இந்திய அரசின் "தில்"


சுரன்

நமது இந்திய அரசுக்கு கொஞ்சம் லொள்ளு அதிகம்தான்.

சிங்களனுக்கும் தமிழனுக்கும் ஆக மாட்டேன் என்கிற விடயம் தெரிந்தும் மீண்டும் ,மீண்டும் தமிழ் நாட்டிலேயா சிங்கள படையினருக்கு கடற் பயிற்சி,வான் பயிற்சி,தரை பயிற்சி,கழுதை பயிற்சி என்று கொடுக்கும் தில் ரொம்பவே இருக்கிறது.
ஏன் .இந்தியாவில் வேறு பயிற்சி அளிக்க இடமே இல்லையா?

இந்தியாவில் இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்காதே.அவர்கள் அந்த பயிற்சியின் மூலமே அங்குள்ள தமிழ் மக்களை கொன்று குவிக்கிறார்கள் என்றுதானே இங்குள்ள கட்சியினர்,அரசியல் வாதிகள் சொல்லுகிறார்கள்.
அதையும் மீறி இந்தியாவில் பயிற்சி அளிப்பது தவறு.
ஆனால் அதையும் தமீழ் நாட்டிலேயே கொடுப்பதஇந்திய அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கு என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது.
சுரன்

இதை இந்திய அரசின் தில் என்பதை விட கொழுப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்படி பயிற்சி கோடுத்துதானாக வேண்டும் இது எல்லாம் அரசு கொள்கை முடிவுகள் என்றால் பயிற்சி கொடுக்க வேறு தளங்களே இந்தியாவில் கிடையாதா என்ன?
அதிலும் தமிழனை அவமானப்படுத்தவே திட்டமிட்டு இந்திய அரசு செய்வதாக எடுத்துக்கொள்ளத்தான் வேண்டுமா?
காங்கிரசு அரசு இப்படி தேவையற்ற அவமானப்படுத்தும் முயற்சி எடுத்துக்கொண்டே இருந்தால் தமிழக கட்சியினர் அனைவரும் காங்கிரசு கூறும் குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கு வாக்களிக்காமல் சங்மாவுக்கு வாக்களித்து அவரை  வெற்றிபெற செய்து காங்கிரசை ,அதன் அரசியலை ஒட்டு மொத்த தமிழக கட்சிகளும் அவமானப்படுத்த வேண்டும்.
ஆனால் அதை நம் தமிழக கட்சிகள் ச்செய்ய மாட்டார்கள்.அந்த அளவு அவர்களுக்கு ரோசம் கிடையாது என்பதை சோனியா-காங்கிரசு கூட்டம் தெரிந்துதான் வைத்திருக்கிறது.
சுரன்


அதனால்தான் தமிழ் நாட்டையும் ,தமிழர்களையு ம்-அவர்களின் உணர்வுகளையும் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டேன் என்கிறார்கள்.
தேர்தல் காலத்தை தவிர.
_________________________________________________________________________________


மின்னஞ்சல் அபாயம்
----------------------------------
கம்ப்யூட்டர்களுக்கு கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்பும் ஹேக்கர்கள் எனப்படுபவர்கள், எங்கே நுழைந்து தாக்க முடியும் என புரோகிராம்களில் உள்ள பலவீனமான குறியீடு வழிகளைக் கண்டு பிடித்து தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்வார்கள். எந்த வழியில் இவர்கள் நுழைகிறார்கள் என்று அறியும் வகையில், அந்த பலவீனமான இடங்கள் ஸீரோ டே வழிகள் என அழைக்கப்படுகின்றன.
அப்படிப்பட்ட ஒரு பலவீனத்தைப் பயன்படுத்தி மால்வேர் புரோகிராம் ஒன்றை சில ஹேக்கர்கள் அனுப்பியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் எச்சரித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இந்த அத்துமீறல் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
இதன் மூலம் உள்ளே நுழையும் மால்வேர் புரோகிராம்கள் வழியாக, இதனை அனுப்பியவர்கள், அந்த கம்ப்யூட்டரையும், மற்ற வசதிகளையும் கெடுதல் விளைவிக்கும் செயல்களுக்குப் பயன்படுத்த முடியும். விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரையிலான அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இயங்குகையில் இது நடைபெறுகிறது.
எந்த சந்தேகமும் இடம் கொள்ள முடியாதபடி, சில மின்னஞ்சல்கள் வருகின்றன. இவை நம் ஆர்வத்தைத் தூண்டும் சில காரணங்களைப் பயன்படுத்தி, லிங்க் ஒன்றைக் கொடுத்து அதில் உள்ள தளத்திற்குச் செல்லுமாறு தூண்டுகின்றன.
சுரன்

லிங்க்கில் கிளிக் செய்துவிட்டால், குறிப்பிட்ட மால்வேர் புரோகிராம் தானாக, அந்த கம்ப்யூட்டரில் இறங்கி அமர்ந்து கொண்டு தன் நாச வேலையைத் தொடங்குகிறது. மால்வேர் புரோகிராமினை அனுப்பியவர்களுக்கும் தகவலைத் தருகிறது. அனுப்பியவர்கள், கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்து, நாச வேலைகளில் ஈடுபட முடியும்.
எனவே, மைக்ரோசாப்ட் வழங்கும் செக்யூரிட்டி அப்டேட் பைலை உடனடியாக அனைவரும் பெற்று இன்ஸ்டால் செய்திட வேண்டும் என மற்ற ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களும் கேட்டுக் கொண்டுள்ளன.

 நீங்களாக அப்டேட் செய்திட வேண்டுமென்றால், ஸ்டார்ட் அழுத்தி, ஆல் புரோகிராம்ஸ் தேர்ந்தெடுத்து, இதில் விண்டோஸ் அப்டேட் என்பதில் கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். அப்போது சிஸ்டம் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும். அப்டேட் பைலை தானாக தரவிறக்கம் செய்து, தாங்கள் விரும்பிய பின்னர் பதிவிறக்கம் ஆகும்படி சிலர் அமைவு வைத்திருப்பார்கள். இவர்கள் விண்டோஸ் அப்டேட் புரோகிராம், அப்டேட் செய்திடவா என மஞ்சள் நிற பலூன் வழி கேட்கும், உடனே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
____________________________________________________________________
கடவுள் துகள் கண்டு பிடிப்பு கொண்டாட்டம்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?