பிழைக்கத் தெரிந்தவர்களும்

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் நாற்காலியில் அமரப்போகிறார்.ஆனால் அவரின் தற்போதைய இடத்துக்கு கொஞ்சம் போட்டிதான் காங்கிரசில்.பிரணாப் இதுவரை மக்களவை உறுப்பினராக இருந்த  மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜங்கீர்பூர்  தொகுதி காலியாகிவிட்டது. 
அத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் போட்டி உண்டாகியுள்ளது. 
சுரன்
இப்போது அத்தொகுதியில் போட்டியிட பிரணாப்முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி ஆசையை வெளியிட்டுள்ளார்.

மெக்கானிக்கல் என்ஜீனியரான அவர் முன்பு மாருதி ,பெல், செயில் ஆகிய நிறுவனங்களில்ஒழுங்காக  வேலை பார்த்து வந்தார். 
ஆனால் அவரையும் "அரசியல் வாரிசு" நோய் கடுமையாக தாக்கியதால் சென்ற சட்டசபை தேர்தலில் நல்கத்தி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியுள்ளார்.ஆனால் பக்கவிளைவான "பதவி வெறி" நோயும் தாக்கி விட்டதால்தற்போது அவர் தந்தை வழியில் எம்.பி. ஆகி டெல்லி செல்ல வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டுள்ளது.அதனால் ஜங்கீர்பூர் தொகுதி கேட்டு தந்தை மூலம் காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்கிறார்.கிடைக்கலாம்.கொஞ்ச காலத்தில் அவர் நமக்கு சேவை செய்ய நிதியமைச்சராகக் கூட ஆகலாம்.அரசியல்விதி வலியது.
இவர் இங்குடெல்லி நாற்காலியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் போது குடியரசுத்தலைவர் தேர்தலில் அதிசயம் நடக்காமல் தோற்றுப்போன சங்மா -வின் மகள் தனது டெல்லி நாற்காலியை விட்டு வெளியேறுகிற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சுரன்

சங்மாவின் மகள் அகதா சங்மா மத்திய மந்திரி சபையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கிறார்.. இவர் சென்ற மக்களவைத் தேர்தலில் மேகாலயா மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு வயது 29. இதனால் இந்தியாவின் மிக இளவயது மக்களவை உறுப்பினர்,இளம் வயது அமைச்சர் என்ற பெருமையை பெற்றார்.இன்று தந்தைக்காக பதவியிழந்த பெருமையும் சேர்ந்துள்ளது.
அப்பாக்கள் மோதலில் இந்த நிகழ்வுகள் உருவாகியுள்ளது.அல்லது வாரிசு அரசியல் பாதிப்பு என்று கூட சொல்லலாம்.
ஒரு வாரிசை-இன்னோரு வாரிசு நாற்காலியை விட்டுகவிழ்த்து விட்டது.
பயப்படாதே.எப்படியும் நீதான் அடுத்த காட்டு ராஜா.
எவன் தட்டிக்கேட்கிறான் பார்ப்போம்.இந்தியாவில் அதெல்லாம் நடக்காது.
_____________________________________________________________________________________________

பிழைக்கத் தெரியாதவர்களும்.
__________________________________

குடும்ப அரசியல் கொடி கட்டிப் பறக்கும் இந்தியாவில் பிழைக்கத்தெரியாத அரசியல் வாதிகளும் இருந்துள்ளனர்.அவர்களில் தனது சொத்தை எல்லாம் விற்று கப்பலை வாங்கி கடலில் விட்டு கடனில் மாட்டிக்கொண்டு சொத்தை இழந்த வ.உ.சி போலவே அவரது தோழர் சுப்பிரமணிய சிவா தனது உடல் நலத்தையே இழந்து மறைந்துள்ளார்.
சுனாமி வந்த தினத்தில் இறந்தவர் சுனாமியால் பாதிக்கப்பட்டதாக லட்சக்கணக்கில் பணம் பெற்ற நாடு இது.
சுரன் 
சுதந்திரத்துக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்கள் சிலர் சுதந்திர போராட்டத்தியாகிகள் ஓய்வூதியம் வாங்கும் அவலம் நடக்கும் நாட்டில் உடல்,பொருள் அனைத்தையும் நாட்டின் விடுதலைக்காக இழந்த சிலர் இருந்திக்கிறார்கள் அவர்கள் தங்கள் தியாகத்தை மாத ஓய்வூதிய விண்ணப்பம் மூலம் பணமாக்கவில்லை.அதுதானே தியாகம்.தியாகத்துக்கு விலை உண்டா என்ன?பணம் பெற்று செய்வது வேலைகளில் ஒன்றாகத்தானே ஆகிவிடும்.

விடுதலைப்போராட்டத்தில் கலந்ததால் தொழுநோயை ஆங்கிலேயர்களிடம் பரிசாகப் பெற்றவர் தியாகி சுப்பிரமணிய சிவா. விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்குப்பெற்று
ஆங்கிலேயருக்கு எதிரான பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டார். 
 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் ஆங்கிலேயர் அவரை கொடுமைப்படுத்தி தொழு நோயாளிகளுடன் அடைத்து வைத்து சுகாதார வசதியை செய்தே கொடுக்காததால் தொழு நோய்சுப்பிர மணிய சிவாவையும் பிடித்தது.ஆங்கிலேயரின் அந்த பரிசுடன் வெளி  வந்த அவரை வழக்கம் போல் காங்கிரசு கண்டு கொள்ளாததால் கடும் வறுமையில் வாடினார்.பாரதியின் பாடல்களை தனது கணீர் குரலில் சிவா பாடுவதை அடிக்கடி வ.உ.சி. கேட்டு ரசிப்பாராம்.
 
சுரன்
4.10.1884-ஆம் ஆண்டு பிறந்த சிவா 23.07.1925 ஆம் ஆண்டு தனது 41- ஆவது வயதிலேயே  பாப்பாரப்பட்டியில் காலமானார். இந்திய விடுதலைக்காக தனது வாழ்வையே பறி கொடுத்த சிவா விடுதலை அடைந்ததை பாராமலே இறந்தார்.அவரை நினைப்பதற்கு கூட ஆட்கள் இல்லை.ஆனால் இன்று ராஜீவ் காந்தி,இந்திரா காந்தி ,காந்தி நினைவு நாள்,பிறந்த நாள்களில் வாக்குறுதிகள் எடுக்கும் சடங்குகள் நடக்கிறது.
ஆனால் விடுதலைப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரே காரணத்தினால் இந்தியாவை ஒரு குடும்பமே பரம்பரையாக கட்டுகுத்தகைக்கு எடுத்துக்கொண்டதும் இந்தியாவில்தான் நடந்து வருகிறது. 
________________________________________________________________________________
சுரன்
நல்ல வேளை காந்தியாரின் வாரிசுகள் அரசியலில் இல்லை.

=================================================================================
சுரன்
எருதாட்டம் போல் இது ஆடாட்டம்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?