நடந்தது என்ன?

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் நாயக்கர்பட்டியை மையமாகக் கொண்டு ஒன்றிய  அரசு கடந்த நவம்பர் மாதம் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. 

மேலும், அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, கிடாரிப்பட்டி, வல்லாளபட்டி, தெற்குத்தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய, சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தகவல் வெளியானது.


இந்நிலையில், டிசம்பர் 9-ம் தேதி தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது.அதில் முதல்வர் ஸ்டாலின் தான் முதல்வராக இருக்கும்வரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன் என உறுதியளித்தார் .

  அதற்கு பிறகும்  ஒன்றிய  அரசு, தமிழ்நாடு அரசால் 'பல்லுயிர்ச் சூழல் மண்டலமாக' அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டிக்கு உட்பட்ட 500 ஏக்கரைத் தவிர்த்து, பிற இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தது.தமிழ்நாடு அரசு அதையும் கடுமையாக எதிர்த்தது. 


இது அரிட்டாபட்டி, கேசம்பட்டி, சின்ன கற்பூரம்பட்டி, தெற்குத்தெரு, தும்பைப்பட்டி, கம்பூர் உள்ளிட்ட பகுதி மக்களையும்  கடுமையாக சீண்டியது. 

இந்நிலையில், '' கனிமச் சுரங்கம் அமையும் முடிவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த பகுதியை மோத்தமாக 'பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு வேளாண் மண்டலமாக' அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். 

இந்நிலையில், கடந்த ஜனவரி 7ஆம் தேதி மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிய அரசை கண்டித்து தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக திரண்டு வந்து மதுரையை முடங்க  வைத்தனர்.

மேலும், மேலூர் வணிக கடையடைப்புப் போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில்தமிழ் நாடு அரசு ,மக்கள் எதிர்ப்பை கண்டு ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அடங்கிய குழுவினர் நாயக்கர்பட்டி மையமான பகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளம் மற்றும் ஏராளமான காலாச்சார பாரம்பரிய தளங்கள் அடங்கியுள்ளதாக   தெரிவித்தனர். 

எனவே, பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதை கருத்தில் கொண்டு மதுரை நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம ஏலம் ரத்து செய்யப்படுகிறது'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

----------------------------------


-










வேங்கைவயல்  நடந்தது என்ன

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள ஒரு குட்கிராமம் வேங்கைவயல். இங்கு, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி கண்டறியப்பட்ட இந்த கொடூரச் செயல் குறித்து சிபிசிஐடி விசாரித்து வந்தது. 2023 ஜனவரி 16-ஆம் தேதி விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி காவல்துறையினர், நேரடி சாட்சியங்களாக 300 பேரிடம் விசாரணை நடத்தியதுடன், 5 பேரிடம் குரல் பரிசோதனை, 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை என அறிவியல் பூர்வமாகவும் விசாரணையை இந்நிலையில், வேங்கைவயல் சம்பவம் குறித்த வழக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மறுத்த தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கடந்த 20-ஆம் தேதியே புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக கூறினார்.

வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்களை உள்ளடக்கிய முட்டுக்காடு ஊராட்சித் தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டராக இருந்த சண்முகத்தை பணிநீக்கம் செய்ததே சம்பவத்திற்கான மூல காரணம் என கூறியுள்ளது.

குடிநீர் ஆப்ரேட்டராக இருந்த சண்முகமுத்தின் நண்பர்களான சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இரண்டு இளைஞர்களும் குடிநீர் தொட்டி மீது ஏறி மலம் கலந்ததாகவும், பத்மாவின் கணவரான முத்தையாவை பழிவாங்கும் நோக்கில், குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக காவலர் முரளி ராஜா தவறான தகவலை பரப்பியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டுவதாகவும் சிபிசிஐடி குறிப்பிட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளி ராஜா, மணல்மேல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நிலையில், இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். சம்பவத்தின் போது சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலையின்றி இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/i/status/1882793897900056834

இதனிடையே, உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், குற்றப்பத்திரிகை மீது அதிருப்தி இருந்தால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என சுட்டிக்காட்டினர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?