ஒரு குடிமகனின் சோகம்?
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை காவல் ஆணையர் அருண் மீதான உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை பிப். 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆணை.
நாட்டின் 76வது குடியரசு தின விழா நேற்று (26.01.2025) கோலாகலமாக நடைபெற்றது. இந்தியத் தலைநகரான டெல்லியில் குடியரசுத் தலைவர் செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதை தொடர்ந்து, நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும், தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், அரசு பள்ளி ஒன்றில் குடிபோதையில் தேசியக் கொடியை ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பள்ளியில், நேற்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
அந்த விழாவின் போது, தேசியக் கொடியை ஏற்ற அப்பள்ளி தலைமை ஆசிரியர் சஞ்சய் குமாரை, சக ஆசிரியர்கள் மேடைக்கு அழைத்தனர்.
குடிபோதையில் இருந்த சஞ்சய் குமார், தடுமாறி தள்ளாடிக் கொண்டு மேடைக்கு வந்து தேசியக் கொடியை மிகவும் சிரமப்பட்டு ஏற்றினார்.
இவரின் நிலைமையை கண்ட அந்த கிராம மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், சஞ்சய் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்வதற்கு முன்பாக சஞ்சய் குமார் கூறியதாவது, “நான் உதவியற்ற நிலையில் குடிக்கிறேன். ஐந்து மாதங்களாக எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. மதிய உணவுக்கும் எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. நான் இந்த இடத்தை எப்படி வாழ்கிறேன், நடத்துகிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் கடனில் இருக்கிறேன். நான் என் வீட்டையும் இந்தப் பள்ளியையும் எப்படி நடத்துகிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்” என்று கூறினார்.
பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும் அங்கு மதுவிலக்கு நடைமுறையில்உள்ளதும்குறிப்பிடத்தக்கது
. 'இரும்பு மனிதர்’ காலம்!
2015 ஆம் ஆண்டு ‘நமக்கு நாமே’ என்ற மக்கள் சந்திப்புப் பயணத்தை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நிகழ்த்தினார்கள். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள், “என் வீட்டில் பிறந்த மக்களில் இந்தக் குழந்தைக்குத் தான் ஸ்டாலின் என்று பெயரிட்டேன்.
ரஷ்யத் தலைவர் ஸ்டாலினுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது தெரியுமா? ஸ்டாலின் என்றால் ‘இரும்பு மனிதர்’ என்று பொருள். எனவே, அந்தப் பெயரையே இந்தக் குழந்தைக்கு சூட்டினேன். அப்போதே எனக்குள் இந்தக் குழந்தை இரும்பு மனிதராக வருமென்ற உணர்வு ஏற்பட்டது. நான் நினைத்தபடியே ஸ்டாலின் இப்போது
ஸ்டாலினாகவே உருவெடுத்துள்ளார். அவர் ஸ்டாலினாகவே நிர்வாகத்தை நடத்துவார். மக்களுக்கு நல்லுதவிகள் செய்வார்” என்று பேசினார்கள்.
அத்தகைய சிறப்பு மிக்க ஆட்சியை வழங்கி வரும் முதலமைச்சர் அவர்கள் இரும்பு குறித்த கரும்பான செய்தியை வழங்கி இருக்கிறார்கள்.
“தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வுப் பிரகடனத்தை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக -
இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல - உலகுக்கே நான் அறிவிக்கிறேன். 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில் நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.” என்று தலைநிமிர்ந்து உலகுக்கு அறிவித்துள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
இரும்பு உருக்குதல், ஆயுதங்கள் செய்தல், வேளாண் உற்பத்திக்குத் தேவையான அடிப்படைக் கருவிகளை செய்தல் போன்ற தொழில்நுட்ப
அறிவினைப் பெற்றிருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.
“இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும்”
“இரும்பு செய் தொடியின் ஏர ஆகி”
“எஃகுறு மாந்தரின் இனைந்துகண் படுக்கும்” -– - ஆகிய அகநானூறு நூலின் வரிகள் இரும்பை ஆயுதமாக்கும் முறையையும் பயனையும் விரிவாக எடுத்துரைக்கின்றன.
இதுவரை நாம் பேசி வந்தது அனைத்தையும் பழம் பெருமைகள் என்றும், இலக்கியத்தில்தானே இருக்கிறது என்றும் சொல்லி வந்தார்கள். இதோ இதனை ஆய்வுப் பூர்வமாக மெய்ப்பித்து நாட்டுக்கு அறிவித்திருக்கிறார் மாண்புமிகு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புனே நகரிலுள்ள பீர்பால் சகானி தொல் அறிவியல் நிறுவனம், அகமதாபாத் நகரிலுள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகிய தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களும், பன்னாட்டளவில் உயரிய நிறுவனமான அமெரிக்க நாட்டு புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வகமும் இதனை ஒப்புக் கொண்டுள்ளன. ஒரே
இந்த பகுப்பாய்வு முடிவுகள் இந்தியாவில் உள்ள தொல்லியல் அறிஞர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களும் ஏற்றுக் கொண்ட பிறகு தான் நாட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
என்பதை இவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
“விந்திய மலைக்கு வடக்கே அமைந்துள்ள பண்பாட்டு இடங்கள் செப்புக் காலத்தில் இருந்தபோது, விந்தியத்தின் தெற்கே வணிகத்திற்குப் பயன்படுத்தும்
அளவிற்கு செப்புத் தாது குறைவாக கிடைத்தன. ஆனால், செம்பைவிட வலிமையான இரும்பு பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.
எனவே, வடஇந்தியாவின் செப்புக் காலமும் தென்னிந்தியாவின் இரும்புக் காலமும் சமகாலத்தவை’’ என்று இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.« தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு முடிவுகள் பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் நகர நாகரிகமும். எழுத்தறிவும் கி.மு. ஆறாம் நூற்றாண்டளவிலே தொடங்கிற்று என்று கீழடி அகழாய்வு முடிவுகள் அறிவியல் அடிப்படையில் நிறுவியுள்ளன.
« பொருநை ஆற்றங்கரையில் 3,200 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் பயிர்தொழிலில் நெல்பயிரிடப்பட்டுள்ளது என்பதை
சிவகளை அகழாய்வு முடிவு வெளிப்படுத்தியது.
« அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாட்டில் இரும்பின் அறிமுகம் 4,200 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது என்ற செய்தியை தமிழ்நாடு சட்டமன்றத்தின் வாயிலாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் உலகிற்கு அறிவித்தார்கள். இப்போது இரும்பின் காலம் மிகத் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் இப்போது செய்து வரும் ஆய்வுகளின் மூலமாக கிடைக்கும் சான்றுகளும், அறிவியல் அடிப்படையிலான காலக்கணக்கீடுகளும் இதுவரை நாம் சொல்லி வந்த கருத்துகளை மீளாய்வு செய்யும் வகையில் அமைந்துள்ளன. அதனடிப்படையில் தான் தமிழ்நாட்டில் இரும்பு 5,300 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகி இருக்க வேண்டும் என்று ஆய்வுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
இரும்பின் அறிமுக காலத்தை நிறுவுவதற்கான ஆய்வில் உலகளவில்
தொல்லியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இரும்புத் தொழில்நுட்பம் ஆசியா மைனரில் கி.மு.1000 ஆண்டுவாக்கில் தோன்றியதாகவும் பின்னர் உலகின் பல பகுதிகளுக்கு பரவியதாகவும் கருதப்பட்டது. இதனை வைத்து ஒவ்வொரு நாடும் ஆய்வு செய்து வருகிறது. தமிழ்நாட்டின் ஆய்வு இதன் காலத்தை 5300 ஆண்டுகளாகக் கணித்துள்ளது.
இதனை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் தெற்காசிய தொல்லியல் துறை
பேராசிரியர் திலீப் குமார் ஏற்றுக் கொண்டுள்ளார். “இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது” என்று சொல்லி இருக்கிறார். “கதிரியக்கக் காலக்கணக்கீடுகள் தமிழ்நாட்டு மாதிரிகள் காலத்தால் முந்தியவை என்பதை மெய்ப்பிக்கின்றன” என்று பாரீசில் உள்ள பிரென்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின்
பேராசிரியர் ஒஸ்மண்ட் போப்போராச்சி கூறியிருக்கிறார்.
இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் முனைவர் ராகேஷ் திவாரி, “இந்திய தொல்லியல் துறையில் இது ஒரு திருப்புமுனை. இந்தக் காலக்கணக்கீடுகள் இந்தியாவிலும் உலகெங்கிலும் இரும்புத் தொழில் நுட்பத்தின் தொடக்க காலத்தை நிறுவுகின்றன” என்று சொல்லி இருக்கிறார். இப்படி உலகம்
ஒப்புக் கொண்ட உண்மையைத்தான் நாட்டுக்கு அறிவித்துள்ளார் மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள்.
‘முதலில் தோன்றியது குரங்கு என்றால், அதுவும் தமிழ் குரங்காகத் தான் இருக்கும்’ என்று சிலர் இங்கே கிண்டலடிப்பார்கள். அவர்களது வாய்க்கு இரும்புப் பூட்டு போட வைத்திருக்கிறது இரும்பின் ஆய்வு.