மீண்டும் இறப்பார்கள்.
"யோகி தொடர்ந்து முதல்வராக இருந்தால் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இந்துக்கள் மீண்டும் இறப்பார்கள். விபத்து நடந்ததை அப்பட்டமாக மறைத்த யோகி ஒரு பொய்யன், சனாதனி அல்ல. யோகி உடனே பதவி விலக வேண்டும்" - சங்கராச்சார்யாஅவிமுக்தேஸ்வரானந்த்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.
வாழ்வாதாரம் தேவை!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) தனது இருபதாம் ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இரு வெவ்வேறு ஆட்சிக் காலங்களையும் கடந்து வந்திருக்கும் இத்திட்டம், கிராமப்புற ஏழை மக்க ளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் முக்கிய திட்டமாக உருவெடுத்துள்ளது. கிராமப்புற வறுமை ஒழிப்பில் இத்திட்டத்தின் பங்களிப்பு மறுக்க முடியாதது.

பெருந்தொற்று காலத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை இத்திட்டம் காப்பாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பாஜக கூட்டணி அரசு இத்திட் டத்தை ஒரு சுமையாகவே கருதுகிறது. நிதி ஒதுக்கீடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
2020-21ல் 3.2% ஆக இருந்த நிதி ஒதுக்கீடு, 2024-25ல் 1.78% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது மட்டு மல்லாமல், ஊதிய நிலுவை, பொருட்கள் செலவு போன்றவற்றுக்கான ₹10,030 கோடி நிதி இன்னும் வழங்கப்படவில்லை. இந்த நிதி வெட்டு, திட்டத் தின் செயல்பாட்டையே பாதிக்கிறது.
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ₹4,315 கோடி ஊதிய நிலுவை உள்ளது. மேலும், திட்டப் பணிகளுக்கான பொருட்களுக்காக ₹5,715 கோடி செலுத்த வேண்டியுள்ளது.
இந்த நிலுவைத் தொகையால் புதிய பணிகளை மேற்கொள்ள முடி யாமல் போகிறது. இதனால் வேலை தேடி வரும் கிராமப்புற தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்து வது, ஆதார் அடிப்படையிலான பணப்பரிமாற்ற சிக்கல்களை களைவது போன்ற தொழில்நுட்ப பிரச்சனைகளும் கவனம் பெற வேண்டும். வேலை அட்டைகள் வழங்குவதில் உள்ள தாமதம், ஊழல் போன்ற சிக்கல்களையும் களைய வேண்டும்.

இந்தியாவில் கிராமப்புற வறுமை இன்னும் முற்றிலும் ஒழியவில்லை. அப்படி இருக்கும் போது, இத்திட்டத்தின் நிதியை வெட்டுவது கிரா மப்புற வளர்ச்சியையே முடக்கிவிடும்.
மோடி அரசு தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். திட்டத்திற்கான தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்புக்கும் இத்திட்டம் இன்றியமையா தது. அரசியல் காரணங்களுக்காக இத்திட்டத்தை பலவீனப்படுத்துவது நாட்டின் நலனுக்கு எதிரானது.