வெள்ளை அறிக்கை
100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றிய அரசுநிதிஒதுக்காததால்ஊழியர்களுக்கு2மாதமாக ஊதியம் வழங்குவதில் சிக்கல்.
சைமனுக்கு பிரபாகரனை நல்லா தெரியும். ஆனா பிரபாகரனுக்கு சீமான தெரியவே தெரியாது.-ஒளிப்பதிவாளர் சந்தோஷ் நியூஸ்18ல்.
தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். “இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 34 தமிழக மீனவர்களை விடுவிக்கவும் தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
டாவோஸ் மாநாடு தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதில் அளித்துள்ளார். டி.ஆர்.பி. ராஜா
கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக வளர்ச்சி
பெற்றுள்ளதை அறியாமல் அறிக்கை விடுவதா? டாவோஸ் பெண்களுக்கான மாநாட்டில்
தமிழ்நாடு மட்டுமே பங்கேற்றது. தமிழ்நாடு அடைந்துள்ள தொழில்வளர்ச்சியைவியந்து பாராட்டியுள்ளன உலக நாடுகள்.” என்று கூறியுள்ளார்.
முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது என உறுதி அளித்து
இருந்தேன் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம், எங்களுக்காக நீங்கள்
இருக்கிறீர்கள். உங்களால் கிடைத்த வெற்றி என்று மக்கள் கூறினார்கள், ஆனால்
இது நமக்கு கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்தியாவின் முதல் பை-பாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த
சாதனையாளரும், பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணருமான கே.எம்.செரியன்
மரணமடைந்தார். செயலிழந்த இதயங்களை மீண்டும் துடிக்க வைத்து, பலருக்கு
மறுபிறவி அளித்தவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து
வருகின்றனர்.
குவைத் நாட்டில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த கடலூரைச் சேர்ந்த 2
தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்து
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
குடியரசு தின விழாவில் காந்தியடிகள் காவலர் பதக்கங்களை மொத்தம் 5 பேருக்கு
முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்
தீயணைப்பு வீரர் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது.ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்பு இல்லை என்று தமிழ்நாடு
அரசு அறிவித்துள்ளது. அதிமுக, பாஜக தவிர அனைத்து கட்சிகளும் புறக்கணித்தன.