தேசீய கீதம். எப்போது?
சட்டப்பேரவையில் இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட இருக்கிறது.
தனது உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறிய நிலையில், தேசிய கீதம் பேசுபொருளாகியுள்ளது.
நடப்பாண்டில் முதல் கூட்டத்தொடரில் தனது உரையை தொடங்கும்போது தேசிய கீதம் பாடவில்லை எனக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை படிக்காமல் வெளியேறினார்.
பொதுவாக, அரசியல் சாசன விதிகள் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும், பொது நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள் உள்ளன.
52 வினாடி கொண்ட முழு தேசிய கீதமும், 20 வினாடி கொண்ட தேசிய கீதத்தின் குறுகிய வடிவும் எப்போதெல்லாம் இசைக்கப்பட வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சக விதிகளில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேசியக் கொடிக்கும் தேசிய கீதத்துக்கும் மதிப்பளிப்பது என்பது அரசியல் சாசன பிரிவு 51(A)(a) கீழ் அடிப்படை கடமை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிவில் மற்றும் ராணுவ நிகழ்வுகள், குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு தேசிய வணக்கம் செலுத்தும் நிகழ்வு, அணிவகுப்புகளில் 52 வினாடி கொண்ட முழு தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசு விழாக்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் குடியரசுத் தலைவர் வரும் போதும், அவர் வெளியேறும் போதும் தேசிய கீதம் இசைக்க வேண்டும்.
அகில இந்திய வானொலியில் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும் ஒலிக்க வேண்டும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சக விதி கூறுகிறது.
ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் அரசு நிகழ்ச்சிக்கு வரும்போது, அவர்கள் வெளியேறும் போதும், 52 வினாடி தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அணிவகுப்பாக தேசியக் கொடியை கொண்டு வரும் போதும், கடற்படை உள்ளிட்ட பல்வேறு படைகளின் கொடிகளை ஏற்றும் போதும் கட்டாயம் தேசிய கீதத்தை இசைக்கவேண்டும்என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், சட்டமன்றங்களில் தேசிய கீதம் இசைப்பது குறித்த எந்த விதிகளிலும் குறிப்பிடவில்லை.
இந்த விஷயத்தில் ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையும் ஒவ்வொரு மரபைப் பின்பற்றுகின்றன.
பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 20 வினாடிகளில் ஆன குறுகிய தேசிய கீதத்தை சட்டப்பேரவை நிகழ்ச்சி தொடங்கும் போதும், நிறைவு பெறும் போது இசைத்து வருகின்றன.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அவை நிகழ்ச்சி தொடக்கத்தில் தேசிய பாடலான "வந்தே மாதரம்" இசைக்கப்பட்டு இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுவது வழக்கம்.
புதுச்சேரியில் அவை தொடங்கிய உடன் முதலில் தேசிய கீதமும் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்தும் நிறைவுறும்போது தேசியகீதமும் இசைக்கப்படுவது நடைமுறை மரபாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கடந்த 70 ஆண்டுகளாக சட்டப்பேரவை தொடங்கும் போது தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படுவது மரபாக இருந்து வருகிறது.
சட்டப்பேரவை தொடங்கப்படும் போது "வந்தே மாதரம்" இசைக்கப்பட்டு வந்த மேற்கு வங்கத்தில், மாநில பாடல் இசைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
58 ஆண்டுகளாக தேசிய கீதம் இசைக்கப்படாமல் இருந்த நாகாலாந்து சட்டப்பேரவையில், 2021 ஆம் ஆண்டு முதல்தான் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதேபோல், திரிபுராவில் 2018 ஆம் ஆண்டு சட்டசபையில் முதன்முறையாக தேசிய கீதம் இசைக்கப்படடு வருகிறது.
தொடர்ந்து ஓடும் ஆர் யன். ரவிதமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டம் இன்று (ஜனவரி 6) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிலையில், நடப்பாண்டின் சட்டப்பேரவையின் முதல் நாளிலும் அரசின் உரையை ஆளுநர் வாசிக்க வேண்டும் என்ற வழக்கமான முறைக்கு எதிராக, திராவிட மாடல் எதிர்ப்பாளராக இருந்து தனது புறக்கணிப்பை தொடர்ந்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
கடந்த ஆண்டுகளின் ஆளுநர் உரைகளில் தமிழ்நாடு அரசின் சாதனைகளை வாசிக்க மறுத்துவந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நடப்பாண்டில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடியதற்காக அரசின் முழு உரையையும் வாசிக்காமல் புறக்கணித்து சென்றார்.
அவரைத் தொடர்ந்து CPIM மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், “தமிழ்நாடு அரசின் மரபுப்படி, எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியும், இறுதியில் தேசிய கீதம் பாடியும் முடிக்கப்படும். ஆனால் இத்தகைய மரபை மதிக்காமல் அரசியல் செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநரின் இந்த அடாவடி போக்கு கண்டிக்கத்தக்கது. ஆர்.என்.ரவியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் வாசிக்க வேண்டிய அரசின் உரையை, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.