்கும் வகையிலும் பாதிப்பை கூடுத லாக்கும் முறையிலும் புதிய புதிய திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறது. 

மசோதாவின் அனை த்து 44 பிரிவுகளிலும் திருத்தங்கள் செய்திட விவா திக்க வலியுறுத்திய எதிர்க்கட்சியினரின் கோ ரிக்கைகளும் திருத்தங்களும் ஏற்கப்படவில்லை. ஆனால் பாஜகவினர் விரும்பிய 14 பிரிவுகளில் 32 திருத்தங்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் அல்லாத 2 பேர் உறுப்பினர் என்பதை 4 பேர் என்றும் வக்பு சொத்துக்களை புதிய சட்டம் உருவாவதற்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் சொத்துக்களை அளவிடும் அதிகாரம் ஆட்சியர் என்பதற்குப் பதில் சிறப்பு அதிகாரி செய்வார் என்றும் நன்கொடை வழங்கு பவர் குறைந்தது 5 ஆண்டுகள் இஸ்லாமியர் என்ப தற்கு ஆதாரம் கொடுக்க வேண்டும் என்பதுள் ளிட்ட  மேலும் மோசமாக்கும் திருத்தங்களையே கூட்டுக்குழு தலைவர் ஏற்றுக் கொண்டார். 

ஆனால் எதிர்க்கட்சியினருக்கு பேசுவதற்கு வாய்ப் பளிக்காமலேயே கூட்டத்தை முடித்து விட்டார்.

மொத்தத்தில் முஸ்லிம்களின் நிலம், சொத்துக் கள், மதவிவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்தி ரத்தைப் பறிக்கும் வகையிலே இந்த சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது பாஜக.

 கூட்டுக்குழு வின் பணிக்காலம் ஏப்ரல் 4 வரை இருக்கும் போதும் ஜனவரி 29க்குள் இறுதி செய்திடும் தலைவ ரின் முடிவு, ஜனவரி 31இல் அறிக்கை சமர்ப்பிக் கும் முன்கூட்டிய திட்டமிடலே ஆகும். இது தில்லி சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு கை கொடுக்கும் என்ற அவசர கதியே! 

உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில்  சட்டம் அமல் செய்யப்படுவதும் அதன் ஒருபகு தியே! 

பழங்குடியினருக்கு மட்டும் விலக்களிக்கும் இந்தச் சட்டம் பற்றி முதல்வர் புஷ்கர்தாமி, இந்தச் சட்டம் எந்த மதத்தையோ, இனத்தையோ குறி வைத்து கொண்டு வரப்படவில்லை என்று கூறியிருப்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை எனும் கதைதான்.

மக்கள் செல்வாக்கை இழந்து வரும் பாஜக தனது இந்த ஆட்சிக் காலத்திலேயே இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற- மூர்க்கத்தனமாக முயல்கிறது. அதனை இந்திய மக்கள் முறியடித்து பன்மைத்தன்மையை பாதுகாப்பது அவசியம்.

-------------------------

அத்துமீறிய அரக்கன்!

குளிர்காய்ச்சலால் தேர்வு எழுத முடியாமல் தேர்வு அறையில் இருந்து வெளியேறி நடுநடுங்கிக் கொண்டிருந்த மாணவியை கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் கட்டிப்பிடித்து முத்தமிட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்ற அதிமுக பிரமுகர் விஜய் சீகன்பால் தலைமறைவாகி இருக்கிறார்.  

அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை ஹேமாவை குற்றவாளியாக சேர்க்காமல் இருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரில் அரங்கேறி இருக்கிறது இந்த கொடுமை.  

மேதனூர் மேற்கு ஒன்றிய அதிமுக இளைஞர் – இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் நிர்வாகி விஜய் சீகன்பால்.  அதிமுக பிரமுகரான இவர் ’கிறிஸ்டி பாராமெடிக்கல்ஸ்’ நர்சிங் கல்லூரி நடத்தி வருகிறார்.  

இந்தக்கல்லூரியில் 17வயது மாணவி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சேர்ந்திருக்கிறார்.  அவர் லேப் டெக்னீஷியன் பயிற்சி பெற்று வந்திருக்கிறார்.  அந்த மாணவியின் தாய் தந்தை இருவரும் கூலித்தொழிலாளிகள்.  

அந்த மாணவிக்கு சுவாசக்கோளாறு பிரச்சனை இருந்து வந்திருக்கிறது .  கடந்த 11.1.2025இல் அந்த மாணவிக்கு வீசிங் அதிகமானதால் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். 

 அதன் பின்னர் இரண்டு நாட்கள் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டதும் மீண்டும் கல்லூரிக்குச் சென்றிருக்கிறார்.

கடந்த 20ம் தேதி அன்று தேர்வு நடந்திருக்கிறது.  தேர்வு தொடங்கிய அரை மணி நேரத்தில் அந்த மாணவிக்கு குளிர்காய்ச்சல் வந்திருக்கிறது.  வீசிங் பிரச்சனையால் மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருக்கிறது.  இது தெரிந்ததும் ஆசிரியை ஹேமா அந்த மாணவிக்கு பெட்சீட் கொண்டு வந்து போர்த்தி விட்டிருக்கிறார்.  அப்போதும் நடுக்கம் நிற்காமல் இருந்திருக்கிறது.

இந்த சூழலில் அங்கு வந்த விஜய் சீகன்பால் விசாரிக்கவும், விபரம் அறிந்ததும், தேர்வு அறைக்கு வெளியே மறைவாக இருக்கும் தடுப்பு பகுதிக்குள் டேபிள் போடச்சொல்லி அதில் மாணவியை ஓய்வெடுக்கச் சொல்லி இருக்கிறார்.

தேர்வு எழுதிக்கொண்டிருந்த மற்ற மாணவிகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் நிர்வாகி மறைவான இடத்தில் ஓய்வெடுக்கச் சொல்கிறார் என்று நினைத்து, அந்த மாணவியும் அங்கே சென்று டேபிளிலில் படுத்திருக்கிறார்.

பின்னாடியே சென்ற விஜய் சீகன்பால், அந்த மாணவியிடம் உடல் நலம் குறித்து விசாரித்திருக்கிறார்.  அந்த மாணவியும் நடுங்கியபடியே பதில் சொல்லி இருக்கிறார்.  அப்போது திடீரென்று அந்த மாணவியின் உதட்டில் முத்தம் கொடுத்திருக்கிறார்.  அதிர்ச்சி அடைந்த மாணவி எழுந்திருக்க முற்பட்டபோது வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து அத்துமீற முயன்றிருக்கிறார்.

கடும் குளிர் காய்ச்சலால்  உடல் சோர்வுற்றிருந்த அந்த மாணவி அந்த மிருகத்தின் பிடியில் இருந்து மீள சத்தம் போட, சத்தம் போட முடியாதவாறு வாயைப் பொத்தி இருக்கிறார் விஜய் சீகன்பால்.  

சுடிதாரைக் களைந்து அத்துமீற முயன்றதும், அதிலிருந்து தப்பிக்க போராடி இருக்கிறார் அந்த மாணவி.  அப்போது ஆசிரியை ஹேமா அங்கு வந்திருக்கிறார்.  அவர் இதை தட்டிக்கேட்காமல், மாணவியையும் காப்பாற்றாமல் விஜய் சீகன்பாலுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்.

அந்த உடல்நிலை பாதிப்பிலும் மொத்த உடல்பலத்தையும் மன பலத்தையும் திரட்டி சத்தம் போட்டிருக்கிறார் மாணவி. இதில் பயந்து தப்பியோடியிருக்கிறார் விஜய் சீகன்பால்.

அங்கே இருந்த ஆசிரியை ஹேமாவோ, நடந்ததை வெளியே சொன்னால் கல்லூரிக்கு கெட்டப்பெயர் வந்துவிடும். அதுமட்டுமல்ல உனக்கும் உன் குடும்பத்திற்கும் பிரச்சனைகள் வந்துவிடும் என்று எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார்.

வீட்டிற்குச் சென்ற மாணவி தனக்கு நேர்ந்ததை சொல்லி பெற்றோரிடம் அழ,  அவர்கள் மகளுக்கு தைரியம் கொடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து புகார் கொடுக்கச் செய்துள்ளனர்.  புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார் விஜய் சீகன்பால் மீது போக்சோ உ ள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இது தெரிந்ததும்  விஜய் சீகன் பால்  தலைமறைவாகி இருக்கிறார்.  

போலீசாரின் விசாரணையில் மேலும் சில மாணவிகளிடம் இதே மாதிரி விஜய் சீகன்பால் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.  அதுகுறித்தும் மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.

வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி விஜய் சீகன்பால் தரப்பினர் மிரட்டியும், ஐந்து லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசியும் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று  உறுதியாக உள்ளார்கள் மாணவியும் அவரது பெற்றோரும்.

இன்னமும் விஜய் சீகன்பால்  கைதாகாமல் இருப்பதும், ஆசிரியை ஹேமாவை குற்றவாளியாக சேர்க்காமல் அவரை கைது செய்யாமல் இருப்பதும் போலீஸ் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர் மாணவியின் பெற்றோர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?