வைரஸ் பாதிப்பு.பயம் வேண்டாம்!
'தேசிய கீதத்தை முதலில் பாடுங்கள் என்று கோரிக்கை வைக்க கவர்னருக்கு எந்த உரிமையும் இல்லை':-சட்டப்பேரவை தலைவர் அப்பாவு.
உ.பி. - பைரேலியில் 250kVA டிரான்ஸ்பார்மரை - திருடர்கள் திருடி சென்றதால், மின் விநியோகம் இல்லாமல் இருளில் மூழ்கிய கிராமம்.
பயம் வேண்டாம்!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜன.06-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், தற்போது உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் HMPV என்கின்ற வைரஸ் தொற்று தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலுரை அளித்தார்.
HMPV என்கின்ற Human Meta pneumovirus சீனாவில் வேகமாக பரவி வருகின்றது என்று சொல்லப்பட்டாலும் இது 50 ஆண்டுகளுக்கு முன்னாள் கண்டறியப்பட்ட வைரஸ் ஆகும். குறிப்பாக 2001 ஆம் ஆண்டிலேயே இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் பொறுத்தவரை குளிர்காலம் மற்றும் இளவேனில் காலங்களில் பரவக்கூடும் என்பது ஏற்கெனவே அறியப்பட்டிருக்கிறது.
இந்த நோய்க்கான அறிகுறிகள் சளி, காய்ச்சல், இருமல், சுவாச பாதிப்புகள் என்பதும், நமது மன்ற உறுப்பினர்கள் சொல்லியிருப்பதுபோல் அனைத்து ஊடகங்களிலும் இந்த செய்தி பரவி வருகிறது.
இந்த வைரஸ் பாதிப்பு குணமாக 3 முதல் 6 நாட்கள் வரை ஆகும். இந்த வைரஸ் இணை நோயினால் உள்ளானவர்கள் பாதிக்கப்பட்டால் ஓரளவு தீவிரத்தன்மை அடைந்து நுரையீரல் பாதிக்கப்படும் அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்துமே தவிர பெரிய அளவில் இதனால் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 2024ஆம் ஆண்டில் 714 பேருக்கு பரிசோதனை செய்ததில் பலருக்கு இந்த நோய் பாதிப்பு இருந்தது கடந்த ஆண்டிலேயே கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் சேலத்தில் ஒருவருக்கும், சென்னையில் ஒருவருக்கும் இந்த நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டு அவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள்.
சுவாசநோய் தொற்றுகள் தானாகவே குணமடையும் என்கின்ற வகையில்தான் மருத்துவ வல்லுநர்கள் இதற்காக சிறப்பு சிகிச்சைகள் தேவை இல்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த வைரஸ்க்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் Anti Viral Drugs மற்றும் இதற்கான தடுப்பூசிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
உலக சுகாதார அமைப்பைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொடங்கிய காலக்கட்டத்தில் பல்வேறு வகைகளில் உருமாற்றம் பெற்று பீட்டா, டெல்டா பிளஸ், கம்மா, கப்பா, ஒமைக்ரான் என்று பல்வேறு விதமான உருமாற்றம் அடைந்து கோவிட் வைரஸ் வீரியம் பெற்றது. அனைத்து வைரஸ்களும் வீரியத்தன்மையுடன் கூடிய வைரஸ்களாகவே இருந்து வருகிறது.
WHO வின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் அவர்கள் இனி வரும் காலங்களில் உலகம் முழுவதும் வைரஸ் தொற்றுகளுடன் வாழ வேண்டும் என்கின்ற கருத்தினை சொல்லியிருந்தார்கள்.
அது நான் கூறிய கருத்தல்ல. HMPV வைரஸ் என்பது வீரியம் மிக்க வைரஸ் அல்ல. இதற்கென பிரத்யேக மருந்துகளும் இல்லை, பிரத்யேக சிகிச்சைகளும் இல்லை. இதற்கென அறிவுறுத்தல்கள் 3 முதல் 6 நாட்களிலேயே குணமாகி விடும். இதற்காக அனைத்து இடங்களிலும் சென்று பரிசோதனைகள் செய்து கொள்ளும் அவசியம் இல்லை. இதனால் நாம் பெரிய அளவில் பயப்பட தேவையில்லை. இதற்காக தனியாக பிரத்யேக படுக்கை வசதிகளும் தேவையில்லை.
2019 ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று வந்தபோது WHO உலக சுகாதார நிறுவனம் ஒரு மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்தார்கள்.
2023 மே மாதம் அதனை விலக்கி கொண்டார்கள். அதன்பிறகு குரங்கம்மை தொற்று (Monkey Pox) வந்தபோது அவசரநிலை பிரகடனம் செய்தார்கள்.
அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனைகள் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் பெற்று மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை எந்தவிதமான மருத்துவ நெருக்கடிகள் ஏற்பட்டாலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஆகையால் HMPV தொற்று குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை.
நேற்று முன்தினம் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் அவர்கள் தலைமையில் காணொளிக் கூட்டம் அனைத்து மாநிலங்களிலும் சேர்ந்த சுகாதாரத்துறை செயலாளர்களோடு நடத்தப்பட்டதில் அவரும் இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவரும் இந்த வைரஸ் குறித்து கவலைப்பட தேவையில்லை. மக்களுக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களும் அறிவிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இருந்தாலும் பொது சுகாதாரத்துறையின் நடவடிக்கை என்பது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிந்து செல்வது வழக்கம், கைகளை சுத்தம் செய்து கொள்வது போன்ற அறிவுறுத்தல்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இதுவே போதும் என்று நினைக்கிறேன். இதுகுறித்து பதற்றப்பட வேண்டாம் என்று மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.
யார் அந்த சார்?
பொள்ளாட்சியே சாட்சி!
மகளிருக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை என்று எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்பி வருகிறது. குறிப்பாக அதிமுக இந்த வதந்தியை வேண்டுமென்றே பரப்பி வருகிறது.
குறிப்பாக அண்ணா பல்கலை.-யில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், போலீசும் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனினும் வேண்டுமென்றே அரசை குறித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அவதூறு பரப்பி வருகிறது. மேலும் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநில பட்டியலில் முதன்மையாக விளங்கும் தமிழ்நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவதூறு பரப்பி வருகிறது அதிமுக.
இந்த நிலையில், அதிமுக ஆட்சியில் (2019) நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த விவகாரம் தொடர்பாக செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
யார் அந்த SIR?... பொள்ளாச்சியே சாட்சி!
2019 :
பிப்ரவரி 12, 2019 - பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்தார்.
பிப்ரவரி 24 - மேலும் ஒரு பெண்ணிடமிருந்து புகார்
பிப்ரவரி 26 - பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் குற்றவாளிகள் தன்னைத் தாக்கியதாக புகார்
பிப்ரவரி 26 - செந்தில், பாபு, மணி, ராஜகோபால் நால்வர் கைது. ஆனால் 'பார் நாகராஜன்' (பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நெருக்கமானவர்) பெயரை காவல்துறையினர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை.
மார்ச் 4 - இதில் அதிமுக கட்சியை சேர்ந்த பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என திருநாவுக்கரசு ஆடியோ வெளியீடு
மார்ச் 5 - திருநாவுக்கரசு கைது
மார்ச் 5 - நக்கீரன் ரிப்போர்ட்டர் அருள் குமாரை பொள்ளாச்சி ஜெயராமன் மிரட்டினார்
மார்ச் 6 - கோவை எஸ்.பி பாண்டியராஜன் பாதிக்கப்பட்ட புகார்தாரரின் பெயர் மற்றும் விபரங்களை வெளியிட்டார்.
மார்ச் 10 - சபரிராஜன், சதீஷ், வசந்த குமார் மூவர் கைது, ரிமான்ட்
மார்ச் 11 - ‘பார் நாகராஜன்' அதிமுகவிலிருந்து நீக்கம்
மார்ச் 12 - கனிமொழி தலைமையில் திமுக போராட்டம்
மார்ச் 13 - வழக்கு சிபி சிஐடிக்கு மாற்றம்
மார்ச் 15 - ஒரே நாளில் 100க்கும் அதிகமான பெண்கள் புகார்
மார்ச் 15 - பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்டதற்கு நீதிபதி கிருபாகரன் கண்டனம்
மார்ச் 17 - பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பில் நிருபர்களை மிரட்டினார்.
ஏப்ரல் 9 - அதிமுக அரசை கண்டித்து கோவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
நவம்பர் 3 - குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டத்தை ரத்து செய்ததை மு.க.ஸ்டாலின் கண்டித்து அறிக்கை
=> 2021 :
ஜனவரி 6 - அதிமுக பொள்ளாச்சி மாணவர்அணி செயலாளர் அருளானந்தம் உட்பட 3 பேரை சிபிஐ கைது செய்தது.
ஜனவரி 6 - அதிமுகவைச் சேர்ந்த அருளானந்தம் கட்சியிலிருந்து நீக்கம்
ஜனவரி 10 - கனிமொழி தலைமையில் திமுக மீண்டும் போராட்டம்
ஜனவரி 11 - அதிமுகவைச் சேர்ந்த ஹரோன் பால் மற்றும் பாபு, 2 பேர்களை எப்ஜரில் சேர்க்காமல் அவர்களை காவல்துறை காப்பாற்றுகிறது என 'தி ஹிந்து"வில் செய்தி வெளியீடு
ஜனவரி 11 - பால் என்பவரை சிபிஐ கஸ்டடி எடுத்து விசாரணை.
பிப்ரவரி 19 - இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் ஒரு அதிமுக கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜா என்பவரது கார் பறிமுதல்
பிப்ரவரி 19 - பல பெண்களை மிரட்டி முன்னாள் அதிமுக சேர்மன் கிருஷ்ணகுமாரிடம் அனுப்பியதாக அருளானந்தம் ஒப்புதல் வாக்குமூலம்
இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட பிறகு மந்தமாக செல்கிறது.