பொங்கல்

 முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி தந்த ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாலார்பட்டி கிராம மக்கள் 26-வது ஆண்டாக பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

தென்மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி தந்த பொறியாளர் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாள் நாளை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள், பொங்கள திருநாளன்று அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி, இந்த வருடம் தை திருநாளான இன்று ஜான் பென்னிகுயிக் 184 வது பிறந்த நாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டி கிராம மக்கள் 26-வது ஆண்டாக அவருக்கு பொங்கல் வைத்து கொண்டாட்டியுள்ளனர். இதில், பாலார்பட்டி கிராமத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இசை வாத்தியங்களுடன், தேவராட்டம், சிலம்பாட்டம் ஆடி, காளை மாடுகளுடன் பென்னிகுயிக் திரு உருவப்படத்தை கைகளில் ஏந்தியவாறு, பொங்கல் பானையுடன் கிராமம் முழுவதும் ஊர்வலமாகசெ ன் ற னர்  .

ரூ 100

 நோட்டு 

 s100ட்டு இந்தியாவில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மதிப்புள்ள நோட்டுகளில் ஒன்றாகும். இது அனைத்து துறைகளிலும் பரிவர்த்தனைகளுக்கு அவசியம். சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) போலி ₹100 நோட்டுகள் குறித்து ஒரு குறிப்பிடத்தக்க எச்சரிக்கையை வெளியிட்டது. குறிப்பாக ₹2000 நோட்டுகள் வாபஸ் பெற்ற பிறகு, ₹200 மற்றும் ₹500 நோட்டுகளுடன் போலி நாணயங்களின் புழக்கம் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. போலி நோட்டுகள் பெரும்பாலும் உண்மையான நாணயத்தை ஒத்திருப்பதால், முதல் பார்வையில் அடையாளம் காண்பது கடினம்.

article_image2


Iஇருப்பினும், உண்மையான ₹100 நோட்டுகளை மக்கள் அடையாளம் காண உதவும் தெளிவான வழிகாட்டுதல்களை RBI கோடிட்டுக் காட்டியுள்ளது. உண்மையான ரூபாய் நோட்டுகளில் வாட்டர்மார்க்கிற்கு அருகில் செங்குத்து பட்டையில் மலர் வடிவமைப்பும், வாட்டர்மார்க் பகுதியில் "100" என்ற எண்ணுடன் மகாத்மா காந்தியின் ஒளி உருவமும் இடம்பெற்றுள்ளன. நம்பகத்தன்மையை சரிபார்க்க இவை முக்கிய கூறுகள் ஆகும். உண்மையான ₹100 நோட்டில் உள்ள அந்த பாதுகாப்பு நூலில் "இந்தியா" மற்றும் "RBI" என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.


அவை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும்போது நீலம் மற்றும் பச்சை நிறங்களுக்கு இடையில் மாறுகின்றன. கூடுதலாக, செங்குத்து பட்டைக்கும் மகாத்மா காந்தியின் படத்திற்கும் இடையிலான இடைவெளியில், "RBI, 100" என்ற வாசகம் தெரியும். இந்த அம்சங்கள் ரூபாய் நோட்டின் நம்பகத்தன்மையை உறுதிசெய்கின்றன மற்றும் போலிகளைக் கண்டறிய நம்பகமான முறையை வழங்குகின்றன. 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு போலி ரூபாய் நோட்டுகள் அதிகரித்து வரும் கவலையாக இருந்து வருகின்றன.

போலி ரூபாய் நோட்டுகள், குறிப்பாக ₹100 ரூபாய் நோட்டுகள், சந்தையில் பரவலாக உள்ளன, இது சாதாரண குடிமக்களுக்கு தினசரி சிரமங்களை ஏற்படுத்துகிறது என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இந்த சிக்கல்களை நிவர்த்தி செய்வதையும், இதுபோன்ற மோசடிகளுக்கு பொதுமக்கள் பலியாவதிலிருந்து பாதுகாப்பதையும் RBI இன் வழிகாட்டுதல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
article_image5

போலி ரூபாய் நோட்டு பிரச்சனையை எதிர்த்துப் போராடுவதற்கு பொது விழிப்புணர்வு மிக முக்கியமானது. குறிப்பிட்ட பாதுகாப்பு அம்சங்களுக்காக நாணயத்தை கவனமாக ஆராய்வதன் மூலம், தனிநபர்கள் தாங்கள் உண்மையான ரூபாய் நோட்டுகளைக் கையாள்வதை உறுதிசெய்து, கள்ள நாணயத்தின் புழக்கத்தைக் குறைக்க உதவலாம்.

----------------------------------------------

பொங்கல்

தமிழர் தம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க வைக்கும் பொங்கல் திருநாள் இது! அதனால்தான் இதனை 'தமிழர் திருநாள்' என்கிறோம்!

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை - என்றார் வள்ளுவர். உழைப்பை வாழ்க்கையாகக் கொண்ட மனிதன், தன் உழைப்பின் கீழ் பெறும் பயனைக் கொண்டாடினான் அதுதான் பொங்கல் நாள். சிலப்பதிகாரம், புறநானூறு தொடங்கி அனைத்து இலக்கியங்களிலும் பொங்கல் பொங்குகிறது.

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்" - என்று நற்றிணையும் –

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையும் –

"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – என்று கலித்தொகையும் சொல்கிறது. இத்தகைய பண்பாட்டின் தொடர்ச்சி பொங்கல் திருநாளுக்கு உண்டு.

பொங்கல் நாளை மகிழ்ச்சியுடன் ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு விளக்கம் அளித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கவிதை தீட்டினார்கள். அதில் உள்ள சில வரிகள் அருமையாக விளக்கம் அளிக்கும். ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு அண்ணாவின் கவிதைப் பதில் இது.

"உழைப்பின் உயர்வைப் போற்றிடும் பண்பு

உலகெலாம் பரவிடல் வேண்டு மென்றே

விழைவு மிகக் கொண்டோம் அதனால்!

காய்கதிச் செல்வனைப் போற்றினர், ஏனாம்?

உயிர்கட்கு ஊட்டம் அளிப்பவ னதனால்.

உழவர்கள் உயர்வினைப் போற்றிடல் எதனால்?

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர் அதனால்.

ஆவினம் போற்றினொம். அஃது எதனால்?

பரிந்து தீஞ்சுவைப் பால் அளிப்பதனால்!

எனவே இவ்விழா நன்றி கூறிடும் நல்விழாவாகும்" – என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா.

"ஒரு கலை விழாவாக, ஒரு பண்பாட்டு விழாவாக தமிழகத்திலே நடத்தப்படுவது பொங்கல் விழா. உழவர் திருநாள் இப்பொங்கல் புதுநாள் என்பதை அனைவரும் அறிந்து போற்றுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்புவரை சங்கராந்திப் பண்டிகையாகவும், சூரிய நமஸ்காரப் பண்டிகையாகவும் இருந்து வந்த நிலைமாறி, இப்போது அறுவடை விழா என்றும் உழவர் திருநாள் என்றும், தமிழர் விழா என்றும் - திராவிடர் திருநாள் என்றெல்லாம் ஏற்றம் பெற்று விளங்கிடக் காண்கிறோம். எல்லாப் பண்டிகை களும் நம்மைப் பிற இனத்தாரின் எடுபிடிகளாக்குவதற்கே பெரிதும் பயன்பட்டு வருவது கண்டு பேராசிரியர்கள் பலரும், சிந்தனையாளர்களும் சீர்திருத்தச் செம்மல்களும் தமிழருக்கே உரித்தானதும் தனிச்சிறப்பளிப்பளிப்பதுமான இப்பொங்கல் புதுநாள் மாண்பினை மக்கள் அறிந்திடச் செய்துள்ளனர்'' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதினார்கள்.

“கற்பனைக் கதைகள் இல்லாத பொங்கல் விழாவில், ஒரு இனத்தின் பண்பாடு இருக்கிறது” - முரசொலி !

'கற்பனைக் கதைகள் இல்லாத விழா பொங்கல் விழா' என்று சொன்னார் தந்தை பெரியார். பொங்கல் விழாவில் கற்பனைகள் இல்லை. உழைப்பு இருக்கிறது. மண்ணும் மக்களும் இருக்கிறார்கள். வியர்வையும் ரத்தமும் இருக்கிறது. மொத்தத்தில் ஒரு இனத்தின் பண்பாடு இருக்கிறது. மகிழ்ச்சி இருக்கிறது. மலர்ச்சி இருக்கிறது.

ஆண்டுதோறும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இருந்தாலும் ஆட்சியின் மாட்சியும் வளர்ச்சியும் அதனுள் சேரும் போது மகிழ்ச்சி அதிகரிக்கவே செய்யும். அந்த வகையில் பார்த்தால் சில ஆண்டுகளாக மக்கள் இன்னும் கூடுதல் மகிழ்ச்சியோடு இத்திருநாளைக் கொண்டாடி வருகிறார்கள்.

இதனைத் தான், "இல்லத்தில் மகிழ்ச்சிப் பொங்கல்! மாநிலத்தில் வளர்ச்சிப் பொங்கல்!" என்று சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொரு திட்டமும் கோடிக்கணக்கான மக்களை மகிழ்விக்கும் திட்டங்களாக அமைந்துள்ளன. "ஆறாவது முறை ஆட்சி அமைந்த போது, அது விடியல் ஆட்சியாக அமையும் என்றோம். நான் செல்லுமிடமெல்லாம் கூடும் மக்களின் முகங்களில் காணும் மகிழ்ச்சிதான் விடியலின் அடையாளம். மாதம் தோறும் ஒரு கோடியே 17 லட்சம் மகளிர் சகோதரிகள் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையைப் பெறுகிறார்கள். அக்கவுண்டில் அவர்கள் கணக்கில் ஆயிரம் ரூபாய் போய்விழும் போது அவர்களது முகத்தைப் பாருங்கள் அதில் தெரியும் இதான் விடியல் ஆட்சி என்று! தாய் வீட்டுச் சீரைப் போல் - எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் மாதாந்திரச் சீர் என்று என்னரும் தமிழ்ச் சகோதரிகள் வாய் மணக்கச் சொல்கிறார்கள். அதுதான் விடியல் ஆட்சிக்கான ஆதாரம்" என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். இப்படி ஒவ்வொரு திட்டத்தின் மூலமாகவும் பல்லாயிரம் - பல லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் மூலமாக பெண்ணினம் முழுவதும் - புதுமைப் பெண் திட்டம் மூலமாக மாணவியரும் - தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமாக மாணவர்களும் - நான் முதல்வன் திட்டம் மூலமாக தமிழ்நாட்டு இளைஞர்களும் - காலை உணவுத் திட்டம் மூலமாக பள்ளி மாணவ மாணவியரும் - சுய உதவிக் குழுக்கள் மூலமாக பெண்களும் - தொகுப்புதவிகள் மூலமாக வேளாண் மக்களும் - பல்வேறு சலுகைகள் மூலமாக ஊழியர்களும் பணியாளர்களும் பயனடைந்து வருகிறார்கள். அவர்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டம். ஒவ்வொரு திட்டமும் பலதரப்பட்ட மக்களையும் மகிழ்வித்து வருகிறது. அனைத்து திட்டங்களும் மக்களுக்கு கரும்பாக இனிக்கிறது.

"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் தமிழ்நாட்டை மேம்படுத்தும் தொண்டை மேல் போட்டுக் கொண்டு அதே பணியாக இருப்பவன். இதைத்தவிர எனக்கு வேறு பணிகள் இல்லை. நவீனத் தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை மாநிலமாக - முன்னோடி மாநிலமாக உயர்த்திக் காட்டுவேன்." என்ற உறுதிமொழி கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் பால் வார்த்துள்ளது. மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குவதால், பானைகளில் பொங்கல் பொங்குகிறது. 'வளர்ச்சியே மகிழ்ச்சியாகி பொங்குகிறது. பொங்கட்டும். பொங்கலோ பொங்கல்' என்று முரசொலித்துச் சொல்வோம்!


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?