பெட்ரோல் இல்லா நாள்..?

சுரன்இது ஜகர்த்தாவில் கார் இல்லா நாளில் எடுத்த புகைப்படம்.சிறுவர் முதல் அனைவரும் சைக்கிளில் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் மிக மகிழ்ச்சியுடன் செல்வதை பார்க்க நாமும் இப்படி போகும் ஆவல் உண்டாகிறது.
இப்போதைய பெட்ரோல் செலவினத்தை குறைக்கவும் ,சுற்று சூழலை கொஞ்சமாவது காக்கும் முயற்சியாக உலகில் பல நாடுகளில் பைக்,கார் போன்றவற்றை வாரா,வாராமோ-மாதம் ஒருநாளோ வீட்டில் அடை கட்டி வைத்து விட்டு சைக்கிளில் மட்டுமே செல்லும் வழமையை அரசுகள் கொண்டு வந்துள்ளன,
சில நாடுகளில் வண்டியின் பதிவு எண் ஒற்றப்படை எல்லாம் ஒரு நாள் சாலையில் வரக்கூடாது.இன்னொரு நாள் இரட்டைப்படை எண் வரக்கூடாது என்றெல்லாம் கூட வைத்து போக்கு வரத்து நெரிசலை குறைக்கிறார்கள்.
இதன் மூலம் சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் நினைத்த இடத்துக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடிகிறதாம்.போக்கு வரத்து நெரிசலில் நின்று,நின்று செல்லும் அவசியம் இல்லை அல்லவா?
வாகனத்துக்கு போடப்படும் பெட்ரோல் அளவும் சேமிக்கப்படுகிறது.
மேலும் வாகனப் புகை இல்லாமல் சுத்தமான காற்றையும் சுவாசிக்க இயலுகிறது.
சிலர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்யலாம்.எங்கள் உடல் நலமும் சைக்கிள் பயிற்சியால் சுறு,சுறுப்பாக இருக்கிறது.என்று கூறுகிறார்களாம்.
உலக நாடுகள் பல இவ்வாறு செய்யும் போது அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்தும் இந்தியாவில் இப்படி மாதம் ஒரு நாள சைக்கிளில் தான் செல்ல வேண்டும் என்று கொண்டு வரலாமே.
ஞாயிறன்று ஊர் முழுக்க பைக்கில் வலம் வெட்டியாக சுற்றுபவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் சைக்கிளில் செல்லுவதால் உடல் நலம் மட்டுமின்றி சுற்று சூழல்,தூய காற்றை விடுமுறை நாளாவது அனுபவிக்கலாமே.
பெட்ரோலுக்கு கையிலுள்ள பணத்தையும் செலவிட வேண்டாம்அல்லவா?
அதிக அளவு பெட்ரோல் செலவிடும்,அதிக அளவு பெட்ரோல் விலை உடைய இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமையை பெட்ரோல் -டீசல் இல்லா நாளாக அறிவித்தால் நல்லதாக இருக்கும்.அன்று வாகனப்புகையில் இருந்து நாமும் கொஞ்சம் தப்பித்தது போல் இருக்கும்.  நமது பர்சும்தான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சுரன்

யாழ் வட மாரட்சி பகுதியில்நேற்று[ஞாயிறு] சிலரால் வழங்கப்பட்ட கைப்பிரதி.

--------------------------------------------------------------------------------------------------------  
சுரன்

முகத்தை மூடியுள்ளது நீர்தான்
_________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?