இங்கே பேசாமல் எங்கே ?
திமுகவின் செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "டங்க்ஸ்டன் சுரங்கத்தை சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியபோதே திமுக விவசாயிகளுக்கு ஆதரவாக தான் இருக்கிறது என அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.
திமுக எதிர்கட்சியாக இருந்த போது 8 வழிச்சாலை அல்லது வேறு ஏனைய திட்டங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட கூடாது, விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை கொடுத்து விட்டு தான் நிலத்தை எடுக்க வேண்டும் என கூறினோமே தவிர, 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம் என கூறவில்லை.
பரந்தூர் சென்ற தவெக தலைவர் விஜய் அப்படியே டெல்லி பறந்து போய் பிரதமரிடம், மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கூறலாம். அதற்கும் திமுக தயராக தான் உள்ளது. நீர்நிலைகள் அழிக்கப்படுகிறது என கூறினால் இன்று சென்னையே இருக்காது. 140 ஏரி நீர்நிலைகள் தான் இன்று வாழ்விடமாக மாறியுள்ளது. விஜய் வீடு இருக்கும் இடம் கூட நீர்நிலைகள் இருந்த இடம் ஆக தான் உள்ளது. மக்கள்தொகை பெருக்கம், மக்களின் வாழ்வாதாரம் விரிவடையும் போது தவிர்க்க முடியாதது.
விமான நிலையம் அமைப்பதை தாண்டி அதில் என்ன லாபம் உள்ளது என்பதை விஜய் தான் கூற வேண்டும். லாபம் நஷ்டம் அவருக்கு தானே தெரியும். அரசியலுக்கு வரும் போதே எனக்கு நஷ்டம் தான். ஆனாலும் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். அரசியல் என்பது லாபம் நஷ்டம் கணக்கல்ல, விமானநிலையங்கள் மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ளது. அப்போது விஜய் கூறுவதை பார்த்தால் நரேந்திர மோடிக்கும், மத்திய பாஜக அரசிற்கும் இதில் லாபம் இருக்குமானால் அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு அடி நிலம் என்றாலும் விவசாயி விட்டுக் கொடுக்க உணர்வுப்பூர்வமாக ஒத்துவரமாட்டார்கள். அந்த நிலம் அவர்களது தாய் போல உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அதை உடனடியாக தூக்கி எறிய முடியாது. மக்கள் ஏற்க்கும் வரை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும் என்றார்
..-------------------------------------------
இங்கே பேசாமல் எங்கே ?
1921-ம் ஆண்டு முதல் நடந்துவரும் அனைத்திந்திய சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடின் (AIPOC) 85-வது மாநாடு பீகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, மாநில நாடாளுமன்ற விவகார அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி, பீகார் சட்டப்பேரவை தலைவர் நந்த் கிஷோர் யாதவ், சட்டமன்ற துணை தலைவர் நரேந்திர நாராயண் யாதவ், பீகார் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை தலைவர்கள், பீகார் மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமேலவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, துணை தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். அப்போது மாநாட்டில் உரையாற்றிய அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவையை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதிப்பதாக பேசினார்.
உடனே மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் குறுக்கிட்டு, `ஆளுநர் குறித்து இங்குப் பேச அனுமதியில்லை. மேலும், ஆளுநர் குறித்து அப்பாவு பேசியவை பதிவாகாது' எனத் தெரிவித்திருக்கிறார். இதனால், அதிருப்தியடைந்த தமிழ்நாட்டின் சபாநாயகர் அப்பாவு, ``ஆளுநர் சட்டப்பேரவையை அவமதித்தது குறித்து இங்கு பேசாமல் வேறு எங்கு பேசுவது" எனக் கூறி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார் .ஆனால் இதேபோல் ஆளுநரால்