கடவுள் அணுவால் 100 டாலர் இழப்பு.
கடவுள் அணுத்துகள் என அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸன் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ்னால் கண்டுபிடிக்க முடியாதென 100 டாலர் சவால் விட்டு தான் தோற்று விட்டேன் என பிரபல இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையிலே, ஹிக்ஸ் தான் சொன்னதை சாதித்துக் காட்டியள்ளார். அவருக்கு இதற்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும்.
சிக்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்டன் பீட்டர் ஹிக்ஸால், ஹிக்ஸ் போஸானை கண்டு பிடிக்க முடியாது என்று நான் 100 டாலர் சவால் விட்டிருந்தேன். ஆனால் அது தவறு என்பதை ஹிக்ஸ் நிரூபித்து விட்டார். இப்போது எனக்கு 100 டாலர் நட்டமாகி விட்டது என்று கூறியள்ளார் ஹாக்கிங்.
கண்ணுக்கு தெரியாத ஒரு அணுத்துகள்தான் இந்தப் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்கிறது என்பதை முதல்முதலில் சொன்னவர் பீட்டர் ஹிக்ஸஅதான். அந்தத்துகள்கள் ஹிக்ஸ் போஸான் எனப்படும் கடவுளின் அணுத்துகள்.
இவர் இதை முதலில் சொன்ன போது இது வெறும் கட்டுக்கதை இல்லாததைச் சொல்கிறார் என்று விஞ்ஞானிகள் பலரும் கேலி செய்தனர். இது கறித்து அவர் எழுதிய ஒழு ஆய்வுக் கட்டுரையை ஒரு அறிவியல் சஞ்சிகை நிராகரிக்கக் கூட செய்தது. இயற்பியலின் அடிப்படையைத் தகர்க்க முயல்கிறார் பீட்டர் ஹிக்ஸ் என்று பல விஞ்ஞானிகள் குற்றம் சாட்டக் கூடச் செய்தனர்.
அப்போது 34 வயதான பீட்டர் ஹிக்ஸஅ, எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இயற்பியலாளராக இருந்தார். தனது வாதத்தை அவ் கைவிடவில்லை. அவரது கூற்று சரியே என்று தொடர்ந்து கூறி வந்தார்.
இருப்பினும் அவரால் அதை நிரூபிக்க முடியாமலேஇருந்தது. தற்போது தான் ஹிக்ஸ் போஸான் இருப்பது உண்மை என்று தெரிய வந்து பீட்டர் ஹிக்ஸ் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.
கடந்த 48 வருடங்களாக வெறும் கற்பனைக் கதாபாத்திரமாகவே இருந்து வந்த கடவுளின் அணுத்துகள் உண்மைதான் என்பதை ஜெனீவா அருகே ஐரோப்பிய நாடுகள் இணைந்து அமைத்த ஆராய்ச்சிக் கழகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
உலகப் புகழ் பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பேச முடியமல் முற்றிலும் முடங்கிய நிலையில் சக்கர நாற்காலியில் பல வருடங்களாக வாழும் இவருக்கு தற்போது 70 வயதாகிறது.இந்த பிரபஞ்சத்தை கடவுள் என்று ஒருவர் வந்து உருவாக்கவில்லை.அணுக்களால்தான் அது உருவானது என்ற இவரின் வார்த்தைகள் ஆய்வுலகையினர் கடவுள் துகளை-கடவுளை கண்டு பிடிக்கும் அளவு தூண்டியது“.
ஆனால் இவரது திறமைகள் அபாரமானவை. தி ப்ரிப் ஹீஸஅடரி ஆப் டைம் என்ற இவரது நூல் மிகப் பிரபலமானது. அதில் பிராக் ஹோல் குறித்து அவர் எளிமையாக விளக்கியுள்ளார்.