அருகதை இல்லாதவன்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சபாநாயகரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். . பொள்ளாச்சி சம்பவத்தில் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் 3 குற்றவாளிகள் கைது என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். பொள்ளாச்சி வழக்கில் 12 நாட்கள் கழித்துதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது என முதல்வர் குற்றம்சாட்டியிருந்தார்.
கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவது மாநில அரசு; உதவித்தொகை – ஊக்கத்தொகை - கல்விக் கட்டணச் சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள்.இவ்வளவையும் நாங்கள் செய்ய, எம் பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ எங்கிருந்தோ வந்த ஆளுநர்! இதையெல்லாம் மிஞ்சும் கொடுமையாக, துணைவேந்தரையும் ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநரே நியமிக்கலாம் என்று #UGC தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை?- தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான் UGC_Draft_Regulations! இதனை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்! வெல்வோம்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.