திங்கள், 16 ஜூலை, 2012

டெசோவும் ........கூமுட்டைகளும்

டெசோ மாநாடு நடத்த கருணாநிதி முடிவு செய்து அறிவித்த போது அந்த மாநாடு தேவையா?
புலிகளின் பற்களை இலங்கை பக்‌ஷே படையினர் பிடிங்கி எறிந்த பின் இந்த கண்துடைப்பு மாநாடு யாருக்காக?

பதவியில் இருக்கும் போது ஈழம் தொடர்பாக  சரியான முறையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்டி ஈழமக்கள் பதுகாப்பை உறுதி செய்யாதவர் இப்போது டெசோ நடத்தி என்ன சாதிக்கப் போகிறார் என்ற எண்ணம் எல்லோரையும் போல் வந்தது எனக்கும்.
ஆனால் டெசோ மாநாடு நடக்கும் நேரம்-காலம் குறித்து அறிவிப்பு வந்த பின்னர் நடக்கும் எதிர்வினைகள் மாநாடு எதையாவது சாதித்து விடுமோ என்ற கவனத்தையும் தருக்கிறது.
முதலில் இலங்கை அமைச்சர் ஒருவர் நம் பிரதமர் மன்மோகன் சிங் குக்கு டேசோ மாநாடை இந்தியாவிலேயே நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கடிதம் எழுதினார்.எப்போதும் இலங்கை பக்‌ஷே சொல்வதை கேட்டு அதன்படியே ஒழுகும்  இந்திய அரசு அதைஎப்படி செய்யப்போகிறது.செய்யுமா?என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் போது இதோ மத்திய அரசு விடுதலைப்புலிகள் செயல்பாடு ஆபத்திருப்பதால் அந்த இயக்கத்தின் மீதான தடையை இன்னும் நீடிக்கிறோம் என்று அறிவித்து விட்டது.
விடுதலைப்புலிகளை ஒட்டு மொத்தமாக கொண்று குவித்து விட்டதாகவும்,மாவீரன் பிரபாகரனை குடும்பத்துடன் கொன்று விட்டதாககவும் இலங்கையே அறிவித்த பின்னரும் இந்தியாவில் தடை என்றால் இதில் ஏதோ மர்மம் இருக்கிறது.

வழமை போலந்தமிழககாங்கிரசின் இன்றையத் தலைவர் ஞானதேசிகன் டெசொ மாநாட்டை ஆதரிக்க வில்லை என்று எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளார்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் வந்து கருணாநிதியை சந்தித்துள்ளார்.அவர் வந்ததுதுணை குடியரசுத்தலைவர் தேர்தல் பற்றிஎன்றுசொன்னாலும் டெசோ மாநாடு கைவிடல் பற்றியும் அல்லது மாநாட்டில் தனி ஈழம் போன்ற தீர்மானங்கள் இல்லாமல் அடக்கி வாசிக்கவும் கூறியிருக்கலாம்.
ஆக இனி மத்திய அரசு தடைவழிகாட்டல் மூலம் தமிழக அரசு டெசோ மாநாடுக்கு தடை போடலாம்.அதை கண்டிப்பாக  கருணாநிதி மீறுவார் .அதன் மூலம் ஒரு அரசியல் காய் நகர்த்தல் நடந்து மக்களவை தேர்தலில் அதை அறுவடை செய்யவும் திட்டமிடுவார் என்றே தெரிகிறது.வாழ்க,ஈழம்! வாழ்க டெசோ.! வளர்க அதன் மூலம்.!என்று காலையில்தான் வாழ்த்தி வழி விட்டேன்.ஆனால் மாலையில் அய்யா கருணாநிதி தனது காங்கிரசு சரணாகதி படலத்தை நிகழ்த்திக்காட்டி விட்டார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழீழத்துக்கு ஆதரவாக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கமான டெசோ அமைப்பு நடத்தும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படமாட்டாது என்று கூறியிருக்கிறார்.

பின் எதற்காக இந்த மாநாடை நடத்துகிறார் மத்திய அரசுக்கும்-காங்கிரசுக்கும் முதுகு சொரியவா?அதற்கு எதற்கு டெசோ என்ற பெயர்?திமுக இப்போது காங்கிரசு அடிமைகளில் ஒன்றாகத்தானே இருக்கிறது.
முதுகெழும்பில்லாத இவர் வாய் கிழிய வாக்கெடுப்பு எடுத்தி தனி ஈழம் அமைக்க வேண்டும் என்று சொன்னதையும் திரும்ப பெற்றுக்கொள்வாரா?
ஈழம் பற்றி இனி கருணாநிதி எதையும் பேசாமல் இருப்பதே நல்லது.பேசி இருக்கிற கொஞ்சப்பெயரையும் போக்கிக் கொள்ள வேண்டாம்.
தன்மானம்-திராவிடம்-தமிழினம்-பகுத்தறிவு -சுயாட்சி என்பவற்றை மத்திய அமைச்சர்கள் பதவிக்காக காங்கிரசிடம் அடகு வைத்தப்பின்னார்.அந்த வார்த்தைகளை பேசும் உரிமையை கருணாநிதி இழந்து விட்டார்.
டெசோ மாநாடு என்ற பெயரை காசா  [காங்கிரசு சால்ரா] மாநாடு என்று மாற்றி சென்னையில் நடத்துங்கள்.  
________________________________________________________________________________
டெல்லி குடி நீர் பிடிப்பு போராட்டம்.இது தினசரி டெல்லி காட்சி.
சுரன்