எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்?

 தூத்துக்குடியில் அமையும் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை ஜூன் மாதத்தில் மின்சார கார் உற்பத்தியை தொடங்கும்.

காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து 18 கூடாரங்கள் எரிந்து சாம்பல்.

மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் ஒரே ஆண்டில் 12.8 லட்சம் மனுக்களுக்கு அரசு தீர்வு.


எங்களுக்கு பல உதவிகள் செய்தது திராவிட இயக்கங்களே- சீமானின் கருத்துக்கு புலிகள் அமைப்பின் நிர்வாகி கண்டனம்.

டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சி: ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு சாதகம்: ரூ.40,000 கோடி வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்ப்பு.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சிமலை வனப்பகுதிக்குள் கால்நடைகளை வளர்க்க, இன்று முதல் அனுமதி கிடையாது.


எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்?

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை. அவருடன் இருப்பது போல் படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான்’ என சினிமா இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். இலங்கையில் தனி ஈழம் கேட்டு போரிட்ட பிரபாகரனுடன் இருப்பது போல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு புகைப்படத்தை பயன்படுத்தி வருகிறார். இதுகுறித்து சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த சினிமா இயக்குநர் ராஜ்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்,’’ எனக்கூறியிருந்தார். இதனை பார்த்த அரசியல் கட்சியினர், நாம் தமிழர் இயக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியதாவது: நான் கடந்த 2007-08ம் ஆண்டு காலக்கட்டத்தில் தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்து கொண்டிருந்தேன்.

அப்போது சீமானுடன் இருக்கும் செங்கோட்டையன் என்பவர் ஒருநாள் ஒரு டிவிடி.,யில் பிரபாகரனுடன் இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் இருப்பது போல் 10 படங்களை கொண்டு வந்து கொடுத்தார். அதனுடன் சீமான் படத்தையும் தந்து பிரபாகரனுடன் சீமான் இருப்பது போல் ஒரு படத்தை தயார் செய்து தரும்படியும், அந்த படத்தை சீமானுக்கு கிப்ட் ஆக கொடுக்கப் போவதாகவும் கூறினார். நினைவுப்பரிசாகத் தானே கொடுக்க போகிறார்கள் என எண்ணி, பிரபாகரனுடன் சீமான் கைகளை கட்டிக்கொண்டிருப்பது போல் படத்தை எடிட் செய்து சேர்த்தேன்.

அதைத் தான், தற்போது சீமான் பயன்படுத்தி வருகிறார். அந்த படத்தில் சீமானுக்கு ஷேடோ (நிழல்) இருப்பது போல் செய்திருப்பேன். ஆனால், பிரபாகரன் படத்திற்கு பின்னால் ஷேடோ இருக்காது. அதை வைத்தே கண்டு பிடித்துவிடலாம். இது நான் எடிட் செய்தது என்பதால், முழுமையாக தெரியும். இதை தற்போது நான் கூறுவதற்கு காரணம், சீமான் பெரியார் பற்றி பிஜேபி எண்ணங்களை பேசி அசிங்கப்படுத்தி வருகிறார்.

அதனால் தான், அந்த படத்தின் உண்மைத் தன்மையை வெளியே கூறியிருக்கிறேன். சமூக நீதிக்காக போராடிய பெரியார் பற்றி தவறாக பேசுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. இப்பவும் உண்மையை சொல்லவில்லை என்றால், இப்படி பேசாமலே இருந்து விட்டோமே என்ற எண்ணம் என்னை வாட்டும். அதனால்தான், அந்த படம் நான் எடிட் செய்த படம் என்ற உண்மையை கூறியிருக்கிறேன். இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.

சங்கி ஆர் யன். ரவி

வான்புகழ் வள்ளுவரை சனாதனக் கூண்டில் அடைத்து காவி உடை அணிவிக்கும் ஆளுநர் முதலில் காவி உடை அணிய வேண்டும். அவருக்கு இருக்கும் காவிப் பாசம் உண்மையாக இருந்தால், அவர்தான் முதலில் அணிந்து அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும். அவருக்கு இருக்கும் காவிப் பாசம் உண்மையானதாக அப்போதுதான் இருக்க முடியும்.


திருவள்ளுவர் தினத்தன்று காவி உடை அணிவிக்கப்பட்ட படத்துக்கு

பூ தூவி இருக்கிறார் ஆளுநர் ரவி. அந்தப் படத்துக்குப் பக்கத்தில் இருக்கும் வள்ளுவர் சிலையில் உள்ள சொற்களை முதலில் வாசிக்க வேண்டும். ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய மெய்ப் பொருள் காண்பவராக ஆளுநர் இருந்திருந்தால் அப்படிச் செய்திருக்க மாட்டார்.

ஆரியத்துக்கு எதிராக எழுந்ததே திருக்குறள். பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதினார். “கோழைப் புலவருள் ஒருவராக மோழைப் பட்டுக் கிடக்க விரும்பாத நம் திருவள்ளுவ இனநலப் பேராசான், தம் நுண்ணறிவுத் திறங்கொண்டு, ஆரியத் தாக்கத்தால் அழிந்துவிடாமல் பல்லாயிரமாண்டுகளாக நம் பழம் பெருந்தமிழினத்தில் உருண்டு திரண்டு உருவாகி நிலைபெற்றிருந்த அறிவியல், வாழ்வியல், மெய்ப் பொருளியல் கருத்துகளையும், பண்பாடுகளையும் எதிர்காலத் தமிழின மக்கள் உணருமாறு, இலைமறை காயாக எடுத்து நிறுவிய இனநலக் காப்பு நூலே நம் அரும்பெறல் செல்வமாகிய திருக்குறள்” என்றார். அதனை அறியாத கும்பலில் ஒருவர்தான் ஆர்.என்.ரவி.

மெய்ப்பொருள் காண்பவராகக் கூட இருக்கத் தேவையில்லை. சட்டப்படி நடப்பவரா ரவி? அரசால் ஏற்கப்பட்ட பட வடிவமைப்புக்கு மாறான படத்துக்கு அவர் மரியாதை சூட்டி இருக்கிறார். இதுவே சட்டப்படி குற்றம் ஆகும். அவருக்கு சட்டமாவது? நீதியாவது? நெறியாவது? வாய்க்கு வந்ததை உளறி, தன் விருப்பத்துக்கு நடந்து, ‘சீப் பப்ளிசிட்டி’ தேடிக் கொள்வதுதான் ஆளுநரின் வழக்கம் என்பதை மக்கள் அறிவார்கள்.

வெள்ளுடையில் வீற்றிருக்கும் திருவள்ளுவர் படத்தை 1950களின் மத்தியில் வரைந்தவர் ஓவிய மேதைகளில் ஒருவரான வேணுகோபால் சர்மா. அவர் வரையும் போது மேற்பார்வை பார்த்தவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். இந்த ஓவியத்தை தமிழின் ஆற்றல்மிகு ஆளுமைகள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். தஞ்சை தமிழ்ச் சங்கத்திலும், புதுச்சேரி தமிழ்ச் சங்கத்திலும் திருவள்ளுவர் ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டு அனைத்து தமிழறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தஞ்சை இராமநாதன் மன்றத்தில் நடைபெற்ற மாநாட்டில் 49 புலவர்கள் கூடி இந்த ஓவியத்தை ஏற்றுக் கொண்டார்கள். பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் அதில் முக்கியமானவர்கள்.

ஓவியர் வேணுகோபால் சர்மாவின் வீட்டுக்கு வந்து ஓவியத்தை பார்த்துச் சென்றவர்கள்: தோழர் ஜீவா, பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, பெரியவர் பக்தவத்சலம், முத்தமிழறிஞர் கலைஞர், முன்னாள் முதலமைச்சர் பி.சுப்பராயன், திருமுருக கிருபானந்தவாரியார், எழுத்தாளர் கல்கி, கவியரசு கண்ணதாசன், பேராசிரியர் அன்பழகனார், நாவலர் நெடுஞ்செழியன்... இப்படிப் பல்வேறு அறிஞர் பெருமக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓவியத்தை அசிங்கப்படுத்துகிறார் ஆளுநர்.

ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா எழுதிய ‘திருவள்ளுவர் திருவுருவப் பட விளக்கம்’ என்ற நூலை வெளியிட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். இவை அனைத்தும் 1959 ஆம் ஆண்டு நடந்தவை ஆகும். அன்றைய ஒன்றிய அரசு இதனை ஏற்றுக் கொண்டு 1960 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தபால் தலையை வெளியிட்டது. வேணுகோபால் சர்மா வரைந்த ஓவியத்தையே தபால் தலையாக வெளியிட்டது.

இந்த ஓவியத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்க வேண்டும் என்று முதல் குரல் கொடுத்தார் முத்தமிழறிஞர் கலைஞர். ‘நானே வாங்கி வந்து தருகிறேன், வையுங்கள்’ என்று சொன்னார் கலைஞர். ‘நாங்களே வைக்கிறோம்’ என்று 1964 ஆம் ஆண்டு உறுதி அளித்தார் அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம். அன்றைய துணைக் குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்களால் திருவள்ளுவர் படம் திறந்து வைக்கப்பட்டது.

1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த மூன்றாவது மாதத்தில் திருவள்ளுவரின் இந்த ஓவியம் அரசு அங்கீகாரம் பெற்ற ஓவியமாக அரசாணை வெளியிடப்பட்டது. (G.O.M.S. 1193 ) அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்த ஓவியம்தான் இடம் பெற வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. 1989 ஆம் ஆண்டு இந்த ஓவியத்தை நாட்டுடைமை ஆக்கினார் முதலமைச்சர் கலைஞர். நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஒரே ஓவியம் இதுதான்.

அரசியல் சட்டப்படி பதவி ஏற்றுக் கொண்ட ஆளுநர் சட்டத்தை மீறி, அரசாணைகளை மீறி தன் விருப்பத்துக்கு வள்ளுவருக்கு காவிச் சாயம் பூசிக் கொண்டிருக்கிறார்.

கி.பி.எட்டாம் நூற்றாண்டில் பரிமேலழகர் தொடங்கி இந்த ஆண்டில் ஆர்.என்.ரவி வரை நூற்றாண்டுதோறும் பலரது படையெடுப்புகளால் வீழ்த்த முடியாத வீரியம் திருக்குறளுக்கு மட்டுமே உண்டு.

தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயரைச் சொல்வதற்கு கூச்சப்படுகிறார், வள்ளுவருக்கு காவி அடிக்கிறார், சனாதன வகுப்பு எடுக்கிறார், குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறார். அம்பேத்கரை அசிங்க படுத்துகிறார், அரசியல் சட்டமே குறைபாடானது என்கிறார், இவ்வளவு பெரிய மேதையாக இருக்கும் ரவியை இந்திய குடியரசுத் தலைவர் ஆக்கலாம். ஐ.நா.சபைக்கே அழைத்துச் செல்லலாம். அங்கும் காவி உடையில் செல்லவும். ஆங்கிலேய உடை, ஆங்கில மொழியை அவர் விடுத்து அவர் சொல்வதற்கு அவரே முன்மாதிரியாக நடந்துகாட்ட வேண்டும். அதற்கு ஒரு தேதி குறிக்கவும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?