திரு வள்ளுவர்.

 குமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தையும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தையும் இணைக்கும் வகையிலான கண்ணாடி இழைப் பாலம் சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது.

கடல் மீது இப்படி கண்ணாடிப் பாலம்

கட்டப்பட்டிருப்பது இதுவே முதல் முறை 


விவேகானந்தர்   பாறையோடு ஒப்பிட்டால், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை உயரம் குறைவானது. ஆகவே, கடல் கொந்தளிப்பாக இருக்கும்போதும் நீர்மட்டம் குறைவாக இருக்கும்போதும் திருவள்ளுவர் சிலைக்கு படகுகளை இயக்க முடிவதில்லை.


இதனால் இந்த இரு நினைவுச் சின்னங்களையும் இணைக்கும் வகையில் ஒரு பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. சுமார் 37 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தப் பாலம் 77 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டது.

கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட பாலத்திற்கான வளைவு 11 மீட்டர் உயரம் கொண்டது.

இந்த பத்து மீட்டர் அகலமுள்ள பாலத்தின்  நடுவில் 2.4 மீட்டர் அகலத்திற்கு கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆகவே, பாலத்தின் மீது நடந்து செல்பவர்கள் அதன் வழியாக கீழே கடலைப் பார்க்க முடியும்.


"இந்தப் பாலம் கடலின் மீது கட்டப்பட்டதால் தூண்கள் ஏதும் அமைக்கப்படாமல் இரு பாறைகளையும் இணைக்கும் வகையில் ஒரு வளைவு (arch) அமைக்கப்பட்டு, அந்த வளைவிலிருந்து வரும் கம்பிகள் பாலத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்தில் பாலம் முழுக்கவும் கான்கிரீட்டால் அமைக்கவே முடிவு செய்யப்பட்டிருந்தது. பின்னரே, கண்ணாடியை பொருத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பாலத்தை வடிவமைத்த  ஆர்க்கிடெக்டான டேவிட் ஆர். ஞானசுவாமி.

  பாலத்தின் பகுதிகள் தனித்தனியாக புதுச்சேரியில் செய்யப்பட்டு, கன்னியாகுமரிக்குக் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டன. இதில் உள்ள கண்ணாடி உறுதியாக்கப்பட்ட கண்ணாடி (toughened glass) வகையைச் சேர்ந்தது. இது 53 மி.மீட்டர் தடிமனானது. 

முழுமையாக கண்ணாடியால் கட்டப்படாமல் நடுப் பகுதி மட்டும் கண்ணாடி பொருத்தப்பட்டதற்கு சில காரணங்கள் உள்ளன.

பலர் உயரத்தில் உள்ள கண்ணாடி மீது நடக்க விரும்ப மாட்டார்கள். மேலும் மழை பெய்யும் காலங்களில் கண்ணாடி வழுக்கவும் கூடும்.  இதனாலேயே இரு புறங்களிலும் கான்கிரீட்டும் நடுவில் கண்ணாடியும் பொருத்த முடிவுசெய்யப்பட்டது. 


 வரும் மக்கள் கூட்டத்திற்கு சுமார் ஐந்தரை சென்டிமீட்டர் கனமுள்ள கண்ணாடி தேவை என முடிவு செய்யப்பட்டது. 


இந்தப் பாலம் திறக்கப்பட்டிருப்பதன் மூலம், திருவள்ளுவர் சிலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவிலேயே கடல் மீது இப்படி ஒரு பாலம் கட்டப்படுவது இதுதான் முதல் முறை.


சுமார் 37 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தப் பாலம் 77 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டது.

தி.மு.கவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் திருவள்ளுவர்  பெருமைப்படுத்தும் வகையில் கலைஞரால் அமைக்கப்பட்டது வள்ளுவர் கோட்டம். இரண்டாவது, கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு மிகப் பெரிய சிலை .

திருவள்ளுவர் சிலை தொடர்பாக தமிழக அமைச்சரவை 1975ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி முடிவெடுத்தது. 


விவேகானந்தர் பாறையிலிருந்து சுமார் 590 அடி தூரத்தில் அமைந்திருக்கும் மற்றொரு பாறையில் சுமார் பத்து லட்ச ரூபாய் செலவில் 75 அடி உயரத்திற்கு திருவள்ளுவர் சிலையை உருவாக்குவது என அந்தத் தருணத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

இதில் சிலையின் பீடம் 42 அடி உயரத்திலும் சிலை 33 அடி உயரத்திலும் இருக்கும் என முடிவுசெய்யப்பட்டது. 

ஆனால்,  தீர்மானம் நிறைவேற்றப் பட்ட ஒரு மாதத்தில் ஜனவரி 31ஆம் தேதி தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது.


கலைஞரால் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம் ஆளுநர் கே.கே. ஷா தலைமையில் அப்போதைய குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதுவால் 1976ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திறக்கப்பட்டது ஆனால் திருவள்ளுவர் சிலை கண்டுகொள்ளப்படவில்லை.

 1979ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் கலந்துகொண்ட நிகழ்வில் அப்போதைய இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். 

ஆனால், அதற்கு பிறகும்  வள்ளுவர் சிலை கண்டுகொள்ளப் படவில்லை 


மீன்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்னர்1989-ல் கணபதி ஸ்தபதி தலைமையில் இந்தப் பணியை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. கருணாநிதி பேசிய போது சிலையின் உயரம் 133 அடியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு மே மாதத்தில் செப்புச் சிலையாக அல்லாமல், கல்லினால் அந்தச் சிலையை அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

பீடத்தின் உயரம் 38 அடியாக இருக்கும் என்றும் சிலையின் உயரம் 95 அடியாக இருக்கும் என்றும் முடிவுசெய்யப்பட்டது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி சிலைக்கானப் பணிகள் கலைஞரால் கன்னியாகுமரியில்  துவக்கி வைக்கப்பட்டன. ஆனால், மீண்டும்  ஐந்து மாதங்களுக்குள் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் முடங்கிப் போனார் திருவள்ளுவர் .


1996-இல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, சிலையை அமைக்கும் பணிகள் வேகப்படுத்தப்பட்டன. புதிய மதிப்பீட்டில் 6 கோடியே 16 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. பிறகு வேகமாக பணிகள் நடந்து, 1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி சிலை முழுமையாக எழுப்பி முடிக்கப்பட்டது.

"இந்த சிலையின் எந்த இடத்திலும் இரும்போ கன்கிரீட்டோ பயன்படுத்தப்படவில்லை. கற்களை இணைக்க கல்லால் ஆன ஆணிகள் செய்யப்பட்டு, அதன் மூலம் சில இடங்களில் கற்கள் இணைக்கப்பட்டன. இந்தச் சிலை 3 டன் முதல் 8 வரை எடை கொண்ட 3,681 கற்களால் ஆனது .

இந்தக் கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குவதன் மூலமே சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது .

கடற்காற்று சிலையைச் சேதப்படுத்தாமல் இருக்க, சிலையின் மீது பாலிசிலிகான் (polysilicon) கலவை பூசப்பட்டிருக்கிறது. இந்தச் சிலையை அமைக்கும் பணிகள் ஒரு வருடம் 9 நாட்கள் நடந்தது .

சிலைக்காகக் கற்களை உடைப்பதில் ஆரம்பித்து சிலையை பொருத்துவது வரை  500 பேர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்றும் கணபதி ஸ்தபதி குறிப்பிடுகிறார்.

இந்தச் சிலையின் திறப்பு விழா 1999ஆம் ஆண்டு டிசம்பர் 31 - 2000வது ஆண்டு ஜனவரி 1 ஆகிய தேதிகளில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியால் நடத்தப்பட்டது.அவரால் துவக்கப் பட்ட திருவள்ளுவர் சிலை  அவராலேயே திறந்து வைக்கப் பட்டது.இச்சிலை திருவள்ளுவரை மட்டும் நினைவூட்ட வில்லை.உருவாக்கிய கலைஞரையும. சேராத்தே பெருமைப்படுத்துகிறது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?