வேடிக்கை இதில் வாடிக்கை.

 விளம்பரத்திற்காக போராட போறீங்களா? வழக்கு போட்ட  பாமகவினர்.அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில். கண்டித்து அனுப்பிய நீதிபதிகள்.

அந்த மாணவியுடைய வருங்காலத்தை நினைக்காதவர்கள் தான் இப்படி இந்த பிரச்சனையை ஊதி ஊதி அரசியல் செய்து பெரிதாக்குகிறார்கள்.-அமைசசர் சேகர்பாபு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
சென்னை மெட்ரோ இரயிலில் 9 ஆண்டுகளில் 35.53 கோடி பயணிகள் பயணம்: மெட்ரோ நிர்வாகம்.


வேடிக்கை இதில் வாடிக்கை.

தமிழ்நாடு அரசியலில் அடுத்த 10 நாட்களுக்கு நிறைய சுவையான திருப்பங்கள்,மாற்றங்கள்நிகழப் போகிறது.

கட்சி ஒன்றில் தலைவர் மாற்றப்பட உள்ளார். இது தேசிய தலைமை  முடிவின் அடிப்படையில் தலைமை மாற்றப்பட உள்ளதாம்.

கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்த டாக்டர் சமீபத்தில் டெல்லிக்கு பயணம் செய்து  முக்கிய தலைவர்களைப் பார்த்தார். அவரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி தலைவராக்குகிறார்கள் உங்களால்தான் கூட்டணி  வைக்க இயலும். கூட்டணி வரக்கூடிய முக்கிய கட்சி உங்களைத்தான் தலைமை பொறுப்பில் கேட்கிறார்கள்.


அதனால் உங்களையே பதவிக்கு கொண்டு வருகிறோம்.. இன்னும் 2 வாரங்களுக்குள் அறிவிப்பு வரும்.. 2026 சட்டசபை தேர்தலுக்கு கூட்டணியை.. பெரிய கூட்டணியை உறுதி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு என்று பேசியதாக கூறப்படுகிறது.

அடுத்து பாமக மோதல் வரும் வாரங்களில் உச்ச நிலை எடுக்கலாம். பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் தான் என்றும் பொதுக்குழுவில் அறிவித்தபடி முகுந்தனிடம் பதவி நியமனக்கடிதத்தை கொடுத்ததாக  ராமதாஸ் தெரிவித்துள்ளார் ராமதாஸ் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். அன்புமணி எதிர்ப்பை அவர் கண்டு கொள்ளவில்லை.


இதனால்பாமக இளைஞரணி தலைவர் நியமனத்தில்  ராமதாசுக்கும்  மகன் அன்புமணிக்கும் ஏற்பட்ட மோதல்  சமாதானம் செய்யப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் இன்னும் புகைந்து கொண்டுதான் உள்ளது.

 அப்பா-மகனுக்கிடையே நடந்த பேரனுக்கு பதவி விவகார மோதல் தற்போது முடிவுக்கு வந்திருந்தாலும் குடும்ப மோதல் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெடிக்கலாம்.

இது போக அ தி மு க  அரசியல் வியூக ஆலோசகர்களுடன்  முக்கிய ஒப்பந்தம் போடப்பட உள்ளதாகத் தெரிகிறது.அது தொடர்பாகத்  தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரஷாந்த் கிஷோருடன் இந்த வாரமே அதிமுக அதிகாரபூர்வமாக தேர்தல் பணிக்கான ஒப்பந்தம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு சந்திரபாபு நாயுடுவிற்காக ராபின் சர்மாவின் Showtime பணியாற்றியது. அங்கேயும் மகராஷ்டிராவிலும் வெற்றிபெற இந்த அமைப்பு காரணமாக இருந்தது. இதே குழுவுடன்தான் இப்போது திமுக  ஒப்பந்தம்  உறுதி செய்யப்ட்டதாக கூறப்படுகிறது.

இங்கு தி மு க கூட்டணியில் மாற்றம் வரப்போவதாகத் தெரியவில்லை.

அ தி மு க கூட்டணியில் தமிழிசை பா ஜ க தலைவரானால் பா  ஜ க ,பா ம க ,தே மு தி க என பலமான கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. அத்துடன் நடிகர் விஜய் கட்சியும் சேர வாய்ப்புள்ளது. போட்டி பலமாகவே அமையும்.

"தினமணி"வெளியிட்ட பொய் செய்தி!

அரசு பள்ளிகள் தனியார் நிர்வாகத்தின் கீழ் வழங்கப்படும் என செய்தி பரவிய நிலையில்‌‌, இதுகுறித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அளித்துள்ள விளக்கம் வருமாறு :

அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் CSR மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று தான் சொன்னோம்.

தமிழ்நாட்டிலுள்ள 13,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மழலையர் துவக்கப் பள்ளிகள் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர வாரிய பள்ளிகள் என ஒட்டு மொத்த பள்ளிகளுக்கும் பல்வேறு சங்கங்கள் இயங்கி வந்தன. அந்த சங்கங்களை எல்லாம் ஒருங்கிணைந்து பெரும்பான்மையான சங்கங்கள் ஒன்றுகூடி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு புதிய ஒரு சங்கத்தை உருவாக்கி அந்த சங்கத்தின் துவக்க விழாவிற்கு பள்ளிக் கல்வித்துறை அரசு செயலாளர், தனியார் பள்ளி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை வாழ்த்துரை வழங்கவும் விழாவினை துவக்கி வைக்கவும் அழைத்தோம். அவர்கள் அனையரும் வருகை தந்து விழாவினை சிறப்பித்தார்கள்.

“அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுக்கவில்லை” - வதந்திக்கு பள்ளிகள் சங்கம் விளக்கம்!

அரசு பள்ளிகளில் பயின்ற நாங்கள் தான் தனியார் பள்ளிகளை நடத்தி வருகிறோம். நாம் அரசு பள்ளிகளுக்கு எந்த விதத்திலாவது பயன்பாடாக இருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் அடிப்படையில் அந்த நிகழ்வின் போது பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றிய அதே தருணத்தில் வரும் கல்லியாண்டில் 500 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அருகாமையில் இருக்கிற தனியார் பள்ளிகள் அந்த பள்ளிகளில் பயில்கிற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலே நூலகங்கள் பள்ளிக்கு வர்ணம் பூசுதல், பள்ளி விளையாட்டு மைதானங்களை சுத்தப்படுத்துதல், தூய்மைப் படுத்துதல் விளையாட்டு உபகரணப் பொருட்களை வாங்கிக் கொடுத்தல், மாணவர்களுக்குத் தேவையான இதர General knowledge என்று சொல்லக் கூடிய பொது அறிவு வளர்ச்சிக்கான புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தல், அதற்கான பொருட்கள் வாங்கிக் கொடுத்தல், கணிணி உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் சம்பந்தப்பட்ட நவீன பொருட்களை வாங்கிக் கொடுத்தல் என்று பலவேறு வகையிலே உதவிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மாணவர்களின் வளர்ச்சிக்காக அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த CSR மூலம் தனியார் பள்ளிகளில் பங்களிப்பு இருக்கும் என்று தான் சொல்லப்பட்டதே தவிர எந்த இடத்திலும் அரசு பள்ளிகளை தத்தெடுப்போம் என்று நாங்களும் சொல்லவில்லை தத்தெடுப்போம் என்று அமைச்சர் உள்ளிட்ட அதிகாரி பெருமக்கள் யாரும் சொல்லவில்லை.

“அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுக்கவில்லை” - வதந்திக்கு பள்ளிகள் சங்கம் விளக்கம்!

அது சொல்லப்படாத ஒரு வார்த்தையை அரசியலாக்கி தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளை தத்தெடுக்கிறதா? என்று கேட்பது உண்மையாகவே 500 பள்ளிகளுக்கு CSR மூலம் உதன தயராக உள்ளோம் என்று சொன்ன தனியார் பள்ளி தாளாளர்களுடைய அந்தப் பெருந்தன்மையை கொச்சைப் படுத்துவதாக தினமணி செய்தி உள்ளது. ஆகவே தயவுகூர்ந்து இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

எந்த இடத்திலும் தத்தெடுக்கப்படும் என்ற வார்த்தை யாராலும் உபயோகப்படுத்தப்படவில்லை. அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தனியார் பள்ளிகள் CSR மூலம் பங்களிப்பார்கள், உதவுவார்கள் என்றுதான் சொல்லப்பட்டதே தவிர, தத்தெடுக்கும் என்ற வார்த்தை இல்லை என்பதை இந்த நேரத்திலே தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

மேலும் முக்கிய குறிப்பாக 500 அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் மக தேவையான பொருட்களை CSR மூலம் வழங்க வழங்க முன்வந்துள்ள தனியார் பள்ளிகளும் பெற்றோர் ஆசிரியர் கழகம் முழு ஆதரவும் நன்றியும் தெரிவித்துள்ளதை இங் பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?