திருப்பு முனை.........,

சோனியா அப்துல் கலாம் குடியரசுத்தலைவர் வேட்பாளராக்க ஆதரிக்காத காரணம் 2004 இல் தன்னை பிரதமராக்க கலாம் ஆதரவாக செயல் பட வில்லை என்பதுதான்.
அந்த வாய்ப்பு வேறு வழியின்றி மன்மோகன் சிங்குக்கு போனது.
அந்த கடுப்பில்தான் இப்போது கலாமுக்கு ஆதரவு தெரிவிக்கவும் சோனியா மறுத்து பிரனாப் முகர்ஜிக்கு குடியரசுத்தலைவர் பதவி போகிறது,
ஆனால் கலாம் தற்போது எழுதி வெளிவர உள்ள புத்தகமானTurning point(திருப்பு முனைகள்) என்ற பெயரில் எழுதியுள்ள ஆங்கில நூலில் அப்துல் கலாம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சுரன்

நூலில் அப்துல் கலாம் எழுதியிருப்பதாவது: கடந்த 2004ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் முக்கியமான ஒரு நிகழ்வு ஆகும். தேர்தல்  முடிவுகள் வெளியாகி 3 நாட்கள் ஆனபோதும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. இது எனக்கு கவலையை ஏற்படுத்தியது. இதனால், தனிபெரும் கட்சியின் தலைவரான சோனியா காந்திக்கு ஆட்சி அமைக்க  உரிமை கோரும்படி கடிதம் அனுப்பினேன். இதை தொடர்ந்து 2004 மே 18ம் தேதி மதியம் 12.15மணிக்கு சோனியா காந்தி என்னை சந்தித்தார். அவரோடு மன்மோகன் சிங்கையும் அழைத்து வந்திருந்தார். ஆட்சி அமைக்க போதுமான எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக சோனியா தெரிவித்தார். ஆனால், ஆதரவு கட்சிகளின் கடிதங்களை கொண்டு வரவில்லை. 
ஆதரவு கடிதங்களுடன் மறுநாள் வருவதாக சோனியா தெரிவித்தார். எதற்காக காலம் தாழ்த்துகிறீர்கள், இன்று மாலைக்குள் கொண்டு வாருங்கள் என்று கூறினேன். 
சுரன்


இதற்கிடையே, சோனியாவை பிரதமர் ஆக்க கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என்னிடம் நேரில் வற்புறுத்தினர். பல்வேறு அமைப்புகள் சார்பில் இமெயில், கடிதங்கள் குவிந்தன. இந்த நிலையில் இரவு 8.15 மணிக்கு வருவதாக மாலையில் சோனியா காந்தி தகவல் அனுப்பினர். சரியாக 8.15 மணிக்கு சோனியா என்னை சந்தித்தார். இந்த முறையும் அவருடன் மன்மோகன் சிங் வந்திருந்தார். பல்வேறு அரசியல் கட்சிகள் தந்த ஆதரவு கடிதத்தை சோனியா காட்டினார். நீங்கள் விரும்பும் நேரத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்த ஜனாதிபதி மாளிகை தயாராக இருப்பதாக சோனியாவிடம் கூறினேன். 
அப்போதுதான், மன்மோகன் சிங்கை பிரதமராக்க முடிவு செய்துள்ளதாக சோனியா தெரிவித்தார். சோனியாவின் இந்த முடிவு என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. சோனியாவை ஆட்சி அமைக்க வரும்படி அழைக்கும் கடிதத்தை ஏற்கனவே ஜனாதிபதி மாளிகை செயலகம் தயாராக வைத்திருந்தது. மன்மோகன் சிங்தான் பிரதமர் என்று சோனியா காந்தி கூறியதால், அவசரமாக வேறு கடிதம் தயாரிக்கப்பட்டது. பிரதமர் பதவியை ஏற்க சோனியா காந்தி முடிவு செய்திருந்தால், அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருப்பேன். ஏனென்றால் அதை தவிர அரசியல் சட்டத்தில் வேறு வழியே இல்லை. 
சுரன்
2004 மே 22ம் தேதி புதிய அரசு பதவி ஏற்றது. இதைதொடர்ந்து முக்கிய பணி முடிந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன். "
என்று அப்துல் கலாம் எழுதியுள்ளார். 
இதை முன்பே வெளியிட்டிருந்தால் சோனியா கலாமை குடியரசுத்தலைவர் வேட்பாளராக்கி இருக்க கூடுமோ?
___________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?