அமெரிக்காவை விட ஆப்பிள் பெருசு,
ஆயுர் வேதத்தில் நோய் எதிர்ப்பு[ ஆண்டிபயாடிக் ]மருந்துகள். நோயின் தன்மைக்கு ஏற்ப ஆன்டிபயாடிக் மருந்துகளின் பிரயோகங்களைச் செய்து, உடலில் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள கிருமித் தொற்று மற்றும் அது வளர்வதற்கு சாதகமான சூழ்நிலையை அழிக்க முற்படுவதே நவீன முறை சிகிச்சையின் நோக்கமாகும். இதுபோலவே ஆயுர்வேதத்திலும் நோய்களால் ஏற்படும் பாதகமான சூழ்நிலையை, நோய் எதிர்ப்புக்கு சாதகமாக மாற்றக் கூடிய மருந்துகள் பல உள்ளன. அவற்றில் சில - குளிர், கடுப்பு, வலி, தலை பாரம், மார்ச்சளி முதலியவற்றுடன் ஏற்படும் காய்ச்சலுக்கு, அதிலும் முக்கியமாகக் குளிருடன் ஆரம்பிக்கும் முறைக் காய்ச்சலுக்கு பத்து கருந்துளசி இலைகளையும் ஐந்து மிளகையும் வாயிலிட்டு மென்று சாப்பிட, ஆரம்ப நிலையிலேயே காய்ச்சல் தவிர்க்கப்பட்டுவிடும். உடல் கனம் குறைந்து வேதனைகள் நீங்கிவிடும். காய்ச்சல் வந்த பின் மிளகையும் துளசியையும் கஷாயமாக்கி...