இவன்தான் அந்த சார்?

 "பெண்ணுக்கு, ஆணுக்கும் கல்விதான் அழகு என்பதை 2000 ஆண்டுக்கு முன்பே இலக்கியம் கூறியது. ஆனால், அதற்குப் பிறகு கல்வி மறுக்கப்பட்டது யாரால்? ஆ.ராசா கேள்வி.?

நெல்லையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு.35 பேர் காயம் .
EPS உறவினர் ராமலில்கம் முடக்கபட்டார். பாய்ந்தது வரிமான வரிதுறை.சட்டசபைக்கு போகாமல் பாஜகவிடம் ்சம்மந்தியை காப்பாற்ற பேசிவருகிறார்எடப்பாடிபரனிசாமிஅடுத்தது கூட்டணிதான்.
இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, 2022 - 2023ஆம் ஆண்டிற்கான தொழில் நிறுவனங்கள் மிகுந்த மாநிலங்களின் பட்டியலில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து தமிழ்நாடுசாதனை.தமிழ்நாட்டில் 39,666 தொழில் நிறுவனங்களும், குஜராத்தில் 31,031 தொழில் நிறுவனங்களும், மகாராஷ்டிராவில் 26,446 தொழில் நிறுவனங்களும், உத்தரபிரதேசத்தில் 19,102 தொழில் நிறுவனங்களும், ஆந்திரப் பிரதேசம் 16,483 தொழில் நிறுவனங்களும் உள்ளதாக RBI தகவல்.
டங்ஸ்டன் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்றுகூட தெரியாதவரா பழனிசாமி! சுரங்கம் அமைக்க முயலும் “ஒன்றிய பாஜக அரசை” ஒரு வார்த்தை கூட குறிப்பிட்டுவிடாதபடி பார்த்து ,பார்த்து பதிவிட்டுள்ளார் பழனிசாமி! -அமைச்சர் ரகுபதி.
“50 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்க உத்தரவு” - தமிழக அரசு தகவல்.




இவன்தான் அந்த சார்?

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வட்டச் செயலாளர் ப.சுதாகர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு இந்த விவகாரம் சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் அவரது பெற்றோர் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிறுவன் மீது புகார் அளித்தனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோரை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், பகல் மற்றும் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்ததுடன், அவர்களை மிரட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. 

தங்களின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கொடுத்த புகாரை வாங்க மறுத்ததோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் பெயரை நீக்கும்படி போலீசார் வலியுறுத்தி உள்ளனர். இதனால் சிறுமியின் பெற்றோர் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வீடியோவாக வெளியிட்டனர்.

இந்த வீடியோவை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. 

அதேபோல் சிறுமியின் தாயார் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்தவழக்குவிசாரணையை சிபிஐக்கு மாற்றம்செய்யப்படுகிறது என அதிரடியாக உத்தரவிட்டனர். 

பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இணை கமிஷனர் சரோஜ்குமார் தாக்கூர், அண்ணாநகர் துணை கமிஷனர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், 10 வயது சிறுமியின் பெற்றோருக்கு காவல் நிலையத்தில் நேர்ந்த கொடுமை பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

சிந்து வெளி 

பிரிட்டிஷ் ஆட்சியில் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வின் அடிப்படையில் ஹரப்பா பகுதியில் கிடைத்த தடயங்களை ஆராய்ச்சி செய்த சர் ஜார் மார்ஷல், சிந்து ஆற்றங்கரையில் இருந்த நாகரிகம் வேதகால நாகரிகத்திற்கு முற்பட்ட நாகரிகமாக இருந்திருக்கிறது.

 இது ஒரு மாறுபட்ட நாகரிகம் என்ற தனது முடிவினை வெளியிட்டார். 1925ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட அந்த முடிவுகளுக்கு இது நூற்றாண்டு. இந்த நூறு ஆண்டுகாலத்தில் சிந்துவெளி நாகரிகம் குறித்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேதகாலம் எனப்படுவது ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபிறகு அமைந்த காலம். வேதகாலத்திற்கு முற்பட்டதென்றால் ஆரியத்திற்கு முற்பட்ட காலம், அதுவே திராவிடர்களின் காலம், சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகம் என இந்திய-ஐரோப்பிய தொல்லியல் ஆய்வாளர்கள் பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். 

திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி என்பது தமிழ். அதன் கிளைகளாகப் பல மொழிகள் உள்ளன. அதில் பிராகுயி மொழி பலுசிஸ்தானில் பேசப்படுகிறது. ஹரப்பா, மொகஞ்சாதாரோ அகழாய்வுகள் நடைபெற்ற இடங்களுக்கு அருகில் திராவிட மொழிக்குடும்ப அடையாளங்களை ஊர்ப் பெயர்களிலும் காண முடிகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதும் அதன் நீட்சியை சிந்து வெளி ஆய்வுகள் முதல் கீழடி ஆய்வுகள் வரை காண முடிகிறது என்பதும் இந்த ஆய்வுகள் குறித்த ஆர்வத்தை மேலும் தூண்டுவதாக உள்ளன. 

குறிப்பாக, சிந்துவெளி நாகரிக காலத்தில் இந்தியாவில் குதிரை கிடையாது. காளைகள்தான் இருந்தன. சிந்துவெளி முத்திரைகளில் உள்ள திமில் உள்ள காளை உருவத்தையும், கீழடி ஆய்வுகளில் கிடைக்கக்கூடிய திமில் உள்ள காளை வடிவத்தையும் ஒப்பிட்டு, தமிழர்களின் நாகரிகத்தின் நீட்சி குறித்த புதிய பார்வைகளும், காலத்தை நிர்ணயிக்கின்ற கணக்கும்மேற்கொள்ளப்படுகின்றன.

சிந்துவெளி நூற்றாண்டை தமிழ்நாடு அரசின் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்திக் கொண்டாடியிருக்கிறார்கள். இந்தக் கருத்தரங்கில் தலைமையுரையாற்றிய முதலமைச்சர் தன்னுடைய பேச்சில், “சிந்துவெளி எழுத்து முறையினைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் வழிவகையினைத் தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்பிற்கு ஒரு மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார். 

இந்த மிகப் பெரிய தொகை என்பது, இந்தத் துறையில் தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவோருக்கு மிகப்பெரிய ஊக்கமாகவும், உண்மையைக் கொண்டு வரும் உத்வேகத்தையும் வழங்கும்.

வேதகாலத்திற்கு முற்பட்டது சிந்துவெளி நாகரிகம் எனச் சொல்லப்படுவதையும், அது திராவிட நாகரிகம் என்பதால் தமிழர்களோடு தொடர்புடையது என்பதையும் ஏற்க முடியாத சிலர், இதனை சிந்து-சரஸ்வதி நாகரிகம் என மாற்றுவதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

 சிந்துவெளி அடையாளமான காளையை குதிரையாகக் காட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசின் நேரடி-மறைமுக ஆதரவு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

அனைத்தையும் மீறித்தான் சிந்துவெளி நாகரீகம் திராவிடர் நாகரிகம்தான் என உறுதியாகக் கூறவேண்டிய. கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இல்லையெனில் உண்மை பாஜக அரசாலும் மறைக்கப் பட்டுவிடும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?